டொனால்ட் ட்ரம்ப்! சிரிய விவகாரம்!

இன்றைய செய்திகளில் என்ன விசேஷம் என்று பார்த்துக் கொண்டிருந்தபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட்டரில் Something very big has just happened! என்று கீச்சி இருந்தது தான் மிகமுக்கியமானதாக இருந்தது. என்னவாம்?


ட்ரம்பின் ட்வீட்டர் செய்திக்கு வந்த பதில்களில் அவநம்பிக்கை மட்டுமே வெளிப்பட்டதா என்ன?

Replying to
All kidding aside, sort of dangerous for US President to tweet cryptic shit like this out. Probably nothing, but military around world are probably on high alert in case the “big thing” is that the erratic lunatic in charge of US just started a war or something.
7:08 AM · Oct 27, 2019

மேலே 8 நிமிட வீடியோவில் ISIS தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி வடசிரியாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று சொல்கிறார்கள். சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தன்னுடைய இடுப்பில் கட்டி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தானே தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்கிற மாதிரியும்! ஆனால் இந்த அபு பக்கர் இதுமாதிரிப் பலமுறை ஊடகச் செய்திகளில் சாகடிக்கப்பட்டிருக்கிறார் என்பதால் எழும் இயல்பான அவநம்பிக்கை! இன்றைய நாளின் காமெடியாக இந்த ட்வீட்டர் தொடர் உரையாடலைப் பகிர்ந்தாலும் விஷயம் நிஜமாகவே சீரியஸ் ரகம்தான்! The Syrian Observatory for Human Rights, a UK-based monitoring group, said helicopter gunfire had killed nine people near a village in the Syrian province of Idlib, where "groups linked to the Islamic State group" were present என்பதற்குமேல் விவரம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை 

 
அவர்களே ஒருத்தருக்கொருத்தர் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று அமெரிக்கா விலகிக் கொண்ட பிற்கு அங்கே       சிரியாவில் இப்போது என்னதான்  நடந்து கொண்டிருக்கிறது? துருக்கியின் எர்துவான் திடீரென்று தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன் என்பதை இங்கே அதன் நுண்ணரசியலை விவரிக்கிறார்கள். வீடியோ 11 நிமி.

The US' exit from Syria left Russia as the only global power active in the country. As Russia is a long-term ally of Iran, Israel now expects Tehran to consolidate its involvement in Syria. This could eventually translate into a growing ability to transport weapons from Iran through Iraq and Syria to Hezbollah in Lebanon, which would pose a serious and immediate security threat for Israel. Throughout the Syrian war, the Israeli air force repeatedly struck Syrian military arms convoys and Lebanon's Hezbollah. Such attacks may not be so easy to conduct under a new status quo dominated solely by Russia என்று  இஸ்ரேலிகளும் கூட அமெரிக்கர்களை எந்த அளவுக்கு நம்பமுடியும் என்று சந்தேகப்படுவதாக அல் ஜசீரா செய்தி சொல்கிறது.   
ஆக, உலக அமைதியைக் கெடுக்க டொனால்ட் ட்ரம்ப் ஒருவரே போதுமென்பது இன்னொருமுறை உறுதிப்படுத்தப் படுகிற மாதிரித்தான் உலகம் போகிற போக்கு இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்.    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!