இட்லி வடை பொங்கல்! #48 ஓ அம்பேரிக்கா! El Chapo! அரசியல்வாதிகள்!

எங்கள்Blog ஸ்ரீராம் இந்தப்பதிவில் இந்தியாவைப் பொறுத்த அளவில் டிரம்ப் வருவதே நல்லது என்கிற கருத்து நிலவுகிறதே என்றொரு கருத்தைச் சொல்லி இருந்தார். இங்கே எத்தனை இந்தியர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள் , தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் என்னிடமில்லை. ஆனால் அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்ப்பவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறதாம்!


The new findings come just one day after it was revealed that 52 per cent of Americans supported Trump's removal. Pictured are protesters at a demonstration in New York City demanding Trump's impeachment on October 13  

Pew Research Cente நடத்திய கருத்துக் கணிப்பில் தற்சமயம் டொனால்ட் ட்ரம்ப் மீதான தகுதி நீக்கத்தை (impeachment) ஆதரிக்கிறார்களாம். முன்னால் ட்ரம்ப் மீதான தகுதிநீக்க நடவடிக்கைகளை எதிர்த்த பத்தில் ஒருவர் இப்போது ட்ரம்ப் தகுதி நீக்கம் செய்யப்படுவதை ஆதரிக்கிறார் என்கிறதாம் புதிய கருத்துக் கணிப்பு.இதை நடத்திய  Pew Research Center 3,487 நபர்களிடம் கருத்துக் கணிப்பை மேற்கொண்டதில், முன்னர் இதை எதிர்த்தவர்களில் பெரும்பாலானவர்களில் 61% பேர் டெமாக்ரட் அல்லது டெமாக்ரட் சார்புள்ளவர்கள் மற்றும் 32% பேர் ரிபப்லிக்கன் கட்சியினர் என்று மேலும் தகவல்களைச் சொல்கிறது பிரிட்டனின் டெய்லி மெயில். 


el chapo!  நெட்பிலிக்ஸ் வெப் சீரியல்களை பார்க்கிற எல்லோருக்கும் அறிமுகமான மெக்சிகன் போதைமருந்து வியாபாரி! இவனது போதைமருந்து சாம்ராஜ்யம் எப்படி அமெரிக்கா முதல் உலகின் பலபகுதிகளுக்கும் பரவி இருந்தது, அமெரிக்காவின் போதைமருந்துதடுப்புப் பிரிவு எவ்வளவு அரும்பாடுபட்டு இவனைப் பிடித்தது, எப்படி சிறையில் இருந்து தப்பி மீண்டும் பிடிபட்டான் என்பதெல்லாம் இரண்டு சீசன்களில் நண்பர்கள் பலர் பார்த்திருக்கலாம். ஒருவழியாக ஆயுட்கால சிறைவாசம் என்று ஜெயிலில் போட்டு விட்டாலும் மெக்சிகோ போதை சாம்ராஜ்யத்தை யோக்யின் கஸ்மான் என்கிற el chapo வின் மகன்கள் இருவரும் ஏழரை லட்சம் ஜனங்கள் வசிக்கிற குலியாகான் நகரத்தில் தொடர்ந்து நடத்திவருகிறார்கள். நேற்றைக்கு மெக்சிகோ போலீசார் அதில் ஒருவனான ஓவிடியோ கஸ்மான் லோபஸ் என்பவனைக் கைது செய்துவிட்டார்கள்!  
  

கைது செய்துவிட்டார்கள் என்பதோடு சுபம் டைட்டில் போட்டு முடித்துவிட இது என்ன தமிழ் சினிமாவா? el chapo வின் ஆதரவாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு, கலவரத்துக்குப் பணிந்து மெக்சிகோ போலீசார் அவனை விட்டுவிட்டார்கள்!
When Ovidio Guzmán López was seized at a house on a judge's warrant in the city of Culiacán, cartel gunmen fought street battles with security forces.At least eight people were killed and 16 wounded, the authorities say, with vehicles left burning in the streets. President Andrés Manuel López Obrador said the decision to cancel the arrest on Thursday had saved lives என்கிறது பிபிசி உயிர்ச் சேதத்தைத் தவிர்க்க கைது நடவடிக்கையை ரத்து செய்தது சரிதான் என்று மெக்சிகோ ஜனாதிபதியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்றால் சும்மாவா?😄😄😂 

இது ச்சும்மா ட்டமாசு!

மெக்சிகோ மாதிரி நம்மூரில் மேஃபியாக்கள் இல்லையே என்றா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  அதுதான் ஆல் இன் ஆல் அழகுராஜாக்களாக   அரசியல்வாதிகள் பலரும் இருக்கிறார்களே!  

    
கருணாநிதி  ஸ்பெக்ட்ரம், மணற்கொள்ளை, நில அபகரிப்பு என்று சேர்த்து முந்துகிற வரை   ஷரத் பவாரின் ஊழல் சாம்ராஜ்யம் மிகப்பெரியதாக இருந்தது என்கிறார்கள். ED என்ன ED! ஈசியாக ஏமாற்றிவிடலாம் என்று ஷரத் பவார் அசால்ட்டாகச் சொல்கிறார் இங்கே. பாருங்கள்!   

சிவசேனாவின் ஆதித்ய தாக்கரே பாவம்! ஷரத் பவார் தாத்தா பால்தாக்கரேவுடன் இணக்கமாக இருந்த   பழைய நாட்களை மனதில் வைத்துக் கொண்டு மறைமுகமாகவாவது  ஆதரவளிப்பார் என்று நினைத்ததில் அரசியலில் பழைய விசுவாசங்கள் நினைப்பெல்லாம் இல்லை என்று மறுத்துவிட்டாராம்! அவர் பாடே திண்டாட்டம் என்று இருக்கும்போது பழைய நினைப்பெல்லாம் வருமா என்ன?

மீண்டும் சந்திப்போம்.   

4 comments:

 1. //இந்தியாவைப் பொறுத்த அளவில் டிரம்ப் வருவதே நல்லது என்கிற கருத்து நிலவுகிறதே // - அது எனக்குச் சந்தேகம்தான். இந்தியர்கள் அமெரிக்கா செல்வதற்கும், அங்குள்ளவர்களின் மனைவி வேலை பார்க்கவும் நிறைய முட்டுக்கட்டை டிரம்ப் போட்டிருக்கிறாரே..

  டிரம்ப் இரண்டாவது முறை வரமாட்டார் என்று புதிய ஜோதிடர் பாலாஜி ஹாசன் குறிப்பிட்டிருந்தார். ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் நெ.த.!

   அது ஸ்ரீராம் எங்கோ பார்த்துவிட்டுச் சொன்னது. நம்மூரைவிடக் கொஞ்சம் scientific ஆக கருத்துக் கணிப்பை வெளியிடுகிற moodys மறுபடியும் ட்ரம்ப் தான் கெலிப்பார் என்று காரணங்களோடு சொல்லியிருப்பதை முந்தைய பதிவொன்றில் சொல்லியிருக்கிறேன். நான் ஜோசியர்களை நம்புவதில்லை!

   Delete
 2. அமெரிக்காவைப் பொறுத்தவரை, டெமாக்ரட் ஆண்டாலும், ரிபப்ளிகன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே என்பதுதான் என் நிலை.

  ReplyDelete
  Replies
  1. கௌதமன் சார்!
   அமெரிக்காவைப் பிடித்த கெரகம் நம்மையும் பிடித்தாட்டுகிறதென்றால் கவலைப்படாமல் எப்படி இருக்க முடியுமாம், சொல்லுங்களேன்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!