நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால்....!

போராட வேண்டிய விஷயங்களுக்கு நிச்சயமாகப் போராடத் தான் வேண்டும்! தவறு இல்லை!

 சுதந்திரமான அடிமைகள் என்று ஜெயகாந்தன் பேசியதைத் தொட்டு, சில பெண்கள் அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதாக சீதாம்மாவின் குறிப்பேடு ஜெயகாந்தன் 11 இழையில் படித்தேன் என்று சொல்லியிருந்தேன்  இல்லையா?

போர்க்கோடி  தூக்குகிற அளவுக்குத் தவறாக என்ன சொல்லி விட்டார் என்பது எனக்கு இன்னமும் தெரியவில்லை. திருமதி சீதாலட்சுமியின் இழையில் முதல் நான்கு வரிகளும், கடைசியாக ஜேகே சொன்னதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு, சொல்கிறேன் என்றும் முடித்திருந்ததையும் சொல்லி இருந்தேன். சீதம்மா எழுதிய நான்கு வரிகளுக்கு  அதிகமாக இன்னும் ஒரு பத்துப் பன்னிரண்டு வரிகள், இணையத்தில் தேட இன்று தான் தெனாலிடாட்காம் என்ற தளத்தில், இது பற்றி வெளியாகியிருந்த செய்தி,
கிடைத்தது. நன்றியுடன் மீள் பதிவு செய்யப் படுகிறது


பொருள், போகம்,புகழுக்கு அடிமையாகும் பெண்கள்: எழுத்தாளர் ஜெயகாந்தன்

செவ்வாய்க்கிழமை, 29, டிசம்பர் 2009 (11:29 IST)


சென்னை:

''முன்பு பெண்கள் கணவனுக்கு அடிமையாக இருந்தார்கள்  ஆனால் தற்போது சுதந்திரம்பெற்று பொருள், போகம், புகழ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டார்கள். சுத்திரமான அடிமையாக ஆகிவிட்ட பெண்களுக்கு விடுதலையே கிடையாது"என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சென்னையில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இலக்கிய- ஆன்மிக சொற்பொழிவு நிகழச்சி நடைபெற்றது. இதில் பேசிய எழுந்தாளர் ஜெயகாந்தன் மேலும் கூறியது...'' பாரதியார்  கடவுளிடம் வேண்டும்போது சுதந்திரம் வேண்டும் என்றார் அவருக்காக அல்ல இந்த தேசத்துக்காக சுதந்திரம் வேண்டும் என்றார். 

கடவுள் உண்டா இல்லையா என்பது பிரசனையில்லை. கடவுள் வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் முக்கியம்.  ஆத்மா மனிதநாக பிறந்த அனைவருக்கும் உண்டு நாத்திகனுக்கும் உண்டு, நானும் நாத்திகனே.

நான் கோவிலுக்கு செல்வதில்லை, சடங்குகள் எல்லாம் எனக்கு பிடிக்காது. ஆனால் எதைச்செய்தாலும் விநாயகரை நினைக்காமல் தொடங்குவதில்லை.  அந்தக்காலத்தில் படித்தவர்கள்தான் அடிமைகளாக இருந்தனர்.  பெண்கள் தங்களின் கணவருக்கு அடிமைகளாக இருந்தார்கள்.

ஆனால் கணவர்களோ வேறு பல விஷயங்களுக்கு அடிமைகளாக இருந்தனர்.   இப்போது பெண்கள் சுதந்திரம் பெற்று கணவர்களைபோன்றே அதற்கெல்லாம் அடிமைகளாக மாறிவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையாக இல்லை. 

பெண்கள் பொருள், போகம், புகழ் என பல்வேறு விஷயங்களுக்கு அடிமைகளாகிவிட்டனர்.  அதுவும் சுதந்திரமான அடிமைகளாக மாறுவதுதான கொடுமை, அவர்களுக்கு அதிலிருந்து விடுதலையே கிடையாது"என்றார் எழுத்தாளர் ஜெயகாந்தன். 


இதைப் படித்த பிறகும் கூட அப்படி என்ன தவறாகச் சொல்லிவிட்டார், என்ன புள்ளி விவரத்துடன் நிரூபிக்கவேண்டும் என்று கேட்கிறார்கள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. புள்ளிவிவரத்தோடு பேச முனைந்தாலே முதலில் வருவது குழப்பமும், அடிதடியும் தான்!

மின்தமிழில் திருமதி சீதாலட்சுமி  எழுதிய முந்தைய பகுதிகளைப் படிக்க, தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விக்கி பக்கங்களில் பார்க்கலாம்!

தமிழ் எழுத்துலகம் சாரு-- ஜெமோ மாதிரியானவர்களிடம் சிக்கிக் கொண்டு ஒரு புறம், திறனாய்வு செய்கிறேன், விமரிசனம் செய்கிறேன் என்று கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிற இடிமன்னர்கள்
ஒரு புறமுமாக, இப்படி தமிழ் எழுத்துலகமும் வாசகர்களும் பிரிந்து கிடக்கிறார்கள். நல்ல வாசகனை உருவாக்கத் தெரியாதவர்கள் எல்லாம்  தங்கள் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டு,  எழுத்தாளுமை நிறைந்த படைப்பாளியை குறை கூறுவதிலேயே, தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் கேவலமான காலம்  இது என்று தான் சொல்ல வேண்டும்!

இவர்கள் வழியாக நல்ல எழுத்தை, அடையாளம் கண்டு கொள்ள முடியாது! வாசகன் தானே, தனது வாசிக்கும் தளத்தை விரிவுபடுத்திக் கொண்டு தானே தான் எது நல்ல எழுத்து என்பதைத் தீர்மானித்தாக வேண்டும்! தன சுயபுராணத்தை பொடியே சொரிந்து கொண்டிருப்பபவர்களிடமிருந்து அல்ல!

கனிமொழியோடு, ஜெயகாந்தனின் எழுத்தாளுமை என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டதற்காக ஒரு விமரிசனம்!
கனிமொழியின் அரசியல் சார்பு வேண்டுமானால், ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கலாம், அதற்காக, இலக்கிய  ரசனையே இல்லாதவர், பாராட்டுவதற்குக் கூடத் தகுதியற்றவர் என்று எப்படி இவர்கள் ஒரு அவசர முடிவுக்கு வருகிறார்கள்?

உடல் நலம் சரியில்லாத தருணத்தில், கலைஞருடைய உதவியை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்று வாதாடுகிறார்கள்! அங்கே ஜேகே பிரதானமான காரணம் இல்லை, கருணாநிதி மீதான வெறுப்பு மட்டுமே!

ஆக,நல்ல எழுத்தை அங்கீகரிக்கப் பழகுகிற  வாசிப்புத் தளம் இன்னமும் விரிவடைய வேண்டும் என்று தான் தோன்றுகிறது!

இலக்கியம் என்பது வெறும் வார்த்தை அலங்காரத்தில் இல்லை, முனைவர் நா.கண்ணன் தனது பதிவில் சொல்கிற மாதிரி நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறைகள் தெரியாது! நெஞ்சம் நிறைய நேசம் வைத்துப் படிக்க வருபவருக்கும் இதமாகப் பரிமாறத் தெரிந்தவனே நல்ல எழுத்தாளன்!

அவன் எழுதுவது மட்டும் தான் எழுத்து!
கூழாங்கல்லை ஒதுக்கி விட்டு மாணிக்கத்தை மட்டும் தேடுகிற தேடல் உருவானால், வெட்டிக் கூளங்கள் தானே ஒழிந்து போகும்!

இருள் விலகி ஒளி பிறக்கட்டும்!


 


அதான் போஸ்டர் அடிச்சே சொல்லிட்டாங்கல்ல......!

what are these girls trying to say15 What Are These Girls Trying To Say


what are these girls trying to say10 What Are These Girls Trying To Say


what are these girls trying to say01 What Are These Girls Trying To Say 
 
படங்களைப் பார்த்துக் கொண்டே வாருங்கள்! ஒவ்வொரு பெண்ணும் வாயைப் பெரிதாகத் திறந்து ஏதோ சொல்லவருகிற மாதிரி இல்லை?
 
ஒருவேளை ஜெயகாந்தனுக்கு எதிராக, மகளிர் அமைப்புக்கள் எல்லாம் சர்வதேச அளவில் ஆதரவைத் திரட்டி விட்டார்களா என்ன?
  
what are these girls trying to say02 What Are These Girls Trying To Say
what are these girls trying to say03 What Are These Girls Trying To Say
what are these girls trying to say04 What Are These Girls Trying To Say
what are these girls trying to say05 What Are These Girls Trying To Say
what are these girls trying to say06 What Are These Girls Trying To Say
what are these girls trying to say07 What Are These Girls Trying To Say
what are these girls trying to say08 What Are These Girls Trying To Say
what are these girls trying to say09 What Are These Girls Trying To Say
what are these girls trying to say11 What Are These Girls Trying To Say
what are these girls trying to say12 What Are These Girls Trying To Say
what are these girls trying to say13 What Are These Girls Trying To Say
what are these girls trying to say14 What Are These Girls Trying To Say
what are these girls trying to say16 What Are These Girls Trying To Say
what are these girls trying to say17 What Are These Girls Trying To Say
what are these girls trying to say18 What Are These Girls Trying To Say
what are these girls trying to say19 What Are These Girls Trying To Say 
பயந்துபோய் விசாரிச்சப்புறம் தான் தெரிஞ்சது! தாய்க் குலங்கள் தும்மப் போறாங்களாம்! வேற ஒண்ணும் இல்லை!

எல்லோரும் நிம்மதியா அ'னா பிறந்தநாளைக் கொண்டாடிட்டு, காந்தி நல்லவேளையா அறுபத்திரண்டு வருஷத்துக்கு முன்னாலேயே போய்ச் சேர்ந்து விட்டார் என்பதற்காகவும் சந்தோஷப்பட்டு, நிம்மதியாத் தூங்குங்கள்! 

2011  வரை டைம் இருக்கிறது! அதான் போஸ்டர்  அடிச்சே சொல்லிட்டாங்கல்ல..!

படங்களுக்கு நன்றி இங்கே

 

சுதந்திரமான அடிமைகள்! Vs ஜெயகாந்தன்


மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் திருமதி சீதாலட்சுமி அமெரிக்காவில் இருந்து கொண்டு  ஜெயகாந்தனைப் பற்றிய தனது நினைவுகளைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வருகிறார். 

 திருமதி சீதாலட்சுமி  மின் தமிழில் தன்னைப் பற்றி ஒரு சிறு அறிமுகமாக, தான் இந்த நினைவுகளை எழுதிக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் முகமாக எழுதியதைப் படிக்க!

நேற்றைய தினம் சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன் - 11 என்ற தலைப்பில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். ஒன்றும் புதிதில்லை. ஜெயகாந்தன் சமீபத்தில் இன்னொரு சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார், அல்லது சர்ச்சைக்குள் அவரைச் சிக்க வைத்து விட்டதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

ஜெயகாந்தனை வைத்து சர்ச்சைகள் கிளம்புவதில் பெரிய ஆச்சரியமில்லை. அவரும் இதற்கெல்லாம் அசருகிற மாதிரியும் தெரியவில்லை!

ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர்!


சமீபத்தில் சங்கர நேத்ராலயா ஆய்வு  நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவு ஒன்றை ஜெயகாந்தன் நிகழ்த்தியிருக்கிறார். அங்கே அவர் பேசியதில், “பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர். இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “என்ற பகுதி மாதர் சங்கங்கள், பெண் உரிமை இயக்கங்களின் கோபத்தைக் கிளறியிருப்பதாக இந்த இழையைப் படித்த பிறகுதான், தமிழ்நாட்டிலேயே இருக்கும் எனக்குத் தெரிய வந்தது.

ஜெயகாந்தன் பேசியது ஒன்றும் புதியதுமில்லை! அவருடைய கங்கை எங்கே போகிறாள், கோகிலா என்ன செய்து விட்டாள் கதைகளைப் படித்தவர்களுக்கு,  அவருடைய இந்த கருத்து புதிதாகவோ, அல்லது சர்ச்சைக்குரியதாகவோ தெரிவதில்லை என்பது தான் ஒரு வாசகனாக எனக்குப் படுகிறது.

” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “ என்ற ஜெயகாந்தனின் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. மனம்விட்டுப் பேசுவோம்" என்று திருமதி சீதாலட்சுமி அந்த விவாத இழையை முடித்திருக்கிறார்.

எனக்குள்  சில பழைய நினைவுகள் நிழலாடின! சுதந்திரம், சுதந்திரமான அடிமை என்ற வார்த்தைகள் எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை  நினைவு படுத்தின. 

பொதுவுடைமை அரசியலில் கைகோர்த்த தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தது அந்தப் பெண் செய்த முதல் பாவம். அம்மா ராஜ்ஜியம் தான்! பெண்ணை, தங்களுடைய இயக்கத்தில் இருந்த ஒரு இளைஞனுடன் பழக அனுமதித்துக் காதல், திருமணத்தில் முடிந்தது. ஒரு பெண் குழந்தை கூட இருந்தது. கணவன் மனைவி இருவருமே மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அரசியலிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.

திடீரென்று, மாப்பிள்ளைப் பையனின் நடத்தையில் புகார்கள்! தினமும் குடிக்கிறானாம்! பெண்ணிடம் விசாரித்தால், பெண் கணவனுடைய சார்பாகத் தான் பேசினாள். அழுத்தி அழுத்திக் கேட்டதற்கு, எனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்தாள். உச்சத்தில் இருந்த அப்பனையே ஆட்டிப் படைத்தவள் அம்மாக்காரி!

விவாகரத்து ஒன்று தான் வழி! அம்மாக்காரி முடிவு செய்தாகிவிட்டது. அப்பாவும் தலையாட்டியாகிவிட்டது. பெண்ணோ வேறு வழியில்லாமல், விவாகரத்துக் கோரி வழக்குத் தொடர, விவாகரத்தும் கிடைத்தாயிற்று! அம்மாவின் அடியை ஒற்றி மகளும் அரசியலில்! இப்போது. இன்னொரு திருமணமும் ஆகிவிட்டது.

என்னதான் முற்போக்கு, பெண் விடுதலை, சம உரிமை என்று மேடைகளில் பேசினாலும், அந்தப் பெண்ணின் அடிமனதில் இருந்த சோகத்தைப் பார்த்த
போது  புரிந்து கொள்ள முடிந்தது. 

இப்போதோ காலம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது! முழுநேரமும், ஏதோ ஒரு சங்கம், எங்கேயோ ஒரு கூட்டம், வழக்கம் போலவே பெண்ணுரிமை குறித்துப் புள்ளிவிவரங்களுடன் உரை நிகழ்த்துவது என்பதே அன்றாடம்நடக்கிறநிகழ்வுகளாகிவிட்டது. ஒரு இயந்திரத்தைப் போல!

அந்தப் பெண்ணைக் கேட்டால், நான் சுதந்திரமானவள் என்று தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ளக் கூடும்! ஏராளமான புள்ளிவிவரங்களோடு கூட பேசக் கூடும்! புள்ளிவிவரங்கள் எல்லாம் ஒரு அளவுக்குத் தான், வாழ்க்கையை வழிநடத்துகிற அளவுக்கு வலிமையானதும், அவசியமானதும் அல்ல!


ஜெயகாந்தன் சொன்ன மாதிரி 'சுதந்திரமான அடிமை' என்ற வார்த்தை தான் அந்தப் பெண்ணுக்குப் பொருத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது!

ஏதோ பழக்கங்களுக்கு அடிமையாகவே இருந்து விடுகிற சுதந்திரம்!




 

எழுத்தும் விமரிசனமும் ! சந்தோஷத்திற்குக் குறுக்கு வழி உண்டா என்ன?

 
இன்று காலை, செய்தி சானல்களை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கையில் இடையில், ஸ்டார் மூவீஸ் வந்து போனது. சந்தோஷத்திற்கான குறுக்குவழி Shortcut to Happiness ஓடிக் கொண்டிருந்தது. ஏற்கெனெவே இதை ஸ்டார் மூவீஸ் சானலிலேயே  மூன்று நான்கு தரம் பார்த்தது தான்!

என்றாலும், சுவாசிக்கப் போறேங்க வலைப்பக்கங்களில், வாசிப்பு அனுபவங்களை வைத்து எது நல்ல எழுத்து என்று மூன்று நான்கு பதிவுகளை எழுதியதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படம், ஒரு புதிய பார்வையில்,பார்க்கத் தூண்டியது என்றே சொல்லவேண்டும்!

அல்லது ஏற்கெனெவே, ஆழ்மனதில், இந்தப் படத்தை முதன் முதலில் பார்த்தபோதே தங்கிவிட்டதாகக்  கூட இருக்கலாம்! எப்படியிருந்தாலும், இங்கே தமிழ் எழுத்துலகத்தில் இப்போது நடந்து வரும் சில போக்குகளுக்கு, இந்தத் திரைப்படம், ஒரு அழகான அடித்தளம், தொடர்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

Faust, Faustus என்ற லத்தீன் வார்த்தைக்கு அதிர்ஷ்டம் என்று பெயர். இதையே ஜெர்மானிய மொழியில் சொல்லும்போது fist,  அதாவது கைவிரல்களை மடக்கிக் காட்டுகிற முஷ்டி, இது ஜெர்மானிய நாடோடி இலக்கியங்களில் சாத்தானோடு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தைக் குறிப்பதாகவும் இருக்கிறது! இந்த ஜெர்மானிய நாடோடி இலக்கியக் கதை அடிப்படையை வைத்து வாஷிங்டன் இர்விங்  என்பவர் எழுதிய கதைத் தொகுப்பில்(1824) இருந்து சாத்தானும் டாம் வாக்கரும் என்ற கதையை,  தன்னுடைய பாணியில் திரும்பச் சொல்கிற விதமாக சாத்தானும் டேனியல்வெப்ஸ்டெரும்  என்ற  தலைப்பில் 1937 வாக்கில் ஸ்டீபன் வின்சென்ட் பெனெட்  என்ற கதாசிரியர் எழுதினார். எழுத்தாளர்  ஒ ஹென்றி பெயரிலான விருதையும் இந்தக் கதை 1938 ஆண்டு பெற்றது.

1941 இலும், அப்புறம் 2007 இலும் திரைப்படமாக வந்த இந்தக் கதை என்ன தான் சொல்கிறது? 2007 வடிவத்தைப்  பார்ப்போம்! இதில் 1941 வடிவத்தைப் போல அல்லாமல், சாத்தான் ஒரு அழகான பெண்ணாக வருகிறது என்பதற்காக மட்டுமல்ல! முந்தைய வடிவத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை, நம்ப முடிந்தால்நம்புங்கள்!

ஜாபெஸ் ஸ்டோன், ஒரு பிரபலமாகாத எழுத்தாளர். அவருடைய எழுத்துக்களை பதிப்பகங்களுக்கும்,  இலக்கியத் தரகர்களுக்கும் அனுப்பிவிட்டுக் காத்திருக்கிறார். வாய்ப்பு வருகிற மாதிரித் தெரியவில்லை. ஒரு நாள், வெறுத்துப்போய்,  தன்னுடைய எழுத்துக்களை சேர்த்து வைத்திருக்கும் லேப்டாப்பை ஜன்னல் வழியாக வீசி எறிகிறார். அது வீதியில் நடந்துபோய்க் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் தலைமீது விழுந்து, அந்தப் பெண் உயிரிழக்கிறார்.

சந்தர்ப்பம் கிடைத்தவுடன், சாத்தான், ஒரு அழகிய பெண்ணாக உள்ளே நுழைகிறது! வெறுப்பு, குற்றவுணர்வுடன் தவிக்கும் எழுத்தாளனோடு,பேரம் ஆரம்பிக்கிறது. நாம் இருவரும்  கூட்டு சேர்ந்து கொண்டால் புகழ், பணம் எல்லாம் கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள் அந்த அழகான ராட்சசி! பதிலுக்கு உன்னுடைய ஆத்மாவை எனக்கு விற்றுவிடு என்கிறாள்.

கதாநாயகன் ஒத்துக் கொள்கிறான். கீழே லேப்டாப் விழுந்து தலையில் அடிபட்டு இறந்த பெண்மணி உட்பட, சிக்கல்கள், வேறு விதமாக மாறி, கதாசிரியனைத் தேடி, இது வரை அவன் பார்த்திருக்காத அங்கீகாரம், புகழ் பணம் எல்லாமே கிடைக்கிறது. அந்த அழகான ராட்சசி, அவனோடு சல்லாபித்துக் கொண்டே, வாக்களித்தபடி எல்லாவற்றையும் தந்தாலும், ஜாபெஸ் ஸ்டோன் ஒரு வெறுமையை உணர்கிறார். தான் எதிர்பார்த்தது இது இல்லை, இதிலிருந்து விடுபட்டால் தேவலை என்று தவிக்கிறார்!


தான் முன்னால் சந்திக்கத் தவமிருந்த ஒரு பதிப்பாளரைச் சந்தித்து, தனக்கு உதவும்படி வேண்டுகிறார்.

வழக்கு ஆரம்பிக்கிறது! உண்மையிலேயே ஒரு நீதிமன்ற விசாரணை மாதிரித் தான் களம் விரிகிறது.


கதாநாயகன் தரப்பில், டேனியல் வெப்ஸ்டர் வழக்கறிஞராகவும், சாத்தான் அழகிய பெண்வடிவத்தில் எதிர்த்தரப்பு வழக்கறிஞராகவும்  வழக்கு நடக்கிறது. ஜாபெஸ் ஸ்டோன் தன்னிடம் ஒப்புக் கொண்டபடி ஆத்மாவைத் தர மறுத்து மோசடி செய்ததாக சாத்தான் குற்றம் சாட்ட, பதிலுக்கு டேனியல் வெப்ஸ்டர் வாதங்கள் என்று கதை மிகவும் சுவாரசியமான தளத்தில் விரிகிறது!

அந்தோணி ஹாப்கின்ஸ், பதிப்பாளர், கதாநாயகனின் வழக்கறிஞரான  டேனியல் வெப்ஸ்டராகவும், அலெக் பால்ட்வின்  கதாநாயகன் ஜாபெஸ் ஸ்டோன் ஆகவும், ஜெனிஃபர் லவ் ஹெவிட் . அழகான சாத்தானாகவும் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு எழுத்தாளன் ஏங்குவது எதற்காகவெல்லாம் என்பதை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. நல்ல எழுத்தாளனாக வரஆசையில் முனைகிறவன்,  திசை மாறிப்போய் புகழ், பணம், அங்கீகாரம் என்பது போதையாகிக் கடைசியில் தன்னுடைய ஆத்மாவையே இழந்து நிற்கிற அவலத்தைத் தொட்டுச் சொல்கிறது.

சமீபத்தில் நான் பார்த்த திரைப்படங்களில், மிக வித்தியாசமான அணுகுமுறை, வழக்கு, வாதங்கள் என்று சுவாரசியமான திரைக்கதை இது! தியேட்டர்களைப் பார்க்காத படம் என்று சொல்கிறார்கள்! ஸ்டார் மூவீஸ் சானலில் இந்த நான்கு அல்லது ஐந்து மாதங்களில்,  குறைந்தது நான்கு முறையாவது போட்டிருப்பார்கள்! இன்னும் ஒரு பத்துத் தரமாவது போடுவார்கள் என்று தான் நினைக்கிறேன்! பார்க்க முடிந்தால்பாருங்கள்!




எப்படியிருந்த தமிழ்க் கதை உலகம் என்று தன்னுடைய ஆதங்கத்தைப் பேசியிருந்த பதிவு இது. "கதை படிக்கிறோம்' என்ற எண்ணத்தையே மறக்கச் செய்த எழுத்தாளர்கள் வலம் வந்த காலம் அது; எழுத்தாளனுக்கும் எழுத்தை நேசித்த வாசகனுக்கும் பொற்காலம் அது! இப்பொழுது எழுத்தாளனுக்குப் பெயர், கதைசொல்லியாம்!"

பூவனம் வலைப் பதிவில் சென்ற ஆகஸ்ட் மாதம், எழுத்தாளர் ஜீவி விமரிசனக் கலையும், கதையின் கதையும் என்ற பதிவில் எழுத்தாளனைக் கதைசொல்லி என்று அழைக்கிறார்களே என்று ரொம்பவுமே ஆதங்கப்பட்டு எழுதியிருந்தார். அவருடைய ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு 'இதுவும் கடந்துபோகும்!' என்று சொன்னேன். அவருக்கு மனது ஆறவில்லை. ""காலங்கள் மாறும்"--இது சயின்ஸ் விதிதான்! இருந்தாலும் இப்பொழுதும் ராமராஜ்யத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?"

அப்போது கொஞ்சம் பற்றற்ற நிலையில் இருந்து பதில் எழுதுவதாக நினைத்துக் கொண்டு எழுதியது இது!

"காலங்கள் மாறும் என்ற முழுமையான மாற்றத்தைச் சொல்வதில்லை இது-just a passing phase or passing cloud ஒரு நிலையில் இருந்து இன்னொரு திசைக்கு நகருகிற மாற்றத்தின் இடைப்பட்ட பகுதியாகப் பாருங்களேன்!

எந்தக் காலத்திலுமே கூட கலைஞனை, தகுதிக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினதும் உண்டு, கண்டுகொள்ளாமல் விட்டதும் உண்டு.ஜனங்கள் வெற்று ஆரவாரங்களில், ஒரு கலைஞனைத் தூக்கி நிறுத்தினார்கள், மற்றொருவனைத் தரையில் தேய்த்தார்கள்.

இத்தனையையும் மிஞ்சி நிற்பதில்தான் உண்மையான கலைஞனின் வெற்றி இருக்கிறது.அப்படிப்பட்ட கலைஞனைப் பிரித்து அடையாளம் கண்டுசொல்வதில் தான், நல்ல விமரிசகனின் வெற்றியுமே இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

நினைவில் நின்ற ஒரு பொற்காலத்தைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.எவ்வளவு அழகான கனவாக இருந்தால் தான் என்ன? ஒரு நேரம், கலைந்து போக வேண்டியது தான் இல்லையா? அப்படி கலைந்துபோவது கூட, அதைவிட இன்னொரு அழகிய கனவைப் படைப்பதற்காகத் தான்!

என்றோ ஒருநாள் மறுபடியும் ஒரு அழகிய கனவு வரும்!"

கிருஷ்ண பிரபு  மோகமுள் புதினத்தை இப்போதுதான் படித்து விட்டுத்  தனது கண்ணோட்டத்தைச் சொல்லியிருக்கிறார்.

"மோகமுள் - பல வருடங்களுக்கு முன்பே திரைப்படமாகப் பார்த்துவிட்டதால் புத்தகத்தை வாங்கியிருந்தும் வாசிக்காமலே வைத்திருந்தேன்."

"ஒரு முதிர் கன்னியை, அவளைவிட பத்து வயது இளையவன் ஒருவன் காதலிப்பதை மையமாக வைத்து தி. ஜாவால் எழுதப்பட்ட அருமையான நாவல். வெளிவந்த காலத்தில் அதனை வாசிப்பதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் அனுமதித்ததில்லை என்று சில வயோதிக நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்." என்ற வார்த்தைகளைப் படித்தபோது, ஜீவி சார் ஆதங்கப்பட்டது போலவே எனக்கும் ஒரு ஆதங்கம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் தனது எண்ணத்தைச் சொல்வது இப்படி:

மோகமுள் ——- தி.ஜானகிராமன்.


அடிப்படையில் அழகிய கதை. நாவலுக்கான விரிவும் தீவிர அகஆராய்ச்சியும் இல்லை. ஆனால் சொகுசான நடை, தளுக்கான உரையாடல்கள், உள்ளே இறங்கி உலவி வரச்செய்யும் காட்சிச் சித்தரிப்புகள், மறக்கமுடியாதபடி மனதில் பதியும் கதாபாத்திரம் சித்தரிப்புகள் ஆகியவற்றுடன் தமிழ் மனதை கொள்ளை கொண்ட படைப்பு. இசையனுபவம் மொழியை சந்திக்குமிடங்கள் இந்நாவலின் உச்சங்கள். யமுனா என்ற (தி.ஜானகிராமன் முடிவின்றி காதலித்த இலட்சிய பெண்ணுருவான) மராட்டிய பேரிளம் பெண்ணை ஒரு தலையாக காதலிக்கும் பாபு என்ற இசைக்கலைஞனின் புரிந்து கொள்ள முடியாத (அவனால்) தாகத்தின் கதை.

1956ல் பிரசுரமாயிற்று.

அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.

மரபான தமிழ் ஒழுக்கவியல் மீது ஃபிராய்டியம் ஓங்கி அடித்ததின் விளைவு. அலங்காரத்தம்மாள் தன் ( நெறிதவறியதனால் விளைந்த) குற்ற உணர்வை வெல்ல மகன் அப்புவை வேத பண்டிதனாக்க முயல்கிறாள். நெறிகளுக்கு அப்பால் உள்ள காதலின் தூய்மையை அப்பு உணர்ந்து தன்னை விரும்பும் இளம் விதவை இந்துவை ஏற்கிறான். ஜானகிராமனின் படைப்புகளில் வரும் ‘காமம் கனிந்த ‘ அழகிய பெண்கள் தமிழ் வாசகனுக்குள் பகற்கனவை விதைத்தவை. பாலகுமாரன்கள் முளைக்கும் நாற்றங்கால்.

1967ல் பிரசுரமாயிற்று.

அம்மா வந்தாள் புதினத்தைப் பற்றி இன்னொரு விரிவான பதிவாக ஜெயமோகன் எழுதியது இங்கே!  ஒரு சின்ன மனவோட்டத்தைப் பற்றிப் போகிற போக்கில் தி.ஜானகிராமன் சொல்லிவிட்டுப் போகிற ஒரு வரியை வைத்துக் கொண்டு, ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ், ஃபிராய்டியன்  பாதிப்பு, காமம் கனிந்த அழகிய பெண்கள் என்ற வார்த்தைகளுக்குள், ஒரு படைப்பாளியை அடக்கிவிடத் துடிக்கிற மாதிரி இருக்கிறதே தவிர, ஒரு நேர்மையான விமரிசனமாக இல்லை என்பதோடு  கதை விரியும் தளங்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வீசப்படும் வெற்று வார்த்தைகளாகவே நின்று போய்விடுகின்றன!


மரபான தமிழ் ஒழுக்கவியலை என்னவோ தி.ஜா வந்து தான் கெடுத்து விட்டது போல இந்த வார்த்தை இருக்கிறது! சங்க இலக்கியங்களும், சிலப்பதிகாரமும் சொன்னதெல்லாம், தி.ஜானகிராமனை மட்டம் தட்ட வேண்டும்  என்ற ஒரே நினைப்பில் சௌகரியமாக மறந்து போய்விடுகிறது. மோகமுள்ளில் நாவலுக்கான விரிவும், தீவீர அக ஆராய்ச்சியும் இல்லையாம்!



இப்படித் தன் எழுத்தைத் தானே பாராட்டிக் கொள்ளும் ஒருவருடைய எழுத்தில் இருந்து  நல்ல எழுத்தைப்  பிரித்து அறிவது மிகவுமே கடினம். தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு அவதானிப்பு எனக்கு உண்டு என்று பீற்றிக் கொள்கிறவருக்கு, தி.ஜாவைப் பற்றி  ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை.

தி.ஜானகிராமன் என்ற தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளருக்கு, காஞ்சி மடத்தின் கடுமையான அனுஷ்டானம் என்ற போலித்தனத்தைச் சாடுகிற தெம்பு அந்த நாளிலேயே இருந்தது. காஞ்சிப்பெரியவர் என்றாலே எல்லோரும் கைகட்டி வாய் பொத்தி நின்ற அந்த நாட்களிலேயே அங்கே இருந்த ஆஷாடபூதித் தனத்தைச் சாடினவர் தி.ஜா!.  


இதயம் பேசுகிறது மணியன் மாதிரி சில  தமிழ் ஸ்மார்த்த எழுத்தாளர்கள், தி.ஜாவை வசைபாடியதை விட ஜெயமோகன்  அபத்தமாக உளறுவது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை! மணியன் போன்றவர்களுக்குத் தாங்கள், காஞ்சி மடத்தின் காவலர்கள் என்ற மமதை, உள்நோக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக வியாபாரம் எல்லாம்  இருந்தது. ஜெயமோகன் மாதிரித் தற்பெருமையில் ஊறிய எழுத்தாளர்களுக்குத் தங்களுக்கு முன்னால் கொண்டாடப் பட்ட எழுத்தாளர்களைப் பற்றித் தப்பும் தவறுமாக இப்படி எதையாவது பேத்திக் கொண்டிருப்பது, ஒரு பிழைப்பாக இருக்கிறது.

இத்தனை குப்பையையும் கிளறுவதற்கு ஒரு காரணமிருக்கிறது.
தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே விமரிசனம் செய்வது, இங்கே தமிழில் மிக எளிதாக இருக்கிறது. தங்களுக்குப் பிடித்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது! இல்லையோ, தரையில் போட்டுத் தேய்ப்பது!

நல்ல எழுத்து, நல்ல வாசிப்பு என்பது வீணையும் மீட்டும் விரல்களும் சேருகிற மாதிரி! இனிமையான இசை அங்கே தான் பிறக்கும்!

இங்கே ஜெயகாந்தனைப் பற்றிய பகிர்வு ஒன்று!

புத்தகங்களைப் பேச விருபுகிறவர்கள், படிப்பதில் ஆர்வம் உள்ள வாசகர்களை வரவேற்கிறேன்!


ஒரு நாள் போதுமா?


தேர்தல் நாளன்று மட்டுமல்ல, எல்லா நாட்களுமே இந்திய வாக்காளர்கள் ஏமாற்றப் படுகிற, வலிய வந்து தாமே ஏமாறுகிற  நாட்களாகத்தான் இருக்கின்றன!

அதுவும் மதுரை, திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பிறகு தேர்தல் என்று வந்தால் எத்தனை ஆயிரம் கிடைக்கும் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வலுவில் தங்களுடைய தலையோடு இந்த ஆட்டைக்கே வராதவர்கள் தலையையுமே சேர்த்து மொட்டையடிக்கக் கொடுக்கிற "வாக்காளப்  பெருமக்கள்"  பெருகி வரும் தமிழ்நாட்டில், தேர்தலில் வாக்களிப்பதோடு தங்கள் கடமை முடிந்து
விட்டது என்று நிம்மதியாகத் தங்கள் தலையை மொட்டையடிக்கக் கொடுக்கக் க்யூவில் நிற்காத வாக்காளர்களைப் பற்றிப் படிப்பதில், கொஞ்சம் ஆறுதல்! 

என்றைக்காவது ஒருநாள் தமிழ்நாடும் மாறாதா, இந்தியாவும் கொஞ்சம் உருப்படியான திசையில் வளராதா என்ற ஏக்கத்தோடு படிக்கும் செய்திகளை இந்தப் பக்கங்களில் உங்களோடு அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வருகிறேன்!

அந்தவகையில் தான், அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அதிபர் பொறுப்பை சென்ற ஜனவரி இருபதாம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்ட பாரக் ஒபாமாவின் செல்வாக்கு ஒரே வருடத்தில் கொஞ்சம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. அறுபத்தேழு சதவீதத்தில் இருந்து ஐம்பதுக்கு இறங்கி, இரு செய்தியில் நாற்பத்தேழு சதம் தான் என்று கூட இருந்தது, கருத்துக் கணிப்புகளில் சொல்வதாக செய்திகளில் பார்த்தேன்.

எட்டுவருடங்கள்! ஜார்ஜ் புஷ் பதவியை விட்டு விலகும்போது, அமெரிக்காவை மறுபடி ஒரு வியட்நாம் புதைகுழியில் சிக்கிக் கொண்ட மாதிரி, ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் சிக்கவைத்தது மட்டுமல்ல, அமெரிக்க வங்கி, நிதித்துறை ஒரு பெரும் சரிவை 2008 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் சந்திக்க ஆரம்பித்தபோது,  சிக்கலில் இருந்து விடுவிக்கிறேன் பேர்வழி என்று லட்சக்கணக்கான கோடி டாலர்களை Troubled Asset Relief Program  என்றபெயரில், பேராசையால் சரிந்த நிறுவனங்களில் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொட்டி நிரப்பினார்.

2009 ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கிற வரை, அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே தேர்தலில் வெற்றி பெற்று விட்டாலுமே கூட, முந்தைய அதிபரின் நிர்வாக அதிகாரங்களிலோ, முடிவுகளிளோ தலையிட முடியாது. ஜார்ஜ்  புஷ் கூடச் சேர்ந்து,  நிவாரண முயற்சிகளில் தன்னுடைய சம்மதத்தை ஒபாமா தெரிவித்ததை அமெரிக்க மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை.

போதாக்குறைக்கு, நிவாரணங்களை அள்ளி விழுங்கிய அமெரிக்க  பகாசுர நிறுவனங்கள், தங்களுடைய சொந்த லாபத்திற்காக மட்டுமே அதைப் பயன்படுத்தின. அமெரிக்க வங்கித் துறை, நிதித்துறை இவற்றின் பேராசையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணத்தின் பலன் போய்ச் சேரவில்லை. வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதில் இந்த பகாசுர நிறுவனங்கள் அக்கறை காட்டவில்லை.

சென்ற செப்டம்பர் அக்டோபரிலேயே, அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டு வருவதுபோல ஒரு சித்திரம் கிடைத்தது. பேராசையினால், தங்களைச் சுற்றியிருந்தவர்களையும் படுகுழுக்குள் தள்ளிய பகாசுர நிறுவனங்கள் மீள ஆரம்பித்தது உண்மைதான் என்றாலும், சராசரி அமெரிக்க மக்களுடைய வாழ்க்கை நிலையில் ஏற்பட்ட சரிவு, சோர்வு நீங்கவில்லை. ஆனால், அதிருப்தியும் கோபமும் அதிகரித்திருக்கிறது.

கொஞ்சம் தெம்பு ஊறினவுடனேயே அமெரிக்க பகாசுர நிறுவனங்கள், ரத்தம் குடிக்கும் ட்ராகுலாக்களாக மாறிவருவதையும், அவர்களுடைய லாப வேட்டை என்ற சீரழிவுக் குணம் மறுபடி தலை தூக்கி வருவதையும் பார்த்து அமெரிக்க மக்கள் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி பிரிட்டனிலும் வங்கிகள் 2500 கோடி பவுண்ட் ஸ்டர்லிங்குகள்  ஆதாயத்தை, எப்படி அறிவிப்பது, மக்களுடைய கோபத்தை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவிப்பதாகவும் செய்திகள்அடிபடுகின்றன.

பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சியின் கோட்டையாக இருந்த மாசாசூசட்ஸ் செனேட் தொகுதியில்,  கென்னெடி குடும்பத்தவர் உறுப்பினராக இருந்து மரணமடைந்ததை  ஒட்டி நடந்த தேர்தலில், ரிபப்ளிக் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். அதிபர் தேர்தலில் மிக அவமானகரமாகத் தோற்ற  ரிபப்ளிக் கட்சி,  ஜனங்களுடைய இந்த அதிருப்தி, கோபத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்,  "இந்தியா ஒளிர்கிறது" என்ற கோஷத்தை, நக்கலடித்தே காங்கிரஸ் கட்சி மறுபடி ஆட்சியைப் பிடித்தது போலத் தான்!

இந்தியாவின் இருட்டுக்குத் தொண்ணூறு  சதவீதத்திற்கு மேல் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம் என்பதை மறைத்து, மக்களுடைய அந்த நேரத்துக் கோபத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாதிரித் தான்! இப்போது மட்டும் ஒளிர்கிறதா என்று கேட்பதற்குத் தான் ஆளில்லை! மக்களுடைய மறதியின் மேல், முட்டாள்தனங்களின் மீது அரசியல்வாதிகளுக்கு அவ்வளவுநம்பிக்கை!

Change, Yes we can என்ற ஒபாமாவின் தேர்தல் ஸ்லோகன்களை வைத்தே ரிபப்ளிக் கட்சி தன்னுடைய எதிர் பிரசாரத்தை  ஆரம்பித்து விட்டது!

ஒபாமா தன் முதல் வருடத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ரிபப்ளிக் கட்சியினருடைய ஆதரவோடும் நிறைவேற்ற முயன்ற வேகத்தைப் பார்த்தோ என்னவோ, சமீபகாலங்களில் கட்டையைக் கொடுப்பதே தனது பிரதானமான தொழிலாக ரிபப்ளிக் கட்சி மாற்றிக் கொண்டுவிட்ட மாதிரித் தெரிகிறது.

ஒபாமாவை  ஆரம்பத்திலிருந்தே பிடிக்காத, ஒபாமாவும் பேச மறுக்கிற ஒரு செய்தி நிறுவனம் Fox News! ஸ்டேட் ஆப்  தி யூனியன் உரையில் என்ன இருக்க வேண்டுமாம்? புள்ளிவிவரங்களைக் கொஞ்சம் பாருங்கள்! புள்ளிவிவரங்கள் எப்போதுமே இரட்டை நாக்குடன் தான் விவரங்களைச் சொல்லும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு  Fox News! சொல்வதையும் பாருங்கள்!

Real Clear Politics Poll

Job Approval Approve Disapprove Spread
Obama 49.6% 44.9% +4.7%
Congress 26.0% 66.2% -40.2%
Direction of Country Right Direction Wrong Track Spread
RCP Average 36.8% 56.7% -19.9%



தேர்தல் தோல்வி, ஜனங்களிடம் குறைந்து வரும் ஆதரவு இதனால் தானோ என்னவோ, வங்கிகளுடைய பேராசைக்குக் கடிவாளம் போட முனைகிற சட்டமியற்றப் போவதாக  ஒபாமா சொல்ல வேண்டி வந்ததாகவும், ஒரு தரப்பு கருதுகிறது. அமெரிக்க வங்கித் துறையின் மிருகத்தனமான பலம், எதையும் விலை கொடுத்து வாங்கி விட முடிகிற இயல்பு, போதாக்குறைக்கு ரிபப்ளிக் கட்சியின் முட்டுக் கட்டைகள் இதையெல்லாம் மீறி, ஒபாமாவால் செயல்பட முடியுமா என்பதுதான் இப்போது எழும் சுவாரசியமான கேள்வி!

 January 27,வருகிற புதன் கிழமையன்று ஸ்டேட் ஆப் தி யூனியன் உரை என்று அமெரிக்க அதிபர்  பராக் ஒபாமா செனேட், காங்கிரஸ் என்ற இரு அவை உறுப்பினர்களோடும்,  அமெரிக்க மக்களுக்கும், தன்னுடைய அரசு என்ன செய்ய உத்தேசித்திருக்கிறது என்பதை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் விதத்தில் உரை நிகழ்த்த இருக்கிறார்.

அதிபர் உரை என்றவுடன், இங்கே இந்தியாவில், குடியரசு தினத்துக்கு முதல்நாள் மாலை வானொலி மற்றும்  தொலைக்காட்சிகளில் யாரோ எழுதிக் கொடுத்த, உப்புச் சப்பில்லாத,  அறிக்கையை படிப்பது போல என்று எண்ணி விட வேண்டாம்! இந்திரா காந்தி காலத்தில் இருந்தே இங்கே ஜனாதிபதி என்றால், அரசு நீட்டுகிற இடத்தில் கையொப்பமிடுகிற  வெறும் ரப்பர் ஸ்டாம்ப் என்றோ, ஜெயில் சிங் என்று ஒரு "தலையாட்டி பொம்மை" சொன்னாரே "மேடம் உத்தரவிட்டால், காலணிகளைக் கூடக் கழுவத் தயாராக இருப்பதாக"   அப்படிஎன்றோ கூட இல்லை.

அமெரிக்க ஜனநாயகத்தில், அமெரிக்க மக்களிடத்தில் பல குறைகளைச் சொல்லிவிடலாம், அது மிக எளிதும் கூட! ஆனால் அங்கே தவறுகளைக் களைகிற மெகானிசத்தில், எவரும் கைவைப்பதில்லை. பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால், ஒரு ஒழுங்கு நியதிக்குட்பட்டுத் தான் இருக்கவேண்டும் என்பதில் எந்த தயவுதாட்சணியமும் பார்ப்பதில்லை. சிறைத் தண்டனை, அபராதங்களை விட பொதுமக்கள் முன்னாள் அசிங்கப் படுவது என்பது அங்கே எவராலும் நினைத்துப் பார்க்கக் கூட விரும்பாத பெரும் தண்டனை!

அங்கே வாக்காளர்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் எப்படிச் செயல் படுகிறார்கள், நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் அதிபர் பொறுப்போடு செயல் படுகிறாரா என்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவசியப் படுகிற நேரத்தில் செருப்படி கொடுப்பதைவிடக் கேவலமாகத் தண்டிக்கவும்  தயங்குவதில்லை!

இன்றைக்கு என்றில்லை, ஒபாமா தேர்தல் களத்தில் குதித்த தருணத்தில் இருந்து ஹில்லாரி கிளிண்டன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு, ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒபாமா அறிவிக்கப் பட்டதில் இருந்து, அமெரிக்கத் தேர்தல் காலத்தைக் கொஞ்சம் சுவாரசியத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இர்விங் வாலஸ் எழுதிய The Man என்ற புதினம்! டக்ளஸ் டில்மன் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க ஜனாதிபதியாகி விடுகிறார்! புத்தகம் வெளிவந்த காலத்தில், இதைக் கற்பனையாக மட்டுமே, அதுவுமே, தேர்தல் அல்லாத வழியில் என்று தான் சொல்ல முடிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். சமயங்களில், கற்பனை செய்து எழுதுகிற விஷயங்கள், நடப்பு விஷயங்களோடு பொருந்திப் போக முடிகிற விநோதத்தைப் பார்த்துப் பார்த்து, இப்போதெல்லாம் அது எனக்கு அது மிகவும் பழகிப் போய்விட்டது!

TC, The Chief  என்று மட்டுமே அழைக்கப் படும் அமெரிக்க ஜனாதிபதி பாரிஸ் நகரத்தில் ஒரு சர்வதேசப் பேச்சுவார்த்தைக்குப் போயிருக்கும் தருணத்தில், கட்டடம் இடிந்து உயிரிழக்கிறார். அடுத்து இங்கே துணை ஜனாதிபதி ஏற்கெனெவே உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற நிலையில், பதவியேற்பதைத்  தீர்மானிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக அவரும் இறந்து விடும் செய்தி வருகிறது. அரசியல் சட்டப்படி, எஞ்சியுள்ள காலத்திற்கு ஜனாதிபதி பொறுப்பை ஏற்க வேண்டியது யார் என்ற கேள்வி எழ, senate pro tempore என்று பதில் வருகிறது. அமெரிக்கத் துணை அதிபர்  அமெரிக்க செனேட் சபையின் தலைவராகவும்  இருப்பவர். அவர் சபைக்குத் தலைமைதாங்க முடியாத  சமயங்களில் சபைக்குத் தலைமை தாங்குகிற பொறுப்பு இது. பெரிய அளவில் முக்கியத்துவமில்லாத இந்தப் பொறுப்பில், கறுப்பரான டக்ளஸ் டில்மானை TC யின் டீம் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக, ஒரு கறுப்பர்! என்று சுவாரசியமாக, ஒரு இக்கு வைத்து ஆரம்பிக்கும் இந்த நாவல், அமெரிக்க ஜனநாயகம் இயங்கும் விதத்தை, மிக நுணுக்கமாக விவரித்துச் சொல்கிறது.

கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகி விட்டார்! சரி, அமெரிக்க ஆட்சி முறை அதற்குத் தயாராகிவிட்டதா? பெயரளவுக்கு டில்மன் அதிபர், முந்தைய அதிபரின் வழிமுறைப்படி ஆட்சியை பேக்சீட் டிரைவிங் முறையில் நடத்த முயற்சி நடக்கிறது. முந்தைய அதிபர் தேர்தலில் ஜெயித்து வருவதற்கு, அமெரிக்க பகாசுர நிறுவனம் ஒன்று எக்கச் சக்கமாக செலவு செய்திருக்கிறது. அவர்களுக்கு ஆதாயம் தரும் வகையில், கருப்பர்களுடைய நலன்களை மேம்படுத்துவது போல ஒரு திட்டம்  ஏராளமான செலவில் தயாராக இருந்து, சட்டவடிவம் கொண்டு வரும் நேரத்தில், பகாசுர நிறுவனம் ஆதரித்த அதிபர் காலமாகி விடுகிறார். அடுத்து வரும் டில்மன் இதை  ஒப்புக்குச் செயல்படுத்தப் படும் திட்டம், கறுப்பின மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது  என்று நிராகரித்து விடுகிறார்!

அதிபருக்கும், அரசு இயந்திரத்தின் ஆதிக்கம் செலுத்திவரும் இதர பகுதிகளுக்கும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. டில்மனுடைய மகன் ஒரு கறுப்பினத் தீவீரவாதிகள் குழுவில், கறுப்பினத் தம்பதிகளுக்கும், முழு வெள்ளை நிறத்தோடு குழந்தைகள் பிறப்பதுண்டு, அப்படிப் பிறந்த மகள் குடும்பத்தை உதறிவிட்டு, அடையாளத்தை மாற்றிக் கொண்டு வாழும் நிலை, கொஞ்சம் இடதுசாரித் தனமான சிந்தனையோடு கூடிய காதலி என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிரணியில் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு அழகான அரசியல் சதுரங்க ஆட்டத்தைக் கண்முன்னால் நிறுத்துவதாக, மிக அழகான கதை!

அதிபர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருகிறார்கள்! அதை வைத்தே அமெரிக்க அரசியலின் பழைய சரித்திரத்தையும், நடப்பு நிலையையும் கலந்து இர்விங்வாலஸ் கதைக்களத்தை நம்  கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.

இன்றைய சூழலோடு வேறு சில விதங்களில் இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் பொருந்திப்போவதாக இருப்பதையும் இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். முக்கியமாகஅரசியலை, பகாசுர நிறுவனங்கள் தங்களுடைய சௌகரியத்துக்கு ஏற்றபடி வளைத்துக் கொள்வது !

இங்கே....?!

மீன்களைக் காப்பாற்ற வேண்டுமென்றோ, காதல் கொண்டோ எவரும் தூண்டிலில் புழுவை வைத்துக் காத்திருப்பதில்லை!

 
எலிகளுக்கு, ஊசிப்போன வடையோ வெங்காயமோ எதுவானாலும், கருணையினால் வைக்கப் படுவது இல்லை.

இயேசு அழைக்கிறார் என்று கூவுகிறவன் கோடிகளில் மிதக்கிறான்! அழைப்பைக் கேட்டுப் போனவன், அவனிடம் தசமபாகத்தைக் கொடுத்து விட்டு, என் ஆண்டவர் மிகவும் நல்லவர், அவர் என்னை என்றும் ரட்சிப்பார் என்று பாடிக் கொண்டு  திரும்புகிறான்!

அதே மாதிரித் தான்!

சமூக நீதி காக்கிறேன், சமத்துவம் தருகிறேன் என்று இலவசங்களைத் தருகிறவன் என்ன நிலையில் இருக்கிறான், அதை நம்பிப் போகிறவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதைக் கொஞ்சம் கண்திறந்து பார்த்தாலே புரிந்து விடும்!

சுதந்திரம் என்பது இவர்கள் பாடப் புத்தகங்களில் எழுதி வைத்தது போல, காந்தித் தாத்தாவும், நேரு மாமாவும் கடைக்குப் போய் வாங்கி வந்து கொடுத்ததல்ல!

எப்போது நமது பொறுப்பை உணரப் போகிறோம்?

இந்தக் குடியரசு தினத்தில் இருந்தாவது ---

இலவசங்களில் ஏமாறுவது இல்லை என்ற உறுதியோடு !

உலகத்  தொல்லைக் காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக என்று கூவும் பெட்டிகள் முன்னால் அமர்ந்து நேரத்தை வீணடிக்காமல்,

எங்கோ என்னமோ நடக்கிறது  எனக்கென்ன என்றிருக்காமல், சக மனிதர்களிடம் கொஞ்சம் அக்கறையோடு, பரிவோடு

இருக்க முயற்சியை ஆரம்பிப்போமா!  




சண்டேன்னா மூணு! புள்ளிராசா வங்கி! ஒபாமா! கூகிள்!



ஒரு வருடத்துக்கு முன்னால் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட போது , ஐயோ பாவமே என்று தான் பரிதாபப் படத் தோன்றியது! 

காரணம், அதற்கு முந்தைய எட்டு ஆண்டுகளில், ஜார்ஜ் புஷ் அமெரிக்கப் பொருளாதாரத்தைக் கொண்டுபோய் நிறுத்தியிருந்த இடம் அப்படி! ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம், இந்தியாவுக்குக் குடைச்சல் அதிகமாகும், பாகிஸ்தானுக்குக் கொஞ்சம் அதிகமாகவே கொம்பு சீவப் படும் என்ற பழைய நிலை இன்னமும் இருக்கத் தான் செய்கிறது!

இந்த ஒரு ஆண்டில், அமெரிக்காவைத் தூக்கி நிறுத்திவிட முடியாது என்பது எல்லோருக்குமே தெரிந்தது தான்! ஆனாலும், நம்மூர் அரசியல் வாதிகளிடமிருந்து ஸ்பெஷல் ட்யூஷன் எடுத்துக் கொண்டார்களோ என்னவோ,  ரிபப்ளிகன் கட்சி கொஞ்சம் ஓவராகவே ஒபாமாவைச் சீண்டிக் கொண்டிருக்கிறது.

மருத்துவக் காப்பீடு எல்லோருக்கும் என்று ஒபமா அறிவித்ததில், எப்போதுமே வலதுசாரிகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிற அமெரிக்க மக்கள், ஒபாமாவை இடதுசாரி என்று நினைக்க ஆரம்பித்து விட்டது போல, ஆதரவு சதவீதம் கொஞ்சம் குறைந்து வருவதாக செய்திகள் சொல்கின்றன! இடது சாரி என்பது அமெரிக்காவில் ரொம்பவுமேகெட்ட வார்த்தை! 


அமெரிக்க நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தில் இரண்டு சதவீதம் வரை கட்சிகளுக்குத் தேர்தல் நிதியாக அளிக்கலாம் என்பதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழிமொழிந்திருப்பதைக் குறித்து, முந்தைய பதிவில் வாசகர் ஒருவர் கவலை தெரிவித்திருந்தார். இது பற்றிய செய்திக் கட்டுரை, பணம் என்பது பேச்சு சுதந்திரமாக முடியாது, கார்பரேஷன்கள் (பெரிய நிறுவனங்கள்)மக்களாகி முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்வதைப் படிக்க.




oooOooo 

புள்ளிராசாவுக்குப் புள்ளி வருமா? நீண்ட நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் மிகப் பெரிய எய்ட்ஸ் விழிப்புணர்வு விளம்பர ஸ்லோகன் இது! எய்ட்ஸ் நோயை விட, அமெரிக்க வங்கிகளின் பேராசை மிக ஆபத்தானது, அவர்களோடு மட்டும் நின்றுவிடாமல், சுற்றியுள்ளவர்களையும் அழித்துவிடும் அளவுக்குப் பரந்துவிரிந்த நோயாக இருப்பதை, இந்தப் பக்கங்களில் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்!


தறிகெட்டுப்  பாய்ந்துகொண்டிருக்கும் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு கட்டுவது போல, பாரக் ஒபாமா சென்ற வியாழனன்று வங்கிகளைக் கட்டுப் படுத்த சில நெறி முறைகளாகச்  சட்டம் இயற்றப் போவதாக அறிவித்திருப்பது கொஞ்சம் அதிர்வுகளை உண்டாக்கி இருக்கிறது! 1929 இல் அமெரிக்கா சந்தித்த  நிதித்துறைச் சரிவிலிருந்து மீள்வதற்கு, பத்து ஆண்டுகளுக்கு மேலாயிற்று.

இப்போது ஓராண்டிலேயே, அதைவிடப் பெரிய சரிவில் இருந்து அரசு, வரிப்பணத்தின் உதவியோடு மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க நிதித்துறை, மறுபடி கட்டை மீறிப் பழையபடிப் புகுந்து விளையாட ஆரம்பித்திருக்கிறது.

"உன்னை விட மாட்டேன்" என்று ஒபாமா அறிவித்திருக்கிறார். தேவையானால் சண்டைக்களத்தில் இறங்கவும் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.  அமெரிக்க வங்கித் துறையும் ஒரு யுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போலத் தான் தெரிகிறது. 
   சொரிபிடித்தவன் கை சும்மா இருக்காது எண்பது போல, பேராசைக் காரனும் சூதாடியும் சும்மா இருக்க முடியுமா என்ன?   

எண்பது  வருட இடைவெளிக்குள் நிகழ்ந்த இந்தப் பொருளாதாரச் சரிவுகளில், குறிப்பிடத் தகுந்த மாற்றம் என்னவென்றால், சாமானிய அமெரிக்க ஜனங்கள், இந்த முறை கைகட்டி வேடிக்கை பார்க்கவில்லை. ஜனங்களுடைய கோபம், கார்பரேட் கொள்ளைகளுக்கு, பேராசைக்கு எதிராக ஒரு இயக்கமாகவே நடந்து கொண்டிருக்கிறது.




"MOVE YOUR MONEY"  என்று, பெரிய வங்கிகளில் இருந்து பணத்தைச் சிறிய நடுத்தர உள்ளூர் வங்கிகளுக்கு மாற்றும் இயக்கமாக அங்கே சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நடந்து கொண்டிருப்பது, ஒபாமாவுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்! 

என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! நிச்சயமாக, நம்மூர் காங்கிரஸ்காரன் மாதிரி ஆறப்போட்டு, மறக்கடிக்க வைக்கிற டெக்னிக் அமெரிக்கர்களுக்கு இன்னமும் தெரியாது!


oooOooo 



 

கூகிள் -சீன த்வந்த யுத்தத்தில், வெளியே அதிகம் விவாதிக்கப் படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன!


உலகம் முழுக்க கூகிள் நான் தான் நம்பர் ஒன் என்று மார்தட்டிக் கொண்டாலும், சீனாவைப்  பொறுத்தவரை  கூகிள் இரண்டாவது இடத்தில் தான் இருந்துவருகிறது. உள்ளூர்த் தயாரிப்பான பைடூ டாட் காம் தான் அங்கே நம்பர் ஒன் தேடுபொறி!  தினசரி முப்பது கோடி வருகைகள், தேடுபொறி உபயோகத்தில், வருமானத்தில்  அறுபத்து மூன்று சதவீதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது! கூகிள் ஆண்டவர், அங்கே வெறும்  முப்பத்து மூன்று சதவீதம் தான் உபயோகத்தில் உள்ளார்! முதலிடத்தைப் பிடிக்க முடியாது என்ற ஒரு விஷயமே கூட, சீனாவை விட்டு வெளியேறிவிடலாம் என்ற கூகுளின் முடிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் iResearch என்கிற சீன ஆராய்ச்சி நிறுவனம்  சொல்கிறது!


பீகிங் பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டுப் பிறகு, நியூ யார்க் மாகாணப் பல்கலைக் கழகத்தில் படிக்க வந்த ராபின் லீ என்ற 41 வயது  இளைஞர் தாயகம் திரும்பியவுடன் இன்னொரு நண்பருடன் சேர்ந்து துவக்கிய பைடூ உள்ளூர் மக்களுடைய ரசனைக்குத் தீனி போடுவதில் தன்னுடைய தனித்தன்மையை நிலை நாட்டிக் கொண்டது. பாட்டு, பொழுதுபோக்கு என்று அலைந்த சீன இளைஞர்களுக்கு பைடூ நல்ல தளமாக இருந்ததில் வியப்பொன்றுமில்லை!

தகவல்களைத் தேடத் தேடு போறியா,அல்லது பொழுதுபோக்கத்
தேடு போறியா என்ற கேள்வியில், பொழுதுபோக்கு முதலிடம் பெற்றதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!


தவிர சீன அரசின் மனோபாவத்தைப் புரிந்துகொள்வதில் கூகுளுக்கு இயல்பாகவே ஒரு தடியன்கள் இருந்து வந்ததையும் பார்க்க வேண்டும்! Don't be evil என்ற முழக்கத்தோடு புறப்பட்ட கூகிள் சீனாவில், முழக்கத்தைத் தொண்டைக்குழிக்குக் கீழேயே  வைத்துக் கொண்டு செயல் படத் தயாராக இருந்தாலும் அவ்வப்போது உரசல்கள் வந்துகொண்டுதான் இருந்தன! வெளியேறவும் தயார் என்று வீரப் பிரதாபமாக முழங்கி இரண்டு நாட்களிலேயே, அப்படி ஒரு எண்ணம் இல்லை என்று அறிவிக்க வேண்டிய நிலையும் வந்தது.கூகுளின் அறிவிப்பைச் சீன அரசு நேரடியாகத் தொட்டு எதையுமே கண்டு கொள்ளவில்லை.

ஹில்லாரி கிளிண்டன் இணைய நடைமுறைகளைப் பற்றி உபதேசம் செய்ய முற்பட்ட போது, பாடம் கேட்டுக் கொள்வதற்கெல்லாம்  அவசியமே இல்லை என்று அமெரிக்கத் திமிருக்கு ஒருபங்கு கூடுதலாகவே சீனஅரசு பதில் சொல்லவும் தவறவில்லை!

கூகிள் என்று மட்டுமில்லை, சீனாவின் சந்தையைப் பிடிக்கும் கனவுகளோடு உள்ளே நுழைந்த அமெரிக்க கம்பனிகள் அத்தனையுமே இந்த இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விழிப்பது இன்னொரு வேடிக்கை! 


சீனர்களைப் பொறுத்தவரை, நவீனத் தொழில் நுட்பம், செய்முறைகளை, ஆராய்ச்சியோ, செலவோ இல்லாமல் காப்பியடித்து, ஒரிஜினலைத் துரத்துகிற கலை நன்றாகவே கை வருகிறது! ஆராய்ச்சி புண்ணாக்கு என்று ஏகப்பட்ட செலவை செய்து விட்டு, அதை வைத்து ஒன்றுக்குஆயிரமாக  கொள்ளை லாபம் பார்க்கலாம் என்று வந்தவர்கள், சீன டிராகனின் சாமர்த்தியத்துக்கு முன் ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுவதைப் பார்க்கும்போது, வினோதமான வேடிக்கையாகத் தான் இருக்கிறது!


WTO, GATT, INTELLECTUAL PROPERTY RIGHTS, MONOPOLY, TECHNOLOGY AS NEW FORM OF CAPITAL இப்படி அமெரிக்கா சமீபத்திய காலங்களில் உலகையே ஆட்டிப் படைத்தது எல்லாம், வெறும் கேலிக் கூத்தாகவே இருக்கிறது!  அவனை இவனுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அப்புறம் இவனைக் கொஞ்சம் தடவிக் கொடுத்து விட்டு வேறொருவனுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, ரஷ்யாவைச் சிதறு தேங்காய் போலச் சிதற  விட்ட சாமர்த்தியம், ஆப்பில் சிக்குண்ட குரங்கு கதையாக சீனாவில் ஆகிப் போனதைப் பார்க்கும்போது----

சீனப் பெருமிதம் அல்லது சீனப் பூச்சாண்டி, வெற்று உதார் விடுவதில் நிறையவே இருக்கிறது என்றாலும், அவர்களுடைய சாமர்த்தியத்தை வியக்காமல் இருக்கவும் முடியவில்லை! 


உதார் விடுவதை ஒரு பெரும் கலையாகவே சீனர்கள் வளர்த்து வைத்திருப்பதும் புரிகிறது! 

கொஞ்சம் சரக்கு இருப்பதும்தெரிகிறது! 


மதத்தின் பெயரால்...! குற்றமும் தண்டனையும்!




குற்றங்கள் தண்டிக்கப் பட வேண்டியவைதான்!

சந்தேகமே இல்லை! ஒரு சமுதாயமாக வாழும்போது, குற்றங்களைத் தடுப்பதென்பது முழுக்க முழுக்க முடியாமல் போனாலுமே கூட, குறைக்க  உதவும் கருவிகளாகத் தண்டிக்கும் முறை இருக்கிறது. குற்றத்தின் தன்மை, அது சமுதாயத்திற்குச் செய்யும் தீங்கு, கெடுதலுக்குத்  தகுந்த மாதிரி தண்டனை இருந்தால், அது புரிந்துகொள்ளக் கூடியதே. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்ற ஆப்ரஹாமைட்  மதங்களில் மிருகத் தன்மையோடு கூடிய பழிவாங்கும் முறையையும், குற்றத்திற்கான தண்டனை முறையையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளமுடியாது.

ஆனால், என்றைக்கோ எழுதிவைத்த ஒன்றின் அடிப்படையில், தண்டனைகளைத் தீர்மானிப்பது என்பது, நாகரீகத்தின் முதிர்ச்சியைக் காட்டுவதாக இல்லை,  எப்படி மதப் பிடிமானங்கள்  காட்டுமிராண்டித்தனமாகக் குறுகிப் போய்விடுகிறது என்பதை மட்டுமே காட்டுகிறது. இங்கே சவூதி அரேபியாவில், பதின்மூன்று  வயதுச் சிறுமி ஒருத்திக்குப் பொது இடத்தில் வைத்துத் தொண்ணூறு முறை பிரம்படி!

 பிரம்படி என்றால், நம்மூரில் வாத்திமார்கள் அடிஸ்கேல் வைத்துக் கொண்டோ, அல்லது ஒரு சிறு குச்சியை வைத்துக் கொண்டு கையை நீட்டு என்று சொல்லி அடிப்பது போல அல்ல!

அந்தச் சிறுமி அப்படி என்னதான் குற்றம் செய்துவிட்டாளாம் ?

பள்ளிக் கூடத்திற்கு செல்போனுடன் சென்றுவிட்டாளாம்! ஷரியத் சட்டப் படி அதற்குத் தண்டனை பகிரங்கமாகத் தொண்ணூறு அடி!





மேலே சவுதியில் சமீபத்தில் நடந்தது, இன்றைக்குப் பரபரப்பாகப் பார்க்கப்பட்ட, விமரிசனத்துக்கு உள்ளான செய்தி என்றால் , கீழே ஒரு பதினேழுவயதுப் பெண்ணை, பாகிஸ்தானில் சென்ற ஆண்டு பிரம்படிகொடுத்த அவலம்.






இணையத்தில், எது எங்கே எப்படி நடந்தாலும் தெரிந்துகொள்கிற வசதி வந்த பிறகும் கூட இங்கே தமிழ் வலைப் பதிவுகளில், பர்தா, நற்குடி, பொது புத்தி இப்படி ஏகத்துக்கும் வாக்குவாதம் எதற்காகச் செய்துகொண்டிருக்கிறார்கள்?

அட, என்னதான் சொல்ல வருகிறார்கள்? 


கடைசிச் செய்தி சேர்க்கப்பட்டது இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி ஞாயிற்றுக் கிழமை! 24/01/2010


மதங்களின் பெயரால் தொடரும் முட்டாள்தனங்கள், தாக்குதல்கள், தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன!அராஜகத்தின் உச்சகட்டமாக, வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு பெண்கள் பள்ளியை தாலிபான் தீவீரவாதிகள் தரைமட்டமாக்கிய செய்தியை படிக்க

காரணம் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கக் கூடாதாம்! இந்த மாதிரிப் பெண்கள் படிக்கும் பள்ளிகள் வட மேற்கு பாகிஸ்தானில் தாக்குதலுக்கு உள்ளாவது இதற்கு முன்னாலும் நிறையத் தடவைநடந்திருக்கிறது?

அப்புறம் இவர்கள்  ஏன் பெண்வயிற்றில் பிறந்தார்களாம்?
ஆண் முல்லாக்கள், மௌல்விகளே பெற்றுப் போட முடியாதது ஏன் என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
 



 

ஆசைக்கு அளவேதடா அறிவு கெட்ட அப்பா!




"ஆசைக்கு அளவேதடா அறிவு கெட்ட அப்பா!"

இப்படி ஒரு வசனம் பழைய தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கெட்ட மந்திரி ஒருவனைப் பார்த்து அவனைவிடக் கெட்ட, அவன் மகன் சொல்கிற மாதிரி வரும்! மந்திரி குமாரிகளும், மந்திரி குமாரர்களும் பேரன் பேத்திகளும் பேராசையின், ஊழல் செய்வதில்  எல்லை என்றால் என்னவென்றே தெரியாமல் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள் தான் இல்லையா!

யூதர்களைப் பேராசையின் வடிவமாகச் சித்தரிக்கும் ஷேக்ஸ்பியர் எழுதிய மெர்ச்சன்ட் ஆஃப்  வெனிஸ் கவிதை நாடகத்தில் ஷைலக் என்ற கொடூரமான வட்டிக்கடைக் காரனைப் படித்திருக்கிறீர்களா? மதுரை செல்லூர் மீட்டர் வட்டி ரன்வட்டிக்காரர்களில் ஒருவரிடம் சிக்கிக் கொண்டு, திரைப்பட தாயாரிப்பாளரும், மணிரத்தினத்தின் அண்ணனுமான ஜி. வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாவது  நினைவுவருகிறதா?


மிகப் பெரிய சரிவைச் சந்தித்து முழுதாகப் பதினாறு மாதங்கள் கூட ஆகவில்லை! அரசு, வரிப்பணத்தைக் கொட்டியிறைத்துக் காப்பாற்றிய நினைவு கொஞ்சம் கூட இல்லை! அமெரிக்கவங்கிகள் பேராசை பிடித்த பூதங்களாக, மறுபடி ரத்தம் குடிக்கும் ட்ராகுலாக்களாகத் தங்களுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டன என்று நடப்புச் செய்திகள் சொல்கின்றன.

ஆச்சரியமொன்றுமில்லை தான்!

ஆச்சரியப் பட வைத்த செய்தி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வங்கி, நிதித் துறை, மக்களுடைய வரிப்பணத்தில் ஏழாயிரம் கோடி டாலர்களை உதவியாகப் பெற்றுக் கொண்டு, கொஞ்சம் தெம்பு ஊறினவுடன் மறுபடி ரத்தம் குடிக்கும் வேலையைத் தொடர்வதற்குக் கொஞ்சம் இடைஞ்சலாக வங்கிகள் மீது விதிக்க உத்தேசித்திருக்கும் வரி தான்! சுமார் ஆயிரத்து நூற்றெழுபது கோடி அமெரிக்க டாலர்களை அரசுக்கு வருவாயாகத் தரும் என்ற செய்திகள் வர ஆரம்பித்தவுடனேயே, அமெரிக்கப் பங்குச் சந்தை சரிய ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க வங்கிகளுடைய பங்குவிலைகளில் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது.


இது பாங்க ஆப் அமெரிக்காவின் பங்கு நிலவரம் -போன வருடத்து ஏற்ற இறக்கங்களைக் காட்டுவது! ரத்தம் குடித்துக் கொழுத்தவுடன் பழைய குருடி கதவைத் திறடி கதை தான் 

அடுத்த ஆச்சரியம், அமெரிக்க அதிபர் வெளிப்படையாக, வங்கிகளுடைய பேராசையைப் புட்டு வைத்திருப்பது தான்! "அவர்களுக்குத் தேவை ஒரு மல்லுக்கட்டு யுத்தம் தான் என்றால், அப்படிஒன்றுக்கு  நான் தயாராகவே இருக்கிறேன்" என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார். ஒபாமா சொன்னதில் கொஞ்சம் பாருங்கள்!

"(அமெரிக்க நிதித்துறை) ஓராண்டுக்கு முன்னால் இருந்த நிலையை விட, இன்றைக்கு நன்கு தேறி வலிமையாக இருந்தாலும், ஏறத்தாழக் கவிழ்ந்து விடுகிறநிலைக்குக்  காரணமான அதே பழைய நடைமுறைகளையே இன்னமும் பின்பற்றி வருகின்றன."

கவிழவே முடியாத அளவுக்குப் பெரியதாக இருக்கும் வங்கிகள், மறுபடி வரி செலுத்தும் அமெரிக்கர்களைப் பிணைக்
கைதிகளாக்குவதை மறுபடி நடக்க விட மாட்டோம்."

வங்கிகளுடைய அளவை ஒரு எல்லைக்கு உட்படுத்துவது,  செயல்படுவதில் சில கடுமையான நடைமுறைகள் என்று கடுமையான விதிகளை சட்டமியற்ற ஒபாமா முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க மக்களிடையே,  வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்ட வங்கிகள் மறுபடி, தங்களுடைய ஊழியர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொழுத்த போனஸ், டிவிடென்ட் என்று அறிவிக்க ஆரம்பித்திருப்பதில் கடுமையான அதிருப்தியும் கோபமும் நிலவுகிறது.

பேராசைக் காரர்கள், மக்களை, அவர்களுடைய அதிருப்தியை எப்போதுமே சட்டை செய்வது இல்லை!  அமெரிக்க வங்கித் துறை, வங்கித்துறையின் சிறகுகளை முடக்கி வைக்கும் சட்டம் இயற்றுவதற்கு  எதிராக ஒரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றன. மாசாசூசட்ஸ்  தேர்தலில் ரிபப்ளிகன் கட்சி ஜெயித்துவிட்டதால் தான் இந்த ஸ்டன்ட் என்ற ஒரு பிரசாரமும் தொடங்கி விட்டது.  ஏற்கெனெவே ரிபப்ளிக் கட்சி, நம்மூர் அரசியல் வாதிகளை மாதிரியே, எதிரிக் கட்சியாகச் செயல் பட ஆரம்பித்து விட்டது.  செனேட்டில் இந்த சட்டம் நிறைவேறுவது கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கும் என்றுதெரிகிறது. 


"President Obama's pledge on Thursday afternoon to end the "excess and abuse" and a "binge of irresponsibility" in the financial system, shook shares in banks. The largest US banks suffered the biggest blows, with JP Morgan Chase off 7pc, Bank of America 6pc lower and Goldman Sachs down 4pc. But British banks with an American presence also suffered, with Barclays down 3pc and Royal Bank of Scotland 7pc lower at the close."

அமெரிக்கஅதிபர்  மாளிகையின் இந்த அறிவிப்பு இரண்டு பிரதானமான விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது.

முதலாவதாக,  அமெரிக்க வங்கிகள் தங்களுடைய சுயலாபத்திற்காக வர்த்தகச் சூதாட்டத்தில் இறங்குவதையும், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எதிராக செயல்படுவதுமான செயல்களையும் கட்டுப் படுத்த நடவடிக்கைகள் எடுப்பது.

அடுத்து, எந்த ஒரு வங்கியும், ஒரு எல்லைக்கு மேல் பெரியதாக வளர்வதற்கு கட்டுப்பாடுகள்.

அமெரிக்காவின்
சரித்திரமே, வளர்ச்சியே, இந்த ரிஸ்க் எடுக்கும் சூதாட்ட மனப்பான்மையில் தான் இருக்கிறது, அதனால் அதைக் கட்டுப் படுத்தக் கூடாதென்றும், அது சுதந்திரத்திற்கு எதிரானதென்றும் காலகாலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஒபாமாவின் இந்த முடிவு ஒரு மிக நல்ல ஆரம்பம், எப்படி நடக்கிறதென்று கொஞ்சம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சின்னப் பிள்ளைகளுக்கான நர்சரிப் பாடல் ஒன்று நாலு வரிகளில் குட்டிக் கதை. ஹம்ப்டி டம்ப்டி என்ற கோழிமுட்டை வடிவத்தில் கொழுத்த ஒருவன் சுவற்றின் மீது உட்கார்ந்திருக்கிறான்! அவனுக்கு என்ன தைரியம் என்றால், ஏதோ அசந்தர்ப்பமாகக் கீழே விழுந்துவிட்டால் ராஜா, தன்னுடைய ஆட்களையும் குதிரைகளையும் அனுப்பி உதவுவதாகச் சொல்லியிருப்பது தான்! ஒரு நாள், கோழி முட்டை கீழே விழுந்தாயிற்று! சொன்னபடி ராஜாவும், குதிரை, ஆள். அம்பு சேனை எல்லாவற்றையும் அனுப்பியும்  ஒன்றும் காரியமாகவில்லை!



இங்கேயும் அதே தைரியம் தான்! வங்கிகளில் கொழுத்த லாபத்திற்காக, இவர்கள் சூதாடுவார்களாம்! லாபம் வந்தால் சரி! தவறிப் போய் நட்டமாகி விட்டால்,  அரசாங்கம் வந்து இவர்களை மீட்க வேண்டும்!

இது அமெரிக்காவில் தானே, நமக்கெதற்கு என்கிறீர்களா?

இங்கே பொதுத்துறை இருப்பதே தனியார் பேராசைக்குத் தீனி போடுவதற்காகத் தான்! டாடாவிற்கு இருப்பது ஒரே ஒரு உருக்காலை, ஆனால், இரும்பு விலையை பொதுத்துறையில் இருக்கும் உருக்காலைகள் நிர்ணயிப்பதில்லை! டாடா தான் அதை வந்து செய்ய வேண்டும்! ஒவ்வொரு பொதுத் துறை நிறுவனமும், யாரோ ஒரு தனியார் தொழில் கொழுப்பதற்காகத் தான்!

பொதுத்துறை வங்கிகள், ஆளும் கட்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தான் என்பது இந்திராகாந்தி காலத்தில் இருந்து இன்று வரை மாறாமல் இருக்கும் கலவரம்!

சரி அதனால் என்ன என்கிறீர்களா?
கொண்டை உள்ள சீமாட்டி அள்ளி முடிக்கிறாள், இதில் நமக்கென்ன என்றும் கேட்கத் தோன்றுகிறதா?

மானாட மயிலாட பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் பொழுது போக வேண்டாமா, அதற்காகத்தான்



எப்படிப் பார்த்தால் என்ன தெரியும்? பொது புத்தி Vs பகுத்தறிவு !





இது நிச்சயமாக  இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை! ஆனால் சொல்ல வேண்டிய விஷயம் பொதுவாக இருக்கிறது, அவ்வளவு தான்!


இந்தக் குரங்குகளைப் பாருங்கள்! சில குரங்குகள் மேலே ஏறிய நிலையில்..........சில கீழே!



இரண்டு நிலைகளிலும் ஒரே பொருளைப் பார்க்க முடியுமா, தெரியுமா என்றால் நிச்சயமாக இல்லை!  மேலே ஏறிச் சென்ற குரங்கு பசுமை, கனிகள், சுற்றி உள்ள பரந்த உலகத்தைப் பார்க்க முடிகிறது! 

கீழ்நிலையில் உள்ளதற்கு, மேலே போன குரங்கின் இடுப்புக்குக் கீழே உள்ள  பகுதி  ஒன்று தான் தெரியும்! 

கீழ் நிலையில் நின்று விடும்போது அல்லது தேங்கிவிடும்போது, நம்பிக்கை ஜெபகோபுரங்கள் கட்டி வியாபாரமாகவும் மோசடியாகவும் உருமாற ஆரம்பிக்கிறது! இல்லை இல்லை என்று மறுத்துப் பேசிக் கொண்டே இருப்பது, பொழுதுபோக்கு நாத்திகமாகி விடுகிறது! அங்கேயும் கூட பகுத்தறிவு என்ற பிராண்டில் வியாபாரமும் விவகாரங்களும் ஆரம்பித்துவிடுகிறது.

கீழேயே தேங்கி  நின்றுவிடுவதில் நிகழ்வது இது ஒன்று மட்டும் தான்!


பொது புத்தி, நற்குடி, இப்படி வார்த்தைகள் விவரமில்லாத விவகாரங்களாகவும், ஒரு நிலையில் சகிக்க முடியாத விகாரங்களாகவும் வளர்ந்து கொண்டே போவதைத் தவிர இவற்றால் என்ன சாதிக்க முடிந்தது? என்ன சாதித்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்?


நாத்திகனாக இருப்பதோ, கடவுளை மறுப்பதோ தவறென்று நான் சொல்லவரவில்லை! ஆத்திகனாக இருப்பதும், கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்வதும் சரி என்று கூட சொல்லவரவில்லை! இந்த இரண்டு நேரெதிரான நிலைகள், தனி நபரைப் பொறுத்தது, அவரவர்க்கு வேண்டிய அனுபவத்திற்காக, அடுத்த கட்டத்திற்கு முன்னேறிப் போவதற்காக இருக்கும் படிநிலைகள்!

இரண்டு கரைகளுக்கு நடுவில் ஓடுகிற நதியைப் போல, வாழ்க்கை நேரெதிரான இரு தன்மைகளுக்கிடையில் ஓடிக் கொண்டிருப்பது! அந்த இரண்டு முரண்படுவதாக, முரணியல் தான் இயக்கம், அதுதான்  வாழ்க்கையைத் தீர்மானிப்பது போலத் தோன்றினாலும், அதையும் கடந்த நிலையில் நதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல, அதன் இலக்கை நோக்கிய பயணமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் முரண்பாடுகளைக் கண்டு எரிச்சல் கொள்ள மாட்டோம்! பயப்பட மாட்டோம்! வாக்குவாதம் செய்துகொண்டு தேங்கி நிற்க மாட்டோம்!

இதுவோ அதுவோ, எதுவாகினும் கடந்து போக வேண்டியதே! புரிந்துகொள்கிற தன்மை அங்கே வரும்போது,
ஒரு புதிய பார்வை கிடைப்பதும் தெரிய வரும்!





கோளாறுகள், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது ...!



"A problem well stated is a problem half solved."

ஒரு கேள்வி அல்லது பிரச்சினை என்று வைத்துக் கொள்ளுங்கள்! அந்தக் கேள்வி அல்லது பிரச்சினையின் அடிநாதம் என்ன என்பதைப் புரிந்து கொண்டாலே, பிரச்சினைக்குப் பாதித் தீர்வு கண்ட மாதிரித் தான்!  மீதமுள்ள பாதி?

பிரச்சினைக்குத் தீர்வு,  காரணத்தைப் புரிந்துகொண்டு செயலில் இறங்குவதில் தான் இருக்கிறது. நம்முடைய அரசு, அரசியல், கல்விமுறை, சமூகம் என்று எதை எடுத்துக் கொண்டாலும், பிரச்சினை என்று வந்தாலே அதிலிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறோம் அல்லது வேறு வழியில்லாமல் நாமே சிக்கிக் கொள்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வரும் போது, அந்தநேரத்தில் தோன்றுகிற எதையாவது செய்து பிரச்சினையில் இருந்து வெளிவரவே விரும்புகிறோம்.


அப்படி என்ன தான் செய்து வெளியே வருகிறோம் என்று சற்றுப் பின்னோக்கி பார்த்தால், 99.999 சதவீத சந்தர்ப்பங்களில், அஸ்திவாரத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டடமே ஆடிக் கொண்டிருக்கும்போது, சுவற்றுக்கு வெள்ளையடித்து, விரிசல்களை மறைக்கிற முயற்சியாகவே இருப்பது தெரிய வரும்.

கோளாறு என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அதன் மூல வேரைக் களையாமல் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பது அநேக சந்தர்ப்பங்களில் தெரிந்திருக்கும் போதுமே கூட, இப்படி அரைகுறையான தீர்வு, அல்லது தள்ளிப் போடுகிற சோம்பேறித்தனம் (procrastination)  இவையே  நம்முடைய பலவீனமாக இருப்பதைச் சொல்ல முடியும்.

முந்தைய பதிவுகளில், அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, தலைமைப் பண்பு, நிர்வாகம் இப்படிப் பல விஷயங்களைப் பேசியிருக்கிறோம். மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு அடிப்படையான கேள்வி, முதலில் தனிக்கைமுறையைப் பற்றி ஆரம்பித்து, அப்புறம் அரசு இயந்திரத்தை செயல்பட வைப்பது எப்படி என்பது ஈறாக  நான்கைந்து விவாத இழைகளாகப் பிரிந்து ஒரு விவாதக் களம் நடந்துகொண்டிருப்பதைப் பல நாட்களாகவே  தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

இங்கே வலைப்பதிவுகளில் எழுதுவதுபோல மேம்போக்காக இல்லாமல் ஒரு நல்ல விவாதம் நடந்துகொண்டிருந்தாலும் கூட, அங்கேயும் ஒரு அடிப்படையான கேள்வி இருப்பதையே புரிந்துகொண்டமாதிரி இல்லாமல், விவாத இழை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இத்தனைக்கும் விவாத இழையில் பங்கு கொண்ட சிலர் அரசுத்துறை நிர்வாகத்தை அறிந்தவர்கள், சிலர் வேறு துறைகளில் விற்பன்னர்கள், மிகவும் பொறுப்பாக எழுதுபவர்கள் என்பதை அந்த விவாதக் களத்தைப் பார்த்தவுடனேயே சொல்லிவிட முடியும்! ஆனாலும் கூட, அடிப்படை, ஆணிவேரை விட்டு விலகியே அந்த விவாத இழை தொடர்ந்து கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.

நடப்பு அரசியலைக் கவனித்தாலே ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். 


அன்னியர்களிடமிருந்து விடுதலை அடைந்து அறுபத்திரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னாலும் கூட, இங்கே ஒரு முறையான அரசமைப்பை உருவாக்க முடியவில்லை. குடியரசு என்று அறிவித்துக் கொண்டு, அரசியல் சாசனம், சட்ட நெறிமுறைகள் என்றெல்லாம்  வைத்துக் கொண்ட பிறகும், இங்கே குடிமக்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் அரசாக  இருப்பது கிடக்கட்டும், பாதுகாக்கப் பட்ட குடிநீரைக் கூட வழங்கக் கையாலாகாத ஒரு அரசு, அரசு இயந்திரத்தைத் தான் நாம் சுமந்துகொண்டிருக்கிறோம் என்பது நமக்கே நன்றாகத் தெரிகிறது.

ஏற்கெனெவே இருந்த துருப்பிடித்துப் போன அரசு இயந்திரம், அடிமைப் படுத்தி வைத்திருந்தவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்ட நெறிமுறைகள், அரசு நிர்வாகம் இப்படி அத்தனையுமே செகண்ட் ஹான்டாக இருப்பது பொருந்தவில்லை என்பது தெரிந்துமே கூட, அதையே தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது வெள்ளைத் துரை
போய்க் கறுப்புத் துரை வந்து உட்கார்ந்துகொண்டதைத் தவிர வேறென்ன வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற கேள்வியையோ, அதற்கான விடையைத் தேடும் முயற்சியிலோ மின்தமிழில் தற்சமயம் நடந்து வரும் விவாத இழை இல்லை என்பது எனது வருத்தம்.


சீன ஆக்கிரமிப்பாக இருக்கட்டும், பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் இப்படி எங்கிருந்து வேண்டுமானாலும்  தீவீரவாதிகள் இந்த நாட்டுக்குள் ஊடுருவ முடியும், வன்முறை, தீவீரவாதத் தாக்குதல்களை நடத்த முடியும்! அரசு பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிடும்! அவ்வளவு தான்! அதிகபட்சம், அடுத்த வருடம், ஆண்டுவிழாக் கொண்டாடி, இங்கே கூத்தாடிகளைவைத்து நடத்துவதைப் போல, போலீஸ் அணிவகுப்பு, ஊர்வலம்  மும்பையில் நடத்தினார்களே அது மாதிரி வேண்டுமானால் நடத்துவார்கள்!

இன்றைக்குக் கூட தெலங்கானா, இன்னும் பற்றி எரியும் நெருப்பாகத் தான் இருக்கிறது! உருப்படியான தீர்வைக் காண்பதற்குத் துப்பில்லாத, சூடு சொரணை கெட்ட ஜென்மங்களைத் தான்சட்ட மன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுத்து  அனுப்பிக் கொண்டிருக்கிறோம்!அவர்கள் ரெட்டி மகனுக்கு முதல்வர் பதவி கொடு, இல்லையென்றால், எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவோம் என்கிற ரீதியில் மட்டும் செயல்படுவார்கள். ஆகாத கட்சி இருந்தால் மட்டும் காங்கிரஸ் கண்ணுக்குத் தெரிகிற அரசியல் சாசனத்தின் 356 ஆவது பிரிவு, ஆந்திராவில் அரசு முற்றிலும் செயலிழந்து போன பின்னாலும் கூட, அமலுக்கு வராது. அது என்ன பாழாய்ப்போவதற்கென்றே  ஒரு அரசியல் சாசனம்!?


அரசியல் சம்பந்தப் பட்ட எந்த செய்தியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! அடிப்படையான ஒரு கேள்வி அத்தனைக்கும் பொதுவாக இருக்கிறது.

இங்கே அரசு என்று ஒன்று இருக்கிறதா? செயல் படுகிறதா?


யாருடைய நலன்களைப் பாதுகாக்கும் அரசாக அது இருக்கிறது? எங்க பாட்டன் சொத்து என்றாகி விட்டதா?


பெரும்பாலான மக்களுக்கு எதிராக இருந்த போதிலுமே கூட, இப்படிப் பட்ட அரசு நீடிப்பது எப்படி?


இதற்கு மாற்று எதுவுமே கிடையாதா?

இந்தக் கேள்விகளுக்கு முதலில் அரசு என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லையா?

விளாடிமிர் லெனின், மார்க்சும், ஏங்கெல்சும் ஒரு தியரி
லெவலில் மட்டுமே சொல்லிவிட்டுப் போனதைக் கொஞ்சம், நடைமுறைப்படுத்தக் கூடியதாக மாற்றி ரஷ்யப் புரட்சியை நடத்தியவர். அரசு என்றால் என்ன என்ற கேள்விக்கு இப்படி ஒரு சுருக்கமான விளக்கம் சொல்கிறார்:

"வர்க்கங்களுக்கிடையே விரிசலும் பிளவும் அதிகமாகி இணக்கம் காண முடியாத நிலையில் ஒரு சமரசமாக,  தற்காலிகமான ஏற்பாடாகத் தோன்றுவதே அரசு! தானாகவே உதிர்ந்து போய்விடக் கூடியது."



ஃபிரான்ஸ் ஓபன்ஹீமர்  என்பவர் இப்படிச் சொல்கிறார்:

"அரசு என்பது அடிமைத்தனத்துக்கும் சுதந்திரத்துக்கும் முறைதவறிப் பிறந்த ஒரு அமைப்பு."


"
Franz Oppenheimer argues that the state is a "vehicle of capitalism" and "the bastard offspring of slavery and freedom. He states that "the great task before us is to get rid of the remaining traces of slavery and bring full freedom into being."


"The State, completely in its genesis, essentially and almost completely during the first stages of its existence, is a social institution, forced by a victorious group of men on a defeated group, with the sole purpose of regulating the dominion of the victorious group over the vanquished, and securing itself against revolt from within and attacks from abroad. Teleo- logically(the doctrine that final causes exist.), this dominion had no other purpose than the economic exploitation of the vanquished by the victors."
"No primitive state known to history originated in any other manner.
[1] Wherever a reliable tradition reports otherwise, either it concerns the amalgamation of two fully developed primitive states into one body of more complete organisation, or else it is an adaptation to men of the fable of the sheep which made a bear their king in order to be protected against the wolf. But even in this latter case, the form and content of the State became precisely the same as in those states where nothing intervened, and which became immediately 'wolf states'."


Oppenheimer also contributed a vital distinction by which human beings obtain their needs:

"There are two fundamentally opposed means whereby man, requiring sustenance, is impelled to obtain the necessary means for satisfying his desires. These are work and robbery, one's own labor and the forcible appropriation of the labor of others. Robbery! Forcible appropriation! These words convey to us ideas of crime and the penitentiary, since we are the contemporaries of a developed civilization, specifically based on the inviolability of property. And this tang is not lost when we are convinced that land and sea robbery is the primitive relation of life, just as the warrior's trade - which also for a long time is only organized mass robbery - constitutes the most respected of occupations. Both because of this, and also on account of the need of having, in the further development of this study, terse, clear, sharply opposing terms for these very important contrasts, I propose i. the following discussion to call one's own labor and the equivalent exchange of one's own labor for the labor of others, the “economic means" for the satisfaction of needs, while the unrequited appropriation of the labor of others will be called the "political means."

இப்போது, அங்கே மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் இன்னாம்பூரான் என்ற பெயரில் திரு சௌந்தரராஜன் அவர்கள் தொடங்கி வைத்து, இன்னமும் தொடர்ந்து வெளிவரும் விவாத இழை குறித்து நான் சொல்ல வருவதெல்லாம் இது தான். சல்லிவேர்களைத் தொடர்ந்தால் ஆணிவேரைக் கண்டு பிடிக்க முடியும்! கோளாறை சரிசெய்வது என்பது ஆணிவேரை அகற்றுவதில் தான் இருக்கிறது.

நம்முடைய அரசியல் அமைப்பில் கோளாறுகளின் ஆணிவேர் எங்கே இருக்கிறது?


தேர்தல் கமிஷன், நீதித்துறை, தணிக்கைத் துறை எதுவானால் என்ன?

ஒத்து ஊதவில்லை என்றால் நீர்த்துப்போய் விடச் செய்கிற அரசியலை அல்லவா முதலில் களையெடுக்க வேண்டும்?!


நீண்ட நாட்களுக்கு முன்னால் எமெர்ஜென்சி காலத்துக்குக் கொஞ்சம் பிறகு, தினமணி ஆசிரியராக இருந்த திரு ஏ. என். சிவராமன் அவர்கள், கணக்கன் என்ற புனைபெயரில், மிக அருமையான கட்டுரைகளை எழுதிவந்தார். எப்படி  இங்கே இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் வெஸ்ட்மின்ஸ்டர் முறையிலான (winner takes all   அடிப்படையிலான தேர்தல் முறை)  கோளாறுகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது, மற்ற ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தித் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் தேர்தல் முறைகள், அதன் சாதகபாதகங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து விவரித்து எழுதினார். பின்னர் தினமணிகதிர் வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. எவரிடமாவது அந்தப் புத்தகம், அல்லது அதைப் பெறுவது குறித்த விவரம்  இருந்து எனக்குத் தகவல் சொல்ல முடியுமானால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.



திரு ஏ. என். சிவராமன்

தேர்தல் முறைகளில் மாற்றங்கள் - இதில் ஆரம்பித்து,  அஸ்திவாரத்தில் இருக்கும் விரிசலை வெள்ளையடித்து மறைக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, புதியதாக, காலத்திற்குத் தகுந்த முறையில் மாற்றங்களைச் செய்வதில் மட்டுமே உண்மையான தீர்வு இருக்கிறது.

அத்தகைய மாற்றங்களுக்குத் தயாராவதற்கும், இன்றைய சமூகச் சூழ்நிலை, ஜனங்களுடைய மனநிலை  மிகப் பெரிய இடையூறாக இருப்பதையும் மறுக்க முடியாது. மாற்றங்கள், நம்மிடமிருந்து தான் ஆரம்பிக்கின்றன.

நான் மாற மாட்டேன், ஆனால் ஊரும் உலகமும் நான் விரும்புகிறபடி மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக, மானாட மயிலாடப் பார்த்துக் கொண்டு கொறட்டை விட வேண்டியதுதான்!