நெக்சஸ் ஒன் இப்போது! கூகுளின் அடுத்தது என்ன?



வருடம் பிறந்த அன்றைக்குப் பார்த்து,  பதிவர் டோண்டு ராகவன்  வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை வெறுப்பவரா நீங்கள் என்று கேள்வி கேட்டதோடு நில்லாமல் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளை  உபயோகிக்கத் தெரியாமல், சிலர் கோப்பைகளை உடைத்துவிடுவதும், காயப் படுவதையும் ஒரு பவர்பாயின்ட் பிரசன்டேஷனாகப்  போட்டு,  பயமுறுத்தி இருந்தார்! சொல்லியிருந்த விஷயம் எல்லாம் ஒகே என்றாலும் கூட சில படங்கள் கொஞ்சம் பயமுறுத்தினது என்னவோ உண்மை!

குந்த வைத்து உபயோகிக்கும் இந்திய டாய்லெட் வகைகளை விட,  வெஸ்டர்ன் டாய்லெட்டுகள், தொடர்ந்து சரியாக சுத்தம் செய்யப் படாவிட்டால் நோயைப் பரப்பும் இடமாகவே ஆகிவிடும். ஆனால், அதிலும் பல சௌகரியங்கள் இருக்கின்றன.

இங்கே ஒரு காமெடி வீடியோ! எதிலும், எல்லாவற்றிலும் முந்தித் தரும் கூகிள் நிறுவனம் டாய்லெட்டையும் அறிமுகப் படுத்தினால் எப்படியிருக்கும்? தன்னுடைய வடிகட்டும், அனலிடிகலான  டெக்னாலஜியை ஆய் போகிற இடத்திலும் பயன் படுத்த ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? இரண்டரை நிமிட வீடியோ தான்!  




இப்போது தான்
கூகிள்   நெக்சஸ் ஒன் வந்திருக்கிறது! 

அப்படியே வெஸ்டர்ன் டாய்லெட்டையும் கூகிள் அறிமுகம் செய்தால் எப்படியிருக்கும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கொஞ்சம் வீடியோவைப் பார்த்து விட்டு சொல்லுங்களேன்!!


1 comment:

  1. எனக்கு அந்த டாய்லெட் ரொம்ப பிடிச்சிருக்கு!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!