நிகர்நிலை தகர்நிலையாகிப் போனதென்ன!

ஒரு வழக்கறிஞராகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ, திரு. கபில் சிபலைப் பெரிதாகப் பொருட்படுத்தத் தோன்றியதே இல்லை!
மந்திரிஎன்றால்?! சொல்லவே வேண்டாம்! உளறுவதையே பிழைப்பாக வைத்துக் கொண்டிருப்பவர்களைக் கவனிப்பதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?
இன்றைக்கு செய்தித் தாட்களைப் புரட்டிப் பார்த்த பிறகு திரு கபில் சிபல் அவர்களுக்கு  கைகொடுத்து, பூச் செண்டும் கூடக் கொடுக்க வேண்டும்  என்று அவ்வளவு ஆசை! காங்கிரஸ் அமைச்சராக இருந்துகொண்டு, ஒரு தீர்மானமான முடிவை அறிவித்திருக்கிறார்! அதுவே பெரிய ஆச்சரியம்!

முடிவு நிலைக்குமா, அல்லது தெலங்கானா விவகாரம் மாதிரி நீர்த்துப் போய்விடுமா என்பது, கல்வித்தந்தைகள் எவ்வளவு பலமாகக் கவனிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்றாலுமே கூட, ஒரு வித்தியாசமான ஆரம்பமாக, தைமாதம்  பிறந்திருக்கிறது!

நாட்டில் உள்ள நூற்றுமுப்பதுக்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில், நாற்பத்துநான்கு நிகர்  நிலைகளைத் தகர்நிலையாக்கும் அறிவிப்பை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு கபில் சிபல் அறிவித்திருக்கிறார்! நாற்பத்து நான்கில் பதினேழு தமிழ்நாடு புதுவைப் பகுதியைச் சேர்ந்தவை! இங்கே சரியான கனெக்ஷன்கள் இருந்தால், அள்ளியிறைக்கப் பணம் இருந்தால் பட்டைச் சாராயம் லோகல் லெவலில் காய்ச்சுகிரவனில்   இருந்து அதையே பெரும் தொழிலாகச் செய்துவருகிறவன்  கூட  கல்வித் தந்தையாகிவிட முடியும்!

நானே நல்ல மேய்ப்பன் என்று சொல்லிக் கொண்டு பெயரில் இருக்கும் காருண்யம், நடத்தும் வியாபாரத்தில் இருக்காது என்பது ஊரறிந்த ரகசியம்! என்ன மாதிரிக் காருண்யத்தோடு எதைச் சேர்த்துக் கொண்டு போனால்உங்கள்  தந்தை பெயர் என்ன, உங்கள் வீட்டு நாய்க் குட்டியின் பெயரைக் கூட சென்னை மெரீனா கடற்கரைக்கு வைத்து விட முடியும்!

"கொலையும் செய்வாள் பத்தினி!" இது  தூக்குத் தூக்கி படத்தில் வரும் ஏழு வசனங்களில் ஒன்று இது! தொழில் போட்டி என்று வந்து விட்டால், கல்வித் தந்தைகள் அதையும் செய்வார்கள் என்பது தமிழ்நாட்டில்பார்த்திருக்கிறோமே!

நாற்பத்து நான்கு போக மீதியுள்ளவை மட்டும் ரொம்ப ஒழுங்கோ என்று கேட்பவர்கள், அரசியல் அறியாதவர்கள்!

முதலில் நிகர் நிலை என்பதே, அதன் உண்மையான பொருளில், பல்கலைக் கழகத்துக்குச் சமமான என்று சொல்லும் போதே முறைப்படியான பல்கலைக் கழகம் இல்லை என்று  பல்கலைக் கழக மானியக் குழுவின்  விதிகளில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது.


விக்கிபீடியாவை ஆதாரமாகக் காட்டி, இந்த செய்தி சொல்கிறது:Deemed University are not approved universities. As per University Grant Commission guidelines only official approved universities are formal Universities. Deemed University is colloquial term being used for informal education system that exists outside UGC approved formal education system promoted by the private limited education institutes with financial and operational autonomy. But most deemed universities are also affiliated to the University Grants Commission and the All India Council of Technical Education. Universities having deemed university status are known and recognized for their quality education.”

“Deemed university is a status of autonomy granted to high performing institutes and departments of various universities in India. This status of ‘Deemed-to-be-University’, is granted by Deptt. Of Higher Education, Union Human Resource Development Ministry, on the advice of the University Grants Commission (UGC) of India, under Section 3 of the University Grants Commission (UGC) Act, 1956. The UGC began in 1956 after Indian parliament passed the University Grants Commission Act "to make provision for the co-ordination and determination of standards in Universities and for that purpose, to establish a University Grants Commission."

It further explains, “The deemed university status enables not just full autonomy in setting course work and syllabus of those institutes and research centers, but also allows it to set its own guidelines for the admissions, fees, and instructions to the students. The parent universities of these deemed universities cannot control its administration, though the degrees of deemed universities are awarded by the parent universities. However, many deemed universities are allowed to award degrees under their own name.”அர்ஜுன் சிங் செய்துவிட்டுப் போன குளறுபடிகளில் இதுவும் ஒன்று! இரண்டு வருடங்களுக்குள்ளேயே கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்து, கழுதை என்று தெரிந்த பின்னால் கூட அதை ஒப்புக்கொள்கிற காங்கிரஸ்கார மந்திரி இருப்பதற்காகவாவது  இந்த செய்தியை வரவேற்க வேண்டும்! நாளை, அல்லது நாளை மறுநாள், அல்லது நீதிமன்றத் தடை உத்தரவு இப்படி எப்படி வேண்டுமானாலும், அரசின் இந்த முடிவு மாறிவிடலாம்!

ஏனென்றால், காகிதப்பூ மணக்காது! காங்கிரஸ்காரனுக்குஆளவும்  தெரியாது!


புட்டியில் இருந்த பூதத்தை வெளியே விட்டாயிற்று! அதை மறுபடி புட்டிக்குள் அடைத்து விட முடியுமா? காங்கிரஸ் கட்சிக்கு அந்த அளவுக்கு அரசியல் நேர்மையும், துணிவும் இருக்கிறதா? எதையாவது அறிவிக்க வேண்டியது! அங்கங்கே கொழுந்துவிட்டு பற்றிக்கொண்டு எரிய வேண்டியது! கருத்தொற்றுமை கண்டபிறகே அமுல்படுத்துவோம் என்று அமுல் பேபி மன்மோகன் சிங் கடைசியாக வந்து வழிய வேண்டிய பட்டியலில் இதுவும் ஒன்றாகச்சேர்ந்து விடுமோ? 


எங்கே போகிறோம்? Quo Vadis?
7 comments:

 1. என்ன சற்றே சிறிய இடைவெளி?
  சண்டேன்னா மூணு காணோம்?
  "காங்கிரஸ் அமைச்சராக இருந்துகொண்டு, ஒரு தீர்மானமான முடிவை அறிவித்திருக்கிறார்! அதுவே பெரிய ஆச்சரியம்"

  எவ்வளவு நாள் தாங்கும் என்று பார்ப்போம்..!

  "இங்கே சரியான கனெக்ஷன்கள் இருந்தால், அள்ளியிறைக்கப் பணம் இருந்தால் பட்டைச் சாராயம் லோகல் லெவலில் காய்ச்சுகிரவனில் இருந்து அதையே பெரும் தொழிலாகச் செய்துவருகிறவன் கூட கல்வித் தந்தையாகிவிட முடியும்"

  ம்...ஹூம்...உண்மைதான்.

  "ஏனென்றால், காகிதப்பூ மணக்காது! காங்கிரஸ்காரனுக்குஆளவும் தெரியாது"

  சந்தர்ப்பத்தை விட மாட்டீர்களே...!

  ReplyDelete
 2. வாங்க ஸ்ரீராம்!

  எழுதணும்ன்னு நெனச்சுத் தேடி வைச்ச குறிப்புக்கள் ஏராளமா சேர்ந்து போச்சு!இந்த இடைவெளியில், எல்லாவற்றையும் திரும்பப் படித்துப் பார்த்துவிட்டு யோசித்துக் கொண்டிருந்ததில், எழுத வேண்டும் என்று தோன்றவில்லை!

  இந்தநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் விஷயமுமே கூட டாண்டன் என்பவரை வைத்து ஒருய் அறிக்கை தயார் செய்யச் சொல்லி ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு! அமைச்சர் ஒன்றைச் சொல்லியிருக்கிறார்! அது அரசின் முடிவு தானா, செயல் படுத்தப் படுமா என்பதே கொஞ்சம் சந்தேகமாக இருக்கும் விஷயம் இது.

  ReplyDelete
 3. இப்போது அங்கே படித்து கொண்டிருப்பவர்களீன் கதி!?

  ReplyDelete
 4. மாணவர்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படும், அவர்கள் பயிலுமிடம் வெறும் கல்லூரியாக நீடிக்கும், முந்தைய நாட்களில் எந்தப் பல்கலையுடன் இணைந்திருந்ததோ, அந்த நிலை தொடரும் என்று கபில் சிபல் அறிவித்திருக்கிறார்.

  அறிவித்திருக்கிறார் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் காரணம், அறிவிப்புக்கள் என்பவை, இந்தியச் சூழ்நிலையில் அந்த அளவோடேயே நின்று விடக் கூடியவை, வெற்று வார்த்தைகளாகவும் காற்றோடு போய்விடவும் கூடும்!

  இதை மனதில் வைத்துக் கொண்டு அமைச்சருடைய 'அறிவிப்பை' புரிந்துகொள்ளுங்கள்!

  ReplyDelete
 5. இதுபற்றிய விபரம் அதிகம் எனக்கு தெரியவில்லை. தொலைக்காட்சியில் செய்திகளில் பார்த்ததோடு/கேட்டதோடு சரி.

  எனக்கு ஒரு சின்ன சந்தேகம். இந்த சட்டம் முறையாக (ஸ்டே ஆர்டர் எடுவுமின்றி) அமுலுக்கு வந்தாலும் அதில் பயின்ற மாணவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் எவ்வாறு சரிகட்டப் போகிறார்கள்?

  ReplyDelete
 6. இது தனியான சட்டத்தின் கீழ் வரவில்லை. UGC ACT 1956 இன் கீழ், சுயாட்சிபெற்ற கல்லூரிகள், நிறுவனங்களாக, அவர்களே பாடத்திட்டத்தை வகுத்துக் கொள்ளும் சுதந்திரம் என்று கொஞ்சம் பல்கலைக் கழக மானியக்குழு விதிகளில் திருத்தம் செய்து வந்தவைதான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள். இதயப் பல படித்தரங்கள் இருக்கின்றன, தரச் சான்றிதழ் பெரும் நிலை இருக்கின்றன. இவைகளில் இருக்கும் ஓட்டை, சந்துகளில் புகுந்து, இந்த மாதிரியான கல்வித்தந்தைகள் உருவானார்கள்.

  இந்த அறிவிப்புக்கு முன்னாள் கூட,மாணவர்களுடைய உண்மையான இழப்பு என்பது ஒன்றுக்கும் உதவாத தரமற்ற கல்வியாகத் தான் இருக்கிறது.

  RTI Act இன் கீழ் இங்குள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் அத்தனையிலும், பல்கலைக் கழக மானியக் குழு அல்லது AICTE விதிகள் முழுமையாகப் பின்பற்றப் பட்டிருக்கின்றனவா, தரச் சான்றிதழ் வழங்கப் பட்டிருக்கிறதா, தகுந்த ஆசிரியர்கள், சோதனைக் கூடங்கள் எல்லாம் இருக்கிறதா என்பதை பகிரங்கமாக அறிவிக்கச் சொல்லி வழக்குத் தொடர்ந்தால் தான், மிச்சம் இருப்பவைகளிலும் உள்ள ஓட்டைகள், ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும்.

  தமிழ்நாட்டுக்கு ஒரு ட்ராபிக் ராமசாமி போதாது!

  ReplyDelete
 7. ஒரு வார்த்தையை (நிகர்நிலை) கண்டுபுடிச்சி அதுக்கு புரியாத புது அர்த்தம் ஏற்படுத்தி மாணவர்களை அதன் மூலமாய் பெற்றோர்களை கொள்ளையடிக்கும் அரசாங்கங்களை நினைத்தால் ரொம்ப வேதனையாகவும்,கோபமாமாகவும்,
  இருக்கிறது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!