உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே!


i.e  என்றால் அதாகப் பட்டது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்  எல்லாம் இல்லை! வேறு  என்னவாம்?

அதாவது, அதாகப் பட்டது என்று ஆங்கிலத்தில் எழுதும் போது சுருக்கமாக i.e என்று எழுதி  விட்டுப் போய்க் கொண்டே இருப்போம்! என்ன அது என்பதெல்லாம் அதிகம்  அலட்டிக் கொள்வதில்லை!

id est என்ற லத்தீன் வார்த்தைகளின் சுருக்கம்! That is, அதாவது என்று அர்த்தத்தில்!

அப்புறம் பில் கேட்ஸ் வந்தார், மைக்ரோ சா ஃப்ட்  பிரபலமானதை விட, விண்டோசில் IE அதாவது, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அதிகப் பிரபலமானது! மாதம் குறைந்தது இரண்டு பிழை திருத்தத்தோடு  (patch) இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மிக மிகப் பாப்புலர்! இப்போது  அந்தப் பிரபலம், பாப்புலாரிட்டியை தூக்கிச் சாப்பிடுகிறமாதிரி, இன்னொரு IE பிரபலமாகிக் கொண்டிருக்கிறது! இம்ப்ரூவ் எவரிவேர்! 

அதாச்சும், சீன் காட்டுறாங்களாம்!


கடந்த எட்டு வருடங்களாக, விரல் விட்டு எண்ணக் கூடிய பங்காளர்களோடு தொடங்கிய இந்தக் கூத்து, இந்த வருடம் கலக்கலாக சீன் காட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது! சப்வே (மெட்ரோ ரயில்) பயணத்தின் போது ட்ரவுசர் அல்லது பான்ட் அணியவேண்டாமாம்!நியூயார்க்கில் மட்டும்  நேற்று மூவாயிரம் பேர் இப்படி இடுப்புக்குக் கீழ் உள்ளாடைகளைத் தவிர வேறெதையும் அணியாமல் ஒரு காட்சியை சாதனையாக நடத்தியிருக்கிறார்கள். அடக்க ஒடுக்கமான பாரம்பரியப் பிரியர்கள், கலாசாரக் காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் லண்டன் வாசிகள் கூட இந்த ஆண்டு, இந்த No Pants Day நிகழ்ச்சியைக் கொண்டாடியிருக்கிறார்கள்!

சார்லஸ் டாட் என்பவர்  2001 இல் துவக்கிய இந்த முயற்சி,  பதிவர்கள் பரிபாஷையில் எத்தனை ரூம் போட்டு எத்தனை நாட்கள் யோசித்ததோ தெரியாது, இது வரை இந்த மாதிரி நூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. ஏற்கெனெவே செட் அப் செய்து வைத்த பங்காளர்கள் பொது இடத்தில் திடீரென்று ஏதாவது ஒன்றை அதிர்ச்சி, குழப்பம், ஆச்சரியத்தைஏற்படுத்தக் கூடியதாக  அதிரடியாகச் செய்வதை இந்தக் குழு நடத்திவருகிறது. இது தெரியாமல், அந்த இடத்தில் அந்த நேரத்தில் இருக்கும் பார்வையாளர்கள் முதலில் அதிர்ச்சி, ஆச்சரியம், அப்புறம், கொஞ்சம் கலகலப்பு என்று இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது! இதில் பங்குகொள்ள விரும்புகிறவர்கள், எப்படித் தயாராகவேண்டும் என்பதை  இங்கே கொஞ்சம் விவரமாக, போன வருடம் நடந்த நிகழ்ச்சியின் வீடியோ முன்னுரையுடன்!

வீடியோ செய்தி இங்கே!

இங்கே காண்டிட் காமெரா  என்ற பெயரில் நம்மூர்த் தொலைக் காட்சிகளில் அராஜகமாகவும், முகத்தைச் சுளிக்க வைப்பது போலவும் கூத்தடிப்பது போல இல்லை என்பது முக்கியமாகச் சொல்ல வேண்டும்!

அப்புறம் இதில் சங்கமமாகிறவர்கள், தாங்களாகவே முன்வந்து பங்கேற்பவர்கள்! அடுத்தவன் காசில் செட் அப் இல்லை என்பதும் கூடுதல் தகவல்!7 comments:

 1. சிலாகிக்கவோ, ஆச்சர்யப்படவோ இது பெரிய விசயமில்லை என்பது என் கருத்து!

  ஒட்டு துணியில்லாமல் வாழும் மக்களும் இருக்கிறார்களே!

  ReplyDelete
 2. அட சுவாரஸ்யமா இருக்கே...

  ReplyDelete
 3. சிலாகிக்கவேண்டுமென்றா சொன்னேன்?!

  உலகம் போற போக்கு என்ன என்பது ஒரு செய்தியில்! இங்கே, நம்முடைய அரசியல் வாதிகள் ஒவ்வொரு நிமிடமும் மடத்தி வரும் அரசியல் ஸ்டண்டுகள், டிராமாக்கள், சங்கமங்கள், அறிக்கைகள், பாராட்டுவிழாக்கள், கண்காட்சி அரசியல், இதையெல்லாம் பார்த்துப் பழகி விட்டதால், அதிர்ச்சியோ, சிலாகிக்கவோ எதுவுமே இல்லை, அப்படித்தானே!

  இங்கே இந்த செய்தியில், dramatising a scene ஒரு நாடகத்தனமான என்ற ஒரு விஷயம் வருடத்தின் ஏதோ ஒரு நாளில் நடப்பதால், அது செய்தியாகவும் ஆச்சரியமாகவும்இருக்கிறது!

  /ஒட்டு துணியில்லாமல் வாழும் மக்களும் இருக்கிறார்களே/

  சூடு சொரணையே இல்லாமல் அரசியல்வாதிகள் இங்கே இருக்கிறார்களே!

  நாம் போக வேண்டியது எந்தத் திசையில் என்பது மறைமுகமாகக் கேட்கப்பட்ட கேள்வி!

  ReplyDelete
 4. //ஒரு விஷயம் வருடத்தின் ஏதோ ஒரு நாளில் நடப்பதால், அது செய்தியாகவும் ஆச்சரியமாகவும்இருக்கிறது!//

  அவர்களின் நோக்கமே கவன ஈர்ப்பு தானே! அது இப்போது நிறைவேறி விட்டது!

  ReplyDelete
 5. ///இன்னொரு IE பிரபலமாகிக் கொண்டிருக்கிறது! இம்ப்ரூவ் எவரிவேர்! ///

  இதைப்பற்றிய துணுக்கு செய்தி படித்ததுண்டு. அப்பவே எரிச்சலா இருந்துது. இந்த கன்றாவியை ஒரு விழா மாதிரி வேற கொண்டாடுறானுங்களா. இந்தக்கொடுமைய எங்க போயி சொல்ல.

  ReplyDelete
 6. /அவர்களின் நோக்கமே கவன ஈர்ப்பு தானே/

  பதிவுகள், மொக்கைகள், பின்னூட்டங்கள், எதிர் வினை, சொந்த செலவில் தனக்கே ஆப்பும் டாப்பும் அடிச்சுக்கறது எல்லாமே கவனத்தை ஈர்ப்பதற்குத்தானே, திரு அருண்!

  நவாஸுதீன்!

  இதில் எரிச்சல் கொள்வதற்கு என்ன இருக்கிறது? ஒரு வரைமுறை, ஒழுங்கு, நம்பிக்கை என்று ஏற்படுத்தும்போதே அதை மீறுவதற்கான ஆரம்பமும் கூடவே பிறந்து விடுகிறது! நேரெதிரான இந்த இரட்டைத் தன்மை தான் வாழ்க்கையின் உந்து சக்தி! Facebook இல் பிரஸ்ட் கான்சர் விழிப்புணர்வுக்காக பிங்க் கலர் காலனி, டி ஷர்ட் இப்படி ஒரு கூத்தும் இதே வாரம் நடந்தது. கலருக்கும் கான்சருக்கும் என்ன சம்பந்தம், குறைந்தபட்சம் எதற்காக இப்படி ஒரு இயக்கத்தை நடத்தினார்களோ அதுவாவது நினைவுக்கு எவருக்கேனும் வந்ததா என்ற விவாதங்களும் சூடாக நடந்து முடிந்தது!

  ReplyDelete
 7. //பதிவுகள், மொக்கைகள், பின்னூட்டங்கள், எதிர் வினை, சொந்த செலவில் தனக்கே ஆப்பும் டாப்பும் அடிச்சுக்கறது எல்லாமே கவனத்தை ஈர்ப்பதற்குத்தானே,//

  நிச்சயமாக எந்த மறுப்பும் இல்லை!
  வெட்டி விளம்பரத்தை நாமாகவே தாண்டி செல்கிறோம் என நம்புகிறேன்!

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!