கோளாறுகள், ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது ...!"A problem well stated is a problem half solved."

ஒரு கேள்வி அல்லது பிரச்சினை என்று வைத்துக் கொள்ளுங்கள்! அந்தக் கேள்வி அல்லது பிரச்சினையின் அடிநாதம் என்ன என்பதைப் புரிந்து கொண்டாலே, பிரச்சினைக்குப் பாதித் தீர்வு கண்ட மாதிரித் தான்!  மீதமுள்ள பாதி?

பிரச்சினைக்குத் தீர்வு,  காரணத்தைப் புரிந்துகொண்டு செயலில் இறங்குவதில் தான் இருக்கிறது. நம்முடைய அரசு, அரசியல், கல்விமுறை, சமூகம் என்று எதை எடுத்துக் கொண்டாலும், பிரச்சினை என்று வந்தாலே அதிலிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறோம் அல்லது வேறு வழியில்லாமல் நாமே சிக்கிக் கொள்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வரும் போது, அந்தநேரத்தில் தோன்றுகிற எதையாவது செய்து பிரச்சினையில் இருந்து வெளிவரவே விரும்புகிறோம்.


அப்படி என்ன தான் செய்து வெளியே வருகிறோம் என்று சற்றுப் பின்னோக்கி பார்த்தால், 99.999 சதவீத சந்தர்ப்பங்களில், அஸ்திவாரத்தில் விரிசல் ஏற்பட்டு கட்டடமே ஆடிக் கொண்டிருக்கும்போது, சுவற்றுக்கு வெள்ளையடித்து, விரிசல்களை மறைக்கிற முயற்சியாகவே இருப்பது தெரிய வரும்.

கோளாறு என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அதன் மூல வேரைக் களையாமல் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பது அநேக சந்தர்ப்பங்களில் தெரிந்திருக்கும் போதுமே கூட, இப்படி அரைகுறையான தீர்வு, அல்லது தள்ளிப் போடுகிற சோம்பேறித்தனம் (procrastination)  இவையே  நம்முடைய பலவீனமாக இருப்பதைச் சொல்ல முடியும்.

முந்தைய பதிவுகளில், அரசியல், பொருளாதாரம், மேலாண்மை, தலைமைப் பண்பு, நிர்வாகம் இப்படிப் பல விஷயங்களைப் பேசியிருக்கிறோம். மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஒரு அடிப்படையான கேள்வி, முதலில் தனிக்கைமுறையைப் பற்றி ஆரம்பித்து, அப்புறம் அரசு இயந்திரத்தை செயல்பட வைப்பது எப்படி என்பது ஈறாக  நான்கைந்து விவாத இழைகளாகப் பிரிந்து ஒரு விவாதக் களம் நடந்துகொண்டிருப்பதைப் பல நாட்களாகவே  தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

இங்கே வலைப்பதிவுகளில் எழுதுவதுபோல மேம்போக்காக இல்லாமல் ஒரு நல்ல விவாதம் நடந்துகொண்டிருந்தாலும் கூட, அங்கேயும் ஒரு அடிப்படையான கேள்வி இருப்பதையே புரிந்துகொண்டமாதிரி இல்லாமல், விவாத இழை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. இத்தனைக்கும் விவாத இழையில் பங்கு கொண்ட சிலர் அரசுத்துறை நிர்வாகத்தை அறிந்தவர்கள், சிலர் வேறு துறைகளில் விற்பன்னர்கள், மிகவும் பொறுப்பாக எழுதுபவர்கள் என்பதை அந்த விவாதக் களத்தைப் பார்த்தவுடனேயே சொல்லிவிட முடியும்! ஆனாலும் கூட, அடிப்படை, ஆணிவேரை விட்டு விலகியே அந்த விவாத இழை தொடர்ந்து கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.

நடப்பு அரசியலைக் கவனித்தாலே ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். 


அன்னியர்களிடமிருந்து விடுதலை அடைந்து அறுபத்திரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னாலும் கூட, இங்கே ஒரு முறையான அரசமைப்பை உருவாக்க முடியவில்லை. குடியரசு என்று அறிவித்துக் கொண்டு, அரசியல் சாசனம், சட்ட நெறிமுறைகள் என்றெல்லாம்  வைத்துக் கொண்ட பிறகும், இங்கே குடிமக்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் அரசாக  இருப்பது கிடக்கட்டும், பாதுகாக்கப் பட்ட குடிநீரைக் கூட வழங்கக் கையாலாகாத ஒரு அரசு, அரசு இயந்திரத்தைத் தான் நாம் சுமந்துகொண்டிருக்கிறோம் என்பது நமக்கே நன்றாகத் தெரிகிறது.

ஏற்கெனெவே இருந்த துருப்பிடித்துப் போன அரசு இயந்திரம், அடிமைப் படுத்தி வைத்திருந்தவர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதற்கான சட்ட நெறிமுறைகள், அரசு நிர்வாகம் இப்படி அத்தனையுமே செகண்ட் ஹான்டாக இருப்பது பொருந்தவில்லை என்பது தெரிந்துமே கூட, அதையே தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பது வெள்ளைத் துரை
போய்க் கறுப்புத் துரை வந்து உட்கார்ந்துகொண்டதைத் தவிர வேறென்ன வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் என்ற கேள்வியையோ, அதற்கான விடையைத் தேடும் முயற்சியிலோ மின்தமிழில் தற்சமயம் நடந்து வரும் விவாத இழை இல்லை என்பது எனது வருத்தம்.


சீன ஆக்கிரமிப்பாக இருக்கட்டும், பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் இப்படி எங்கிருந்து வேண்டுமானாலும்  தீவீரவாதிகள் இந்த நாட்டுக்குள் ஊடுருவ முடியும், வன்முறை, தீவீரவாதத் தாக்குதல்களை நடத்த முடியும்! அரசு பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிடும்! அவ்வளவு தான்! அதிகபட்சம், அடுத்த வருடம், ஆண்டுவிழாக் கொண்டாடி, இங்கே கூத்தாடிகளைவைத்து நடத்துவதைப் போல, போலீஸ் அணிவகுப்பு, ஊர்வலம்  மும்பையில் நடத்தினார்களே அது மாதிரி வேண்டுமானால் நடத்துவார்கள்!

இன்றைக்குக் கூட தெலங்கானா, இன்னும் பற்றி எரியும் நெருப்பாகத் தான் இருக்கிறது! உருப்படியான தீர்வைக் காண்பதற்குத் துப்பில்லாத, சூடு சொரணை கெட்ட ஜென்மங்களைத் தான்சட்ட மன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுத்து  அனுப்பிக் கொண்டிருக்கிறோம்!அவர்கள் ரெட்டி மகனுக்கு முதல்வர் பதவி கொடு, இல்லையென்றால், எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றுவோம் என்கிற ரீதியில் மட்டும் செயல்படுவார்கள். ஆகாத கட்சி இருந்தால் மட்டும் காங்கிரஸ் கண்ணுக்குத் தெரிகிற அரசியல் சாசனத்தின் 356 ஆவது பிரிவு, ஆந்திராவில் அரசு முற்றிலும் செயலிழந்து போன பின்னாலும் கூட, அமலுக்கு வராது. அது என்ன பாழாய்ப்போவதற்கென்றே  ஒரு அரசியல் சாசனம்!?


அரசியல் சம்பந்தப் பட்ட எந்த செய்தியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்! அடிப்படையான ஒரு கேள்வி அத்தனைக்கும் பொதுவாக இருக்கிறது.

இங்கே அரசு என்று ஒன்று இருக்கிறதா? செயல் படுகிறதா?


யாருடைய நலன்களைப் பாதுகாக்கும் அரசாக அது இருக்கிறது? எங்க பாட்டன் சொத்து என்றாகி விட்டதா?


பெரும்பாலான மக்களுக்கு எதிராக இருந்த போதிலுமே கூட, இப்படிப் பட்ட அரசு நீடிப்பது எப்படி?


இதற்கு மாற்று எதுவுமே கிடையாதா?

இந்தக் கேள்விகளுக்கு முதலில் அரசு என்றால் என்ன என்ற கேள்விக்கு விடை தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லையா?

விளாடிமிர் லெனின், மார்க்சும், ஏங்கெல்சும் ஒரு தியரி
லெவலில் மட்டுமே சொல்லிவிட்டுப் போனதைக் கொஞ்சம், நடைமுறைப்படுத்தக் கூடியதாக மாற்றி ரஷ்யப் புரட்சியை நடத்தியவர். அரசு என்றால் என்ன என்ற கேள்விக்கு இப்படி ஒரு சுருக்கமான விளக்கம் சொல்கிறார்:

"வர்க்கங்களுக்கிடையே விரிசலும் பிளவும் அதிகமாகி இணக்கம் காண முடியாத நிலையில் ஒரு சமரசமாக,  தற்காலிகமான ஏற்பாடாகத் தோன்றுவதே அரசு! தானாகவே உதிர்ந்து போய்விடக் கூடியது."ஃபிரான்ஸ் ஓபன்ஹீமர்  என்பவர் இப்படிச் சொல்கிறார்:

"அரசு என்பது அடிமைத்தனத்துக்கும் சுதந்திரத்துக்கும் முறைதவறிப் பிறந்த ஒரு அமைப்பு."


"
Franz Oppenheimer argues that the state is a "vehicle of capitalism" and "the bastard offspring of slavery and freedom. He states that "the great task before us is to get rid of the remaining traces of slavery and bring full freedom into being."


"The State, completely in its genesis, essentially and almost completely during the first stages of its existence, is a social institution, forced by a victorious group of men on a defeated group, with the sole purpose of regulating the dominion of the victorious group over the vanquished, and securing itself against revolt from within and attacks from abroad. Teleo- logically(the doctrine that final causes exist.), this dominion had no other purpose than the economic exploitation of the vanquished by the victors."
"No primitive state known to history originated in any other manner.
[1] Wherever a reliable tradition reports otherwise, either it concerns the amalgamation of two fully developed primitive states into one body of more complete organisation, or else it is an adaptation to men of the fable of the sheep which made a bear their king in order to be protected against the wolf. But even in this latter case, the form and content of the State became precisely the same as in those states where nothing intervened, and which became immediately 'wolf states'."


Oppenheimer also contributed a vital distinction by which human beings obtain their needs:

"There are two fundamentally opposed means whereby man, requiring sustenance, is impelled to obtain the necessary means for satisfying his desires. These are work and robbery, one's own labor and the forcible appropriation of the labor of others. Robbery! Forcible appropriation! These words convey to us ideas of crime and the penitentiary, since we are the contemporaries of a developed civilization, specifically based on the inviolability of property. And this tang is not lost when we are convinced that land and sea robbery is the primitive relation of life, just as the warrior's trade - which also for a long time is only organized mass robbery - constitutes the most respected of occupations. Both because of this, and also on account of the need of having, in the further development of this study, terse, clear, sharply opposing terms for these very important contrasts, I propose i. the following discussion to call one's own labor and the equivalent exchange of one's own labor for the labor of others, the “economic means" for the satisfaction of needs, while the unrequited appropriation of the labor of others will be called the "political means."

இப்போது, அங்கே மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் இன்னாம்பூரான் என்ற பெயரில் திரு சௌந்தரராஜன் அவர்கள் தொடங்கி வைத்து, இன்னமும் தொடர்ந்து வெளிவரும் விவாத இழை குறித்து நான் சொல்ல வருவதெல்லாம் இது தான். சல்லிவேர்களைத் தொடர்ந்தால் ஆணிவேரைக் கண்டு பிடிக்க முடியும்! கோளாறை சரிசெய்வது என்பது ஆணிவேரை அகற்றுவதில் தான் இருக்கிறது.

நம்முடைய அரசியல் அமைப்பில் கோளாறுகளின் ஆணிவேர் எங்கே இருக்கிறது?


தேர்தல் கமிஷன், நீதித்துறை, தணிக்கைத் துறை எதுவானால் என்ன?

ஒத்து ஊதவில்லை என்றால் நீர்த்துப்போய் விடச் செய்கிற அரசியலை அல்லவா முதலில் களையெடுக்க வேண்டும்?!


நீண்ட நாட்களுக்கு முன்னால் எமெர்ஜென்சி காலத்துக்குக் கொஞ்சம் பிறகு, தினமணி ஆசிரியராக இருந்த திரு ஏ. என். சிவராமன் அவர்கள், கணக்கன் என்ற புனைபெயரில், மிக அருமையான கட்டுரைகளை எழுதிவந்தார். எப்படி  இங்கே இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் வெஸ்ட்மின்ஸ்டர் முறையிலான (winner takes all   அடிப்படையிலான தேர்தல் முறை)  கோளாறுகளின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது, மற்ற ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தித் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாடுகளில் தேர்தல் முறைகள், அதன் சாதகபாதகங்கள் எல்லாவற்றையும் தொடர்ந்து விவரித்து எழுதினார். பின்னர் தினமணிகதிர் வெளியீடாகப் புத்தகமாகவும் வந்தது. எவரிடமாவது அந்தப் புத்தகம், அல்லது அதைப் பெறுவது குறித்த விவரம்  இருந்து எனக்குத் தகவல் சொல்ல முடியுமானால், மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.திரு ஏ. என். சிவராமன்

தேர்தல் முறைகளில் மாற்றங்கள் - இதில் ஆரம்பித்து,  அஸ்திவாரத்தில் இருக்கும் விரிசலை வெள்ளையடித்து மறைக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, புதியதாக, காலத்திற்குத் தகுந்த முறையில் மாற்றங்களைச் செய்வதில் மட்டுமே உண்மையான தீர்வு இருக்கிறது.

அத்தகைய மாற்றங்களுக்குத் தயாராவதற்கும், இன்றைய சமூகச் சூழ்நிலை, ஜனங்களுடைய மனநிலை  மிகப் பெரிய இடையூறாக இருப்பதையும் மறுக்க முடியாது. மாற்றங்கள், நம்மிடமிருந்து தான் ஆரம்பிக்கின்றன.

நான் மாற மாட்டேன், ஆனால் ஊரும் உலகமும் நான் விரும்புகிறபடி மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக, மானாட மயிலாடப் பார்த்துக் கொண்டு கொறட்டை விட வேண்டியதுதான்!
 
3 comments:

 1. Permit me to enter in English, as I do not have Tamil fonts.

  I do share some of your thoughts and am also aware of Oppenheimr's nihilistic stance. I do not wish to enter into a lengthy argument by way of comments here, but would certainly take what all you say on Board.
  Regards,
  Innamburan

  ReplyDelete
 2. கருத்துக்கு நன்றி ஐயா! இங்கே தமிழ்நாட்டில் ஆரிய மாயை மாதிரி ஓபன்ஹீமரின் கருத்தை அப்படியே ஒன்றுமே இல்லாத வெத்துவேட்டு என்று ஒதுக்கி விட முடியாது.

  இங்கே லெனின், ஓபன்ஹீமர் இருவரையும் மேற்கோளாக எடுத்துக் கொண்டது சமீபகாலத்தில் அரசு என்றால் என்ன என்பது பற்றிச் சிந்தித்த இருவர், என்ன சொல்கிறார்கள் என்பதைச் சுருக்கமாகச் சொல்வதற்காகத் தான்.

  லெனின் கொடுத்த விளக்கம், ரஷ்யாவில் பொருந்திய மாதிரி வேறு எந்த நாட்டிலும் பொருந்தவில்லை என்பது வரலாற்றின் நகைமுரண்!

  ஆக அரசு என்பது இன்னும் சரியாக வரையறை செய்யப்படாத ஒரு பொருளாகவும் சொல்லாகவும் தான் இருக்கிறது என்பதைச் சொல்வதற்காக மட்டுமே அலுப்பூட்டக் கூடிய அந்த மேற்கோளை எடுத்துச் சொன்னேன்.

  இங்கே திருக்குறளிலும், அர்த்தசாஸ்திரத்திலும் அரசன், அமைச்சன் இவருடைய கடமை, வகிக்க வேண்டிய பொறுப்பு இவைகளைப் பற்றிச் சொல்லியிருந்தாலுமே கூட, அவைகளை இன்றைய காலத்திற்குத் தகுந்தமாதிரி எடுத்துச் சொல்லவோ, பயன் படுத்தவோ ஆளில்லை!

  அதற்குப் பதிலாகச் சிலை வைத்து அய்யன் பட்டத்தைக் கொடுத்து விடுகிறார்கள்!

  ReplyDelete
 3. ALL INDIAN GOVERNMENT POLICIES ARE TOTALLY FAILURE
  THE MAIN REASON IS POLICIES CREATED BY FOOLS

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!