மதத்தின் பெயரால்...! குற்றமும் தண்டனையும்!




குற்றங்கள் தண்டிக்கப் பட வேண்டியவைதான்!

சந்தேகமே இல்லை! ஒரு சமுதாயமாக வாழும்போது, குற்றங்களைத் தடுப்பதென்பது முழுக்க முழுக்க முடியாமல் போனாலுமே கூட, குறைக்க  உதவும் கருவிகளாகத் தண்டிக்கும் முறை இருக்கிறது. குற்றத்தின் தன்மை, அது சமுதாயத்திற்குச் செய்யும் தீங்கு, கெடுதலுக்குத்  தகுந்த மாதிரி தண்டனை இருந்தால், அது புரிந்துகொள்ளக் கூடியதே. கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்ற ஆப்ரஹாமைட்  மதங்களில் மிருகத் தன்மையோடு கூடிய பழிவாங்கும் முறையையும், குற்றத்திற்கான தண்டனை முறையையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளமுடியாது.

ஆனால், என்றைக்கோ எழுதிவைத்த ஒன்றின் அடிப்படையில், தண்டனைகளைத் தீர்மானிப்பது என்பது, நாகரீகத்தின் முதிர்ச்சியைக் காட்டுவதாக இல்லை,  எப்படி மதப் பிடிமானங்கள்  காட்டுமிராண்டித்தனமாகக் குறுகிப் போய்விடுகிறது என்பதை மட்டுமே காட்டுகிறது. இங்கே சவூதி அரேபியாவில், பதின்மூன்று  வயதுச் சிறுமி ஒருத்திக்குப் பொது இடத்தில் வைத்துத் தொண்ணூறு முறை பிரம்படி!

 பிரம்படி என்றால், நம்மூரில் வாத்திமார்கள் அடிஸ்கேல் வைத்துக் கொண்டோ, அல்லது ஒரு சிறு குச்சியை வைத்துக் கொண்டு கையை நீட்டு என்று சொல்லி அடிப்பது போல அல்ல!

அந்தச் சிறுமி அப்படி என்னதான் குற்றம் செய்துவிட்டாளாம் ?

பள்ளிக் கூடத்திற்கு செல்போனுடன் சென்றுவிட்டாளாம்! ஷரியத் சட்டப் படி அதற்குத் தண்டனை பகிரங்கமாகத் தொண்ணூறு அடி!





மேலே சவுதியில் சமீபத்தில் நடந்தது, இன்றைக்குப் பரபரப்பாகப் பார்க்கப்பட்ட, விமரிசனத்துக்கு உள்ளான செய்தி என்றால் , கீழே ஒரு பதினேழுவயதுப் பெண்ணை, பாகிஸ்தானில் சென்ற ஆண்டு பிரம்படிகொடுத்த அவலம்.






இணையத்தில், எது எங்கே எப்படி நடந்தாலும் தெரிந்துகொள்கிற வசதி வந்த பிறகும் கூட இங்கே தமிழ் வலைப் பதிவுகளில், பர்தா, நற்குடி, பொது புத்தி இப்படி ஏகத்துக்கும் வாக்குவாதம் எதற்காகச் செய்துகொண்டிருக்கிறார்கள்?

அட, என்னதான் சொல்ல வருகிறார்கள்? 


கடைசிச் செய்தி சேர்க்கப்பட்டது இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி ஞாயிற்றுக் கிழமை! 24/01/2010


மதங்களின் பெயரால் தொடரும் முட்டாள்தனங்கள், தாக்குதல்கள், தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன!அராஜகத்தின் உச்சகட்டமாக, வடமேற்கு பாகிஸ்தானில் ஒரு பெண்கள் பள்ளியை தாலிபான் தீவீரவாதிகள் தரைமட்டமாக்கிய செய்தியை படிக்க

காரணம் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கக் கூடாதாம்! இந்த மாதிரிப் பெண்கள் படிக்கும் பள்ளிகள் வட மேற்கு பாகிஸ்தானில் தாக்குதலுக்கு உள்ளாவது இதற்கு முன்னாலும் நிறையத் தடவைநடந்திருக்கிறது?

அப்புறம் இவர்கள்  ஏன் பெண்வயிற்றில் பிறந்தார்களாம்?
ஆண் முல்லாக்கள், மௌல்விகளே பெற்றுப் போட முடியாதது ஏன் என்று கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!
 



 

5 comments:

  1. உண்மையில் மதவாதிகள் தன் அறிவை, அதிகாரத்தை, கடவுளின் பெயரால்

    தங்கள் வசதிக்கு அரத்தம் சொல்வதன் விலை/விளைவு

    ReplyDelete
  2. கொடுமையாய் இருந்தது. இந்த மாதிரி சட்டங்களும் தண்டனைகளும் சர்வதேச அளவில் மாற்றியமைக்கப் பட ஒரு தீர்வு உருவாக வேண்டும்.

    ReplyDelete
  3. அந்த குழந்தையின் அழுகுரல் குலை நடுங்க செய்கிறது!

    ReplyDelete
  4. இந்த மாறி எந்த மதத்திலேயும் சொல்லப்படவில்லை அனால் மதத்தின் பெயரால் இப்படி செய்யும் அந்த மனிதர்களை நிக்கவைத்து நடுமண்டையில் சுடனும்.

    மனிதன்

    ReplyDelete
  5. மதங்கள் ஆரம்ப கட்டத்தில் நல்லதைத் தான் போதிக்கின்றன! அப்புறம் கழுதைக்கு வெள்ளி மூக்கு முளைத்து விடுகிறதே!

    இதைப் பற்றி இரண்டு மூன்று நாட்களாகப் பார்த்தும் கூட, இதைத் தொட்டுப் பதிவு எதுவும் எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன். அனால் இங்கே இணையத்தில் எழுதும் சில நண்பர்கள் முன்வைக்கிற வாதங்களைப் பார்த்த பிறகு, இன்னொரு முகமும் தெரியட்டும் என்று தான் காணொளிகளை இணைத்தது!

    சவுதியில் ஆண்கள் உல்லாசம் தேடி, துபாய்க்கு வருவார்கள்! அது குற்றமில்லையாம்! பெண்களை மிகக் கீழ்த்தரமாக நடத்துகிறவர்கள் எவர், எப்படி என்பதையும் நற்குடியைப் பற்றிப் பேசும் பதிவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!