இது நிச்சயமாக இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை! ஆனால் சொல்ல வேண்டிய விஷயம் பொதுவாக இருக்கிறது, அவ்வளவு தான்!
இந்தக் குரங்குகளைப் பாருங்கள்! சில குரங்குகள் மேலே ஏறிய நிலையில்..........சில கீழே!
கீழ்நிலையில் உள்ளதற்கு, மேலே போன குரங்கின் இடுப்புக்குக் கீழே உள்ள பகுதி ஒன்று தான் தெரியும்!
கீழ் நிலையில் நின்று விடும்போது அல்லது தேங்கிவிடும்போது, நம்பிக்கை ஜெபகோபுரங்கள் கட்டி வியாபாரமாகவும் மோசடியாகவும் உருமாற ஆரம்பிக்கிறது! இல்லை இல்லை என்று மறுத்துப் பேசிக் கொண்டே இருப்பது, பொழுதுபோக்கு நாத்திகமாகி விடுகிறது! அங்கேயும் கூட பகுத்தறிவு என்ற பிராண்டில் வியாபாரமும் விவகாரங்களும் ஆரம்பித்துவிடுகிறது.
கீழேயே தேங்கி நின்றுவிடுவதில் நிகழ்வது இது ஒன்று மட்டும் தான்!
பொது புத்தி, நற்குடி, இப்படி வார்த்தைகள் விவரமில்லாத விவகாரங்களாகவும், ஒரு நிலையில் சகிக்க முடியாத விகாரங்களாகவும் வளர்ந்து கொண்டே போவதைத் தவிர இவற்றால் என்ன சாதிக்க முடிந்தது? என்ன சாதித்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள்?
நாத்திகனாக இருப்பதோ, கடவுளை மறுப்பதோ தவறென்று நான் சொல்லவரவில்லை! ஆத்திகனாக இருப்பதும், கடவுள் இருப்பதை ஏற்றுக் கொள்வதும் சரி என்று கூட சொல்லவரவில்லை! இந்த இரண்டு நேரெதிரான நிலைகள், தனி நபரைப் பொறுத்தது, அவரவர்க்கு வேண்டிய அனுபவத்திற்காக, அடுத்த கட்டத்திற்கு முன்னேறிப் போவதற்காக இருக்கும் படிநிலைகள்!
இரண்டு கரைகளுக்கு நடுவில் ஓடுகிற நதியைப் போல, வாழ்க்கை நேரெதிரான இரு தன்மைகளுக்கிடையில் ஓடிக் கொண்டிருப்பது! அந்த இரண்டு முரண்படுவதாக, முரணியல் தான் இயக்கம், அதுதான் வாழ்க்கையைத் தீர்மானிப்பது போலத் தோன்றினாலும், அதையும் கடந்த நிலையில் நதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல, அதன் இலக்கை நோக்கிய பயணமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் முரண்பாடுகளைக் கண்டு எரிச்சல் கொள்ள மாட்டோம்! பயப்பட மாட்டோம்! வாக்குவாதம் செய்துகொண்டு தேங்கி நிற்க மாட்டோம்!
இதுவோ அதுவோ, எதுவாகினும் கடந்து போக வேண்டியதே! புரிந்துகொள்கிற தன்மை அங்கே வரும்போது, ஒரு புதிய பார்வை கிடைப்பதும் தெரிய வரும்!
//இந்த இரண்டு நேரெதிரான நிலைகள், தனி நபரைப் பொறுத்தது, அவரவர்க்கு வேண்டிய அனுபவத்திற்காக, அடுத்த கட்டத்திற்கு முன்னேறிப் போவதற்காக இருக்கும் படிநிலைகள்!//
ReplyDelete//அதன் இலக்கை நோக்கிய பயணமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் முரண்பாடுகளைக் கண்டு எரிச்சல் கொள்ள மாட்டோம்! பயப்பட மாட்டோம்! வாக்குவாதம் செய்துகொண்டு தேங்கி நிற்க மாட்டோம்!//
சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். அவர்கள் வழியில் நாம் எதற்கு குறுக்கிடவேண்டும்!!!
வாழ்த்துகள்
மேலே உள்ள குரங்கு ஒன்றைப் பார்த்தது. கீழே உள்ள குரங்கு ஒன்றைப் பார்த்தது.
ReplyDeleteஆக ஒன்றும் ஒன்றும் சேர்ந்த பார்வைதான் முழுப்பார்வை.
இரு குரங்குகளும் தனித்தனியே பார்த்தவை அரைப்பார்வைதான்.
இல்லையா?
அதுபோல வாழ்க்கையும் இனிப்பும் கரிப்பும் கலந்தவைதான்.
இனிப்பத்தான் எடுப்பேன். சரி. அப்படியானால், கரிப்பு காணாமல் போய்விடுமா? அஃது அங்கேதான் இருக்கும். அதையும் ஒரு சிலர் எடுக்கத்தான் செய்வர்.
அவர்களைப்பார்த்து இவர்கள் புகைச்சல் அடைவது முட்டாத்தனம்.
இனிப்பும் கரிப்பும்! இந்த இரண்டு மட்டுமே இல்லை என்பது தான் அடிப்படையான விஷயம்!
ReplyDeleteமனிதனுடைய படைப்பு ஒருவிதமான தர்க்க நிலையில் மட்டுமே விஷயங்களைப் புரிந்துகொள்கிறமாதிரி இருக்கிறது. உங்களுடைய நாக்கு எப்படி சுவையை அறிகிறது என்பதைப் புரிந்துகொண்டாலே, நேரெதிரான சுவையை வைத்து மட்டுமே ஒரு குறிப்பிட்ட சுவையை அறிய முடிகிறது என்பதைத் தெரிந்துகொண்டாலே, இங்கு எதுவும் தவிர்க்கப் படவேண்டியதோ, வெறுக்கப் படவேண்டியதோ இல்லை என்பதும் புரியும்.
ஒன்று மற்றதன் நீட்சியாக இருப்பதும் புரியும்!
/////இரண்டு கரைகளுக்கு நடுவில் ஓடுகிற நதியைப் போல, வாழ்க்கை நேரெதிரான இரு தன்மைகளுக்கிடையில் ஓடிக் கொண்டிருப்பது! அந்த இரண்டு முரண்படுவதாக, முரணியல் தான் இயக்கம், அதுதான் வாழ்க்கையைத் தீர்மானிப்பது போலத் தோன்றினாலும், அதையும் கடந்த நிலையில் நதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல, அதன் இலக்கை நோக்கிய பயணமாக இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தால் முரண்பாடுகளைக் கண்டு எரிச்சல் கொள்ள மாட்டோம்! பயப்பட மாட்டோம்! வாக்குவாதம் செய்துகொண்டு தேங்கி நிற்க மாட்டோம்!/////
ReplyDeleteசரியாச் சொன்னீங்க சார். வாதங்கள் என்ற பெயரில் வீண் விதண்டாவாதாங்கள் தான் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற இடுகைகளுக்கு நான் மறுமொழி இடுவதில்லை. அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. ஆத்திகனுக்கு கடவுள் இருப்பதாக நம்பிக்கை, நாத்திகனுக்கு கடவுள் இல்லை என்ற நம்பிக்கை. இருவருக்குமே பொதுவானது நம்பிக்கைதான். அதை மட்டும் புரிந்துகொண்டு விரிசலுக்கு வழிவகுக்கும் வகையில் சொற்போர் நடத்தாமல் இருந்தாலே போதும்.
வாருங்கள் நவாஸுதீன்!
ReplyDeleteமுரண்பட்ட கருத்துக்கள் அல்லது செயல்கள் என்பது, இந்த நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை இரண்டிலுமே மாறி மாறி வந்துகொண்டே இருப்பது தான் சூக்குமம்!
இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பில் கணிதா வாய்ப்பாடு சொல்லித்தர ஆரம்பிக்கிறார்கள். பெருக்கல் என்பது கூட்டலின் சுருக்குவழி, வகுத்தல் என்பது கழித்தலின் சுருக்குவழி. இப்படி வாய்ப்பாடாகப் படித்ததையே, வளர்ந்தபிறகும் படித்துக் கொண்டிருப்போமா அல்லது அடுத்த கட்டத்திற்கு போயிருப்போமா என்பதை யோசித்துப் பார்த்தாலே, ஒவ்வொரு அனுபவமும், கருத்தும், செயலும் ஒரு காரணமாகவே நமக்குக் கொடுக்கப் பட்டிருப்பதும், அதில் பெறவேண்டிய படிப்பினையை, பாடத்தைக் கற்றுக் கொண்டவுடன், சிலேட்டுப் பலகையில் எழுதியதை அழித்து, அடுத்தது எழுத ஆரம்பிக்கிற மாதிரித் தான்!
சிலேட்டுப் பலகையை ஒரு உதாரணத்துக்காக மட்டுமே சொன்னேன்! அந்த இடத்தில் emptying the cup கதையில் வருகிற மாதிரி ஜென் ஞானத்தை வைத்துப் புரிந்துகொள்ள வேண்டியது தான்!
சொல்ல வருவதை பளிச்சுன்னு சொல்லுங்க .. பொதுவா "பகுத்தறிவு " & நாத்திகம் பற்றி பேசுபவர்கள் பொட்டில் அறைந்ததது மாதிரி சில உண்மைகளை சொல்லுவார்கள் . நீங்களும் நீங்கள் நினைப்பதை அப்படி சொல்லுங்கள் . நான் சொல்ல வருவது நீட்டி முழக்கி மனம் புண் படாதவாறு சொல்லும் போது ,சில சமயம் உண்மையின் காரம் குறைந்து விடுகிறது .
ReplyDeleteபொட்டில் அறைந்து, வலிக்கிற மாதிரி, மனம் நோகுமாறு பேசவேண்டாமே என்பது தான் இந்தப் பதிவின் மையக் கருத்தே!
ReplyDeleteஉலகம் தோன்றிய நாளில் இருந்தே எதிரெதிரான கருத்துக்களும், விவாதங்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன! அந்த விவாதங்கள் நம்மை எங்கே இட்டுச் செல்கின்றன என்பதில் கவனம் வேண்டும் இல்லையா?!
\\பொட்டில் அறைந்து, வலிக்கிற மாதிரி, மனம் நோகுமாறு பேசவேண்டாமே என்பது தான் இந்தப் பதிவின் மையக் கருத்தே!\\
ReplyDeleteஉண்மைதான், அப்படி அறைந்து பேசும்போது, பெரும்பாலான சமயங்களில் அந்த விசயம் மறக்கடிக்கப்பட்டு, சொன்ன விதம் பெரிதுபடுத்தி விசயமே திசை திரும்பி விடுகிறது.
ஆகவே இந்த அணுகுமுறையே நல்விளைவை ஏற்படுத்தும்
வாழ்த்துகள்
//பொழுதுபோக்கு நாத்திகமாகி விடுகிறது! //
ReplyDeleteவியாபார ஆத்திகத்திற்கு இது எவ்வளவோ பெட்டர்ன்னு நான் நினைக்கிறேன்!
//இதுவோ அதுவோ, எதுவாகினும் கடந்து போக வேண்டியதே! புரிந்துகொள்கிற தன்மை அங்கே வரும்போது, ஒரு புதிய பார்வை கிடைப்பதும் தெரிய வரும்!//
ReplyDeleteமறுப்பேதும் இல்லை!
கேள்விகள் கேட்பதே அதற்கு தானே!
கடவுள் நேரில் வந்தால் கொன்னுபுடுவேன்னா நான் சொல்லிகிட்டு இருக்கேன்!
இருந்தா தானே வர்றதுக்குன்னு தான் சொல்லிகிட்டு இருக்கேன்!
//இதுவோ அதுவோ, எதுவாகினும் கடந்து போக வேண்டியதே! புரிந்துகொள்கிற தன்மை அங்கே வரும்போது, ஒரு புதிய பார்வை கிடைப்பதும் தெரிய வரும்!//
ReplyDeleteமறுப்பேதும் இல்லை!
கேள்விகள் கேட்பதே அதற்கு தானே!
கடவுள் நேரில் வந்தால் கொன்னுபுடுவேன்னா நான் சொல்லிகிட்டு இருக்கேன்!
இருந்தா தானே வர்றதுக்குன்னு தான் சொல்லிகிட்டு இருக்கேன்!
//
ReplyDeleteசரியாகவே சொல்லி இருக்கிறீர்கள். அவர்கள் வழியில் நாம் எதற்கு குறுக்கிடவேண்டும்!!!//
நிகழ்காலத்தில் அண்ணா!
வீட்டிற்கு திருடன் வந்தால் சிரமம் கொடுக்காமல் நீங்களே எல்லாத்தையும் எடுத்து கொடுத்து விடுங்கள், நாம் ஏன் அவர்கள் விசயத்தில் குறுக்கிட வேண்டும்!
//உலகம் தோன்றிய நாளில் இருந்தே எதிரெதிரான கருத்துக்களும், விவாதங்களும் இருந்துகொண்டுதான் இருக்கின்றன! //
ReplyDeleteஉலகம் தோன்றியதென்றால் உயிரினங்கள் தோன்றியதா!?,
இல்லை உலகம் தோன்றியது தானா!?
மனிதன் பேச கற்று கொள்வதற்கு முன்னால் எங்கிருந்து சார் விவாதம் நடக்கும்!
உலகம் ஏழு நாளில் படைக்கப்பட்டது என்பதை நீங்களும் நம்புகிறீர்களா!?
அட ஆமாம்ல, ஆன்மீகவாதிகளால் பரிணாம வளர்ச்சியை ஏற்றுகொள்ள முடியாதுல்ல!
பரிணாமத்தை நீங்களோ நானோ ஏற்றுக் கொள்வதாலோ அல்லது மறுப்பதாலோ எந்த விளைவும், வாழ் மாதிரிப் பக்க விளைவும் ஏற்படப் போவதில்லை.
ReplyDeleteயூதர்களுடைய நம்பிக்கை, கடவுள் இந்த உலகை ஆறுநாட்களில் படைத்து முடித்து, ஏழாவது நாள் ஓய்வெடுத்துக் கொண்டானாம்! வடிவேலு, வால்பையன், சாரு நிவேதிதா மட்டும் தான் சீரியஸ் காமெடி பண்ண வேண்டுமா என்ன?
காமெடியை நம்பவேண்டும் என்ற அவசியம் இல்லையே!
ஆத்திகம், நாத்திகம் எதுவாகினும் வியாபாரமானால் விவகாரமும் போட்டி, சண்டைகள் வருவதும் இயற்கை தானே!
அப்புறம் சிவாவுக்கு உங்களுடைய உபதேசம் பற்றி:
ReplyDeleteராமநாதபுரம் பக்கம், வழிமறித்துக் கொள்ளையடிப்பவர்கள் ஒரு தொழில் தர்மமாக, பாரம்பரியமாகக் கையாண்ட வழக்கத்தை அறிந்திருக்கிறீர்களா?
கத்தியைக் காட்டிப் பெண்டுகளிடம் காதில் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளைக் கேட்டு மிரட்டும் போது, அவர்களாகவே முன்வந்தது கழற்றிக் கொடுத்தாலும், அவர்களுடைய வீரத்திற்கு, அரிவாள், அல்லது கத்திக்கு மரியாதை இல்லை என்று, காதோடு சேர்த்து அறுத்துத் தண்டட்டியைத் திருடுகிற பேராண்மையை அறிவீர்களா?
க.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம் புதினம் அல்லது குறைந்த பட்சம் ஜெயமோகன் தன வலைப் பக்கங்களில் ஒரு ஆறேழுபகுதிகளாக எழுதிய விமரிசனத்தையாவது படித்துப் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுங்கள்!
அப்புறம் இந்தப் பதிவு, நாத்திகத்தையோ, அல்லது ஆத்திகத்தையோ உயர்த்திப் பிடிப்பதற்காகவோ, அல்லது நியாயப் படுத்தவோ, கண்டிக்கவோ எழுதப்பட்டதில்லை.
ReplyDeleteஒரே விஷயத்தைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு அங்கேயே தேங்கிப் போய்விடுகிற தன்மையை மட்டுமே எடுத்துக் கொண்டு அதையும் கடந்துபோகவேண்டும் என்று சொல்வதற்காக மட்டுமே!
விவாதங்கள் நீண்டுகொண்டே போகும்போது விகாரங்கள் ஆகி, வடுக்களாகத் தங்கிவிடுகின்றன என்பதையும் சேர்த்துச் சொல்வதற்காகத் தான்!