உலகம் உங்கள் கைகளில்! கொஞ்சம் கூடுதல் கவனம்!
கூகிள் சீனாவில் இருந்து வெளியேறத் தயாராகிறது!
இந்த செய்தி கொஞ்சம் பழைய செய்திபோலத் தெரியலாம்!ஆனால், பின்னணியில் நடந்து வரும் விஷயங்கள், நிறையப் புதிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதாக இருக்கிறது. ஏற்கெனெவே, நாம் சீனப் பூச்சாண்டி, சீனப் பெருமிதம் என்ற தலைப்பிலும், தலைமைப் பீடத்துக்கு அருகதை இல்லாதவர்கள் கையில் இந்த நாடு சிக்கியிருக்கும் அவலத்தை, தலைமைப் பண்பு, நேரு, சாஸ்திரி என்ற தலைப்பிலும் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்! சீனாவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை கொஞ்சம் இருப்பதாகக் கூட ஒரு பதிவின் கடைசி வரி இருந்திருக்கிறது.
இந்த செய்தி கொஞ்சம் பழைய செய்திபோலத் தெரியலாம்!ஆனால், பின்னணியில் நடந்து வரும் விஷயங்கள், நிறையப் புதிய விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதாக இருக்கிறது. ஏற்கெனெவே, நாம் சீனப் பூச்சாண்டி, சீனப் பெருமிதம் என்ற தலைப்பிலும், தலைமைப் பீடத்துக்கு அருகதை இல்லாதவர்கள் கையில் இந்த நாடு சிக்கியிருக்கும் அவலத்தை, தலைமைப் பண்பு, நேரு, சாஸ்திரி என்ற தலைப்பிலும் கொஞ்சம் பார்த்திருக்கிறோம்! சீனாவிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை கொஞ்சம் இருப்பதாகக் கூட ஒரு பதிவின் கடைசி வரி இருந்திருக்கிறது.
2008 இல் அமெரிக்க வங்கி, நிதித்துறை பெரும் சரிவைச் சந்தித்ததும், சீட்டுக் கட்டு சரிவது போலத் தொடர்ந்து துபாய் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், மஞ்சள் கடிதாசி கொடுக்காமலேயே நிறையப் பேருக்கு பேதி மாத்திரை கொடுத்ததுமாகப் பொருளாதாரத்தைத் தொட்டும் கொஞ்சம் பேசியிருக்கிறோம்.பேராசைப் பட்டவனும் கெட்டான்! கெட்டவனைத் தொட்டவனும் கெட்டான்! என்ற தொடர் விளையாட்டு, உலகப் பொருளாதாரத்தை அங்குமிங்குமாக அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டு ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம்! இப்படி ஒரு தகவலைச் சொன்ன பொருளாதார அளவீடு ஒன்றைப் படித்தபோது, உண்மையிலேயே ஆச்சரியப் பட்டுப் போனேன்.
சென்ற ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஏழாவது இடத்தில் இருந்த சீனா, விறுவிறுப்பாக முன்னேறி, மூன்றாவது இடத்திற்கு வந்து விட்டது மட்டுமல்ல, நடப்பு ஆண்டிலேயே, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும், இன்னும் பதினேழே ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றெல்லாம், மதிப்பீடுகள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், சீனப் பொருளாதாரம், விரைவிலேயே பன்க்சர் ஆகிவிடக்கூடிய சூழலுமே தயாராக இருக்கிறது.
நெருப்பைக் கக்கும் டிராகன் பயமுறுத்தல், சீனப் பூச்சாண்டி எல்லாம் வெறும் உள உளாக்காட்டிக்குத்தான், சீனத் திரைப்படங்களில் பறந்து பறந்து எதிரிகளைப் பந்தாடுகிற மாதிரி வரும் ஸ்டன்ட் காட்சிகளைப் போலவே, கொஞ்சம் செட் அப் சமாசாரம் தான்! ஓவர் பில்டப், மேக் அப்பைக் கலைத்துக் காட்டுவதாக, கூகிள், எடுத்திருக்கும் முடிவு ஒரு புதிய போக்கின் ஆரம்பமாகத் தொடங்கியிருக்கிறது.
என்ன நடந்தது?
கூகிள் தேடல் சீனாவைப் பொறுத்தவரை சீன அரசு நினைத்து நினைத்து சென்சார் செய்யப் படவேண்டியவை எவை என்பதைப் பொறுத்து மட்டுமே இருக்கவேண்டிய நிபந்தனைக்கு உட்பட்டதாக, பச்சையாகச் சொல்வதானால் பூம் பூம் மாடு மாதிரித் தலையாட்டிக் கொண்டே தான் சீனாவுக்குள் நுழைந்தது. இன்னும் தோலுரித்துச் சொல்ல வேண்டுமானால், சீனாவுக்குள், மனித உரிமை, சுதந்திரம் என்றெல்லாம் எவர் தேடுகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை சீன அரசு அறிந்துகொள்ளத் தோதாகத் திறவு கோள்களைக் கொடுத்ததே கூகிள் தான்! திறவுகோல்கள், கூகிளின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்த்து விடும் அளவுக்கு, கூகிளின் செர்வர்களுக்குள் உளவறியும் நிரலிகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருந்தது. எங்கிருந்து வருகின்றன என்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்த கூகிள், சீன அரசு இதன் பின்னணியில் இருப்பதை உறுதி செய்த பிறகு, சீனாவுக்கென்று பிரத்தியேகமான தணிக்கை செய்து கொடுக்கும் தேடுபொறி வசதியை நிறுத்திக் கொள்வது என்ற முடிவையும், சீனாவில் இருந்து வெளியேறவும் தயாராக இருப்பதாகவும் செய்தியை வெளியிட்டது.
இந்தச் செய்தியை பாருங்கள்!
/Google has “evidence to suggest that a primary goal of the attackers was accessing the Gmail accounts of Chinese human rights activists,” according to a posting by the company’s Chief Legal Officer David Drummond on Jan. 12. He said Google now plans to stop censoring results at its Chinese search engine, a move that may lead to the company shuttering its local Web site and offices, pending talks with the government./
படத்தின் மீது கிளிக்கினால், பெரிதாக, அமெரிக்காவை குடுமியைப் பிடித்து ஆட்டும் கடன் எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்!
அமெரிக்கா உலகத்திலேயே அதிக அளவு கடன்பட்டிருப்பது சீனாவுக்குத் தான்! குடுமி மட்டுமே அல்ல, தலையுமே சேர்ந்து சீனப் பிடியில் மிக இறுக்கமாகச் சிக்கியிருக்கிறது.ரொம்பவும் ஆட முடியாது, ஆட்ட முடியாது!
உலகத்தின் ஜனநாயகக் காவலன் வேஷம் சீனாவில் கிழிந்து தோரணமாகப் பரிதாபமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே மட்டுமல்ல! ஒரு சின்னஞ்சிறிய பாகிஸ்தான், ஒரே நேரத்தில் அமெரிக்காவின் தோழனாகவும், தீவீரவாதக் குழுக்கள் அத்தனைக்கும் காவலனாகவும் பாவலாக் காட்டிக் கொண்டிருப்பது தெரிந்தாலுமே கூட, ஒன்றுமே செய்ய முடியவில்லை! இரண்டு பக்கமும் ஆதாயமடைந்து கொண்டிருப்பது என்னவோ பாகிஸ்தானிய ராணுவமும், குறிப்பாக ஐ எஸ் ஐ எனப் படும் உளவுத்துறையும் தான்!
இணையத்தின் உபயோகம் சீனாவில் வளர்ந்து வரும் வேகம்இன்னொரு காரணம்!
இன்னும் பத்தாண்டுகளில் ஏற்கெனெவே பயன்படுத்திவரும் இதர நாடுகளுக்கு இணையாக இருக்கும். ஆனால், சீன அரசு, ஆரம்பத்தில் இருந்தே, இணையம், இணையப் பயன்பாடுகளைத் தன்னுடைய சௌகரியத்திற்கேற்ற மாதிரி, ஒரு தனித்தீவாக வைத்திருக்கவே விரும்புகிறது சீனா மாதிரி, அமேரிக்கா, இணையத்தைத் தனித்தீவாக வைத்திருக்கவில்லை என்றாலும், இ என்று நீங்கள் ஆரம்பிக்கும் போதே அமெரிக்கக் கண்காணிப்பின் கீழ் வந்துவிடுகிறீர்கள், அதே மாதிரி, மேற்கத்திய நாடு ஒவ்வொன்றுமே இணைய சுதந்திரத்தைப் பற்றிப் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தாலுமே கூடக் கடுமையான கண்காணிப்பின் கீழ் அந்த சுதந்திரத்தை விட்டு வைத்திருக்கின்றன என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மொட்லி ஃபூல் வலைத்தளத்தில், இது குறித்து வெளியான செய்தி இங்கே! மேலே உள்ள படம் கூட அங்கிருந்த குறிப்பிலிருந்து தான் பெறப்பட்டது!
இவ்வளவு பேசிய பிறகு, முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லாமல் விட்டு வைத்தால் எப்படி?
புரியாத எழுத்துவடிவம், நம்பகமில்லாத தளங்கள் எதில் இருந்தும் பிடிஎப் கோப்புக்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டாம்! தரவிறக்கம் செய்தவைகளையும், அண்டி வைரஸ் மென்பொருள் கொண்டு சோதித்துப் பார்த்துக் கொள்வது மிக மிக நல்லது. அடோப் அக்ரோபாட் உபயோகிக்கிறீர்களா, இன்னும் கொஞ்சம் அதிகக் கவனம்! அடோப் தளத்திலேயே, மேலதிக விவரங்களைப் பார்க்கலாம்!
இணையம், இதயங்களை இணைக்கும் பாலம் தான்! எவ்வளவு அருமையான விஷயங்களை, உங்களுடைய உள்ளங்கைகளில் கொண்டு வந்து சேர்க்கிறது! எத்தனை நண்பர்களை உருவாக்கித்தருகிறது! அதே நேரம், காமக் கதை சொல்லிக் காசு பிடுங்குவதில் இருந்து, இந்த மாதிரி ஆபத்தான விளையாட்டுக்கள், விபரீதங்களுமே கூட இணையத்தின் இன்னொரு கோர முகமாக இருக்கிறது!
எச்சரிக்கையாக இருப்பது நம் கைகளில் தான் இருக்கிறது!
GFSO சொன்னமாதிரி இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனியின் மிகக்குறைந்த இன்னும் சொல்லப்போனால் வொர்ஸ்ட் பெர்ஃபாமன்ஸ் கடந்த வருடம்தான். ஜெர்மனின் Economy contracted 5 percent in 2009.
ReplyDelete///இன்னும் பதினேழே ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றெல்லாம், மதிப்பீடுகள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், சீனப் பொருளாதாரம், விரைவிலேயே பன்க்சர் ஆகிவிடக்கூடிய சூழலுமே தயாராக இருக்கிறது.////
ReplyDeleteஏறக்குறைய துபாய் மாதிரி தானோ. ஏற்றுமதியில் தொடர்ச்சியான, வேகமான முன்னேற்றம் இருக்கும்போது இழப்புகளின் சதவிகிதம் குறைவாக இருக்கலாம்.
கூகிள் சீனாவிலிருந்து வெளியேருவது ஒரு சாதாரண நிகழ்வைப்போல் தோற்றமளித்தாலும் நீங்கள் கூறுவது போல் பின்னனி காரணங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் கடுமையாகத்தான் இருக்கும்போல
ReplyDeleteகூகுளின் முடிவுக்குப் பின்னால் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன! கூகிள் மாதிரியே, சீனச் சந்தையைக் கைப்பற்றப் புறப்பட்டுப் போன அமெரிக்கத் தொழில் துறை, இன்னும் மோசமான விளைவுகளை, சரிவைச் சந்தித்திருக்கிறது.
ReplyDeleteவெளியேறவும் தயார் என்று போர் சன்னத்தமா இல்லை வேறு வஹியே இல்லை என்ற நிலையா எதுவென்று தெரியாது, அதை வெளிப்படையாக அறிவித்தது கூகிள் தான்!
இந்த அறிவிப்பே, வரும் காலம் எப்படியிருக்கும் என்பதைத் தீர்மானிக்கும் திருப்புமுனையாகக் கூட இருக்கலாம்!
முதல் பட்ச்சமாக பின்னூட்டப் பெட்டி தனியாக எழுவதன் மூலம் நேரம் மிச்சமாகிறது. எளிதாக இருக்கிறது.
ReplyDeleteஇரண்டாவதாக பாடல் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
பாகிஸ்தான் அமெரிக்கா சீனா கதை உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே கதை ஆகப் போகிறது...
முன்பெல்லாம் pdf இல் ஆபத்து ஏதும் வராது என்று நம்பினார்கள். இப்போது அதில் ஏகப் பட்ட ஆபத்து. தரவிறக்கம் செய்தாலும் இணையத்தில் இருக்கும்போது அதை திறக்காமல் இருப்பது நலம்.
ஆடியோ இணைப்பில் எனது முதல் முயற்சி இது ஸ்ரீராம்! கிடைத்த ஒன்றை அப்படியே பயன்படுத்திக் கொண்டேன்.
ReplyDeleteநான்கு நாட்களாக, என்னுடைய பின்னூட்டப் பெட்டியைத் திறக்க முடியாமல் என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தேன். இப்போதுள்ள முறைக்கு மாற்றிய பிறகு மறுபடி திறந்திருக்கிறது!
உலகம் என்ன திசையில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை சரியாக அனுமானிக்க முடியவில்லை! ஆனால், இவர்களுடைய சரிவு, பக்கத்தில் உள்ளவர்களையும் சும்மா விடாது என்பது தான் இப்போது கவலையே.
பி டி எப் கோப்புக்களை முழுக்க முழுக்கத் தவிர்க்கமுடியாதே! அதனால்,foxitreader தற்காலிகமாகப் பயன்படுத்துவது ஒரு தீர்வு!
ReplyDelete