மண் பயனுற வேண்டும்! அதற்கு மனதில் உறுதி வேண்டும்!


வந்தே மாதரம் என்போம் – எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.  (வந்தே)

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத் தராய்விடு வாரோ? – பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? – ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் – இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? 


குரங்கு கையில் பூமாலை என்பது போல நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றிப் பிறர் மேல் வஞ்சனை சொல்லித் திரிவதையே அரசியலாகக் கொண்ட பேடிகள் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு, நல்லதோர் வீணை செய்தே அதைநலம் கெடப் புழுதியில் எறிவதுண்டோ
எனப் புலம்பித் தவித்திருப்போமோ? இனியேனும் விழிப்புடன் இருப்போமோ?


பாட்டுக்கொரு புலவன் பாரதி! உன் பிறந்த நாள் இன்று! உன்னுடைய கவிதை வரிகளே உண்மையான விடுதலைக்குத் தயார் செய்யும் உன்னதத் துணையுமாகட்டும்! வாழி நீ எம்மான்!

9 comments:

 1. மனதில் உறுதி வேண்டும்., சிறந்ததொரு மனதிற்கு உற்சாகம் ஊட்டக்கூடிய கவிதை..

  பாரதியாரின் பிறந்த நாளை நினைவு கூர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே.

  ReplyDelete
 2. பாரதியைப் படிக்கும் பொழுதே எப்பொழுதும் ஓர் உணர்வு தோன்றுவது தவிர்க்கமுடியாததாகி விட்டது. அவன் பேப்பர் பேனா எடுத்து கவிதை எழுதியதாகத் தோன்றவில்லை.. அவன் பேசிய மொழியே கவிதையாக இருந்திருக்கும் போல்.

  வாழ்க நீ எம்மான்! உன் திருமுகத்தை தரிசித்திடும் போதும் உன்னை நினைத்திடும் போதும், உன்னைப் படித்திடும் போதும் எங்கள் உள்ளத்தில் பொங்கிப் பிரவாகிக்கும் உணர்வுகள் தாம் நீ மூச்சுக்கு மூச்சு சொன்ன சக்தியோ!.. அந்த சக்தி எங்க்ளுக்குத் திருவருள் புரியட்டும்!

  நல்லதொரு பதிவுக்கு மிக்க நன்றி, கிருஷ்ணமூர்த்தி சார்!

  ReplyDelete
 3. பாரதியாரை எத்தனை இடத்தில் நினைவு கூர்ந்திருக்கிறார்கள் என்று இனிதான் பார்க்க வேண்டும்...

  ReplyDelete
 4. பாரதி என்னுடைய இளமைப்பருவத்து ஆதர்சம்! இன்றைக்கும் கூட! விஜய வருஷத்தில் பிறந்ததால், வருஷத்தின் பெயரையும், பாரதி பெயரையும் சேர்த்து, விஜயபாரதி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கிய நாட்களை இன்னமும் மறக்கவில்லை.

  பாரதியிடம் பொங்கியது, அந்தக் காலத்தின் சத்திய ஆவேசம்! வார்த்தைகளைக் கோர்த்துக் கவிதை எழுதாமல், சத்திய வேட்கையே கவிதைகளாய் வந்ததனால் தான் இன்றைக்கும் கூட பாரதியின் ஒவ்வொரு கவிதையைப் படிக்கும்போதும், ஒரு உன்னதமான அனுபவமாக உணர முடிகிறது ஜீவி சார்!

  @ஸ்ரீராம்!
  எத்தனை பேர் எழுதினால் என்ன, எழுதாவிட்டால் என்ன?

  முண்டாசுக் கவிஞனிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது!

  முதலில், ரௌத்திரம் பழகு! சிறுமை கண்டு பொங்குவாய்! இப்படி நிறைய இருக்கிறதே , அதைப் பார்ப்போம்!

  ReplyDelete
 5. வாழிய பாரதி, வாழிய பாரதி, வாழிய வாழியவே!

  ReplyDelete
 6. yaarangey kooppidungal brammavai innorumurai barathikku punarjenmam kodukkatchchollungal barathathayin puthalvargal ottrumaiyagavaalattum

  ReplyDelete
 7. பாரதி புனர்ஜன்மம் எடுத்து வருவது ஒருபக்கம் இருக்கட்டும் திரு ஜா ஃபர்!

  மேரி ஷெல்லி எழுதிய ஃபிரான்கேன்ஸ்டீன் கதையைப் படித்திருக்கிறீர்களா?
  அதுமாதிரி. நம்மால் கட்டுப்படுத்தமுடியாத அரசியல் பிசாசுகளையாவது வளர்த்துவிடாமல் இருக்கலாமே! இதற்கு பிரம்மனும், பாரதியும் எதற்கு?

  நாம் குப்பை கூளங்கள், வெறுப்பு, என்று சேர்த்துக் கொண்டே போவோம்! அதை சுத்தம் செய்ய இறைவன் யாரோ தூதரையோ, வேலைக்காரர்களையோ அனுப்பிக் கொண்டிருக்க வேண்டுமாக்கும்!

  ReplyDelete
 8. வலைபதிவுகளில் எழுதத் தொடங்கிய போது பாரதியை மனதில் வைத்துக் கொண்டு தான் எழுதினேன். ஆனால் கால்வாசி அளவுக்குக்கூட அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. பாரதியைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா என்ன?பாரதியைப் புரிந்து கொள்ள இன்றைக்கு நிறைய விமரிசன எழுத்துக்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!