நாம ஆடுறதும் பாடுறதும் காசுக்கு...காசுக்கு!


நாம பாடுறது ஆடுறதும் காசுக்கு!
செய்தி போடுறதும் கூவுறதும் காசுக்கு! காசுக்கு!

உலகத் தமிழ்நாடு மதுரையில் நடந்தப்போ, தமிழ் வளர்ந்ததோ இல்லையோ
கட்டணக் கழிப்பறைகள் வந்தன! இப்போது செய்திகளும், கட்டணத்தில்!
காசுகொடுத்தாத் தான் செய்தி வரும்! அப்புறம் நாங்க மட்டும் அசோக் நகர்ல வூடு கட்ட வேணாமா?
தேர்தல் வந்தால் ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறீர்கள்! இலவசங்கள் அறிவிக்கிறீர்கள்!
எங்களுக்கும் தான், பணமாகவோ, விளம்பரங்களாகவோ வருமானமும் கொடுங்களேன்!   
ஈநாடு ரொம்ப நல்ல நாடு!


போகிறபோக்கைப் பார்த்தால், ஒவ்வொரு அரசியல்வாதியுமே பத்திரிகைகளுக்குப் பணம் கொடுத்துத் தான், தான் உயிரோடு இருக்கும் செய்தியையே ஜனங்களுக்குத் தெரியப்படுத்தும் நிலை வந்துவிடும் போல இருக்கிறது! பணம்! கொடுத்தால் இல்லாதது கூட இருப்பதாகிவிடும்! கொடுக்கவில்லை என்றால் இருப்பதுமே கூட, முழுப்பூசணிக்காயை பத்துப் பருக்கை சோற்றுக்குள் மறைத்து வைத்துவிடும் சாமர்த்தியம் மீடியாக்களுக்கு இருக்கிறதே! மொத்தத்தில், அரசியல்வாதிகளுக்கும், மீடியாக்களுக்கும் ஜனங்கள் என்றாலே கிள்ளுக் கீரைதான் போல இருக்கிறது,அப்படித்தானே!


பத்திரிகைகள் ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டுப் போனால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டுமா?

சீரழிந்த அரசியலின் , புரையோடிப்போன இன்னொரு பகுதியாகக் கூட  இருக்க முடியும் என்பதை ஆந்திராவிலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், பல பத்திரிகைகள் நிரூபித்திருக்கின்றன!

வாங்கியே பழக்கப்பட்ட அரசியல்வாதிகளுமே கூட வேறு வழி இல்லாமல் கொடுத்தே ஆக வேண்டிய நிலைக்கு வந்தனர்.

படங்களுக்கு நன்றி அவுட்லுக் ஆங்கில வார இதழ். செய்திகளைப் படித்து ரொம்ப அலுத்துப்போய் விட்டபடியால் இப்படி இரவல் படங்களிலேயே செய்திப் பதிவாக!

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?
3 comments:

 1. என்ன போச்சு....இந்த செய்திகளைப் படிக்க மக்களுக்குக் காசு கொடுத்தால்தான் படிப்போம் என்று மக்கள் சொல்லும் நிலை வர வேண்டியதுதான்....காசு கொடுத்து செய்தித் தாள்கள் வாங்குவது போய் காசு வாங்கிக் கொண்டு 'பெரிய மனிதர்கள்' பற்றிய செய்தி படிக்க வேண்டியதுதான்... ஒரு இடத்தில் சேர்ந்த அல்லது சேர்த்த காசுகள் எல்லா இடமும் பரவ ஒரு வழி...!

  தமிழ் 10 இல் வாக்களிக்க எப்போதாவது அந்தப் பக்கத்தை திறந்துவந்தால் உண்டு போலும். ஒரு முறை பார்த்தேன்...இங்கே வாக்களிக்க இடத்தைக் காணோம்...

  ReplyDelete
 2. அண்ணேன் இது பல வருசங்களா நடந்திட்டிருக்கிறது, இப்பதான் வெளில தெரிய ஆரம்பிச்சிருக்குதுபோல. பத்திரிக்கை தொழில் இப்ப லாபநோக்குத்தொழிலா ஆயிடுச்சேணே. நோ எதிக்ஸ்.

  ReplyDelete
 3. இந்தப்பதிவே மூன்று வருடங்களுக்கு முந்தையதுதான்! இந்த மூன்று வருடங்களில் இன்னும் முற்றிப்போயிருக்கிறது.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!