சண்டேன்னா மூணு! கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்!






"அரசு நிர்வாகம் முழுக்க ரசனை கெட்ட முண்டங்களால் நிரம்பி வழிகிறது. கிழபோல்டுகளை ரிடையர் செய்து வீட்டுக்கு அனுப்புங்கப்பா.. பென்ஷன் வாங்கும் வயதில் கிழங்களுக்கு ஆபிசில் என்ன வேலை?" என்று வினா எழுப்பும் தமிழ்ச் செல்வனுக்கு  

"நானும் கண்ணடிக்கிறேன், இந்தியாவிலேயே மிகப்பெரிய முதியோர் இல்லமான பார்லிமெண்டை விட அரசு அலுவலகங்களில் அதிக அளவு முதியோர் இல்லை!" 


என்று பதில் சொல்கிறார்  திரு ராஜா! பண்புடன்  கூகிள் வலைக்குழுமத்தில் ஒரு இழையைப் படித்துக் கொண்டிருந்தபோது நச்சென்று தெறித்த எண்ணச் சிதறல்!

கல்லறைக்குள் போவது வரை இந்திய அரசியல்வாதிகள் ஒய்வு பெறுவதில்லைதான்!

அவர்களாக ஒதுங்கவில்லைஎன்றால்,கட்டாய ஒய்வு கொடுத்துப் பார்க்கிற ஒரு முயற்சியைச் செய்து தான் பார்ப்போமே

என்று எழுதியிருந்த இந்தப்பதிவு நினைவுக்கு வந்தது! நிறையப்பேருக்கு இந்த எண்ணம் இருக்கிறது. நந்திகள் தானாக வழிவிடாது, நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்!
oooOooo


அப்படியே வலையில் உலா வந்துகொண்டிருந்தபோது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று முகப்பில் சொல்லும் முத்தமிழ் மன்றம் விவாதக் களத்தைப் பார்க்க நேரிட்டது. பழையதுதான்! இங்கே ஒரு இழையில் தொலைக் காட்சிகளில் வரும் சீரியல்களை சீரியஸாக ஆராய்ந்து, டாக்டரேட் வாங்கும் அளவுக்கு ஒருத்தர் எழுதிக் கொண்டிருக்கிறார்.

இது இல்லாத தமிழ் சீரியல் உண்டா..?


வெள்ளிக்கிழமை வில்லங்கம்..

பொதுவாகவே ஒவ்வொருநாள் எபிசோட் முடிவிலும் ஒரு சின்ன கிளைமாக்ஸ் இருக்கும். வெள்ளிக்கிழமைன்னா கேட்கவே வேண்டாம்..  

அடுத்த சனி, ஞாயிறு ரெண்டு நாளும் சீரியல் கிடையாது. திங்கட்கிழமை 
வரை மக்கள் இதைப்பத்தியே பேசிட்டு இருக்கணும்ங்கற மூட
நம்பிக்கையிலேயோ
, எதிர்பார்ப்பிலேயோ ஒரு பெரிய கிளைமாக்ஸ் வைப்பாங்க..

முன்னே சொன்னேனே
. 2 கேரக்டர் சந்திக்கிறதுன்னு.. அப்படி பாவ்லா காட்ட ஆரம்பிக்கறதெல்லாம் பெரும்பாலும் இந்த வெள்ளிக்கிழமைகளில் தான் இருக்கும்..!
 

ரெண்டு பேரும் எதிர் எதிரே ஸ்லோ மோஷன்ல வருவாங்க.. பின்னணி இசை தூள் கெளப்பும்..!

ரெண்டுபேர் மூக்கும் முட்டிக்கற மாதிரி வர்றப்ப தொடரும் போட்டுருவாய்ங்க
..

திங்கக் கிழமை புருஷன் புள்ளகுட்டிக்கு சோறுகூட போடாம தாய்க்குலம் சந்திப்பை எதிர்பார்த்து குந்திப் பார்க்கும்
.. அன்னிக்கு காலையில் இதப்பத்தி அக்கம்பக்கத்துல டிஸ்கஷன்கூட நடந்திருக்கும்.

ஆனா என்ன ஆகும்
..?

ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு ஏரோப்ளேன் புகுந்து சந்திக்க விடாம செஞ்சிரும்
..!

இது இப்படி திரும்பிப் போகும்
.. அது அப்படித் திரும்பிப்போகும்..!

அப்படி இல்லேன்னு வையுங்க
..

ஒருத்தரை எவனாவது தடுத்து நிறுத்தி அட்ரசோ
, டைமோ கேட்பான்.. இன்னொரு பார்ட்டி பொறத்தால நழுவிப் போயிரும்..!

இல்லாங்காட்டி
..

ஒருத்தர் பேண்ட்டிலிருந்து எதாவது கீழே விழுந்துரும்
.. அதைக் குனிஞ்சு எடுக்குறப்போ இன்னொருத்தர் மிஸ் ஆயிடுவாரு..!

மெகா சீரியல்கள், அதைப் பற்றி இந்த மாதிரி முனைவர் பட்டம் வாங்கும் அளவிற்கான ஆராய்ச்சிகளை எல்லாம் பார்க்கும் போது, இப்போது சிகரெட், மது விளம்பரங்களுக்கிடையே இது உங்கள் உடல் நலத்திற்குத் தீங்கிழைக்கலாம் என்று சட்டபூர்வமான எச்சரிக்கை சேர்ந்தே வருவதைப் போல, இந்த மெகா சீரியல்கள் டைட்டில் கார்ட் போட்டு அழ ஆரம்பிக்கும் போதே, மெகா சீரியல்கள் பார்ப்பது உங்கள மனநலத்துக்குக் குந்தகம் நிச்சயம் என்று என்று இன்னொரு ஒப்பாரியையும் சேர்த்து விடுகிற காலமும் வந்துவிடும் போலஇருக்கிறது!

அப்படியே தொடர்ந்த தேடலில் அங்கேயே ஆறுமாதங்களுக்கு முன்னால், அங்கேயே ஒரு புதிய (எனக்குத்தான்!) தளத்தைப் பற்றி, திருப்புல்லாணியில் இருந்துகொண்டு பதிவுகள் எழுதிவரும் திரு.ரகுவீர தயாள் எழுதியிருந்த இந்த ஒரு அறிமுகமும் கிடைத்தது.

"நான் தனியாக விளக்கம் தரவேண்டிய அவசியமில்லை. வழக்கம்போல் வலைவீசும்போது கண்ணில் பட்டது. தமிழில் நான் தேட முயற்சி் செய்தபோதெல்லாம் தோல்விதான். நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம். செய்தி கீழே; “

http://www.searchko.in/  என்று தமிழில் தேடும் வசதி கொண்ட ஒரு புதிய வலைத்தளத்தைப் பற்றித் தான் படித்ததைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
திரு.ரகுவீர தயாள் புல்லாணிப்பக்கங்கள் என்று வலைப்பதிவும், நிறைய வலைக்குழுமங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் சொன்னபிறகு  போய்ப் பார்க்காமல் விடுவேனா என்ன?

பீட்டா வடிவம் தான்! ஜாவா ஸ்க்ரிப்டுகள் அங்கங்கே வந்து தேடலைக் கடினமாக்குகின்றன. இதற்கு ஒரே வழி ஜாவா ரன் டைம்  என்விரோன்மென்ட் மென்பொருளை சமீபத்திய பதிப்புக்கு உயர்த்திக்  கொள்வதுதான் என்று தோன்றுகிறது! யாராவது தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்கள் தெளிவு படுத்தினால் மகிழ்வேன்!

திரு, ரகுவீர தயாள் சொல்லியிருப்பது போலத் தமிழில் தேடும் வசதிகளில் இது ஒருநாள் பிரபலமாகலாம் என்று எழுதும்போதே, கிட்டத்தட்ட இதே வடிவமைப்பில் சில தமிழ்த்திரட்டிகளைப் பார்த்த நினைவும் வருகிறது. 


oooOooo


கேட்டேளா அங்கே அதைப்  பாத்தேளா இங்கேன்னு எங்கள் ப்ளாகில் கௌதமன் மற்றும் குழுவினர் பதிவுகள் எழுதிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஞாயிறு வந்தால் ஒன் ப்ளஸ் ஒன் அதான் ரெண்டு! இந்த ட்ரெண்டை  தினமலர் முதலில் ஆரம்பித்து வைத்தது! அப்புறம் இட்லி வடை! சண்டேன்னா ரெண்டுன்னு!  

நம்ம உண்மைத் தமிழன்  இட்லி வடை சட்னி சாம்பார், பொங்கல், தோசை இப்படி ஏகப்பட்ட மெனுவோடு எழுதுகிற மாதிரி வெளிப்படையாக சொல்லாவிட்டாலும்,  இட்லி வடை தலைப்பில் தான்  ரெண்டே தவிர எப்பவுமே ரெண்டுக்கு மேல் தான் அங்கே இருக்கும்! பயப்பட வேண்டாம்! இது அவர் புதிதாக ஆரம்பித்திருக்கிற தளம்!

நான் இங்கே எழுதுவதும் கூட இதைப் பார்த்து அப்படியே அப்பட்டமான காப்பி என்று சொல்ல முடியாது! டீ என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள், இங்கேயும் சண்டேன்னா மூணுன்னு எழுத ஆரம்பித்தாயிற்று! பிறக்கிற புது வருஷத்திலாவது, இப்படி எழுதிக் குவிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்ற யோசனையைக் கூட, புத்தாண்டுத் தீர்மானமாக அறிவித்துவிடலாமா என்று தோன்றுகிறது!

ஓவர் டு கௌதமன் சார்! அவர் இன்றைய பதிவில் பார்த்தீர்களா என்று கேட்டு ஒரு படம் காட்டியிருக்கிறார்! ஞாயிறு வந்தாலே எங்கள் ப்ளாகில் படம் காண்பிக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல! போட்டியாக நாமும் ஒரு படம் காண்பிக்கவில்லைஎன்றால், சரியாக இருக்குமா?






ஒண்ணரை நிமிடம் தான் பாருங்கள்! உங்கள் கண்கள் உங்களை ஏமாற்றினால் என் மீது கோபம் உண்டாகாது என்றே நம்புகிறேன்!


6 comments:

  1. "நானும் கண்ணடிக்கிறேன், இந்தியாவிலேயே மிகப்பெரிய முதியோர் ...."//

    ராஜா கண்ணடிச்சாரா...கண்டிச்சாரா சார்...

    ReplyDelete
  2. அந்த இழையிலேயே இன்னொரு இடத்தில் சொல்லியிருக்கிறாரே! கண்டனங்கள் பின்தொடர்ந்து வந்தால் தப்பித்துக் கொள்வதற்காகக் கண்(டி)ணடிக்கிற மாதிரி!

    :-))

    ReplyDelete
  3. போட்டி ஆப்டி நல்லா இருக்கு

    ReplyDelete
  4. கண்ணடித்து'ப் பார்த்து விட்டு வந்து விட்டேன்...அது மட்டுமல்ல நீ...ண்ட நாட்களுக்குப் பின் உண்மைத் தமிழன் ப்ளாக் போயிட்டு வந்தேன்...

    ReplyDelete
  5. ஆப்டிப் போடுங்க அருவாள!

    ReplyDelete
  6. Cricket Commentary cartoon is a good one !

    அரசியல்வாதி ஆகலாம் என்ற எண்ணம் வர காரணமே அதனால் தான் நீங்கள் வேறு அதை சொல்லி பகிரங்கமாக - அட போங்க கிருஷ் சார்

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!