தமிழில் எழுதவேண்டும், அரட்டை அடிக்கவேண்டும் என்ற ஆவலில் தான் பதிவுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் கணிப்பொறி வல்லுனர்களோ, நிரல் எழுதத் தெரிந்தவர்களோ அல்ல. பிறர் கொடுக்கும் விட்ஜெட்டுக்கள், இன்னும் வேறு விதமான நிரலிகளை, நம்பிக்கையுடன் அப்படியே நம்முடைய பதிவுகளில் சேர்த்துக் கொண்டு விடுகிறோம்!
நம்பிக்கை வைத்துச் சேர்த்துக் கொண்ட எல்லாமே நல்லவை தானா? தான் கெட்டதோடு ஊரையும் சேர்த்துக் கெடுப்பதாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?
இன்று முன்னிரவு நேரத்தில், உண்மைத் தமிழன் எழுதிய இட்லி வடை சட்னி பொங்கல் சாம்பார் பதிவை ரீடரில் படித்து விட்டு, வேறு சில பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். மின்தடை இரண்டு முறை வந்து போன பிறகு, மறுபடி இணையத்தில் மீண்டும் உலவ வந்தபோது, நம்ம வால்ஸ் இரண்டு பின்னூட்டங்களை அனுப்பியிருந்தார். நீளத்தைச் சுருக்குங்கள் என்று அடிக்கடி சொன்னேனே! கேட்கமாட்டேன் என்கிறீர்களே! உண்மைத் தமிழன் பதிவுக்குப் போய்ப் பாருங்கள் என்று சொல்லியிருந்தார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போய்ப் பார்த்த போது கூட ஒன்றும் இல்லையே, இவர் இப்படிச் சொல்கிறாரே என்று உண்மைத்தமிழனுடைய வலைத்தளத்துக்குப் போய்ப் பார்த்தால் கூகிள் எச்சரிக்கை செய்தி- இந்தத் தளம் உங்கள் கணினிக்குத் தீங்கிழைக்கலாம் என்று! அதிலேயே என்ன விவரம் என்று தேடித் பார்த்தபோது, மூன்று தளங்கள் ஆபத்தான நிரலிகளை, உள்ளே திணிக்கிற மாதிரிக் குறிப்பிடப் பட்டிருந்தது.உண்மைத்தமிழன் தனது தளம் ஓபன் ஆகவே மாட்டேன் என்கிறது, விவரம் தெரிந்தவர்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
riosvdotcom மற்றும் feedjitdotcom இந்த இரண்டு தளங்களும் தீங்கிழைக்கக் கூடிய மால்வேர் மற்றும் ஸ்க்ரிப்டுகளைத் திணிப்பதாகத் தகவல் இருந்தது.நம்பிக்கை வைத்துச் சேர்த்துக் கொண்ட எல்லாமே நல்லவை தானா? தான் கெட்டதோடு ஊரையும் சேர்த்துக் கெடுப்பதாக இருக்காது என்பது என்ன நிச்சயம்?
இலவசங்கள் எல்லாமே ஒரு உள்நோக்கத்தோடு தரப்படுபவை தான் என்பதை நடப்பு அரசியலில் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு, பதிவுகளில் பயன்படுத்தத் தரப்படும் நிரல்களிலுமே சில திரிசமன் வேலை செய்வதாகவும் இருக்கக் கூடும் என்பது ஏனோ மறந்து விடுகிறது.
இன்று முன்னிரவு நேரத்தில், உண்மைத் தமிழன் எழுதிய இட்லி வடை சட்னி பொங்கல் சாம்பார் பதிவை ரீடரில் படித்து விட்டு, வேறு சில பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். மின்தடை இரண்டு முறை வந்து போன பிறகு, மறுபடி இணையத்தில் மீண்டும் உலவ வந்தபோது, நம்ம வால்ஸ் இரண்டு பின்னூட்டங்களை அனுப்பியிருந்தார். நீளத்தைச் சுருக்குங்கள் என்று அடிக்கடி சொன்னேனே! கேட்கமாட்டேன் என்கிறீர்களே! உண்மைத் தமிழன் பதிவுக்குப் போய்ப் பாருங்கள் என்று சொல்லியிருந்தார்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் போய்ப் பார்த்த போது கூட ஒன்றும் இல்லையே, இவர் இப்படிச் சொல்கிறாரே என்று உண்மைத்தமிழனுடைய வலைத்தளத்துக்குப் போய்ப் பார்த்தால் கூகிள் எச்சரிக்கை செய்தி- இந்தத் தளம் உங்கள் கணினிக்குத் தீங்கிழைக்கலாம் என்று! அதிலேயே என்ன விவரம் என்று தேடித் பார்த்தபோது, மூன்று தளங்கள் ஆபத்தான நிரலிகளை, உள்ளே திணிக்கிற மாதிரிக் குறிப்பிடப் பட்டிருந்தது.உண்மைத்தமிழன் தனது தளம் ஓபன் ஆகவே மாட்டேன் என்கிறது, விவரம் தெரிந்தவர்கள் ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
தவிர தமிலிஷ்டாட்காம் தளமும், இது மாதிரி மால்வேர் மற்றும் தீங்கிழைக்கும் ஸ்க்ரிப்டுகளைத் தள்ளிவிடும் தளங்களுக்கு இணைப்புத் தருவதாக எச்சரிக்கைச் செய்தியில் இருந்தது.
தமிலிஷ் தளத்திற்குச் சென்றபோதும் கூகிள் எச்சரிக்கைச் செய்தி இருந்தது. சந்தகப் படும் படியான பட்டியலில் தற்போது தமிலிஷ் இல்லை என்று சொன்னதோடு, மேலும் சில விவரங்களைத் தந்திருக்கிறது. உண்மைத் தமிழன் மாதிரி இன்னும் இருபதுபேர் வலைத் தளங்கள் பாதிக்கப் பட்டிருப்பதான தகவல் தான் அது.
What is the current listing status for tamilish.com?
This site is not currently listed as suspicious.
What happened when Google visited this site?
Of the 777 pages we tested on the site over the past 90 days, 0 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2009-11-30, and suspicious content was never found on this site within the past 90 days.
Malicious software includes 36 scripting exploit(s).
Malicious software is hosted on 1 domain(s), including riosvdotcom/.
This site was hosted on 1 network(s) including AS8560 (SCHLUND).
Has this site acted as an intermediary resulting in further distribution of malware?
Over the past 90 days, tamilishdotcom appeared to function as an intermediary for the infection of 20 site(s) including nilaraseeganonlinedotcom/, vettipayaldotcom/, saravanakumarandotcom/.
Has this site hosted malware?
No, this site has not hosted malicious software over the past 90 days.
உங்கள் பதிவுகள் பாதிக்கப் படும் நிலைமையை எதிர்கொள்ள, பதிவுகளை பாக் அப் செய்து கொள்ளுங்கள். அளவுக்கு அதிகமான, தேவையே இல்லாத விட்ஜெட்டுக்களை பயன்படுத்தாதீர்கள். முக்கியமாகப் பதறாதீர்கள்!
பதிவுகள் என்று மட்டும் இல்லை, வாழ்க்கையிலுமே கூட எந்த விதமான சோதனைகள் வந்தாலுமே கூட, விஷயம் தெரிந்தவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி மோசமான விளைவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஜெயிக்கலாம் வாங்க!
நானும் feedjit வைத்து இருக்கிறேன். என்ன செய்ய?
ReplyDeleteபதிவுகள் என்று மட்டும் இல்லை, வாழ்க்கையிலுமே கூட எந்த விதமான சோதனைகள் வந்தாலுமே கூட, விஷயம் தெரிந்தவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி மோசமான விளைவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
சரியான கருத்து
வாழ்த்துகள்
நேற்று நானும் இந்த எச்சரிக்கை செய்திகளைப் பெற்றேன். ப்ரியமுடன் வசந்த், தியாவின் பேனா, உண்மைத் தமிழன், பேனா மூடி........., இன்னும் பல தளங்கள் இந்த எச்சரிக்கை செய்தி வந்ததும் மூடி விட்டேன். மேலும் உள்ளே சென்று ஆராய்ச்சி செய்து தகவல் தந்தமைக்கு நன்றி.
ReplyDeletefeedjit வைத்திருக்கிற அத்தனை பதிவுகளுமே பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை சிவா. விவரம் தெரிந்து சொல்லக் கூடிய நண்பர்களிடம் இது பற்றித் தகவல் கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteநேற்று நானும் சில தளங்களுக்கு செல்லும்போது இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தேன். பகிர்விற்கு நன்றி ஐயா (தல). :-)
ReplyDeleteஎல்லாம் சரியாயிருச்சுன்னு பார்த்தா இப்ப பேக்அப் எடுக்க முடியல, எர்ரர் காட்டுது!
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
எச்சரிக்கைக்கு நன்றி.
ReplyDeleteவால்ஸ்!
ReplyDeleteபேக்அப் எடுப்பதை விட வடிவேலு பாணியில் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் காட்டுவதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருந்தாள், அப்படித்தான் எர்ரர் டெர்ரர் என்று காண்பிக்கும்!
அது சரி! தமிழ் வலைப்பதிவுகளில் ஏன் இப்படி அநியாயத்துக்கு வடிவேலு காமெடியை மட்டுமே தங்கள் ஆதர்சமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
கைப்புள்ள காலிங்..இன்னுமா என்னைய இந்த உலகம் நம்புது....நெசமாவே நல்லவன்னு சொல்லிட்டாங்க, அப்புறம் இந்த அவ்....வ்வ்வவ்வ்வ்!
அவ்வ்வ்வ்வவ்வ்வ்!
அது ஒண்ணுமில்லே..இங்கேயும் தொத்திக்கிச்சு!
சீனக்காரங்க எதுவும் கமெண்டு போட்டாங்களா ? அது ஒரு பாஸிப்பிளிட்டி...
ReplyDeleteஅப்படி கமெண்டு வந்தால் விளையாட்டுக்கு கூட பப்ளிஷ் செய்யவேண்டாம்...
ReplyDeleteஉங்கள் வலைப்பூ பாதிக்கப்பட்டிருக்கிறதா என கூகிளிடமிருந்த்து தகவல்களை பெற கீழே உள்ள முகவரியை பயன்படுத்துங்கள்.
ReplyDeletehttp://www.google.com/safebrowsing/diagnostic?site=www.honeytamilonline.co.cc
மேலே உள்ள முகவரியில் என்பதை நீக்கி விட்டு உங்கள் வலைப்பூ முகவரியை இட்டு பண்ணவும்.
எச்சரிக்கைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி
ReplyDeleteஉதவித் தகவலுக்குமிகவும் நன்றி திரு.கார்த்திக்!
ReplyDeleteபதிவர் உண்மைத்தமிழன் தன்னுடைய பதிவுகளை மீட்க முடியாமல் விவரம் தெரிந்தவர் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார். நிலாரசிகனுடைய பதிவுமே கூட இந்த மாதிரி திரிசமன் வேலை செய்கிற ஸ்க்ரிப்டுகளால் பாதிக்கப் பட்டு, மீண்டிருக்கிறார். கூகிள் உதவியை வேண்டியும் பதில் கிடைக்காமல், வேறு ஒரு தளத்தில் உதவி கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
http://stopbadware.org/home/security
எப்படி தடுப்பது?
1.அநானி கமெண்ட் போடும் வசதியை நிறுத்துங்கள்.
2. ரிஜெக்ட் செய்யும்போது கவனமாக செய்யுங்கள்.பல பின்னூட்டங்கள் இருக்கும்போது தவறுதலாக Publish செய்யப்பட வாய்ப்பிருக்கிறது.
3. Third party விஜ்ஜெட் அல்லது Html Code உபயோகிக்கும்போது கவனமாக இருங்கள்.
4. மாதம் இருமுறை வலைப்பூவை Backup எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
என்ற உதவிக் குறிப்புக்களையும் தந்திருக்கிறார். இந்த இரண்டு குறிப்புக்களில் எது உபயோகமாக இருந்தாலும் சரி, பயன்படுத்திக் கொண்டு மீள வேண்டியதுதான்.
http://www.google.com/safebrowsing/diagnostic?site=உங்கள் வலைபதிவு முகவரி
ReplyDeleteஎன்றிருக்க வேண்டும் என்பதை நண்பர் கார்த்திக் மறுபடி ஒரு பின்னூட்டத்தில் நினைவு படுத்தியிருக்கிறார்.
\\உண்மைத்தமிழனுடைய வலைத்தளத்துக்குப் போய்ப் பார்த்தால் கூகிள் எச்சரிக்கை செய்தி- இந்தத் தளம் உங்கள் கணினிக்குத் தீங்கிழைக்கலாம் என்று! // சற்று முன்புதான் இதே வலைத்தளத்துக்குப் போய்ப் பார்த்துப் பதறிப் பின்வாங்கி, அடுத்ததாக உங்கள் தளத்துக்கு வருகிறேன். ஆச்சரியமாக அதையே குறிப்பிட்டுள்ளீர்கள்.
ReplyDeleteஎன்னுடைய வலைப்பதிவும் காணமல் போய்விட்டது :(
ReplyDeleteஇல்லையே மயூரன்! உங்கள் பதிவுகளில் பலிபீடம்தவிர மற்ற எல்லாமே நன்றாகவே லோட் ஆகின்றன!. பலிபீடம் மட்டும் லோட் ஆவதற்கு அதிக நேரமும், அட்லின்க்ஸ் என்று என்னென்னவோ லோட் ஆவதற்கு நேரமெடுத்துக் கொண்டதாலும் வெளியேறி விட்டேன்.
ReplyDeleteஇத்தனையையும் மீறி, நீங்கள் சொல்வது உண்மையென வைத்துக் கொண்டால் மேலே சில உதவிக் குறிப்புக்கள் நண்பர்கள் தந்திருக்கிறார்கள், முயற்சித்துப்பாருங்கள்!
thanks for your guidence
ReplyDelete@மயூரான் என்ற மாயா
ReplyDeleteதவிர, எந்த வலைத் தளமும் மாயமாக மறைந்து போய் விடவுமில்லை. கூகிள் தன்னுடைய எச்சரிக்கைப் பட்டியலில், இன்னின்ன தளங்கள் இன்னின்ன காரணங்களுக்காக, உங்கள் கணினிக்குத் தீங்கிழைக்கலாம் என்ற குறிப்புடன் உங்களை எச்சரிக்கை செய்கிறது. அதையும் மீறி, குறிப்பிட்ட தளங்களுக்குப் போக எவரையும் தடுப்பதில்லை, விளைவுகள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் சரி என்று நீங்கள் முடிவு செய்தால் கூகிள் தடை செய்வதுமில்லை.
இங்கே சிலபேர் தங்களுடைய பதிவுகளில் திரிசமன் செய்யும் ஸ்க்ரிப்டுகளால், பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற தகவலும், முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி என்ற உதவிக் குறிப்புக்களையுமே பின்னூட்டங்களில் வந்து நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்தால், மற்றவர்களுக்கும் பயன்படுகிற மாதிரி, உதவிக் குறிப்புக்களை தாருங்கள். உங்களுக்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றால், இங்கே நண்பர்கள் கொடுத்திருக்கும் உதவிக் குறிப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இரண்டுமில்லாமல் 'என்னுடையதும் காணாமல் போய்விட்டது' என்று :-(( போட்டுக் கொண்டிருப்பதில் எவருக்கும் பயனில்லை!