Showing posts with label 1984. Show all posts
Showing posts with label 1984. Show all posts

M.P. அரசியல்! காங்கிரஸ் கட்சி ஒழிந்து போகவேண்டும், ஏன்?

கரோனா வைரஸ் தொற்றைக் குறித்து தேவையில்லாத வீண் வதந்திகள், செய்திகளைப் புறக்கணிக்கும்படி நண்பர்களை வேண்டிக்கொள்கிறேன். சுகாதாரத்துறை சொல்லும் யோசனைகளைக் கடைப் பிடித்தாலே நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிடலாம். ஹேண்ட் சானிடைசர் அல்லது லைஃபாய் சோப்பை வைத்துக் கைகளைப் பலமுறை சுத்தம் செய்துகொள்ள வேண்டியது முக்கியம். மத்திய பிரதேச காங்கிரசில் நடக்கும் கூத்து என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விடலாமா?


மத்தியப்பிரதேசத்தில் இன்னொரு கருநாடகமா என்று இரண்டு நாட்களாகக் குழம்பிக் கிடந்த காங்கிரஸ் ஊசலாட்டம் ஒரு பரிதாபமான கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது. மத்தியப்பிரதேச காங்கிரசுக்குப் பொறுப்பாகவும் திறமையாகவும் செயல்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட எல்லாவற்றிலுமிருந்து விலகிக் கொள்வதாக சோனியாவுக்கு கடிதம் அனுப்பிவிட்டார். 


அவருடைய ஆதரவாளர்களான 20 சமஉ க்களும் தங்களுடைய ராஜினாமாவைத் தயாராக வைத்துக் கொண்டிருப்பதாக NDTV பரிதாபமாக நேரலையில் சொல்லிக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் நடந்த மாதிரியே நேற்றிரவு முதலமைச்சர் கமல்நாத் நடத்திய கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுடைய ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டு, அதிருப்தியாளர்களுக்கு இடம் கொடுக்கிற மாதிரி, ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாகவும் பேசப்பட்ட பேரம், சமாதானம் எடுபடவில்லை என்று தெரிகிறது. NDTV ஒரு படி முந்திப்போய்  ஜோதிராதித்ய சிந்தியா இன்றைக்கு பிஜேபியில் சேருகிறார், ராஜ்யசபா சீட்டும் பெறுகிறார்  என்று ஆரம்பத்திலிருந்தே சொல்ல ஆரம்பித்து விட்டது. ஆக, 15 மாதகால கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதில் பிஜேபியைக் குறைசொல்லிப் பயனில்லை.


மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் வெற்றிக்கு முன்புவரை அடக்கியே வாசித்துக் கொண்டிருந்த பழம்பெருச்சாளி கமல்நாத், வெற்றிக்கு உழைத்த ஜோதிராதித்ய சிந்தியாவை ஓரம் கட்டினார். அவர்வசமிருந்த மாநில காங்கிரஸ் தலைமைப் பொறுப்பையும் தன்வசமாக்கிக் கொண்டார் என்பதில் ஆரம்பித்த பிரச்சினை வளர்ந்து "…this is a path that has been drawing itself out over the last year".  "While my aim and purpose remain the same as it has always been from the very beginning, to serve the people of my state and country, I believe am unable to do this anymore within this party," என்று கசப்புடன் தனது ராஜினாமா கடிதத்தில் சொல்கிற அளவுக்குப் போனதில் பிஜேபியின் பங்கென்ன? அதை விட மிகக்கேவலம், தனது ராஜினாமா கடிதத்தை ட்வீட்டரில் வெளிப்படுத்தியதற்காக, காங்கிரஸ் கட்சி அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியிருப்பது தான்!

காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலவீனமே அதற்குத்  தானாகவும் தெரியாது! உண்மை  விசுவாசிகள் சொன்னாலும் ஏறாது! இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்ததுண்டா? சோனியா காங்கிரஸ் தலைவராக வந்த நாட்களிலிருந்தே அவருடைய நோக்கம் முழுக்க முழுக்கப் பணம் பணம் பணம் என்பதாகத்தான் இருந்து வருகிறது என்பது 2004 - 2014 இந்தப் பத்தாண்டுகளில் வெடித்த ஊழல் புகார்களிலேயே தெளிவாகத் தெரிந்தது. கமல்நாத் இந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டார் என்பது மாநில முதல்வரான கொஞ்சநாட்களிலேயே எழுந்த ஊழல் புகார்களில் வெளிப்பட்டதே, நினைவுக்கு வருகிறதா? 

கட்சித்தலைமையின் பணத்தாசை இப்போது யெஸ் பேங்க் விவகாரத்திலும் வெளிப்பட்டிருக்கிறதே, அதை கவனிக்கிறீர்களா? காங்கிரசை முற்றிலும் ஒழித்துத் தலைமுழுக வேண்டியதன் அவசியத்தை இங்கே இந்தப் பக்கங்களிலேயே பலமுறை சொல்லிவருகிறேன்! இன்னும் ஒருமுறை உரக்கச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை, பழம்பெருச்சாளி கமல்நாத் ஏற்படுத்தித் தந்திருக்கிறார். 1984 டில்லியில் சீக்கியர்களைக் கொன்று குவித்த ரத்தக்கறை இன்னும் கமல்நாத் மீது இருப்பதை மறந்துவிட முடியுமா?

மீண்டும் சந்திப்போம்.       

மண்டேன்னா ஒண்ணு! வேறென்ன அரசியல்தான்!

திராவிட அரசியல்  பழையநெனப்புடா பேராண்டி என்று பேசியே கடந்தகாலத்துக்கே போய் விடலாமென்று பார்க்கிறதோ? திமுக பொருளாளர் துரைமுருகன் கருணாநிதியின் கைராசி பற்றி இப்படிப் பேசியிருக்கிறார்!


2004 இல் கருணாநிதி ஐக்கிய முன்னணிக் கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்த ராசியோ என்னவோ, அவசரமாக UPA எம்பிக்கள் ஆதரவுக் கடிதத்தை ஜனாதிபதி மாளிகைக்கு எடுத்துக் கொண்டு ஓடியதும், அம்மணி தியாகசிகரமாகி ஒதுங்கிக்கொள்ள   டம்மிப்பீஸ் மன்மோகன்சிங் பிரதமரானதும் வரலாறு! அதே ராசிதான் இப்போதும் தொடரப் போகிறதோ? 

இசுடாலின் எப்படிப் பேசினார் என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள்!
   
மம்தா பானெர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், ஏன் டெலிவிஷன் காமெரா என்றால் ஓடோடிவரும் கேசரிவாலு உட்பட வடக்கே உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருமே சொல்லாத  நிலையில் இசுடாலின் மட்டும் முந்திக்கொண்டு ராவுல்பாபா தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டிய அவசரம், அவசியம் எங்கிருந்து வந்தது? #விசிக வின் திருமாவளவன் அறிக்கை வழியாக வழிமொழிந்த செய்தி இங்கே  

ஒருவார காலத்துக்கு முன்புதான் சந்திரபாபு நாயுடு கூட்டிய  கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றிய முடிவை, தேர்தலுக்குப்பின் கூடி தீர்மானிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இசுடாலினுக்குத் தெரியாதா?

இப்படி பல ‘டும் டும்’ -கள் தான் ஸ்டாலினின் அவசர அறிவிப்புக்கான காரணமோ என்று ஐயப்படுகிறார் காவிரிமைந்தன். கூட்டத்தைச் சேர்க்கக் காட்டிய சாமர்த்தியத்தை கூட்டணி அமைப்பதிலும்  சீட் பங்கீட்டிலும் காட்டுவார்களா?

Citing sources, an NDTV report stated that TDP’s Chandrababu Naidu who was present when Stalin made his speech, was among the parties that that were not on board with Stalin’s suggestion. The others include Akhilesh Yadav’s Samajwadi Party, Mamata Banerjee,ய Banerjee’s Trinamool Congress, Farooq Abdullah's National Conference, Lalu Yadav's Rashtriya Janata Dal and the CPI(M). என்று பலகட்சிகளும் இசுடாலின் முழங்கி சிலமணிநேரத்திலேயே தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்திருக்கின்றன.
      
கருணாநிதி எட்டிப்பிடித்ததை எல்லாம் இசுடாலினும் எட்டிப்பிடிப்பார் என்று எதிர்பார்ப்பதே அதிகம் தானோ? 
 *******
மத்தியப்பிரதேசத்தின் 18வது முதல்வராக இன்று பதவியேற்றிருக்கிறார் #கமல்நாத்  யார் இவர்?


1984 #சீக்கியர்கள்படுகொலை காங்கிரஸ் குற்றவாளி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து டில்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்திருக்கிறது. கீழ்க்கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து இந்தத் தீர்ப்பு இன்று காலை அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதேபோல #சீக்கியர்கள்படுகொலை யில் சம்பந்தப்பட்ட காங்கிரசின் ம.பி முதலமைச்சர் #கமல்நாத் தண்டிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
     

நெஞ்சில் உரமும்! நேர்மைத் திறமும்!



வெட்கம் கெட்டவர்கள்! சூடு, சுரணை, பொறுப்பு எதுவுமில்லாதவர்கள்!

முதலில்.......... 

மும்பை நகரில் சென்ற வருடம் நடந்த தாக்குதல்களில் மட்டுமேயில்லை, எதிலுமே கூட நம்முடைய அரசியல் வாதிகள் பாடம் கற்றுக் கொள்வதுமில்லை, இவர்களை நம்புவதில் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை ஒவ்வொரு செயலிலுமே நிரூபித்துக் கொண்டிருந்தும் கூட....

இந்த ஊழல்மயமான, பொறுப்பில்லாத அரசியல் வாதிகளுக்கு ஓட்டுப் போட்டு மறுபடி மறுபடி ஏமாந்து கொண்டிருக்கும் வாக்காளப் பெருமக்கள் என்றுதேர்தல் நேரங்களில் மட்டுமே அழைக்கப் படுகிற இளிச்சவாயர்கள்!

மும்பை நகரில்  குடிநீர் விநியோகம் 15 சதவீதம் குறைக்கப்பட்ட அறிவிப்பைக் கண்டு மும்பைகர்கள் பொங்கி எழுந்தார்களாம்!  அதுவும் நிதிஷ் ரானே என்ற காங்கிரஸ் காரர் தலைமையில்! காங்கிரஸ் என்னவோ மற்ற எல்லா இடங்களிலுமே தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட்டமாதிரி! போலீஸ் தடியடி! ஒருவர் உயிரிழந்திருக்கிறார்!


விடுதலை அடைந்து அறுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின்னாலும் கூட, நாட்டின் எந்த ஒரு பகுதியிலுமே கூட, பாதுகாக்கப் பட்ட குடிநீரை வழங்குவதற்கு துப்பில்லை! தடியடி நடத்த மட்டும் தெரிகிறது! 

மாநிலங்களுக்கு இடையில் நீராதாரங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்! சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளவோ, நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றவோ மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தவறிக் கொண்டிருப்பதோடு,  கலவரம்,  பிரச்சினைகள் நீடிப்பதிலேயே கொண்டிருப்பதிலேயே அரசியல்வாதிகள் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் போக்கும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

சென்ற வருடம் தீவீரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர்கள் உயிரிழந்தார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. கலவரம் நடந்தபோது கையாலாகத்தனத்தை வெளிப் படுத்திய R R படேல் தான் மீண்டும் அதே உள்துறையில்! ஏ ஆர் அந்துலே மாதிரி ஊழல் பெருச்சாளிகள், பிரச்சினையைத் திசைதிருப்புகிற மாதிரிப் பேசினபோதும், நடவடிக்கை எடுக்கத் தயங்கின, காங்கிரஸ்கட்சித்தலைமை!

ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தைப் பிரமாதமாக நடத்தி, அணிவகுப்பு மரியாதை, கலர்பலூன்களைப் பறக்கவிடுவது இந்த மாதிரி, ஜிகினா வேலைகளை மட்டும் தான் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியும் என்று தெரிந்த பின்னாலும் கூட, காங்கிரசை நம்புகிறவர்கள்..இவர்களை என்னவென்று சொல்வது!

நிவாரணம், இழப்பீடு தலா மூன்று லட்சம் என்று அறிவித்துமே கூட, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் போய்ச் சேரவில்லை. இது வெறும் ஐந்து கோடி! காயமடைந்தவர்களுக்கு வெறும் ஐம்பதாயிரம் மட்டும் இதையும் சேர்த்தால் எவ்வளவு வந்து விடும்?  ஜனங்களை முட்டாளடித்து மறுபடி வென்றார்கள். ஆனால், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்தில்   துப்பாக்கியோடு நிறையப் பேரைச் சுட்டுக் கொன்ற தீவீரவாதி கசாபைப் பாதுகாக்க மட்டும் அரசு இதுவரை முப்பத்தோரு  கோடி ரூபாய் செலவழித்திருக்கிறதாம்!

A Wednesday, உன்னைப்போல் ஒருவன் திரைப்படங்கள் கேட்ட கேள்வி இந்த நகை முரணைப் பற்றித்தான்!

அடேங்கப்பா! உன்னைப்போல் ஒருவன் படம் வந்தபோது தமிழ் வலைப்பதிவுலகம் என்னமாகக் கொதித்தது! கொந்தளித்தது!

******
இந்தியாவில்,ஒவ்வொரு மூன்று  நிமிடங்களுக்கும்  காச நோயால்  பாதிக்கப்  பட்ட  இருவர் மரணமடைந்து கொண்டிருக்கிறார்கள்.. தினசரி ஐயாயிரம் பேர்களுக்குக் காச நோய்த் தொற்று உண்டாவதாகவும், நாடு முழுவதும் முப்பதெட்டு லட்சம் பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும், உலகத்திலேயே இங்கு தான் மிக அதிகமான நோய்த் தொற்று விகிதமாகவும் இருப்பதாகவும் வரும் செய்திகள் கவலை அளிப்பதாக  இருக்கிறது.


இப்போதெல்லாம் ஜனங்களை ஏமாளியாக்கும் வேலைகள், காப்பீட்டுத் திட்டங்கள் என்ற பெயரிலும் கிடைக்கிறது.

எதை எடுத்தாலும் அதில் சம்பாத்தியம் பண்ணத் தெரிந்த புற்றுநோய்க் கிருமிகள் மாதிரி, பெருகிக் கொண்டிருக்கும் அரசியல்வியாதிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளக் காப்பீட்டுத் திட்டம் ஏதாவது இருக்கிறதா?

******
வில்லங்கம், விவகாரங்களைக் கிளப்புவதில், இடதுசாரிகளுக்கு இணையாக வேறு எவரையும் சொல்லிவிட முடியாது என்பதைத் தோழர் பிருந்தா காரத் மறுபடி பாராளுமன்றத்தில் நிரூபித்திருக்கிறார்! பிரச்சினையை கிளப்பினால் மட்டும் போதும், அதற்குத்  தீர்வு சொல்ல வேண்டும் அல்லது ஒத்துழைப்பையாவது தரவேண்டும் என்ற முனைப்பும் அவசியமில்லை, தேவையுமில்லை என்றே இத்தனை நாள் இருந்ததால் தான், மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசு மாட்டிக் கொண்டு முழிக்கிறது. இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்ட அந்தக் கொடுமையான தருணங்களுக்குப் பழி தீர்க்கிற மாதிரி, மன்மோகன் சிங்குமே கூடக் கொஞ்சம் தைரியமாக, முந்திய ஆட்சிக் காலத்தில் இடது சாரிகள் எவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அமெரிக்காவில் சமீபத்தில் கொட்டித் தீர்த்தார்.

ஆனாலும், வில்லங்கம் வீராசாமிகளாகவே  இருந்துவிடுவது என்ற பழக்கத்தில் இருந்து அவ்வளவு சுலபமாக நடந்துவிடுகிற அரசியல் அதிசயமா என்ன! இந்தத் தடவை இடதுசாரிகளிடம்   மாட்டிக் கொண்டது கூகிள்! கூகிள் விளம்பரங்கள் சிலவற்றைக் காட்டி, ஏன் கூகிள்   இந்தியா நிர்வாகியைக் கைது செய்யவில்லை என்று கேட்டிருக்கிறார்! நிறுத்தி நிதானமாக பள்ளிக் கூட வாத்தியார் மாதிரித் துண்டைப் போர்த்திக் கொண்டு கிளாஸ் எடுக்கிற மாதிரிப் பதில் சொல்கிற பானா சீனா கூட அம்மணி எழுப்பிய கேள்விக்குப் பொறுமை இழந்து கோபப்பட்டதும் இதற்கு முந்தையசெய்தி!

******
எதற்கெடுத்தாலும் வெள்ளிவிழா, பொன் விழா என்று காங்கிரஸ் மாதிரி சொரணை, பொறுப்பு எல்லாவற்றையும் உதிர்த்து விட்டுப்  பேச முடியாத விஷயங்கள்! ஒன்றல்ல, மூன்று துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து இருபத்தைந்தாண்டுகள் ஓடி முடிந்து விட்டன. பிரதமராக இருந்த இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது  முதலாவது!

அடுத்து,  இந்திரா காந்தி படுகொலைக்குப் பழிதீர்க்க, சீக்கியர்களை விரட்டி விரட்டிப் படுகொலை செய்த சம்பவமும் தொடர்ந்தது. சற்றேறக்குறைய மூவாயிரம் சீக்கியர்கள் டெல்லி வீதிகளில் வேட்டையாடப்பட்டார்கள். முன்னின்று நடத்திய டைட்லர், சஜ்ஜன் குமார் இருவருக்கும் மந்திரிப் பதவிகள் தொடர்ந்தன. அடுத்துப் பதவியேற்ற ராஜீவ் காந்தி, "ஒரு பெரிய மரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்" என்று இந்தப் படுகொலைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு பேசியதை, சீக்கிய சமூகம், குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் சீக்கியக் குழுக்கள் இன்னமும் மறக்கவிடாமல் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். வெள்ளைக்காரனின் கொடுமையாகச் சித்தரிக்கப்படும் ஜாலியன்வாலாபாக் படுகொலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சில நூறுகள் தான்!

இதே டிசம்பர் மூன்றாம் தேதி யூனியன் கார்பைடு நிறுவனத்தின் போபால் தொழிற்சாலையில் விஷவாயு கசிந்து ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்தும், இன்னும் பல துயரங்களுக்கு ஆளான துயரமும் நடந்து முடிந்த இருபத்தைந்து ஆண்டு நிறைவாகி இருக்கிறது. ஆண்டுகள் தான் ஓடி நிறைந்தனவே தவிர, இவற்றில் இருந்து என்ன பாடம் கற்றுக் கொண்டோம் என்பது பெரும் குறையாகவேஇருக்கிறது.

நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகியும் கூட, முறையான நிவாரணம், உறுதியான சட்ட நடவடிக்கைகள், எதுவுமில்லாமல், போபால் விஷவாயு சம்பவத்தால் மூவாயிரம் பேர்கள் மரணமடைந்தார்கள். இருபதாயிரம் பேருக்குமேல், மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டார்கள். பாதரச நஞ்சு கலந்த தொழிற்சாலைப் பகுதி இன்னமும் சுத்தப் படுத்தப் படாமல், பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்கவில்லை. மன்மோகன் சிங் என்னவோ இந்த வருடம், பாதிக்கப் பட்ட மக்களுக்காக கொஞ்சம் அனுதாபமாகப் பேசியிருக்கிறார்.

பேச்சோடு நின்று விடுமா, இல்லை அந்தப் பாவப்பட்ட மக்களுக்கு உருப்படியான உதவிகள் கிடைக்குமா?