ஆரூடம் சொல்வதற்கும் அரசியல் விமரிசனத்திற்கும் என்னசம்பந்தம்? இரண்டுமே புருடா தான் என்பதைத் தாண்டி வேறென்ன இருக்க முடியுமாம், சொல்லுங்கள்! டெல்லி R ராஜகோபாலன் என்றொரு பத்திரிகையாளர், தன்னுடைய ஊகங்கள் கற்பனைகளையே பரபரப்புச் செய்தியாக்கி வருகிறமாதிரி இருப்பதில் என் மனதில் எழுந்த கேள்வியும் நானே பதிலும் நானே! என்பதாக இன்றைய அரசியலைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?
பிபிசி தமிழுக்கு ரொம்பக் கவலை! இந்தக் கழிசடை ஊடகத்துக்கு என்ன பதில் சொல்லலாம்? சொல்லுங்கள்!
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று அந்த நாட்களில் டாக்டர் தமிழிசை முழங்கிக் கொண்டிருந்தது மகஇக மாதிரியான நக்சலைட் குறுங்குழுப் பாடகர் கூட கேலி செய்கிற மாதிரி இருந்தது, அப்புறம் என்ன ஆயிற்று? இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வாய் திறக்குமுன் இதைக் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்.
இப்படி அடித்துச் சொல்லத் தெரிந்தவருக்கு சட்ட சபையில் கொங்கு Iceவரன் ஜெய் ஹிந்த் சர்ச்சையைக் கிளப்பிய போது எதுவுமே சொல்லத் தோன்றவில்லை என்பது என்னவகையிலான பரிதாபம்? சொல்லுங்கள்!
ஊராட்சி ஒன்றிய அரசின் கணக்கப்புள்ள பேசுவதை இன்று மாலை சிறிதுநேரம் கேட்க நேரிட்டதில் மேலே ஜெயக்குமார் ஸ்ரீநிவாசன் சொல்கிற காலகட்டம் எல்லாம் போய் #கஷ்டம் #காலம் ஆகிவிட்டதாகவே தோன்றுவது எனக்குமட்டும் தானா? சொல்லுங்கள்!
மவுன்ட்ரோடு மாவோ நாளிதழில் சுரேந்திரா வரைந்த இன்றைய கார்டூன். ரொம்ப சாமர்த்தியம்தான்! இவர் போன்றவர்களுக்காகவே After the Galwan clash last year, India has turned the Indo-Tibetan border into a fortress with 200,000 troops and warships to flank them என்று இந்தப்பக்கத்தில் விரிவாகவே செய்தி சொல்கிறார்கள். சுரேந்திரா திருந்த என்ன செய்யலாம்? சொல்லுங்கள்!
2006 மே மாதம் இருமுறை அடுத்தடுத்து மாரடைப்பு வந்து பைபாஸ் சர்ஜரி செய்துகொள்ள வேண்டிய சூழல். எங்கே சிகிட்சை எடுத்துக் கொள்ளலாம் என்பதில் நிறையக் குழப்பமும் தயக்கமும் இருந்தது. அன்றைக்கு மதுரை அப்போல்லோ மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவராக இருந்த Dr.. செல்வகுமார் மிகப்பொறுமையாக என்னுடைய சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். அறுவை சிகிச்சையை Dr. ஸ்ரீதர் சிறப்பாகச் செய்தார். 2006 ஜூலையில்தான் பைபாஸ் சர்ஜரி நடந்தது. 2007 ஜூலையில் தான் நான் முதன்முதலாக மருத்துவர் தின வாழ்த்துக்களை மின்னஞ்சலில் அனுப்பினேன் என்பது கொசுறுக் செய்திதான். மருத்துவர், செவிலியர்களுடைய அருமை மிகவும் நெருக்கடியான நேரங்களில்தான் நமக்கே உறைக்கிறது. மருத்துவர் தினத்தில் எனக்கு சிகிட்சை அளித்த மருத்துவர், செவிலியர் என்றில்லாமல் ஒட்டுமொத்த மருத்துவர், செவிலியர், இதர பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
திமுக அதிமுக இரண்டுமே தனது மிகப்பெரிய ஆளுமையை இழந்து இருக்கும் நேரம். அவரவர்கள் கட்டுப்பாடுகள் தளர்ந்து செயலாற்றுகிறார்கள். இதுவும் நல்லாதான் இருக்கா என்று இன்னும் கொஞ்ச காலம் கழித்துதான் சொல்ல முடியும்!
ReplyDeleteஇரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாதே ஸ்ரீராம்! திமுக தன்னை நீதிக்கட்சியின் நீட்சியாக அறிவித்துக் கொள்கிற அளவுக்கு ஒரு சித்தாந்தம் இருப்பதான தோற்றத்தை வைத்திருக்கிறது. அந்த சித்தாந்தத்தை நீர்க்கச்செய்து உருவான கட்சி அதிமுக. கருணாநிதி மற்றும் திமுக எதிர்ப்பு என்பதைத்தாண்டி சித்தாந்தமெல்லாம் இல்லாத ஒரு loosely knit வடிவம். இரண்டுமே பார்த்தீனியம் களைச்செடி பரந்து வளர்ந்து வேறெந்தப் பயிருக்கும் இடம்கொடாமல் வியாபித்திருக்கிறதான் ஒரு மாயத்தோற்றம் இன்றிருப்பது.
Deleteஇதைவிட வலுவாக வெகுஜன ஆதரவுடன் இருந்த காங்கிரசையே வீழ்த்த முடிந்தது. இந்த திராவிடப்புரட்டுகள் எம்மாத்திரம்? அசைக்கவே முடியாது என்பதான மாயையை உடைப்பது முதற்படி. நிச்சயமாக நடக்கும்.
BBC Tamil போன்று நடுநிலை ஊடகத்தைப் பார்க்கமுடியாது. அது கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்தியப் பிரிவு.
ReplyDeleteஅது சரி.. யார் இந்த அல்லக்கை கோவன்? வெட்டிகளெல்லாம் யூடியூப் உலகத்தில்
பிபிசிக்கு ஒரு தனி அஜெண்டா இருப்பது உண்மைதான் நெல்லைத்தமிழன் சார்! ஆனால் கிழக்கிந்தியக்கம்பனி அளவுக்கெல்லாம் வலிமை உள்ளது அல்ல.
Deleteகோவன் வினவு க்ரூப்பைச் சேர்ந்த நக்சலைட் குறுங்குழுவின் பிரசாரப் பாடகர். மகஇக, மக்கள் அதிகாரம் என்று பல்வேறு போர்வைகளில் வருகிறவர். ஜனங்களைக் கிளர்ச்சி செய்யத்தூண்டுவது ஒன்றே இவர்களுடைய வேலை. இதே கோஷ்டிதான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தையும் தூண்டிவிட்டது.
இவர்கள் கோடு போடுவார்கள். திமுக மற்றும் கூட்டாளிகள் அரசியல் செய்து ரோடு போடுவார்கள் என்பது முன்சரித்திரம்.