தன்னையறியத் தனக்கொரு கேடில்லை!

 ஸ்ரீ அரவிந்த அன்னையே! உ ன் திருவடிகளை வணங்குகிறேன்.


[I+pray+to+thee+guide+copy.jpg]
தன்னிடமிருக்கும்போது பெரிதாகத் தோன்றாத அதே தவறு அல்லது பழக்கம், பிறரிடம் பார்க்கும்போது கேலி, கண்டனத்துக்கு உரியதாகி விடுகிற வேடிக்கையைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை இப்படிச் சொல்கிறார்.

"நம்மிடம் ஒரு பலவீனம் இருக்கிறதுஉதாரணமாக கேலிக்குரிய ஒரு பழக்கமோஏதோ ஒன்று தவறாகவோஅல்லது அரைகுறையாகவோ இருப்பதாக வைத்துக் கொள்வோம்அது நம்முடைய சுபாவத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிடுவதால்அது இயல்பானது தான் என்று கருதுகிறோம்அது எந்தவிதத்திலும் நம்மை அதிர்ச்சிக்கோவியப்புக்கோ உள்ளாக்குவதில்லை!
 
அதே கேலிக்குரிய பழக்கம்தவறுஅல்லது அரைகுறையான விஷயம் மற்றவர்களிடத்தில் பார்க்கும்போதுமிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறோம்.

நம்மிடத்திலே அதே குறை இருப்பதைக் கொஞ்சமும் கவனியாமல்அடுத்தவரிடத்தில் அதைப் பார்த்து, "என்னஇவர் இப்படிப்பட்டவரா?" என்கிறோம்!

ஆகநம்மிடம் இருக்கும் அழுக்குடன்அதைக் கவனியாமல் இருக்கிற மடத்தனமும் சேர்ந்து கொள்கிறது.

இதில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறதுயாரோ ஒருவருடைய ஏதோ ஒரு செய்கைபேச்சு உங்களுக்கு முழுவதுமாக ஏற்றுக்கொள்ள முடியாததாகத் தோன்றும்போதுகேலி செய்யத் தோன்றும்போது, "என்னஅவர் அப்படி இருக்கிறாராஅப்படி நடந்து கொண்டாராஅப்படிச் சொன்னாராஅப்படிச் செய்தாரா?" என்று நினைக்கும்போதுஉங்களுக்குள்ளேயே சொல்லிப் பாருங்கள்!

நல்லது!நான் கூட எனக்குத் தெரியாமலேயேஅப்படித் தான் செய்கிறேனோ என்னவோஅவரை விமரிசிப்பதற்கு முன்னால்என்னையே முதலில் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்அதே மாதிரி நானும் வேறெந்த வகையிலும் செய்யாமல் இருக்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்! "

அடுத்தவருடைய நடத்தையைக் கண்டு  "அதிர்ச்சியடையும் ஒவ்வொரு தடவையும்இதே மாதிரி நல்ல விதமாகவும்புத்தியுடனும் இருக்கப் பழகினால்,வாழ்க்கையில் மற்றவர்களுடனான உறவு ஒரு கண்ணாடியில் பிரதிபலிப்பதைப் போல இருப்பதைக் காணமுடியும்நமக்குள் இருக்கும் அழுக்கு,பலவீனங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

பொதுவாகப் பார்க்கப் போனால்அடுத்தவரிடம் நாம் அதிர்ச்சியடைகிற அளவுக்குப் பார்க்கிற குறை,பெரும்பாலும் நாம் சுமந்து கொண்டிருப்பது தான்,என்ன கொஞ்சம் வித்தியாசமாகமறைவாகஅல்லது வேறு விதமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற அளவுக்கு இருப்பது தான்நம்மிடம் இருக்கும் குறை பெரிதாகதீமை இல்லாததாகத் தெரிவதுஅடுத்தவரிடம் பார்க்கும் போது பூதாகாரமாகத் தெரிகிறது!"

1958 ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதிஸ்ரீ அரவிந்த அன்னை, "எண்ணங்களும் சிந்தனை மின்னல்களும்என்ற ஸ்ரீ அரவிந்தருடைய நூலில் இருந்துஒரு சிந்தனையை விளக்கிச் சொன்னதன் ஒரு பகுதி. அன்னை நூல் தொகுப்பு நூற்றாண்டுப்பதிப்பு, தொகுதி 10 பக்கம் 20-21 
 

"ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்"

 


ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர் மோகத்வே நிஸ் சல தத்வம்
நிஸ் சல தத்வே ஜீவன் முக்தி:

ஆனந்த விகடனில் திரு பரணீதரன் அவர்கள் அருணாசல மகிமை தொடரை எழுதி வந்த நேரம்சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் சரித்திரத்தை எழுதி வந்த பகுதியில்ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய இந்த ஸ்லோகத்தை முதன் முதலாகப் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.
ஒன்றை விடுவதற்கோஅல்லது ஒன்றைப் பிடித்துக் கொள்வதற்கோ மனிதனுக்கு ஒரு இடைப்பட்ட சாதனம் தேவையாக இருக்கிறது.

நேரடியாகவே முழு உண்மையைசத்தியத்தை அறிந்து கொள்கிற வகையில் மனிதகுலம் சிருஷ்டிக்கப்படவில்லை

For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self -enlargement.

The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings.

It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the wohle secret of its value. It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business. “

The Future Evolution of Man என்ற நூலில் ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் சில பகுதிகளைமுந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்இந்த விஷயத்தைமுழு மொழிபெயர்ப்பாகவோவிமரிசனமாகவோ இங்கு எழுத முற்படவில்லைஇதைப் படிக்கிற போது எனக்குள் எழுகிற சிந்தனையின் தாக்கமே இந்தப் பதிவுஎன்னோடுஇதை படிக்க முன்வரும் நண்பர்களுக்கும் ஒரு சிறிய அறிமுகம்அவ்வளவு தான்.

ஒரு சிறு குழந்தையைப் போலதட்டுத் தடுமாறிகுளறிதடுக்கி விழுந்துஇப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாகஅதன் படிப்பினையாகபிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலேமனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்.
உண்மையைத் தேடுகிறேன் என்று எல்லோரும் தான் சொல்கிறார்கள்ஆனால் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்களே என்று தோற்றும்.குருடர்கள் கூடியானையைத் தடவியானை இப்படித் தான் இருக்கும் என்று தனக்கு அனுபவமாகப் பட்டது மட்டுமே உண்மை என்கிற கதை தான்ஒவ்வொருவருவர் சொல்வதிலும் ஒரு பகுதிமட்டுமே உண்மைஆனாலும் முழுமையான உண்மை அல்லஅதனால்சொல்லப் பட்ட பகுதி உண்மையில் கூட சந்தேகம் எழத்தான் செய்யும்.

எதை எதையோ தெரிந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்ஆனால், "நான் யார்என்று கேட்டால் தடுமாறுகிறோம். "நான்என்று எண்ணிக் கொண்டிருப்பது எல்லாம் உண்மையான "நான்அல்ல என்பதைகொஞ்சம் தடுமாற்றத்திற்குப் பிறகு நமக்கே புரிய வரும்.

இந்த வலைப் பதிவின் முக்கியமான நோக்கமே "நான் யார்இங்கு என்ன செய்கிறேன்என்னுடைய உண்மையான கடமை எதுஎன்ற தேடல் தான்
 
எதிலும் முழுமையான ஈடுபாடோ முயற்சியோ இல்லாத இவனுக்கும் அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தனகற்றது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத மண்டுவாக இருந்த போதிலும்அனுபவங்கள் இவனை ஒரு திசையிலேயே இழுத்து வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால்இறைவன் எவ்வளவு கருணையோடு இவனது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான் என்பது நெகிழ்ந்து உருக்குகிறது

தாயிற் சிறந்த தயாவான சத்துவன்அவனது தொண்டர்கள் வழியாகவே இறங்கி வந்து இவனையும் ஒரு பொருளாக நயந்து ஏற்றுக் கொண்ட அற்புதம் நிகழ்ந்தது 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே. பரணீதரன் எழுதிய தொடரைப் படித்து விட்டுஏதோ ஒரு உந்துதலில்.சத்குரு சாது பார்த்தசாரதி பின்னாளில் சுவாமி அண்வானந்தா என்று அறியப்பட்ட வைஷ்ணவியின் அருட் குழந்தைக்குத் தன்னுடைய கவலைகளை வெளியிட்டுக் கடிதம் எழுதினான்.
அது தான் இவன் எடுத்து வைத்த முதல் அடி.

அடுத்துவைஷ்ணவிதேவியின் அணுக்கத்தொண்டர் குழாத்தில் முதல்வரான சத்குரு சாது ராம் சுவாமிகளை மதுரையில் நேரடியாகச் சந்தித்து வணங்கும் பெரும்பேறு கிடைத்ததுஇவ்விருவரே இவனுக்கும் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,ஸ்ரீ ரமண மஹரிஷி, [வள்ளிமலைதிருப்புகழ் ஸ்வாமிகள் இவர்களுடனான சம்பந்தத்தை அருளியவர்கள்.
தந்தையின் மரணம்இவனை வேறு ஒரு திசைக்கு இட்டுச் சென்றது.

இடது சாரிச் சிந்தனைகள்நாத்திகம்எதையும் எதிர்மறை ஆகவே பார்க்கிற ஒரு வரட்டுப் பிடிவாதம் இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகள்லெனினுடைய வார்த்தைகளில் சொல்வதானால் "ஓரடி முன்னால்ஈரடி பின்னால்என்று சாண் ஏறி முழம் வழுக்குகிற கதையும் அரங்கேறியது.

ஆனாலும்இந்த சாபமும் ஒரு வரமே என்பது இப்போது திரும்பிப் பார்க்கையில் புரிகிறதுகுரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றாலும்பரிணாமச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முடியாதுகுரங்குச் சேட்டைகள் கொஞ்சம் மீதமிருந்தாலும்மனிதன் குரங்கின் நிலைக்கு ஒருபோதும் கீழிறங்கி விட முடியாது.

Forward, for ever forward!
At the end of the tunnel is the light…
At the end of the fight is the victory!

1948 ஆம் ஆண்டுத் தொடக்கத்தின் வாழ்த்துச் செய்தியாக ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகள்

"முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு
பயணத்தின் முடிவில் வெளிச்சம்
போராட்டங்களின் முடிவில் வெற்றி!"

சாண் ஏறி முழம் சறுக்குகிறது ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதெல்லாம் ஆக்க மாட்டாதவன்தன்னுடைய இயலாமையை மூடி மறைக்கும் வார்த்தைகள் மட்டுமே.
நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும்நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவைஇன்றைய வலிதுயரம்,தோல்வி என்பதெல்லாம்உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

எனது அறியாமையில் எழுகிற ஆசைகளின் படியல்லதெய்வ சங்கல்பப் படியே எல்லாம் நடந்தேறட்டும்தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றுகிற ஒரு கருவியாகஇவனையும் திருத்திப் பணி கொள்வாய் என்பதே ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில்இன்றைக்கு வேண்டிக்கொள்ளும் வரம்.

**2009 ஜனவரியில் எழுதியதன் மீள்பதிவு. இங்கே பதிவுகள் எழுதி என்னஆகப்போகிறது என்ற மனநிலை இன்னமும் நீடிப்பதால் இப்படி ஒரு மீள் பதிவு.    

ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய ஓரு பிரார்த்தனை!




Hidden in an earthly garment that survives,
I am the worldless being vast and free.
-Sri Aurobindo

March 1, 1914

 
“IT is in one’s own self that all the obstacles lie,

IT is in one’s own self that all the difficulties are found,

IT is in one’s own self that there is all the darkness and ignorance.


Were we to travel throughout the earth, were we to go and bury ourselves in some solitude, break with all our habits, lead the most ascetic life, yet if some bond of illusion held back our consciousness far from Thy absolute Consciousness, if some egoistic attachment cut us off from the integral communion with Thy divine Love, we would be no nearer Thee despite all outer circumstances.


Can any circumstances be considered more or less favorable? I doubt it; it is the idea we have about them which enables us to profit much or little by the lessons they give us.

O Lord, I implore Thee! Grant that I may be perfectly conscious and master of all that constitutes this personality, so that I may be delivered from myself and Thou alone mayst live and act through these multiple elements.



To live in Love, by Love, for Love, indissolubly united to Thy highest manifestation....



Always more light, more beauty, more truth!”

-The Mother

“Prayers and Meditations”