கரண் தாப்பர்! இந்த மனிதரை இங்கே பிரதான ஊடகங்கள் வேண்டாமென நிராகரித்திருக்கலாம். ஆனால் மாற்றுக் கருத்தைத் தேடியலைகிற வழக்கமுள்ள எனக்கு இவரை நிராகரிக்க வேண்டுமென்று தோன்றியதே இல்லை! ஏன் என்றால், தன்னுடைய நேர்காணல்களில் ஹோம் ஒர்க் சரியாகச் செய்து, சரியான கேள்விகளைக் கேட்பவர் என்பது தான்! இங்கே தமிழ் சேனல்களில் ஹோம் ஒர்க்கை சரியாக செய்துவிட்டு பேட்டி காண்கிறவர்கள் அனேகமாக இல்லை என்பது ஒரு தொடரும் அவலம்!
நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்து புதிய அரசு அமைந்து ஒரு மாதகாலத்துக்கும் மேலாகியும் கூட இங்கே எல்லா எதிர்க்கட்சிகளும் இன்னமும் அந்தத் தோல்வியில் இருந்து மீண்டெழ முடியவில்லை; குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி, தன் தோல்விக்கான காரணங்களை இன்னமும் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறது. ராகுல் காண்டி தோல்விக்குப் பொறுப்பு ஏற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதேபோல மூத்ததலைவர்கள் / பழம்பெருச்சாளிகளும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். கழுத்தைப் பிடித்துத் வெளியே தள்ளினாலொழிய வெளியேற்ற முடியாத ருசிகண்ட பெருச்சாளிகள் பொறுப்பேற்பார்களா? இங்கே கரண் தாப்பர், ராஜ்யசபா காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவர் ஆனந்த் ஷர்மாவிடம் தொடர்ந்து சில சங்கடமான கேள்விகளைக் கேட்கிறார். ஆனந்த் ஷர்மாவும் எல்லாக்கேள்விகளுக்கும் மழுப்பாமல், சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் சுற்றி வளைத்துப் பதில் சொல்கிறார். நடப்பு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா? கொஞ்சம் இந்த நேர்காணலைக் கவனமாகப் பாருங்கள்!
காங்கிரஸ்கரனுக்கு அரசியலில் நடப்புநிலவரம் புரியாமல் ஒன்றுமில்லை, வேண்டுமென்றே பொறுப்பைத் தட்டிக் கழிக்க நினைக்கிறார்கள். ஒருமுறை தங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டால் ஜனங்கள் தங்களுக்கு காலத்துக்கும் அடிமை என்று நினைக்கிற மிதப்பு, திமிர்தான் புரிந்ததைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிற அடுத்த தவறையும் செய்ய வைக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் கீழே
கர்நாடகாவில் குமாரசாமி மட்டுமல்ல, காங்கிரசின் சித்தராமையாவுமே கூட மோடிக்குத்தானே ஓட்டுப்போட்டீங்க, மோடிகிட்டே கேட்கவேண்டியதுதானே என்று ஜனங்களிடம் எரிந்து விழுவதைக்கூட நியாயப்படுத்தி, ஏதோ ஒரு வேதனையில் சொல்லிவிட்டார்கள் என்று சொல்லவும் ஒரு சுமந்த் சி ராமன் இருக்கிறார், பாருங்கள்!
கூடவே ஒரு உள்ளூர் அக்கப்போரைப் பார்க்காமல் இருந்து விட முடியுமா?
இங்கே கூட காங்கிரஸ்தான் வில்லனாக! கொஞ்சம் வேடிக்கை பாருங்கள்! ப. சிதம்பரம் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். விஜயதாரணி பேசினாங்களே அதுக்கு நடவடிக்கை இல்லை, நான் பேசினதுக்கு சஸ்பென்ஷனா என்று கேட்டிருக்கிறார் கராத்தே. தமிழக காங்கிரசுக்கு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட மட்டுமே தெரியும் என்பதற்குமேல் இவர்களை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை.
மீண்டும் சந்திப்போம்.
எப்படி பெரியார் மண் என்று சொல்கிறார்களோ அதே போல தமிழகம் காமராஜின் மண்ணும் கூடத் தான். பிஜேபியை விட காங்கிரஸ் தமிழகத்திற்கு பெட்டர் சாய்ஸ்.
ReplyDeleteஜீவி சார்... 4%, 2%ஐவிட பெட்டர்தான். ஆனால் இருவருமே நொண்டிகள், அடுத்தவர் முதுகில்தானே சவாரி செய்யணும்?
Deleteஇல்லை, நெல்லை.. திமுகவுக்கு மாற்று காங்கிரஸ் என்று சொன்னேன்.
Deleteஉடனே உடனே பின்னூட்டத்தைத் தொடர்ந்தால் இதைப் புரிகிற மாதிரி சொல்ல முடியும்.
Deleteஜீவி சார்! திமுகவுக்கு மாற்று காங்கிரசோ அல்லது காங்கிரசுக்கு மாற்று திமுகவோ இல்லை. இரண்டுமே ஊழல் கூட்டணி தர்மத்தில் ஐக்கியமாகி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிறது. #கூட்டுக்களவாணிகள் அவ்வளவுதான்!
Deleteகாமராஜரோ பெரியாரோ இது எவருடைய மண்ணும் இல்லை. மண்ணிலிருந்து பிறந்தோமேயன்றி, மன்னைப் படைக்கிற ஆற்றல் எவருக்குமில்லை.
//ங்கே தமிழ் சேனல்களில் ஹோம் ஒர்க்கை சரியாக செய்துவிட்டு// - ரங்கராஜ் பாண்டே அப்படித்தானே கேள்விகள் கேட்பார்?
ReplyDeleteகொஞ்சம் வித்தியாசமாக முயன்றார் என்ற அளவில் ரொம்பச்சரி! ஆனால் தந்தி டிவி அவரைக் கழற்றி விட்டுவிட்டதா இல்லையா?
Delete//ங்கே தமிழ் சேனல்களில் ஹோம் ஒர்க்கை சரியாக செய்துவிட்டு// - ரங்கராஜ் பாண்டே அப்படித்தானே கேள்விகள் கேட்பார்?
ReplyDeleteகாங்கிரஸ் தலைமை, ப.சிதம்பரத்திடம் கோபமாக இருக்கிறது. கராத்தே தியாகராஜன் ப.சி. ஆள். அவர் சொல்லித்தான் இப்படி இரு கட்சிகளுக்கும் உரசல் உண்டாக்குகிறார் என்று மேலிடமே நடவடிக்கை எடுத்திருக்கிறது. (காரணம் பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு திமுகவின் 23 பேர் ரொம்ப முக்கியம்). இதனை ப.சி. மீதான கோபம் என்றுதான் பார்க்கணும்.
ReplyDeleteமம்தாவின் 22 அல்லது திமுகவின் 20+3 சரத் பவாரின் 5 இப்படி எதுவுமே காங்கிரசுக்கு உதவப்போவதில்லை.
Deleteஜனங்களோடு நெருங்கிப்பழகி அவர்களது உணர்வுகளை எதிரொலிக்க காங்கிரசால் நேரு காலத்தில் இருந்தே முடிந்ததில்லை. காங்கிரசுக்கு இப்போதைக்கிருக்கிற ஒரே சாய்ஸ் சோனியா மற்றும் வாரிசுகளை ஒழிந்து போகட்டும் என்று ஒதுக்கி வைத்துவிட்டு சொந்தக்காலில் நிற்பது மட்டும் தான்! ஈரக்களிமண் காலுடன் இருக்கிற காங்கிரஸ்காரன் எவனும் அதற்கு லாயக்கில்லை.
இதுவும் தவறான கணக்கே. இந்தத் தேர்தல் காங்கிரஸூக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. ஆக்கபூர்வமான செயல்பட்டால் அடுத்த வெற்றி நிச்சயம்.
ReplyDeleteஉள்நாட்டு விவகாரங்களில் மோதி கவனம் கொள்ளாமை தான் காங்கிரஸுக்கான வாய்ப்பு.
மேலே உதலில் இருக்கிற வீடியோவில் கரண் தாப்பர் ஆனந்த் ஷர்மா நேர்காணலைக் கொஞ்சம் கவனித்துக் கேளுங்கள் ஜீவி சார்! காங்கிரஸ்காரனுக்கு இந்தத்தேர்தல் எங்கே எப்படி நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது?
Deleteஉள்நாட்டு விவகாரங்களில் மோடி அரசு கவனம் செலுத்தவில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
சார். இதெல்லாம் நீங்களும் நானும் வாதாடித் தெரிந்து கொள்வதில்லை.
Deleteவரப்போகிற வருடங்களில் பிஜேபியின் செயல்பாடுகளை மக்கள் எப்படித் தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதைப் பொருத்து இருக்கிறது.
ஜீவி சார்! நான் தரவுகளை முன்வைத்து மட்டுமே அதன்மீது என் கருத்துக்களைச் சொல்கிறேன். இங்கே கூட என் அனுமானம் என்பதைவிட தோல்விக்கான காரணங்கள் சிலவற்றை மேலே முதல் வீடியோவில் ஆனந்த் ஷர்மா தன்னுடைய கள அனுபவமாக ஒப்புக் கொள்கிறார் பாருங்கள், அதன் மீதுதான் என்னுடைய அபிப்பிராயமாகச் சொல்கிறேன்.
Deleteஇப்போதிருக்கிற சூழ்நிலையை வைத்துச் சொல்வதானால் அடுத்த பத்திருபது வருடங்களுக்கு பிஜேபியை அசைத்துப்பார்ப்பது காங்கிரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும், அதாவது காங்கிரஸ் அடுத்த பத்திருபது வருடங்கள் வரை தாக்குப்பிடிக்கும் என்பது உண்மையானால் மட்டுமே! .
காலம் பதில் சொல்லட்டும்.
ReplyDeleteஉள்நாட்டு விவகாரங்களில் மோதி கவனம் கொள்ளாமை தான் காங்கிரஸுக்கான வாய்ப்பு.
ReplyDelete1. ஒரு பிரதமர் தினமும் அலுவலகம் வந்து 8 முதல் 5 மணி வரை பணியாற்ற வேண்டிய அவசியமில்லை. தற்போதைய தொழில் நுட்ப வசதிகளில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பணியாற்ற முடியும். தான் வேலை செய்வதை விட மற்றவர்களை வேலை செய்ய வைப்பது தான் ஒரு தலைவனுக்குரிய குணாதிசியம். அதை மோடி செய்து கொண்டிருப்பதாக தெரிகின்றது.
2. ஆனால் உள்நாட்டு விவகாரங்களான வேலைவாய்ப்பு, ஜிடிபி ஏற்ற இறக்கும், புதிய கொள்கைகளைப் பற்றி விவாதங்கள், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை இவை எதுவும் பாஜக ஆட்சியில் இன்னமும் வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படவே இல்லை. சூசமாக, பூடகமாக, பட்டும் படாமல், கண்டும் காணாமல் அப்படியே போய்க் கொண்டு இருக்கின்றது. சிங்கம் கடைசி வரைக்கும் சிங்கமாக இருக்க வேண்டுமானால் அதன் இயல்பு உணர்ந்து வாழ வேண்டும். இல்லாவிட்டால் நரிக்கு ஒரு நாள் இரையாக வேண்டியிருக்கும்.
அப்புறம் சுமந்த சி ராமன் போன்றவர்களை எல்லாம் நீங்கள் பெருமையாக பாராட்டுவது எனக்கு வியப்பாக உள்ளது. யாருடன் யாரை ஒப்பிடுவது என்ற வரைமுறையே இல்லையா?
உள்நாட்டு விவகாரங்களில் கவனம் என்பது எந்த அர்த்தத்தில் ஜோதிஜி? வேலைவாய்ப்பு, ஜிடிபி இவைகளில் கவனம் செலுத்துவதென்பதற்கு முதலில் ஒரு திறமையான நிர்வாகக்கட்டமைப்பு வேண்டி இருக்கிறதே! நம்மூர் IAS IPS IRS IFS ஆசாமிகள் அதற்கெல்லாம் சரிப்பட்டு வருவார்கள் என்று நினைக்கிறீர்களா? கேள்வி என்னவோ சிம்பிளாக இருக்கிறமாதிரித்தான், ஆனாலும் பதில் சொல்வதென்றால் நிறைய விஷயங்களைத் தொட்டுச் சொல்ல வேண்டியிருக்கும். இருந்தாலும் சுருக்கமாக ....
Delete1.2014 தேர்தலில் நரேந்திரமோடி எகிற தனிமனிதர் மீது ஜனங்கள் கொண்ட நம்பிக்கை மட்டுமே (பிஜேபி என்கிற கட்சி மீதான நம்பிக்கை என்று சொல்ல முடியாது) ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தது. நிறைய நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் இருந்தன. அவை அத்தனையையும் மோடி பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் ஜனங்களுடைய நம்பிக்கை குறையவே இல்லை. இங்கே ஜீவி சாரும், நீங்களும் சொல்கிற மாதிரி, பெரும்பாலான ஜனங்கள் மோடி உள்நாட்டு விவகாரங்களில் கவனம் செலுத்தவில்லை என்று நினைக்கவில்லை.
2, 2019 தேர்தல்களிலுமே கூட அதே மாதிரியான நம்பிக்கை மோடி அரசுமீது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதில் ராகுல் காண்டி உட்பட வேறு எவரையும் ஜனங்கள் ஒரு பொருட்டாகவோ, மாற்றாகவோ நினைக்கவில்லை என்பது மீண்டும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது நீங்கள் சொல்கிற குறைகளோடு வேறு பலவிஷயங்களையும் எதிர்க்கட்சிகள் ஊது ஊதென்று ஊதிப்பெரிதாக்கியது என்னாயிற்று? #GoBackModi பலூன்கள் அப்படியே பறந்து கொண்டிருக்கின்றனவா?
நாம் ஏதோ பண்டிதர்கள்போல என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஜனங்கள் நினைப்பது வேறாக இருக்கிறது ஜோதிஜி!
அப்புறம், சுமந்த் ராமனை நான் எங்கே பாராட்டினேன்?
Delete