Showing posts with label திமுக காங்கிரஸ் உரசல். Show all posts
Showing posts with label திமுக காங்கிரஸ் உரசல். Show all posts

கரண் தாப்பர்! சுமந்த் ராமன்! திமுக காங்கிரஸ் உரசல்!

கரண் தாப்பர்! இந்த மனிதரை இங்கே பிரதான ஊடகங்கள் வேண்டாமென நிராகரித்திருக்கலாம். ஆனால் மாற்றுக் கருத்தைத் தேடியலைகிற வழக்கமுள்ள எனக்கு இவரை நிராகரிக்க வேண்டுமென்று தோன்றியதே இல்லை! ஏன் என்றால், தன்னுடைய நேர்காணல்களில் ஹோம் ஒர்க் சரியாகச் செய்து, சரியான கேள்விகளைக் கேட்பவர் என்பது தான்! இங்கே தமிழ் சேனல்களில் ஹோம் ஒர்க்கை சரியாக செய்துவிட்டு பேட்டி காண்கிறவர்கள் அனேகமாக இல்லை என்பது ஒரு தொடரும் அவலம்! 


நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்து புதிய அரசு அமைந்து ஒரு மாதகாலத்துக்கும் மேலாகியும் கூட  இங்கே எல்லா எதிர்க்கட்சிகளும் இன்னமும் அந்தத் தோல்வியில் இருந்து மீண்டெழ முடியவில்லை; குறிப்பாகக் காங்கிரஸ் கட்சி, தன் தோல்விக்கான காரணங்களை இன்னமும் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறது. ராகுல் காண்டி தோல்விக்குப் பொறுப்பு ஏற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதேபோல மூத்ததலைவர்கள் / பழம்பெருச்சாளிகளும்  செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.  கழுத்தைப் பிடித்துத் வெளியே தள்ளினாலொழிய வெளியேற்ற முடியாத ருசிகண்ட பெருச்சாளிகள் பொறுப்பேற்பார்களா? இங்கே கரண் தாப்பர், ராஜ்யசபா காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவர் ஆனந்த் ஷர்மாவிடம் தொடர்ந்து சில சங்கடமான கேள்விகளைக் கேட்கிறார். ஆனந்த் ஷர்மாவும் எல்லாக்கேள்விகளுக்கும் மழுப்பாமல், சில குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் சுற்றி வளைத்துப் பதில் சொல்கிறார். நடப்பு அரசியலில் ஆர்வம் இருக்கிறதா? கொஞ்சம் இந்த நேர்காணலைக் கவனமாகப் பாருங்கள்!    

காங்கிரஸ்கரனுக்கு அரசியலில் நடப்புநிலவரம் புரியாமல் ஒன்றுமில்லை, வேண்டுமென்றே பொறுப்பைத் தட்டிக் கழிக்க நினைக்கிறார்கள். ஒருமுறை தங்களுக்கு ஓட்டுப் போட்டு விட்டால் ஜனங்கள் தங்களுக்கு காலத்துக்கும் அடிமை என்று நினைக்கிற மிதப்பு, திமிர்தான் புரிந்ததைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிற அடுத்த தவறையும் செய்ய வைக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் கீழே 

   
கர்நாடகாவில் குமாரசாமி மட்டுமல்ல, காங்கிரசின் சித்தராமையாவுமே கூட மோடிக்குத்தானே ஓட்டுப்போட்டீங்க, மோடிகிட்டே கேட்கவேண்டியதுதானே என்று ஜனங்களிடம் எரிந்து  விழுவதைக்கூட  நியாயப்படுத்தி, ஏதோ ஒரு வேதனையில் சொல்லிவிட்டார்கள் என்று சொல்லவும் ஒரு சுமந்த் சி ராமன் இருக்கிறார், பாருங்கள்!  

கூடவே ஒரு உள்ளூர் அக்கப்போரைப் பார்க்காமல் இருந்து விட முடியுமா?


இங்கே கூட காங்கிரஸ்தான் வில்லனாக!  கொஞ்சம் வேடிக்கை பாருங்கள்! ப. சிதம்பரம் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். விஜயதாரணி பேசினாங்களே அதுக்கு நடவடிக்கை இல்லை, நான் பேசினதுக்கு சஸ்பென்ஷனா என்று கேட்டிருக்கிறார் கராத்தே. தமிழக காங்கிரசுக்கு குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்ட மட்டுமே தெரியும் என்பதற்குமேல் இவர்களை பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை.      

மீண்டும் சந்திப்போம்.