"இன்றைய தேதிக்குத் தமிழில் இருக்கிற ஒரே இலக்கிய பத்திரிகை இந்து தமிழ் திசைதான். ஒரே இலக்கிய எழுத்தாளர் சமஸ்தான்!" அது சிறுபத்திரிகை இல்லையோ? "அதான் இலக்கிய பத்திரிகைனு சொல்லிட்டனே. தனியா வேற சொல்லணுமா. ஒரே வித்தியாசம் நிக்காம தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்குங்கறதுதான்!" இப்படி எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் முகநூலில் சொன்னது கொஞ்சம் கூடப் பிசகில்லை! இந்து நாளிதழ் வெளியிடுகிற செய்தியின் தரம், சுறுசுறுப்புக்கு உதாரணமாக இந்த ஹாட்லீக்ஸ்! செய்தியில் அப்படி ஹாட்டாக ஒன்றுமே இல்லை என்பது ஒருபக்கம்! இமேஜ் பூஸ்டர் ரகம்தானே என்று கேட்டால் இதே விஷயம் ஒன் இந்தியா தளத்தில் சிலதினங்களுக்கு முன்பே வெளியானது என்பதுதான் விஷயம் தமிழ்நாடு அரசியல் விவகாரங்களில் என்னமாதிரிப் பேசுவது, என்ன கருத்தை வலியுறுத்துவது என்பதில் ஊடகங்களே தடுமாறுகிற அளவில்தான் இங்கே அரசியல் நடக்கிறது
உப்பின் ஞானத்தைக் கூட சமந்தா வந்துதான் சொல்ல வேண்டியிருக்கிற ஒரு தேசத்தில் ஜனங்களுக்கும் ஊடகங்களுக்கும் உப்பின் உபயோகத்தைப்பற்றி யார் வகுப்பெடுப்பது?
கொரோனா காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளருக்கு 10 லட்சம் கொடுக்கப் படும் தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நடக்கும் கொடுமைகளில் மாபெரும் கொடுமை இதுதான், கொரொனாவினை விட கொடிய கொடுமை இது தமிழக பத்திரிகையாளர்கள் தனியார் ஊழியர்கள், ஒவ்வொரு மீடியாவும் தனியார் சொத்து , செய்தி ஊடகங்களின் முதலாளிகளின் பணியாளர்கள் அவர்கள்
அரசின் தூதர்ஷன் உள்ளிட்ட பணியாளர் செத்தால் அரசு கொடுக்கலாம், எவ்வளவும் கொடுக்கலாம் அது சரியானது. ஆனால் அரசியல் கட்சிகள் நடத்தும் மீடியாக்களின் அதாவது தனியார் ஊழியருக்கு எதற்கு அவ்வளவு நிதி என்பதுதான் தெரியவில்லை ஒவ்வொரு மீடியாவும் செல்வத்தில் கொழிக்கின்றன, பத்து லட்சம் என்பது அவர்கள் இருமணி நேரத்தில் சம்பாதிக்கும் பணம்.அதை அவர்கள் கொடுக்காமல் மக்கள் பணத்தில் ஏன் கொடுக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை.
உதாரணத்துக்கு பாருங்கள், சன்டிவியின் ஒரு நாள் வருமானம் கிட்டதட்ட 80 லட்சம் ஆனால் இனி சன்டிவி நிருபர் செத்தால் அரசு நிதிவழங்கும்.கலைஞர் டிவி ஒரே வருடத்தில் 200 கோடி சம்பாதித்த கட்சி என்பது ஸ்பெக்ட்ரம் வழக்கில் சொல்லபட்ட வாதம். இனி அந்த டிவிக்காரன் அதாவது ஸ்டாலினின் சொந்த டிவிக்காரன் செத்தால் முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் வழங்குவார்.தன் கம்பெனி காசினை வணங்காமல் அரசு காசை எடுத்து தன் டிவியில் வேலை செய்தவனுக்கு வழங்குவார், எப்படிப் பட்ட அருமையான திட்டம்?
இப்படி ஒரு விசித்திரமான அரசியல் கொள்ளை, திட்டமிட்ட கபட நாடகம் பகிரங்கமாக நடத்தப் படுவதெல்லாம் தமிழகத்தில்தான் சாத்தியம்.
இது பத்திரிகையாளர்கள் மொக்கையாக பந்து வீச செய்யபட்ட மேட்ச் பிக்ஸிங், பகிரங்கமான மேட்ச் பிக்ஸிங் அதாவது அவர் அவுட்டானாலும் சிக்ஸர் என கேமராவில் காட்ட வேண்டும் அதை மக்கள் நம்ப வேண்டும் என்ற ஏற்பாடு