டில்லியில் ஒரு ஷாஹீன்பாக் மாதிரி தமிழகத்திலும் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலும் சாலைகளை மறித்துக் கும்பலாக அராஜகம் செய்வது நேற்றிரவு ஆரம்பித்திருக்கிறது கல்வீச்சு, தடியடி, சிலர் கைது, கைது செய்ததை எதிர்த்து மாநிலத்தில் பலபகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், கைதானவர்கள் விடுதலை என்று வளர்ந்து, வண்ணாரப்பேட்டையில் இன்றும் 2வது நாளாக தர்ணா தொடர்கிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றே புரிந்து கொள்ள விடாமல் காரணமற்ற அச்சத்தை, அரசுக்கு எதிரான போராட்டமாக மாற்ற சில அரசியல் கட்சிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாகவே செய்து வருகின்றன.
வீடியோ 15 நிமிடம்
CAA பிரச்சினை இருந்தால் விவாதிக்கத்
தயார்!:: அமித் ஷா
இங்குள்ள இஸ்லாமியர்களைத் தூண்டிவிட்டு கலவர பூமியாக்க SDPI, PFI, TNTJ முதலான அமைப்புக்கள் முயற்சிசெய்வதும் வெளிப்படையாகவே தெரிகிறது. ஆரோக்கியமான ஒரு உரையாடலுக்குத் தயாராக இல்லாத அவர்களுடைய போக்கு, ஒரு சிவில் சமூகமாக கவலை கொள்ளச் செய்கிறது.
தமிழக அரசும், காவல்துறையும் இந்த விஷயத்தை எப்படி டீல் செய்யப்போகிறார்கள்? வெறும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவா? அராஜகத்துக்கு வித்திடும் நபர்களைக் கண்டறிந்து களையெடுப்பதிலா? இப்போதைக்குப் பிரச்சினை ஓய்ந்தால் போதுமென்றா?
இந்த 37 நிமிட விவாதத்தைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்! இங்கே விவாதங்கள், கருத்து சுதந்திரம், முதலான எல்லாமே ஒருதலைப்பட்சமாகவே நடப்பது பற்றி எப்போதாவது கவலைப்பட்டிருக்கிறோமா? நக்கீரன் கோபால்களுக்கும் ஆளூர் நவாஸ்களுக்கும் கொடுக்கும் கவனத்தில் ஒரு பகுதியாவது, இவர்கள் சொல்வது உண்மைதானா, இன்னொரு தரப்பு என்ன என்று தெரிந்துகொள்வதில் காட்டியிருக்கிறோமா? நாராயணி பாசு புத்தகம் எழுதினால் அது சர்ச்சை ஆக்கப்படுகிறதே எதனால் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? JNU முதலான மத்திய அரசுபல்கலைக்கழகங்கள், இடதுசாரிக் குறுங்குழுக்களின் பிரச்சாரக்களமாகவே இருப்பதை இன்னமும் சகித்துக் கொண்டே இருந்தாகவேண்டுமா?
எழுபது வருடங்களுக்கும் மேலாக இப்படி ஒருதலைப் பட்சமான உரையாடல்களையே கேட்டுப் பழக்கப் பட்டுவிட்டோம், மீட்சி எப்போது என்ற கேள்விகள் எழுவது இயல்பு. விடைகாண முயற்சிப்பதும் கூட இயல்புதான்!
சீரியசாகவே போயிட்டிருந்தா எப்படி? சற்றே நகுக!
அடடே! மதி என்னமோ கற்பனையாகக் கார்டூனில் நேரு மீது அபாண்டமாகப் பழிசுமத்திவிட்டார் என்று பொங்க விரும்பினால் பொங்கிக் கொள்ளுங்கள்! அதற்கு முன்னால் ஒரே ஒரு கேள்வி மட்டும்!
எங்கே போகிறோம்? மீண்டும் சந்திப்போம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மதி கார்ட்டூன் கண்ணில்பட்டது. ரசித்தேன்.
ReplyDeleteமதி இப்போது விளம்பரங்களுக்கு வரைந்து கொடுப்பதில் பிசி போல! இப்போது ஆக்டிவாக களத்தில் அவர் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்!
Deleteநேருவும் குடும்ப வாரிசுகளும் இஸ்லாமிய நீரோட்டத்தில் நீந்தி வந்தவர்கள் என்று சொல்கிறார்களே உண்மையா?
ReplyDeleteமோதிலாலுக்குப் பிந்தைய தலைமுறை தங்களுடைய பெயரில் நேரு என்று காஷ்மீரி பண்டிட் பெயரை வைத்துக்கொண்டதாக சொல்லப்படுவதுண்டு. அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை ஆனால் ஜவஹரின் மனைவி கமலா ஒரு காஷ்மீரி பண்டிட்.
Deleteஅப்பனை வெறுப்பேற்றுவதற்காகவே இந்திரா ஃபெரோஸ் கான் என்கிற இஸ்லாமியரை, காதல்கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதுவும் மைமுனா பேகம் என்று மதம் மாறிப் பெயரையும் மாற்றிக் கொண்டு! ஃபெரோஸ் கானுடைய பாட்டி ஒரு பார்சி gandhe என்று பெயர் முடியும். ஒரிஜினல் காந்தியின் ஒப்புதலோடு ஃபெரோஸ் கான் ஃபெரோஸ் காந்தியாக ஆனார். அதன்படி பார்த்தால் இந்திராவும் வாரிசுகளும் இஸ்லாமியப் பின்னணி உடையவர்களே! ராஜீவ் காண்டிக்குப் பிறகு அது கிறித்தவமாகவும் ஆகிப்போனது தெரியுமில்லையா?
Reminiscences of the Nehru Age by M. O. Mathai ஆர்கைவ் org இல் கிடைக்கிறது. நேருவின் செயலாளராக இருந்தவர் எழுதி 1978 இல் வெளியான புத்தகம் இந்திரா ஆட்சியை 1980 இல் கைப்பற்றியபிறகு சத்தமே இல்லாமல் தடை செய்யப்பட்ட புத்தகம் அமேசான் unlimited இல் கிடைக்கிறது வாசித்துப்பாருங்கள் .
நான் பேஸ்புக்கில் பதிந்த கருத்தை இங்கே சொல்வது சரியாக இருக்கும் என நினைத்து இங்கே பதிகிறேன்
ReplyDeleteதமிழகத்தில் தீடிரென்று இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்திருப்பதற்கு பிண்ணனியில் வெளிநாட்டு சதிகள் ஒன்றுமில்லை உள்நாட்டு அதாவது தமிழக அரசியல் கட்சியின் சதியாகத்தான் இருக்க வேண்டுமென்று கருத்துகிறேன்.இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தில் உள்ள "கறுப்பாடு" மற்றும் அதை தூண்டி அரசியல் லாபம் பெறும் கட்ட்சி யாரென்று அறிந்து அவர்களிடம் இருந்து விலகி இருப்பதுதான் தன் மதத்திற்கும் தமிழகத்திற்கும் நல்லது. டாட்
இப்போது தான் இஸ்லாமிய குடும்பங்களில் இருந்து ஓரளவுக்கு பெண்கள் பள்ளிக்கு வரத் துவங்கி உள்ளனர். ஆனால் தனித்த அடையாளம் என்ற பெயரில் மொத்த நீரோட்டத்தில் இருந்து சிலரின் தூண்டுதல் காரணமாக தள்ளிக் கொண்டே செல்கின்றார்கள். தயவு செய்து நீங்கள் அமெரிக்காவில் நிம்மதியாக இருந்து விடுங்க. இவர்கள் இங்குள்ள இஸ்லாமியர்களை நல்ல விதமாக வாழ வைப்பார்கள் என்ற நம்பிக்கை போய்விட்டது மதுரை தமிழன். இன்னும் சில ஆண்டுகளில் இஸ்லாமிய சமூகம் பெரிய அளவுக்கு பிரச்சனைகளை சந்திக்கப் போகின்றது என்றே நினைக்கின்றேன். மக்களை ஆட்டு மந்தை போல மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். இன்னமும் கல்லெறி கலாச்சாரத்தை அறிமுகம் செய்கின்றார்கள் என்றால் இவர்களின் நோக்கம் என்ன? எதிர்பார்ப்பது என்ன? 72 மணி நேரம் நாங்கள் போராட்டம் செய்ய வேண்டும்? அனுமதி தாருங்கள் என்றால் எங்கேயாவது இது வாய்ப்புள்ளதா? ஏற்கனவே சென்னை முழுக்க தடை என்று அறிவிப்பு வெளியிட்ட சமயத்தில் இப்படி கேட்கிறார்கள் என்றால் இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தானே? நிமிட நேரத்தில் தமிழகம் முழுவதும் சொல்லி வைத்தாற் போல தெருவுக்கு வருகின்றார்கள் என்றால் என்ன அர்த்தம். பாவம் அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் எதிர்காலத்தில் ரொம்பவே கஷ்டப்படப் போகின்றார்கள். வருத்தமாக உள்ளது.
Deleteவாருங்கள் ம.த.!
Deleteஊசி இடம்கொடுக்காமல் நூலை நுழைக்கமுடியாது என்றொரு அனுபவமொழி உண்டே! நீ ங்கள் சொல்கிற யோசனையைக் காதுகொடுத்துக் கேட்க அவர்கள் தயாராக இருக்கிறார்களா ?
ஜோதி ஜி!
Deleteஇங்கே கழகங்கள் கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் தேசம் முழுவதும் காங்கிரஸ் என்று அவர்களை தேசிய அரசியல் மைய நீரோட்டத்துக்கு அழைத்து வருவதற்குப் பதிலாக, நாங்கள் தான் உங்கள் ரட்சகர்கள் என்று ஆரம்பித்த pseudo secularism முதல் காரணம். சூஃபி இஸ்லாம் இங்கே ஒரு இணக்கமான போக்கிற்கு ஆரம்பநாட்களில் உறுதுணையாக இருந்தது. வஹாபியிசம் தலையெடுக்க ஆரம்பித்ததில் ஏற்பட்ட பிணக்கத்தை இந்த ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகள் எதுவும் புரிந்துகொள்ளவில்லை corrective actions எதையும் மேற்கொள்ள விடவில்லை.பெரும்பான்மைக்கெதிராக சிறுபான்மையினரைக் கொம்பு சீவிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் கடைசியில் இழக்கப்போவது அப்பாவிகள் மட்டுமே. .