மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் நாகரிகம்!

டொனால்ட் ட்ரம்ப் என்கிற தனிநபர்,அரசியல்வாதி மீது எனக்கு கடுமையான விமரிசனங்கள் உண்டு. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக, அமெரிக்க மக்களுடைய பிரதிநிதியாக இன்றைக்கு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். மரியாதையுடன் உபசரிப்பதுதான் ஒரு தேசமாக நமக்கு அழகு. ஆனால் இங்கே NDTV முதலான சில சேனல்கள், சில அச்சு ஊடகங்கள் நரேந்திர மோடி மீதான காழ்ப்பு, பயத்தினால் இந்த வருகையைக் கொச்சைப் படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கையில், இவர்களை நினைத்துக் கோபப்படுவதா அல்லது பரிதாபப்படுவதா என்று புரியவில்லை.


நேற்று NDTV யில் ஒளிபரப்பான இந்த 21 நிமிட விவாதத்தை இன்று காலையில் தான் பார்த்தேன். கொஞ்சம் கூட சகித்துக் கொள்கிற மாதிரி இல்லை!  வர்த்தக ஒப்பந்தம் இப்போதைக்கு இல்லை என்ற ஒரு காரணத்தை வைத்தே அமெரிக்க அதிபர் வருகை பயனற்றது என்று எப்படி முடிவு செய்கிறார்கள்? வளரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடாக ட்ரம்ப் வந்து மாற்றிவிட்டார். வர்த்தகத்தில் நமக்கிருந்த சலுகை, சாதகம் போய்விட்டது என்று கூவுவது மிகக் கேவலமாக இருக்கிறதா இல்லையா?  இதே மாதிரி ஒரு அபத்தமான உரையாடலை ஆதன் தமிழ் யூட்யூப் சேனலில் ராமசுப்ரமணியம் என்கிற வலதுசாரி (RSS அபிமானி என்பதாக நினைவு) பேசிக் கேட்டேன். 

    
இந்தியா டுடே மட்டும் NDTVக்குச் சளைத்ததா என்ன? இன்று மதியம் இந்த  20 நிமிட விவாதத்தை நடத்தித் தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொண்டு விட்டார்கள்!  உருப்படியான தகவலேதும் இருந்ததா?  இன்னமும் யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இந்த வருகையின் போது எந்த வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என்பதில் இந்தியத்தரப்பின் மீது குறை சொல்ல முடியாது. அமெரிக்கத்தரப்பு விரும்புகிறபடி உடன்பாடு எட்டப்படாததால் அவர்களே வெளியேறிவிட்டார்கள். பாதுகாப்புத்துறைக்காக கொஞ்சம் அமெரிக்க ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். அதுபோக ஒருசில அணு உலைகள் வாங்க அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்பதெல்லாம் ஊகங்களே! அப்படியானால் டொனால்ட் ட்ரம்ப் இத்தனை ஆர்வத்தோடு இந்திய சினிமாக்களைத் தொட்டு ட்வீட் செய்து, ஒரு 36 மணிநேர வருகைக்குத் தயாராவானேன்? இது நேற்றைய பதிவிலேயே எழுதியது.


அகமதாபாத் மோடரா ஸ்டேடியத்தில் நமஸ்தே ட்ரம்ப் வரவேற்புக்கு பதிலளித்து டொனால்ட் ட்ரம்ப் பேசியதன் முழுக்க காணொளியும் இங்கே.

டொனால்ட் ட்ரம்ப் அனேகமாக இந்தமாத இறுதியில் ஆப்கானிஸ்தான் தாலிபான்களுடன் ஒரு உடன்பாட்டை எட்டக்கூடும். எட்டாமலும் போகலாம். அதன்பிறகு என்ன நடக்கிறது அல்லது நடக்காமல் போனது என்பதை வைத்துத்தான் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்திய வருகையைப் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியும். 

அதுவரை காத்திருப்பது ஒன்றுதான் சரியானது. மீண்டும் சந்திப்போம்/           

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!