இட்லி வடை பொங்கல்! #63 கேலிக்கூத்தாகும் அரசியல்!

நாளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி, மகள், மாப்பிள்ளை இவர்களுடன் தனது நிர்வாகத்தின் முக்கியமானவர்கள் (துணை அதிபர் நீங்கலாக) அத்தனைபேருடன் அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார். அகமதாபாதில் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இந்தச் செய்தியும் உலகத்தின் பார்வை முழுதும் இந்தியா, பிரதமர் நரேந்திர மோடி மீதே இருப்பதில் Khangress  கட்சிக்கு முழு காண்டு இருப்பதில் ஆச்சரியமில்லை தான்! காங்கிரசின் ரந்தீப் சிங் சுர்ஜீவாலா பிரதமருக்கு ஐந்து கேள்விகள் கேட்டிருக்கிறார். ட்வீட்டரில் அக்கப்போர் வேறு! அடுத்துவரும் 2 வீடியோவும் தலா 3 நிமிடம் தான்.


இப்படி ட்வீட்டரில் அக்கப்போர் செய்வதை விட்டு விட்டு சத்ருகன் சின்காவுடன் பாகிஸ்தான் போய் இருந்தால், இன்னும் அதிகமான பப்ளிசிட்டி அங்கேயாவது கிடைத்திருக்குமே! சத்ருகன் சின்கா எதற்காகப் பாகிஸ்தான் போனாராம்?

  
ஒரு திருமணத்துக்காக பாகிஸ்தான் போன சத்ருகன் சின்கா அப்படியே பாகிஸ்தான் ஜனாதிபதியையும் சந்தித்து காஷ்மீர் விவகாரத்தைப் பற்றியும் பேசினாராம்! காங்கிரஸ்காரன் உளறுவதையும் கூட பொறுமையாகக் கேட்பதற்கு பாகிஸ்தானில்தான் ஆளிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய வரலாறு! வரலாற்றுச் சோகம்!!  ராமசந்திர குகா எங்கேப்பா? 


திமுக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் பற்றி யார்யாரோ பேசிவிட்டார்கள்! நானும் கூட இசுடாலினுக்கு என்ன மாதிரி image makeover செய்துவிடமுடியும் என்ற கோணத்தில் இந்தப்பக்கங்களில் பலமுறை எழுதியாகி விட்டது. அப்புறம் என்ன? எஸ் பி லட்சுமணன்!  இப்படி ஒரு பத்திரிகையாளர் இருப்பதாக இதுநாள்வரை இங்கு யாருக்குமே தெரியாது. சமீபகாலங்களில் டிவி விவாதம் என்று பார்க்கையில் ஒருசில சேனல்களில் ரெகுலராகப் பார்க்க முடிகிறது. இவர்பங்குக்கு என்ன சொல்கிறார் என்று பார்த்துவிடலாமே! வீடியோ 15 நிமிடம்.


நடிகர் விஜய்க்கு ஏழர அல்லது மிகப்பெரிய எதிரி அவர் தகப்பன் S A சந்திரசேகர் தவிர யாராக இருக்கமுடியும்? ஒவ்வொருமுறையும் அவர் ஊடகங்களிடம் வாயைத் திறக்கும் போதெல்லாம் ஏழரையைக் கூட்டியதைத் தவிர வேறொன்றும் செய்ததில்லை. அதையும் ஒரு கலையாகவே வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்பது News 18 தமிழ் செந்திலுக்கு அண்மையில் அளித்த நேர்காணல், அதை வைத்தே குணசேகரன் ஒரு காலத்தின் குரல் நிகழ்ச்சியை நடத்தியதில் புலனாகியது. இப்போது ரங்கராஜ் பாண்டேவுடன் சுமார் 62 நிமிடம் உரையாடுகிறார். இவரும் இவர் மகனும் தப்பித்தவறி அரசியலுக்கு வந்துவிட்டால், ஏற்கெனெவே திராவிடங்களிடம் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழக அரசியல் என்னவாகும்? கற்பனை செய்வதற்கே முடியவில்லை!

மீண்டும் சந்திப்போம்.         
                                                    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!