சண்டேன்னா மூணு! தமிழக பிஜேபி எங்கே போகிறது?

தமிழிசை இங்கே பிஜேபி மாநிலத்தலைவராக இருந்த வரை கஷ்டப்பட்டு எம்பி எம்பிக்குதித்து தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று வசனம் பேசிக் காமெடி செய்து எம்பியாகக் கூட முடியாமல், கிடைத்த ஆளுநர் பதவியில் செட்டிலாகிவிட்டார்! அப்போதும் சரி, அதற்கு பிறகும் சரி, அந்த காமெடி வசனத்தைக் கேட்க முடியவில்லை! ஆனாலும், இன்னமும் அந்தவசனம் பேச மாநிலத்தலைவர் ஒருவர் வந்தபாடில்லை! வின் நியூஸ் மதன் ரவிச்சந்திரன் வேறு முகநூல் பகிர்வு ஒன்றில் அதைப் பற்றி கிசுகிசு பாணியில் வம்புச் செய்தியாகப் பகிர்ந்திருக்கிறார்.

48 நாட்களில் பாஜக தலைவராவது எப்படி இதோ எளிய வழிமுறைகள்:

ஒரு நண்பர் 2மாதங்களுக்கு முன் அறிமுகமானார் பார்த்த முதல் சந்திப்பில் எனக்கு advice செய்தார் தல செம பெயர் உங்களுக்கு easy ah பாஜக தலைவர் ஆயிடலாம்னு சிரிப்பு தான் வந்தது சரி நீங்க என்ன பண்றீங்கனு கேட்டேன் விவாதத்துல கலந்துக்கணும் அப்படியே நெறியாளர் ஆகணும் அத use பண்ணி politicsல புகுந்து பாஜக தலைவராகணும்னு ஒரு மூன்று அம்ச கனவு திட்டத்தை பகிர்ந்தார் 2அம்சம் வெற்றிகரமாக முடித்துவிட்டார் விரைவில் உங்கள் பார்வைக்கு புரியும் பாஜக தலைவராக என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்😜
பிகு :பாஜக தலைவர் ஆக எளிய வழி தலையங்கமான ஒரு வளையொலியில் 3 முறை ஸ்டாலினை திட்டி மத்திய திட்டங்களை ஆதரித்து வீடியோ செய்வது பிறகு நெறியாளர் பிறகு கமலாலயம் உங்கள் வசம்.. 
உண்மையில் H.ராஜா A.P. முருகானந்தம் C.T. நிர்மல்குமார் K.T. ராகவன் நயினார் நாகேந்திரன்,வினோஜ், வானதி அக்கா போன்றோர் பிழைக்க தெரியாதவர்களே!
அவரா இவரா என்று பலவித ஊகங்கள் பின்னூட்டமாக வந்துகொண்டிருக்கிற காமெடியை ரசிக்க முடிந்தது. 


இன்னொரு காமெடியைச் சொல்லாமல் விட்டு  விடலாமா?  முகநூல் அதிசயங்களில் ஒன்றாக, துக்ளக் வாசகர் குழு முகநூல் அறக்கட்டளை என்ற குழுவின் துவக்கவிழாவை இப்போது    நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். விசு, காத்தாடி ராமமூர்த்தி என்று சில தெரிந்த முகங்களோடு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். பிஜேபி ஆதரவு நெடி தூக்கலாகவே தெரிந்த காணொளி இது 

 
      
எனக்கென்று இப்படியான செய்திகள் தான் வாய்க்கும் என்று அலுத்துக் கொள்ளாதீர்கள்! சேட்டைக்காரன் பதிவர் வேறு முகநூலில் பீதியைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறார்!                                                         
                                                   
வேறொரு பகிர்வில்
Narayanan R Samayashree Kumar ஏர்போர்ட்டுல பொன்னரோ, சி பி ஆரோ அடி வாங்காம இருக்கனும்😜     என்று தன் கவலையைத் தெரிவித்துக் கொள்கிறார்! அவரால் முடிந்தது,  பாவம்  அவ்வளவுதான்!  

தமிழ்நாட்டில் பிஜேபி இன்னமும் தடுமாறிக் கொண்டு இருப்பது இத்தனை அப்பட்டமாகப் பகடி செய்யப் படுவதன் பின்னால் எங்கே போகிறது தமிழக பிஜேபி என்ற கேள்வியும் இருக்கிறதே! கவனிக்கிறீர்களா?  

மீண்டும் சந்திப்போம்.  

4 comments:

  1. // தமிழக பிஜேபி எங்கே போகிறது?// எங்கேயும் போகவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கௌதமன் சார்!

      உறுதியாகத்தான் சொல்கிறீர்களா? பிடித்துவைத்த பிள்ளையார் மாதிரி எங்கேயும் போகாமல்தான் இருக்கிறார்களா? :-)))

      Delete
  2. Replies
    1. alஒருவிதத்தில் நீங்கள் சொல்வது சரிதான்! ஒரு உறுதியான தலைமையில்லாமல், தமிழக பிஜேபி அங்குமிங்கும் அலைந்துகொண்டுதான் இருக்கிறது!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!