திமுகவின் R S பாரதியும் வண்ணாரப்பேட்டை போராட்டமும்

திமுகவின் அமைப்புச் செயலாளர் R S பாரதியின் ஒரு விஷ(ம)த்னமான பேச்சைப்பற்றி சமூக வலை தளங்களில் பரவலாகவும் பலவிதமாகவும் விவாதிக்கப்படுவது, அவருக்கே நிறைய ஆச்சரியங்களைத் தந்திருக்கலாம்! ஏனென்றால் இதுவரை R S பாரதி என்கிற இந்த நபருக்கு இத்தனை வெளிச்சம் கிடைத்ததில்லை, யாரும் இவரை அவ்வளவு பெரிய ஆளாக சட்டை செய்வதாகவும் எனக்குத் தெரிந்து இல்லை. ஆனாலும் ஏதோ காரணத்துக்காக ஒரு துரும்பு தூணாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது.

வீடியோ 12 நிமிடம் 

R S பாரதியை மன்னிப்புக் கேட்க வைத்த பேச்சு என்று தலைப்புக் கொடுத்ததிலும் கூடப் பிழையிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் வருத்தம் தெரிவித்து ட்வீட்டரில் செய்தி போட்டிருக்கிறார். கோவில் குருக்கள் பற்றிப் பேசியதற்கோ ஊடகங்களைத் தரக்குறைவாக பேசியதற்கோ வருத்தம் தெரிவித்தமாதிரி இல்லை. இப்போது நான் பதிவில் பேசவந்தது R S பாரதி பேச்சோ செலெக்டிவாக தெரிவித்த வருத்தம் என்கிற பசப்போ இல்லை. சமூகவலைத்தளங்களில் இந்தப்பேச்சு என்ன மாதிரியான ஊகங்களை, அப்படியும் இருக்குமோ என்கிற மாதிரியான கான்ஸ்பிரசி தியரிகளைத் தூண்டி விட்டிருக்கிறது என்பது மட்டும்தான்!

R.S.பாரதி DMKவின் திசை திருப்பும் வேலைக்கான பலி கடா.
CAAக்கு எதிரான போராட்டம் இஸ்லாமியர்கள் நடத்தும் முறையும் அவர்களின் தீவிரவாதப் போக்கும் பெரும்பான்மை ஹிந்து ஓட்டு வங்கியை DMKக்கு எதிராகத் திரும்புகிறது.
போராடும் இஸ்லாமியர்களை தன் இஷ்டப்படி கட்டுப்படுத்த முடியவில்லை.
CAAக்கு எதிராக ஹிந்துக்களையும் ஒருங்கிணைக்க முடியவில்லை.
CAA சட்டத்தில் ஹிந்துக்களுக்கும் பிரச்சனை என்ற விஷ வாதத்தையும் ஹிந்துக்களுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை.
இறுதி ஆயுதமாக பேரிடர் போது இஸ்லாமியர் தொண்டைக் காட்டி ஹிந்துக்களிடம் அனுதாபம் பெறும் முயற்யும் தோல்வி.
இதன் மூலம் நடுநிலை ஹிந்துக்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக திராவிடக் கட்சிகளின் பக்கம் இருந்து விலகி ஹிந்து சார்பு கட்சிகள் பக்கம் நகர ஆரம்பித்து உள்ளனர்.
இதன் பின்னரும் CAA போராட்டம் தொடர்வது DMKக்கு நல்லது இல்லை. அதைத் திசை திருப்பும் நிர்பந்தம் DMKவுக்கு. அதற்கான முதல் முயற்சி தான் RS பாரதி. இனி வலை தளங்கள் CAAவை  விட்டு விட்டு RS பாரதியைத் தத்தெடுத்துக் கொள்ளும்.
இன்னும் கொஞ்ச நாளில் CAAக்கு எதிரான போராட்டம் நீர்த்துப் போகும். வரும் நாட்களில் நிகழும் புதிய உப்புக்குப் பெறாத விஷயம் ஒன்று கையில் எடுக்கப்பட்டு ஊதிப் பெரிதாக்கப்படும். CAA போராட்டம் மறக்கடிக்கப்படும்.
CAAக்கு எதிரான போராட்த்தின் இத்தனை நாள் வன்முறை சட்டப்புறம்பான செயல்பாடுகள் மறைக்கப்பட்டு இறுதியாக காவலர் தடியடி மட்டும் அவ்வப்போது நினைவுறுத்தப்பட்டும். நீண்ட நாட்களுக்குப் பின் காவலர் நடவடிக்கை மட்டும் எதிர்மறை எண்ணத்தை உருவக்கும் விதமாக பிம்பத்தை எற்படுத்தும்விதமாக அவ்வப்போது பிரச்சாரம் நடக்கும். உதாரணம் ஜல்லிக்கட்டு போராட்டம்.
ஸ்டாலின் கையில் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் இது போன்ற எச்சங்களே மிஞ்சும். உருப்படியாக எதுவும் நடந்திருக்காது. 

ஊடகக்காரர்களையும் மிஞ்சுகிற விதத்தில் Conspiracy தியரிகள் அங்குமிங்குமாகக் கிளம்புவதைப் பார்த்து என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நிற்பதைத் தவிர வேறுவழி? 

வீடியோ 50 நிமிடம் 

ஆனால் மதன் ரவிச்சந்திரனுக்கு அஜெண்டா வேறு! நிகழ்ச்சிக்கு ஒரு நாலைந்து பேரைக் கூட்டி வந்து ஒரு சூடான விவாதத்தை நடத்திமுடித்து விடுவது மட்டும்தான்! குறைந்தபட்சம் தனக்காவது திருப்தி அளித்ததா என்றாவது அவர் தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அடுத்தநிகழ்ச்சிக்குப்போவது அவருக்கே நல்லது என்பதை யார் அவருக்குச் சொல்வது?

        
வண்ணாரப்பேட்டை போராட்டம் என்று சொல்லி விட்டு அதைப்பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லையா? இன்று உயர்நீதி மன்றம் விதித்த தடையையும் மீறி, சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று பல நகரங்களிலும் இஸ்லாமிய அமைப்புக்கள் தமிழக அரசின்மீது ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கூட்டமாகக் கூடி, தங்களுடைய பலத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள் 

வீடியோ 16 நிமிடம் 

சென்னையில் சேப்பாக்கத்தோடு நிறுத்திக் கொண்டு கூட்டம் கலைந்து விட்டதாக செய்தி சொல்கிறது. இந்த வீடியோவின் கடைசியில் ஆர் கே ராதாகிருஷ்ணன் என்கிற பத்திரிகையாளர் பேசுகிற விதத்தைக் கொஞ்சம் கவனியுங்கள்.

இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமியர்களுடைய எதிர்ப்பு, கவலை, வலிமை இப்படி எதையும் வெளிப்படுத்தப் போவதில்லை. நாங்கள் எவருக்கும் எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படமாட்டோம் என்றே போய்க்கொண்டிருப்பது பொதுசமூகத்திலிருந்து அவர்கள் தனிமைப்பட்டு நிற்பதில்தான் போய்முடியப் போகிறது என்பதுதான் இப்போதைக்கு என் வருத்தம்.

மீண்டும் சந்திப்போம்.
            

2 comments:

  1. //இதுபோன்ற போராட்டங்கள் இஸ்லாமியர்களுடைய எதிர்ப்பு, கவலை, வலிமை இப்படி எதையும் வெளிப்படுத்தப் போவதில்லை. நாங்கள் எவருக்கும் எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படமாட்டோம் என்றே போய்க்கொண்டிருப்பது பொதுசமூகத்திலிருந்து அவர்கள் தனிமைப்பட்டு நிற்பதில்தான் போய்முடியப் போகிறது என்பதுதான் இப்போதைக்கு என் வருத்தம்.
    //இது தான் நடக்கப் போகிறது. தனியாக பலம் காட்டி சாதிப்பது காங்கிரஸ் / திமுக / அதிமுக ஆட்சிகளில் நடக்கும். அது சாத்தியமில்லை என்பதால் பிஜேபி யை பயமுறுத்தவும் உதவும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!

      இஸ்லாமியர்கள் தலைவிரித்தாடிய பல நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்கள்.சீனாவில் உய்கர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கவோ , ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தரவோ இங்கு எவருமே தயாராக இல்லை. எங்குமில்லாத விசித்திரமாக இந்தியாவில் மட்டும் தலைவிரித்தாடுவது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

      பிஜேபி இந்தப்போராட்டம் களேபரங்களுக்குப் பயந்த மாதிரியாகவா தெரிகிறது? இல்லை என்பதுதான் என்னுடைய பதில். .

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!