பிப்ரவரி 14! இந்தநாளை மறக்க முடியாததாக ஆக்கிய நிகழ்வுகளில் முதலாவது 1998 இல் கோவையில் தொடர் குண்டு வெடிப்புக்கள்! குண்டுவைத்தது யாரென்று எல்லோருக்குமே தெரியும்! குண்டுவைத்த இஸ்லாமிய தீவீரவாதிகளை திமுக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்த வரலாற்றையும் மறந்துவிட முடியுமா? இரண்டாவது, சென்ற ஆண்டு இதேநாளில் காஷ்மீர் புல்வாமா பகுதியில் 78 பஸ்களில் பயணித்துக் கொண்டிருந்த CRPF வீரர்களில் 40 பேர் ஒரு தற்கொலைத் தாக்குதலில் பலியான சோகம்! இரண்டு சம்பவங்களுமே தீவீரவாதச் செயல்களில் நிகழ்ந்தவை தான்! இப்படி பலியானவர்கள் சிவிலியன்களானாலும் CRPF வீரர்களானாலும் நம்முடைய நினைவிலும் பிரார்த்தனைகளிலும் என்றும் இருக்கவேண்டியவர்கள்! முதலில் அவர்களுக்கு அஞ்சலி செய்வோம்!
வீடியோ 27 நிமிடம்
இங்கே பலருக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று நடந்தவைகளைக் குறிப்பிட்டுச் சொன்னாலும், நேரு புராணத்தில் நிறைய சொல்லவிடுபட்டவை உண்டே என்று ஆதாரத்துடன் சொன்னாலும், கசப்பாகத்தான் இருக்கிறது என்பதற்காக #வரலாறு என்பதே பலமுகங்கள், பார்வைகள் கொண்டது தான்! அப்படிப் பார்வையை நிராகரித்துவிட முடியுமா?
அதற்காக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மாதிரியோ, திமுக, காங்கிரஸ் மாதிரியோ பயங்கரவாதத்துக்கு சப்பைக்கட்டு கட்ட வேண்டாமில்லையா? இப்போது அதுதான் முக்கியமான பிரச்சினை. ஜனங்களுடைய ஞாபக மறதி, ஈசியாகக்கடந்து போய்விடுவது போன்ற பலவீனங்கள் மீது அரசியல்வதிகளுக்கு அபார நம்பிக்கை தானே இந்தமாதிரிக் கோளாறுகளுக்கு எல்லாம் அஸ்திவாரமாக இருக்கிறது!?
ராமசந்திர குகா மாதிரி தான் எழுதுவது மட்டும்தான் சரித்திரம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் முகத்திரை கிழிக்கப்பட்டதை முந்தைய பதிவில் கோடி காட்டியிருந்தேன், நினைவிருக்கிறதா? சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒருவிவாதமாக இதைப் பார்க்கிறேன், பரிந்துரை செய்கிறேன். மகாத்மாகாந்தியோ, நேருவோ அல்லது வேறு எவரோ, குறைநிறைகள் உள்ள சாதாரண மனிதர்கள்தான்! விமரிசனங்களுக்கும், வேறொரு கோணத்திலிருந்து பார்க்கப்படுவதற்கும் விதிவிலக்கானவர்கள் அல்ல. இந்த அடிப்படை விஷயத்தைப் புரிந்து கொண்டால், கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் தகர்ந்து போவதில் அதிர்ச்சியோ ஆச்சரியமோ படத்தேவையே இருக்காது.
தீவீர இஸ்லாமியர்கள் கையைத்தான் வெட்டினார்கள்!ஆனால் சர்ச் இன்னும் அதிகமாகக் காயப் படுத்தியது என்கிறார் இந்த கிறித்தவ பேராசிரியர்! இப்படி நடந்ததை நடக்கவே இல்லை என்று அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டு சொன்னால் சரியாகப் போய்விடுமா?
வரலாறு சொல்வதென்ன என்பதை முழுமையாகத் திரும்பவும் பார்த்தால் நிறையக் கசப்பான சங்கதிகளையும் எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கும்! அதற்காக வரலாறே புனைவுகளால் ஆனது தானே என்று விட்டேற்றியாக இருந்துவிட முடியுமா?
செகுலரிஸம் என்று கோளாறுகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதால் தீவீரவாதச் செயல்கள் குறைந்து விட்டதா? மென்மையான ஹிந்துத்வா, தீவிரமான ஹிந்துத்வா என்று பேசுவதால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்து விடுமா?
இதெல்லாம் வெள்ளிக்கிழமைக் கேள்விகளாக! மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!