இட்லி வடை பொங்கல்! #61 #வாரிசுஅரசியல்

சுவாசிக்கப் போறேங்க தளத்தில் வலதுசாரிகள், தேசிய வாதம்  தொடர்ந்து ஜெயிப்பது எதனால் என்று நான்கு பதிவுகளில் கொஞ்சம் கவனப்படுத்த வேண்டிய முக்கிய விஷயங்களைச் சொல்லிவருவதை நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்! சில நாட்களுக்கு முன்னால் The Print தளத்தில் சேகர் குப்தா ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக் கொண்டு, இல்லாத இடங்களில் எல்லாம் விடையைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனாலும் ஒரு அனுபவமுள்ள பத்திரிகையாளராக அவரால் நரேந்திர மோடியைப் புரிந்து கொள்ள முடிகிறதோ? என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்!

  வீடியோ 10 நிமிடம் 

இந்திய அரசியல் சரித்திரம் எழுது:கிற ராமசந்திர குகா இந்த நுட்பம் புரியாமல் டெலிகிராப் நாளிதழில் ஒரு அரைகுறையான கட்டுரை எழுதி பொங்கியதை முந்தைய பதிவில் பார்த்தோமே, நினைவிருக்கிறதா? 
ராஜ்யசபாவில் நேற்றைக்கு ஒரு 76 வயது காங்கிரஸ் எம்பி,விப்லவ் தாகுர் பேசியது பூகம்பமே வந்த மாதிரி இருந்ததாம்! அதை அவரே டெலிகிராப் நாளிதழுக்குத் தொலைபேசியில் சொன்னாராம்: On Friday, Thakur told The Telegraph over phone that some BJP members told her after her 10-minute speech that “aapne bahut dara diya tha (you gave us a big scare)”. 


ராஜ்யசபாவில் காலிஇருக்கைகளைக் கவனியுங்கள்! மேலே டெலிகிராப் செய்தியின் தலைப்பு சொல்கிற மாதிரி நிஜ அதிர்வு, அல்லது அம்மணியே சொல்லிக் கொள்கிற மாதிரி பயம் இப்படி ஏதாவது வந்ததா என்ன!? இந்திய அரசியல் வரலாறு வீண் ஜம்பங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை நினைவு வைத்துக் கொண்டால் விப்லவ் தாகுர் பேசியதை எல்லாம் சட்டை செய்யத் தோன்றாது! விப்லவ் என்றால் புரட்சியாம்! புரட்சி வெடித்துவிட்டது என்று கூட சொல்லிக் கொள்ளலாம்! யார் சட்டைசெய்யப் போகிறார்கள்!! 

  வீடியோ 13 நிமிடம் 

நேற்றைய மக்களவை அமளியை ஆரம்பித்து வைத்தது தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் என்பதில் தமிழேண்டா ஆசாமிகள் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்! இப்படிப்பட்டவர்களால் நேருவின் பெயரையோ, காங்கிரசையோ காப்பாற்ற முடியாது என்பது ஏனோ அவர்களுக்கு புரியவில்லை! அவர்கள் தூக்கிப்பிடிக்கும் #வாரிசுஅரசியல் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடப்பதை எவர்வந்து காப்பாற்றி விட முடியும்?  இந்திரா வாரிசுகளுடைய நிலைமைதான் அப்படி என்றால் கருணாநிதியின் வாரிசு நிலைமை எப்படியாம்?  

       வீடியோ 21 நிமிடம் 
    
இனி ரஜனியை மையமாக வைத்துத்தான் அரசியல் இங்கே நடக்கும்  என்கிறார் ரவீந்திரன் துரைசாமி! அவர் சமீபநாட்களில் தொடர்ந்து சொல்லிவருவதுதான்! ஆனால் இதை மவுன்ட்ரோடு மாவோ நாளிதழ் வெளியிட்டிருப்பது தான் வினோதம்! தினத்தந்தியும் கூட ரஜனி வாய்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதில் தாங்கள் பின்தங்கி விடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் அடுத்து நாங்கள் தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று மூச்சுக்கு மூச்சு பேசிக்கொண்டிருக்கிற இசுடாலினுக்கு இது அவ்வளவு நல்ல செய்தியில்லை. பிரசாந்த் கிஷோர் வந்து இசுடாலின் இமேஜை என்ன makeover செய்துவிட முடியும் என்பது நிஜமாகவே புரியவில்லை.

         வீடியோ 19 நிமிடம் 

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பிஜேபியின் உத்தி என்னவாக இருக்கும்? ரவீந்திரன் துரைசாமி ஏதோ சொல்கிறார். தமிழக பிஜேபி ஆசாமிகளுக்கு இது தெரியுமா? 😁😁

மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!