Showing posts with label சேகர் குப்தா. Show all posts
Showing posts with label சேகர் குப்தா. Show all posts

பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா? #சேகர்குப்தா #அரசியல்களம்

அதிமுக--பிஜேபி கூட்டணி எந்த லட்சணத்தில் இருக்கிறது?   இப்படி இன்னொரு வலைப்பக்கத்தில் நேற்று எழுதிய பதிவுக்கு நண்பர் நெல்லைத்தமிழன் ஒரு காட்டமான பின்னூட்டத்தை எழுதியிருந்தார். அவருக்காக சேகர் குப்தா  பிஜேபியின் கூட்டணிக் கட்சிகள் எதற்காக பிஜேபியுடன் வந்து ஒட்டிக் கொண்டன, எதற்காகக் கழன்று கொண்டன என்பதை அவரது பார்வையில் இந்த 26 நிமிட வீடியோவில் சொல்வதைப் பரிந்துரைக்கிறேன்.


NDA கூட்டணியில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்திருந்த கட்சிகளில் 19வதாக ஒரு ராஜஸ்தான் கட்சி NDA வில் இருந்து கழன்று கொண்டதை விரிவாகச் சொல்வதற்கு முன்னால் ரஜனிகாந்த் அரசியலுக்கு முழுக்குப் போட்டதை வாய் நிறையச் சிரிப்புடன் சொல்லி ஆரம்பிக்கிறார் சேகர் குப்தா.நவம்பர் மாதத்திலேயே இங்கே சார்ட் போட்டுச் சொன்னதைத்தான் சேகர் குப்தாவும் கொஞ்சம் காரணங்களோடு சொல்கிறார். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக உமி, அதிமுக அரிசி. ஆனால் பாஜக தமிழகத் தலைவர், ஏதோ இது தேசியக் கூட்டணி போலவும், யார் முதலமைச்சர் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று சொல்வது டூ டூ மச் இல்லையோ? முருகன் அவர்களின் பேச்சு எனக்கே கடுப்பாகிறது எனும்போது, போனாப் போகுதுன்னு ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட அதிமுகவினருக்கு எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு பாஜக என்பது பெரும் சுமை, 8-10 சதவிகித ஓட்டிழப்பிற்குக் காரணமாக இருக்கும் கட்சி. பாஜக கூட்டணி இல்லாவிடில் குறைந்தது ஐந்து எம்பிக்களாவது அதிமுகவிற்கு இருந்திருக்கும்.

கேபி முனுசாமி பேசியது சரிதான். முருகன் அவர்கள் அதீதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிட்டு பாஜக, 2 சதவிகித வாக்குகளுக்கும் அதிகம் இருக்கும் கட்சி என நிரூபிக்கட்டும். நெல்லைத்தமிழன் எழுதியது இது . இதற்கான பதிலை இந்தப்பதிவின் முதல்வரியிலேயே இருக்கும் இணைப்பைக் க்ளிக் செய்து வாசிக்கலாம்.

NDA கூட்டணி பற்றிப் பேசுவதற்கு முன்னால், சோனியா இன்னமும் தலைமை தாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிற UPA ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யோக்கியதை என்னவாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே பார்த்து விடலாமா?


ஐமுகூ சேர்பெர்சனாக சரத் பவார் ஒன்றும் தவம் கிடைக்கவில்லை. அந்த வெற்று நாற்காலியால் அவருக்கு பைசா பிரயோசனமில்லை. ஆனால் சிவசேனா தரப்பிலிருந்து, எதிர்க்கட்சியாக இருப்பதற்கே தகுதியில்லாத நிலையில் சோனியா காங்கிரஸ் இருக்கும் நிலையில், பிஜேபிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக சரத் பவார் மட்டுமே இருக்க முடியும் என்று வலுவான வாதம் முன்னெடுக்கப்பட்டது கூட இருபது நாட்களுக்கு முன்னால் தான்! சோனியா தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி அனேகமாக நாசமாகப்போய்விட்டது.2004 இலிருந்து சோனியா அலங்கரித்த ஐமுகூ சேர்பெர்சன் பதவியும் கூட எவரும் சீந்த விரும்பாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

காங்கிரசோடு சேர்ந்து நின்றாலே பீடை ஒட்டிக் கொள்ளும் என்று சொல்லாமல் கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் ஒதுங்கி நிற்கிற அளவுக்குக் காங்கிரசின் இன்றைய நிலைமை இருக்கிறது.

NDA ஆரம்பமானது 1998 இல். காங்கிரசுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியாக அன்று தொடங்கப்பட்டது போன்ற நிலைமை இன்றிருக்கிறதா? பிஜேபியை மதவாதக்கட்சியாக, தீண்டத்தகாத ஒன்றாகப்  பூச்சாண்டி காண்பித்த செகுலர் போலிகளின் காலம் முடிந்தே போய்விட்டது. வடவர்கள் கட்சி என்று சொல்லப்பட்ட நிலையும் மாறிவிட்டது. இந்தியா முழுதும் பரந்து விரியும் ஆலமரமாக பிஜேபி இன்று தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து நிற்பதில், துண்டு துக்காணிக் கட்சிகள் ஒட்டிக் கொடிருந்தால் என்ன? உதிர்ந்து போனால் என்ன? பிஜேபியின் இன்றைய தலைமை இதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவுமில்லை, சேகர் குப்தா போல, என்னமோ பெரிய அரசியல் ரகசியத்தை உடைத்துவிட்டதுபோல பொதுவெளியில் விவாதிப்பதுமில்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஏதோ ஒரு செயல் திட்டம், காலவரையறை என்று இருக்கக் கூடும் நான் அறிந்த வரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதுமாதிரி ஒரு strategy, tactics என்று ஏட்டளவிலாவது இருந்ததுண்டு ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவுமே இப்போது புரட்சி, சோஷலிசம், என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனால், பிஜேபியினர் மட்டும் ஒரு இலக்கு, அதை அடைவதற்கான செயல்திட்டம் என வகுப்பதோடு அதை நடைமுறைப்படுத்த வருடம் முழுவதும் கடுமையாக உழைத்து வருவது கண்கூடாகவே தெரிகிறது.

இங்கே தமிழகத்தில் காலூன்ற பிஜேபி என்னமோ ரஜனி ஒருவரைத்தான்  மலைபோல நம்பியிருந்தது போலவும், அவர் வீட்டுக்குள் சுருண்டு படுத்துக் கொண்டதும், அது கனவாகப் போனது போலவும் இங்கே நிறையப்பேர் நமட்டுச் சிரிப்புடன் அலைவது சரிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்           .  

   

இட்லி வடை பொங்கல்! #67 உண்மையைக் கையாளுவது! ஊடகப்பொய்கள்! மீண்டும் பப்பு!

கொரோனா தொற்றைக் கையாளுவதை விட கொரோனா வைரஸ் பற்றி ராகுல் காண்டி மாதிரியான திடீர் மேதாவிகள் வெளியிடும் அறிக்கைகள், அரசுக்கு ஆலோசனைகள் இவற்றைக் கையாளுவது எப்படி என்பதுதான் உண்மையிலேயே இப்போது தலையாய பிரச்சினை என்றால் நம்புவீர்களா?  ஊடக விவாதங்களைக் கொஞ்சநாள் காதில் வாங்கிக் கொள்ளாமல் கழித்துவிட்டு இப்போது மறுபடியும் கேட்க ஆரம்பித்ததில் எனக்கு எழுந்த பிரச்சினை அதுதான்!

 

சேகர் குப்தாவுக்கும் என்னைப்போலவே கொஞ்சம் தடுமாற்றம் இருந்திருக்கும் போல .இந்த 13 நிமிட வீடியோவில் செய்திகளை எப்படிப்புரிந்து கொள்வது என்பதை 
 டாம் க்ரூஸ் படமொன்றில் வருகிற You Can't handle the Truth  வசனத்தை வைத்து விளக்க முயற்சி செய்திருந்தது கொஞ்சம் சுவாரசியம்! யாருமே உண்மையை நம்புவதற்குத் தயாராக இல்லை, ஆனால் மோசமான செய்தியை அப்படியே ஏற்றுக் கொள்கிற மனோநிலையில் தான் இருக்கிறார்கள் என்ற ரீதியில் சேகர் குப்தா கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் பற்றிச் சொல்கிறார் . சின்ன வீடியோதான், கொஞ்சம் பாருங்களேன்! 

Elon Musk [ Tesla ] 1000 வென்டிலேட்டர்கள் வாங்கி இருப்பதாகவும்..அவற்றை ..காலிஃபோர்னியா மருத்துவமனைக்கு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்து..3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் வென்டிலேட்டர்கள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று மருத்துவமனை சொன்னதாக...CNN செய்தி வெயிட்டிருந்தது .

இதை பார்த்த Elon Musk..உடனடியாக... '' நீங்கள் அனுப்பியிருந்த வென்டிலேட்டர்கள் நன்றாக இயங்குகின்றன. உதவியதற்கு நன்றி'' என்று .மருத்துவமனையிலிருந்து தனக்கு வந்த e mail-ஐ ட்விட்டரில் வெளியிட்டதோடு..இன்னும் CNN எல்லாம் செய்தி ஊடகமாக இயங்குவது ஆச்சரியமளிக்கிறது ! என்றும் கூறி இருக்கிறார். உண்மை தான்.

இதில் ..வேடிக்கை என்னவென்றால்...Twitter-ரே பெரிய பொய் சொல்லி தான். Twitter செய்கிற அரசியலுக்கும், அதன் அப்பட்டமான அரசியல் சார்புகளுக்கும் ...அதனை.. CNN-ன் பெரியண்ணன் என்று கூட சொல்லலாம் 

சீன வைரஸ் பேரிடர் ..பலவற்றையும் / பலரையும் வெளிப்படுத்தி புரியவைத்துக் கொண்டிருக்கிறது.
#ElonMusk #Tesla #CNN #ChineseVirus

CNN கிடக்கட்டும்! சாதாரண செய்திகளைக் கூட இங்கே நம்மூர் சேனல்கள் எப்படித் தலையைப் பிய்த்துக்கொண்டு மோடி எதிர்ப்பு செய்திகளாக மாற்றலாம் என்று 24 மணிநேரமும் பாடுபடுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்! ஊடகங்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்பவை என்பது தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? !!


  

நீலம் பாண்டே இன்றைய The Print தளத்தில் இப்படிப்படம் போட்டுச் சொல்வது ஒன்லைனராகச் சொல்வதானால் பப்பு ரிடர்ன்ஸ் என்பதுதான்! எந்தச் செய்தித்தாளிலும் பார்க்கவில்லையே என்று பிராண்டிக் கொள்ளாதீர்கள்! நேரு மற்றும் வாரிசுகளின் செயல்பாடுகளே கொஞ்சம் விசித்திரமானவை பலநேரங்களில் மிகவும் விபரீதமானவை என்பதை நேரு குடும்ப வரலாறே சொல்லும். அந்தவகையில் சோனியாG இன்றைக்கு டம்மிப்பீஸ் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார். ராகுல் காண்டி இடம்பெற்றிருக்கிறார். வழக்கமாக எல்லா விஷயங்களிலும் இடம் பிடிக்கும் A K அந்தோணி, அஇந்தக்குழுவில் கமது படேல் மற்றும் குலாம் நபி ஆசாத் இவர்களுக்கு இதில் இடமில்லை. பணப்பசி பானாசீனா, ஜெய்ராம் ரமேஷ்  இந்தக்குழுவில் இடம் பெற்றிருப்பது சும்மா லுலுலாயிக்கு! மன்மோகன் சிங் சேர்மனாம்! அடுத்த இடம் ராகுல் காண்டிக்கு!   Though former Prime Minister Manmohan Singh has been appointed chairman of the committee, with Rahul’s name coming after him on the list, Congress leaders didn’t miss the message — that Rahul has virtually taken direct control of the party affairs after sidelining veterans who were close to Sonia Gandhi since her entry in politics in 1998. என்னாது? ராகுல் காண்டி கட்சியை மீண்டும்  கைப்பற்றி விட்டாரா என்றெல்லாம் கற்பனைக்குதிரையைத் தட்டிவிடாதீர்கள்! செய்தியின் முக்கியமான அம்சம் அகமது படேலைக் கழற்றிவிட்டது, ராகுல் காண்டியின் விசுவாசிகளை வைத்து நிரப்பியிருப்பது என்பது மட்டும்தான்!  The Consultative group is full of members from Rahul Gandhi’s team, including Randeep Singh Surjewala, K. C. Venugopal, Jairam Ramesh, Manish Tewari, Praveen Chakravarty, Gaurav Vallabh, Supriya Shrinate and Rohan Gupta.

        

காங்கிரஸ் கட்சி இனிமேலும் உயிர்த்தெழும், பிழைத்துவிடும் என்று இதற்கு மேலும் கூட  நம்புகிற அப்பாவிகள், நம்புவதற்கான காரணம் ஏதாவது இருந்தால் வந்து சொல்லலாம். தடையில்லை!

மீண்டும் சந்திப்போம்.     

ஒரு புதன்கிழமை! கரோனா வைரஸ்! சேகர் குப்தா! V P சிங்!

கரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் ஆரம்பித்து விட்டது என்பது கவலைதரும் செய்திதான் என்றாலும் ராகுல் காண்டி மாதிரியான உளறுவாயர்கள் அலறுவது போல அச்சத்தை உண்டாக்குகிற விதத்தில் அல்ல! இங்கே பிரிட்டிஷ் அமெரிக்கரான ஜான் ஆலிவர் இந்த 20 நிமிட நிகழ்ச்சியில் கரோனா வைரஸ் குறித்தான அச்சங்களை, தனக்கேயுரித்தான பகடியுடன் சொல்வதில் பிப்ரவரி மாதம் 23 அம தேதி யூட்யூபில் வலையேற்றப்பட்டு இன்று வரை ஒரு கோடியே எழுபது லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து இருக்கிற ஒரு வியட்நாமியப் பாடலுக்கு ஆடுகிறார். அமெரிக்க அரசியல்வாதிகளை பகடி செய்கிறார். mask முதலான பொருட்களை பதுக்காதீர்கள் என்றெல்லாம் விவரமாகத்தான் சொல்கிறார். ஜான் ஆலிவர் பகடிக்கு மேலே சுட்டி இருக்கிறது. ஆனாலும்  நம்பிக்கையூட்டும் அந்த 3 நிமிட வியட்நாமியப் பாடலை இங்கேயும்  பார்க்கலாமா? ஆங்கிலத்தில்  subtitle  இருக்கிறது.


கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது முதல் என்ன என்ன முன்னெச்சரிக்கைகள் வேண்டியிருக்கும் என்று சொல்கிற பாடலாக இருக்கிறது. அச்சப்படத் தேவையில்லை, எச்சரிக்கையாக இருப்பதுதான் இப்போது மிகவும் அவசியம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறது.

    
சேகர் குப்தா இந்த சப்ஜெக்டைக் கூட விடாமல் பேசி இருப்பது ஆச்சரியம் அல்ல! இந்த 19 நிமிட வீடியோவுக்கு வந்த பின்னூட்டத்தில் ஒருவர் கொஞ்சம் நக்கலாகவே சொல்கிற மாதிரி சேகர் குப்தாவுக்குக் கூடத்   தெரியாத சப்ஜெக்ட் இருக்கிறதா என்று எனக்கும் கூட என்னதான் சொல்லவருகிறார் என்பதே குழப்பமாக ஒரு ஆச்சரியம்! ஒன்றும் உருப்படியாகப் பேசத்தேரியாத சமயங்களில், பேசாமல் இருந்து விடுவது மிகவும்  உத்தமம்! ஆனால் The Print தளத்தில் வேறொரு 10 நிமிட வீடியோ கொஞ்சம் உருப்படியான தகவல்களைச் சொல்கிறது.  ஆனால் ஊடகங்களில் வரும் பொறுப்பற்ற செய்திகள் உருப்படியாகவா இருக்கும்?
A cat suspected to be infected with coronavirus is at the centre of a controversy as PETA India has demanded the release of the cat which faces deportation from the Chennai port to China, where cats are killed for meat and fur. A stowaway cat, which arrived in a container from China more than 20 days ago, has been held at the Chennai port and is now facing deportation to China -- where it is unlikely to survive -- all because of ignorance over the coronavirus.     
இப்போது படித்ததில் சுளீரென்று தெறித்தது: 

*வி.பி. சிங் செய்த மாபெறும் தவறு*
“பாரதத்தின் எந்தொவொரு ஆளும் கட்சியும் ஒரு முஸ்லிமை இந்தியாவின் உள்துறை அமைச்சராக்க விழைந்ததில்லை- காங்கிரஸ் கட்சி உட்பட. ஏனென்றால் இந்திய உள்துறை அமைச்சர் பதவி மிக வலிமையான ஒன்று. அந்தப் பதவியை ஏற்கும் ஒரு முஸ்லிம் எந்தமாதிரி நடந்து கொள்வார் என எதிர்பார்க்க இயலாது என்கிற அச்சமே அதற்குக் காரணம்.
ஆனால் முன்னாள் பிரதம மந்திரியான வி.பி. சிங் அந்த *மாபெரும் தவறினைச் செய்தார். காஷ்மீரியான முஃப்தி முகமது சையதை இந்தியாவின் உள்துறை அமைச்சராக அவர் நியமித்தார்*
1989-ஆம் வருடம் டிசம்பர் 8-ஆம் தேதி பதவியேற்ற வி.பி. சிங் அமைச்சரவையில் முஃப்தி முகமது உள்துறை அமைச்சரானார்.
அவர் பதவியேற்று ஒன்றரை மாதங்கள் கூட முடியாத நிலையில் ஜனவரி 19, 1990-ஆம் வருடம் காஷ்மீரிலிருந்த ஐந்தரை இலட்சம் காஷ்மிரி ஹிந்துக்களான பண்டிட்கள் காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.
அவர்களின் மனைவிகளும், பெண்களும் கற்பழிக்கப் பட்டார்கள். அவர்களின் கண் முன்பே அவர்களின் குழந்தைகள் வெட்டிக் கொல்லப் பட்டார்கள்.
காஷ்மீரின் மிகச்சிறந்த அறிவாளிகளில் ஒருவரான டீப்பாலால் டக்ரூ நடுத்தெருவில் வெட்டிச் சாய்க்கப் பட்டார். குற்றுயுராகத் துடித்துக் கொண்டிருந்த அவரது உடலைச் சுற்றி நான்கு பக்கமும் மோட்டார் பைக்குகள் சுற்றிக் கொண்டிருந்தன. “காஃபிரான” டக்ரூவுக்குத் தண்ணீர் கொடுப்பவர்களும் காஃபிர்களாகக் கருதிக் கொல்லப் படுவார்கள் என எச்சரிக்கப் பட்டார்கள்.
இந்தக் கொடுமைகளைக் கண்டு முஃப்தி முகமதுவோ அல்லது அவரது மகளோ சிறிதும் கண்ணீர் சிந்தவில்லை. ஏன், ஒரு சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. இன்றுவரை காஷ்மீரி முஸ்லிம்கள் அதனைக் குறித்துப் பேசுவதும் இல்லை.
இந்தச் சம்பவங்கள் திடீரென நடந்து விடவில்லை. மிகத் துல்லியமாகத் திட்டமிட்டே இதுபோன்ற நடவடிக்கைகள் காஷ்மீரில் மேற்கொள்ளப் பட்டன என உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
இதே காலகட்டத்தில் திடீரெனெ இந்திய உள்துறை மந்திரியின் மகளைத் தீவிரவாதிகள் கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்திகள் பரவுகின்றன.
சகோதரர்களே, இதனைக் குறித்து வெளிநாட்டுப் பத்திரிகைகள் எழுதியிருப்பதனை கூகுளில் தேடிப் படியுங்கள். ஏனென்றால் அந்தப் பெண்ணை எந்தத் தீவிரவாதியும் கடத்திச் செல்லவில்லை. அவள் முஃப்தி முகமதின் வீட்டுக்குள்ளேதான் இருந்தாள் என்பதனைத் தெரிந்து கொள்வீர்கள்.
தீவிரவாதிகளின் தீவிர ஆதரவாளரான முஃப்தியே இந்தக் கட்டுக் கதையைக் கட்டவிழ்த்துவிட்டார். அதனை உபயோகித்து இந்தியா அதுவரை பிடித்துவைத்திருந்த பல காஷ்மீரி தீவிரவாதிகளை (நான்கு) விடுதலை செய்ய உபயோகித்துக் கொண்டார் முஃப்தி. அவருக்கு இருந்த தீவிரவாதி பாசத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் மதத்தைக் குறித்து, அவர்களின் மதக் கொள்கைகளைக் குறித்து, தீவிரவாதக் கொள்கைகள் குறித்து அவர்களுக்கு இருக்கும் பிடிமானத்தைக் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இங்கு நான் வலியுறுத்துவது.
இது சாதாரண விஷயமில்லை. அதுபோலவே காஷ்மீரைச் சேர்ந்த “செக்குலர்” காஷ்மீரியான குலாம் நபி ஆசாத்தைக் குறித்தும் இங்கு கூற வேண்டும்.
திடீரென அவரது வீட்டிலும் ஒரு உறவுக்காரப் பெண் இதேநேரத்தில் திடீரெனெ காணாமல் போய்விட்டாள்! உடனடியாக முஃப்தி 27 காஷ்மீர் தீவிரவாதிகளை விடுதலை செய்ய, சாயங்காலம் அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டாள்! எவ்வளவு பெரிய அதிசயம்!!
இவர்களின் துல்லியமான திட்டமிடல் காரணமாக, ஒன்றின் பின் ஒன்றாக இடைவெளியில்லாமல் இதுபோன்ற சம்பவங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டே இருந்தன.
குலாம் நபிக்கு அடுத்து புரெஃபஸர் 'சைஃபுதின் சோஸ்' இன் உறவுக்காரப் பெண்ணும் “திடீரென” காணாமல் போய்விட்டாள்! அவர் வேறொரு கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றாலும் அந்த முஸ்லீம் காஷ்மீரிப் பெண்ணுக்கு பதிலாக ஏழு தீவிரவாதிகளை விடுதலை செய்தார் முஃப்தி. மந்திரம் போட்டது போல அந்தப் பெண்ணும் சாயந்தரமே வீடு வந்துவிட்டாள்!! இவை அனைத்தும் நடந்து விட்ட வரலாறு.
நண்பர்களே, மிகச் சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்த காஷ்மீர் தீவிரவாதத்தை மிகவும் உக்கிரமாக்கி, பல வெளிநாட்டுத் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து பயங்கரவாதம் செய்வதற்கு வழிகாட்டியவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது முஸ்லிம் உள்துறை அமைச்சரான முஃப்தி முகமது சையதுதான் என நான் உங்களுக்குக் கூறிக் கொள்கிறேன்.
அவருக்குப் பின்னர்தான் காஷ்மீரில் தீவிரவாதம் மிக உச்ச நிலையை எட்டியது.
மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் குஜராத்தில் ஏற்பட்ட கலவரங்களைக் குறித்து ஏகப்பட்ட சப்தமெழுப்பின இந்திய ஊடகங்கள். உங்களுக்குத் தெரியும்.
அவர் மீது வீசப்பட்ட அவதூறுகளுக்கு அளவில்லை. அவருக்கு அமெரிக்க விசா தரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவர் மீது வெறுப்பினைக் கொட்டின எதிர்க்கட்சிகள்.
அதேசமயம் இந்தியக் குடிமக்களான காஷ்மீரி பண்டிட்கள் அவர்களின் சொந்த இடத்திலிருந்து அகதிகளாக விரட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு கதறி அழுவதைக் குறித்து அதே ஊடகங்களும், அரசியல் கட்சிகளும், இந்த தேசமும் கவலைப் படவில்லை.
நன்றாக வாழ்ந்து கொண்டிருந்த காஷ்மீரி பண்டிட்கள் தங்களின் உடமைகளை இழந்து தில்லியின் பிளாட்பாரங்களில் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்ததை ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. இன்றுவரை அதற்கான ஊர்வலங்கள் நடக்கவில்லை. கண்டனங்கள் தெரிவிக்கப் படவில்லை.
அதேசமயம், ஒரு விவசாயின் வாழ்வாதாரமான மாட்டைத் திருடித் தின்ற அக்லாக் என்கிற முஸ்லிமையோ அல்லது வேறொரு முஸ்லிமையோ யாரேனும் கொன்றுவிட்டால் இந்த தேசத்தில் எழுப்பப்பட்ட கூக்குரல்களை நீங்கள் கேட்டிருக்கலாம். இவையெல்லாம் இந்தியா போன்றதொரு பெரிய தேசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கிற சம்பவங்கள்.
ஆனால் அந்தச் சம்பவங்கள் பெரிதுபடுத்தப் பட்டன. அதற்காக இந்த தேசத்தின் பிரதம மந்திரி மன்னிப்புக் கேட்கிறதொரு சூழலை இங்கு உருவாக்கினார்கள்.
இந்திய சுப்ரம் கோர்ட் “இந்தப் படுகொலைகளை (mob lynching) ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்திய அரசாங்கம் உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனக் கூக்குரலிட்டது.
இந்த தேசத்தில், இந்திரா காந்தி மரணத்திற்குப் பின்னர், புது தில்லியில், பிரதம மந்திரி, லுட்டியன்கள், சுப்ரீம் கோர்ட் போன்றவை இருக்கும் இதே புதுதில்லியில் 3500 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
சாலைகளில் சீக்கியர்களை ஓடவிட்டுக் கொன்றார்கள். கழுத்தில் டயர்களை மாட்டி எரித்துக் கொலை செய்தார்கள். சீக்கியக் குழந்தைகளை உயரத்தில் தூக்கி வீசிக் கொன்றார்கள். கொலை காரர்களுக்கு அஞ்சி பெட்டிக்குள் ஒளிந்த சீக்கியர்களை அந்தப் பெட்டியை எரித்துக் கொன்றார்கள்.
சகோதரர்களே, இந்த தேசத்தில் நடந்த முதலாவது mob lynching அதுதான். அதனைக் குறித்து சுப்ரீம் கோர்ட் இன்றுவரை ஏதேனும் சொல்லியிருக்கிறதா? இல்லை. ஏறக்குறைய ஐந்தரை இலட்சம் காஷ்மீரி பண்டிட்கள் முஸ்லிம்களால் அடித்து விரட்டப்பட்டது கூட சுப்ரீம் கோர்ட்டின் பார்வையில் ஒன்றுமேயில்லை.
ஆனால் அதே சுப்ரீம் கோர்ட் இந்திய ராணுவம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை சொல்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன், பாகிஸ்தானிய ராணுவத்துடனும் போராடிக் கொண்டிருக்கும் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து காயப்படுத்தும் காஷ்மீரிகளைத் திருப்பித் தாக்கக் கூடாது என்று அவர்களுக்கு டைரக்‌ஷன் கொடுக்கிறது இந்திய சுப்ரீம் கோர்ட்!
அதாகப்பட்டது கல்லெறிபவர்களைச் சுடக்கூடாதாம். அவர்களைச் சுடுவதென்றால் அவர்கள் மீது ப்ளாஸ்டிக் புல்லட்டுகள் உபயோகிக்க வேண்டுமாம். சுப்ரீம் கோர்ட் சொல்கிறது.
தீவிரவாதியுடன் சண்டை செய்கிற ராணுவத்தினன் அவனது துப்பாக்கிக் குண்டைக் கழற்றி வைத்துவிட்டு ப்ளாஸ்டிக் குண்டைப் போட்டு கல்லெறிபவர்கள் மீது சுடவேண்டுமாம்.
அப்படிச் செய்வது சாத்தியமில்லை என்று சொன்னால் கல்லெறிபவர்கள் மீது சுடுதண்ணீரை ஊற்றச் சொன்னது சுப்ரீம் கோர்ட்.
இந்திய ராணுவத்தினன் ஒவ்வொருவனும் துப்பாக்கியுடன் சுடுதண்ணீரையும் தூக்கிக் கொண்டு திரியவேண்டுமாம். இந்திய சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்துகிறது!
(முதல் ஏழு நிமிடங்களின் மொழிபெயர்ப்பு இது…)
வழக்கம் போல கூட்டம் கூடி முஸ்லிம்கள் நடத்தும் Citizens Amendment Act (CAA) எதிர்ப்பு என்கிற கோமாளித்தனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் ஒருத்தனுக்காவது இந்தச் சட்டம் குறித்துத் தெரியுமா என்கிற சந்தேகமே மேலிடுகிறது. அறிவுக்கும் இஸ்லாமிற்கும் சம்பந்தமில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். அல்லாவின் இஸ்லாமில் அறிவு இருக்கும்; முல்லாவின் இஸ்லாமில் மூடத்தனம்தானே இருக்கும்?
அதில் சில வீடியோக்கள் அச்சமூட்டுபவை. “தேரே மேரே ரிஷ்த்தா க்யா? லா இல்லாஹா இல்லல்லா” (உனக்கும் எனக்கும் என்ன உறவு. அல்லாவே பெரியவன்) போன்ற கோஷங்கள் இந்திய தேசப் பிரிவினையின்போது எழுப்பப்பட்டவை. அதே கோஷம் மீண்டும் எழுப்பபடுவது இஸ்லாமிய சமூகத்திற்குப் பெரும் சேதத்தையே விளைவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவும், ஹிந்துக்களும் வலிகளைத் தாங்கும் மனவலிமை உடையவர்கள்.
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

யாரிவர் என்று தெரியாது. இதற்குமுன் இவர் எழுதிய எந்தப் பகிர்வையும் வாசித்ததில்லை. ஆனாலும், VP சிங் இந்திய அரசியலுக்குச் செய்த /விளைவித்த சேதாரம் மிகப்பெரிது. கிடைக்கும் பழைய தகவல்கள், நினைவுகளில் இருந்து இந்தச் செய்தியின் உண்மை என்னவென்று பார்க்க வேண்டும் என்ற தகிப்பை உண்டாக்கியிருக்கிற பகிர்வு என்பது மட்டும் இப்போதைக்கு.

மீண்டும் சந்திப்போம்.          

இட்லி வடை பொங்கல்! #61 #வாரிசுஅரசியல்

சுவாசிக்கப் போறேங்க தளத்தில் வலதுசாரிகள், தேசிய வாதம்  தொடர்ந்து ஜெயிப்பது எதனால் என்று நான்கு பதிவுகளில் கொஞ்சம் கவனப்படுத்த வேண்டிய முக்கிய விஷயங்களைச் சொல்லிவருவதை நண்பர்கள் கவனித்திருக்கக் கூடும்! சில நாட்களுக்கு முன்னால் The Print தளத்தில் சேகர் குப்தா ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக் கொண்டு, இல்லாத இடங்களில் எல்லாம் விடையைத் தேடிக் கொண்டிருந்தார். ஆனாலும் ஒரு அனுபவமுள்ள பத்திரிகையாளராக அவரால் நரேந்திர மோடியைப் புரிந்து கொள்ள முடிகிறதோ? என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்!

  வீடியோ 10 நிமிடம் 

இந்திய அரசியல் சரித்திரம் எழுது:கிற ராமசந்திர குகா இந்த நுட்பம் புரியாமல் டெலிகிராப் நாளிதழில் ஒரு அரைகுறையான கட்டுரை எழுதி பொங்கியதை முந்தைய பதிவில் பார்த்தோமே, நினைவிருக்கிறதா? 
ராஜ்யசபாவில் நேற்றைக்கு ஒரு 76 வயது காங்கிரஸ் எம்பி,விப்லவ் தாகுர் பேசியது பூகம்பமே வந்த மாதிரி இருந்ததாம்! அதை அவரே டெலிகிராப் நாளிதழுக்குத் தொலைபேசியில் சொன்னாராம்: On Friday, Thakur told The Telegraph over phone that some BJP members told her after her 10-minute speech that “aapne bahut dara diya tha (you gave us a big scare)”. 


ராஜ்யசபாவில் காலிஇருக்கைகளைக் கவனியுங்கள்! மேலே டெலிகிராப் செய்தியின் தலைப்பு சொல்கிற மாதிரி நிஜ அதிர்வு, அல்லது அம்மணியே சொல்லிக் கொள்கிற மாதிரி பயம் இப்படி ஏதாவது வந்ததா என்ன!? இந்திய அரசியல் வரலாறு வீண் ஜம்பங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை நினைவு வைத்துக் கொண்டால் விப்லவ் தாகுர் பேசியதை எல்லாம் சட்டை செய்யத் தோன்றாது! விப்லவ் என்றால் புரட்சியாம்! புரட்சி வெடித்துவிட்டது என்று கூட சொல்லிக் கொள்ளலாம்! யார் சட்டைசெய்யப் போகிறார்கள்!! 

  வீடியோ 13 நிமிடம் 

நேற்றைய மக்களவை அமளியை ஆரம்பித்து வைத்தது தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் என்பதில் தமிழேண்டா ஆசாமிகள் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம்! இப்படிப்பட்டவர்களால் நேருவின் பெயரையோ, காங்கிரசையோ காப்பாற்ற முடியாது என்பது ஏனோ அவர்களுக்கு புரியவில்லை! அவர்கள் தூக்கிப்பிடிக்கும் #வாரிசுஅரசியல் தலைகுப்புறக் கவிழ்ந்து கிடப்பதை எவர்வந்து காப்பாற்றி விட முடியும்?  இந்திரா வாரிசுகளுடைய நிலைமைதான் அப்படி என்றால் கருணாநிதியின் வாரிசு நிலைமை எப்படியாம்?  

       வீடியோ 21 நிமிடம் 
    
இனி ரஜனியை மையமாக வைத்துத்தான் அரசியல் இங்கே நடக்கும்  என்கிறார் ரவீந்திரன் துரைசாமி! அவர் சமீபநாட்களில் தொடர்ந்து சொல்லிவருவதுதான்! ஆனால் இதை மவுன்ட்ரோடு மாவோ நாளிதழ் வெளியிட்டிருப்பது தான் வினோதம்! தினத்தந்தியும் கூட ரஜனி வாய்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதில் தாங்கள் பின்தங்கி விடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் அடுத்து நாங்கள் தான் ஆட்சியைப் பிடிப்போம் என்று மூச்சுக்கு மூச்சு பேசிக்கொண்டிருக்கிற இசுடாலினுக்கு இது அவ்வளவு நல்ல செய்தியில்லை. பிரசாந்த் கிஷோர் வந்து இசுடாலின் இமேஜை என்ன makeover செய்துவிட முடியும் என்பது நிஜமாகவே புரியவில்லை.

         வீடியோ 19 நிமிடம் 

2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் பிஜேபியின் உத்தி என்னவாக இருக்கும்? ரவீந்திரன் துரைசாமி ஏதோ சொல்கிறார். தமிழக பிஜேபி ஆசாமிகளுக்கு இது தெரியுமா? 😁😁

மீண்டும் சந்திப்போம். 

ராகுல் காண்டி! ராமசந்திர குகா! சேகர் குப்தா!

மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாய் இல்லை! அதுபோல ஒருநாள் எழுதாமல்தான் இருந்துபாரேன் என்று இருக்க நினைத்தவனை இந்த வீடியோவும் ராமச்சந்திர குகாவும் பதிவெழுத வைத்தாயிற்று.


ட்யூப்லைட் ராகுல் காண்டிக்கு மக்களவையில் பேசத் துணிவில்லை! வெளியே நிருபர்களிடம் சவடாலாகப் பேசமட்டும் தெரிகிறதா? எத்தனைநாட்களுக்கு இந்த ஒன்றுக்கும் உதவாத வாரிசை காங்கிரஸ் தூக்கிச் சுமக்கப்போகிறது என்பது காங்கிரஸ்காரன் தலைவிதி! ஆனால் இந்த தேசமும் சேர்ந்து சுமக்க வேண்டும் என்பது ஜனங்களுடைய தலையெழுத்தா என்ன? ராஜதீப் சர்தேசாய் அப்படித்தான் நினைக்கிற மாதிரித் தெரிகிறது! நேற்று பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பேசும்போது நேரு பெயரை 23 தரம் குறிப்பிட்டுப் பேசிவிட்டாராம்! அதைக்கூட அவருக்காக ராமசந்திர குகா தான் எண்ணிச் சொல்ல வேண்டி இருக்கிறது!  

    
ராமச்சந்திர குகா நேருவின் பரமபக்தர்! மோடி எதிர்ப்பு மிகுந்தவர் என்பதெல்லாம் தெரிந்த செய்தி. சரித்திரம் எழுதுகிறவர் என்பதில் இருக்கும் ஆகப்பெரிய கோளாறே பழைய விஷயங்களிலேயே தேங்கி நின்று விடுகிறார் என்பதுதான்! கடந்தகால நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வெளியே வந்துவிட வேண்டும்! கடந்தகாலத்திலேயே சிறைப்பட்டுவிடக் கூடாது என்பதே தெரியாதவரிடம், என்னபெரிதாகத் தெரிந்து கொண்டுவிட முடியும்? நேரு பெரியவர் மிகப்பெரியவர் மிகமிகப்பெரியவர் என்றே சொல்லத் தெரிந்தவருக்கு மோடி எதற்காக நேரு எந்தக்காலத்திலோ பேசியதை, மேற்கோள் காட்டவேண்டும்? அதுவும் காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்துப் பேசவேண்டும் என்பது புரியவில்லையாமா?

Modi seized on the word “minorities” in the 1950 pact between Nehru and his then Pakistan counterpart Liaquat Ali Khan to defend the exclusion of Muslims from the CAA. “Such a big secular person like Nehru, such a great thinker, such a big visionary; and everything to you, why did he not use then all citizens instead of minorities there? There must have been some reason,” he said, looking towards the Congress benches. என்று டெலிக்ராப் நாளிதழில் எழுதிய கட்டுரையில் ராமசந்திர குகா கறைப்பட்டுக் கொள்வதில், மோடி என்ன தவறு செய்துவிட்டாராம்? நேருவின் அந்தக் கடிதத்தில் முதல் வரியில் “irrespective of religion” என்று சொல்லியிருந்ததாகவும் அதை மோடி செலெக்டிவாக சொல்லாமல் விட்டுவிட்டார் என்று பொங்கியிருக்கிறார்! ஏன் பொங்கிப் பொருமுகிறார் என்பதற்கு மேலே சிவப்பில் காட்டியிருக்கிற கிண்டலான தொனிதான் காரணம்! He then tossed questions at the Opposition. “Was Pandit Nehru communal, I want to know? Did he discriminate between Hindus and Muslims? Did he want a Hindu Rashtra?” Modi asked. மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் எழுப்பிய கேள்விக்கு, அங்கே இருந்த காங்கிரஸ் எம்பி ஒருத்தருக்கும் பதில் தெரியவில்லையாமா? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை, நேரு , இந்திரா எல்லாம் கடந்தகாலம்! இன்னும் கொஞ்ச காலத்தில் சோனியாவும்! ராகுல் காண்டிக்கு சலாம் வைப்பதா, பப்பி வாத்ராவுக்கு சலாம் வைப்பதா என்றே தெரியாமல் இருக்கிறவர்களுக்கு, ராமசந்திர குகா, நேரு பெரியவர் மிகப்பெரியவர் மிகமிகப் பெரியவர் என்று புலம்புவது கேட்டிருக்குமா என்பதே சந்தேகம் தான்!

      
ராமசந்திர குகாவுக்கு விசிறிவிட இப்படி ஒன்றிரண்டு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது இன்னும் சோகம்😩😟😟  


சேகர் குப்தா, இந்த 18 நிமிட வீடியோவில், ராமசந்திர குகா மாதிரி சிறுபிள்ளைத்தனமாக எழுதிப் புலம்பவில்லை என்பது முதல் ஆறுதல்! ஆனால் நேருவை மேற்கோள் காட்டியது உட்பட காங்கிரசுக்கும் நாட்டுமக்களுக்கும் நரேந்திரமோடி தனது 100 நிமிட நன்றியுரையில் பேசியதை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்வது? சேகர் குப்தா அவருடைய பணியில் விளக்குகிறார். ராமசந்திர குகா தனது மண்டையில் திணித்து வைத்திருக்கிற பழைய குப்பைகளை வெளியே எறியாமல், நடப்பு நிலவரங்களை விமரிசனம் செய்வது சரியாக இறுக்காது. சேகர் குப்தா பேசியதில் தெளிவான விஷயம் இதுவும் தான்!

மீண்டும் சந்திப்போம்.