Showing posts with label இதுதானய்யா காங்கிரசு. Show all posts
Showing posts with label இதுதானய்யா காங்கிரசு. Show all posts

இட்லி வடை பொங்கல்! #70 சோனியா காங்கிரஸ் செய்வது நல்ல #அரசியல் தானா?

இட்லி வடை பொங்கல் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்து அதன் எழுபதாவது பதிவு இது. கடந்த வருடத்தில் சீராக வெளிவந்த பதிவுகள், கொரோனா தாக்கத்தை விட மிகவும் மோசமாக இந்திய அரசியல் போய்க்கொண்டே இருப்பதால் இந்த 70வது பதிவை எழுத முயன்று நிறைய சனிக்கிழமைகளில் கைவிட்டிருக்கிறேன். இந்தப் பக்கம் எழுதி ஒருமாதத்துக்கும் மேலாகி விட்டதால், இன்றைக்குக் கொஞ்சம் எழுதலாமே என்ற எண்ணம் வலுத்ததால் இந்தப் பதிவு. தூண்டுதலாக இந்த ட்வீட்டர் செய்தி இருந்தது என்று தனியாகச் சொல்ல வேண்டுமா?    

ஒரு காங்கிரஸ் விசிலடிச்சான் குஞ்சு ஒரு கட்டுரையை காங்கிரஸ் தொண்டர்களுக்கு (அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன?! ) புளகாங்கிதத்துடன் வாசிக்கச் சொல்லிப் பரிந்துரைத்திருக்கிறார்!
 
 
மேலே படத்தில் இருப்பது பரத் பூஷன். Sr.Journalist  இந்த மூத்த பத்திரிகையாளர் என்ற அடைமொழிக்கு என்ன அர்த்தம் என்று நினைக்கிறீர்கள்? ஒருவர் எதைப்பற்றி எழுதுகிறாரோ அதைப்பற்றிய தெளிவுடன் அனுபவமும் கூடியவர் என்று தானே நினைக்கிறீர்கள்? இந்திய சூழ்நிலையில், அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது. இங்கே பெரும்பாலான பத்திரிகையாளர்கள் ஒருபக்கச் சார்பாகவே எழுதுகிறவர்கள், தங்களை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகவே  நினைத்துக் கொண்டு கருத்துக்கள், உபதேசங்களை அள்ளி வீசுகிறவர்கள் என்றொரு யதார்த்தமும் இருக்கிறதே! 25+ வருடங்கள் அனுபவமுள்ள பரத் பூஷன் மட்டும் விதிவிலக்கா என்ன?

  
இது The Quint தளத்தில் நேற்று பரத் பூஷன் எழுதிய விமரிசனக் கட்டுரையின் சாராம்சம்.  என்ன சொல்ல வருகிறார் என்று பார்த்தால், மூத்த பத்திரிகையாளர், இருபத்தைந்து வருடங்களுக்கும் மேல் பல இதழ்களின் நிர்வாகப்பொறுப்பிலும் இருந்த ஒருவர் என்பதெல்லாம் காணோம்!  சோனியா காங்கிரசின் பழந்தலைகள் அல்லது பெருசுகளை மட்டுமே விமரிசிக்கிற மாதிரி காரணங்களை அடுக்கினால் அது எந்த அளவுக்குப் பொருத்தமானதாக இருக்கும்? கட்சி அமைப்பைத் தனது சௌகரியத்துக்காக பாட்டி இந்திரா உடைத்து நொறுக்கிய அதே பாணிதானே இன்றைக்கும் தொடர்கிறது? பானாசீனாவின் உபயோகமே வேறு! அவரையோ அவர் மகனையோ போய்க் களத்தில் இறங்கி. கட்சியைக் கீழே இருந்து கட்டு என்றால் நடக்கிற காரியமா? காங்கிரசுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கி இருக்கிறது என்பதைத்தவிர கட்சி அமைப்போ. தொண்டர்களோ, அவர்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்களோ கடந்த 55+ வருடங்களில் இருந்ததே இல்லை. 

கட்சியைக் கீழே இருந்து கட்டுவதில் அனுபவமுள்ள கம்யூனிஸ்டுகளே ஸ்தாபன அமைப்பு வலுவிழந்து சிதறிக் கிடக்கிறார்கள் என்கிறபோது, கட்சித் தலைமையே தனது சௌகரியங்களுக்காக கட்சியை உடைக்கிற பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சி, எப்படிக் கட்சி அமைப்பை வலுவாக்குமாம்? கட்சி அமைப்பைக் கட்டக்கூடிய திறமையுள்ள காங்கிரஸ் ஆசாமி யாரேனும் இருக்கிறாரா என்ன? 

The real issue that the Congress party must urgently address is to revive party institutions – from booth level to the All India Congress Committee. Unless these institutions are activated, made vibrant and meet regularly, there cannot even be an accountable discussion of the party’s performance. Where will Congressmen air their opinions when the AICC does not meet regularly—the party Constitution mandates six monthly meetings but there is often not even an annual meeting? என்று எழுதத் தெரிந்த பரத் பூஷனுக்கு இப்படியொரு கோளாறைத் தொடங்கி வைத்ததே இந்திரா காண்டி தான் என்பது தெரியாதா? மாமியாரை மிஞ்சிய மருமகள் சோனியா, கட்சியைத் தனது குடும்பக் கம்பெனியாகவே குறுக்கி விட்டார் என்பதும் தெரியாதா? 

தெரிந்தே தான் சோனியா, ராகுல், ப்ரியங்கா இவர்கள் மீது வைக்கப்படும் விமரிசனங்களை நிராகரிக்கிறார். நிராகரிக்கிற அளவுக்கு சோனியா அல்லது அவரது மக்குப்பிள்ளைகள் அப்படி என்ன உருப்படியான அரசியல் செய்து கொண்டிருக்கிறார்களாம்? அதைப்பற்றி ஒன்றையும் சொல்லக்காணோம்! இருந்தால்தானே சொல்ல? 

ராகுல் காண்டி வழக்கம்போல ட்வீட்டரில் மட்டும் வந்து அக்கப்போர் அரசியல் செய்து கொண்டிருக்கிறார். பப்பி அறிக்கைகள் மட்டும் விட்டுக் கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கிறார். கட்சித்தலைமையை வேறு எவருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லாத சோனியா காண்டி தன் மக்குப்பிள்ளைகள் அரசியல் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அப்புறம் என்ன? சோனியா காங்கிரஸ் அப்படியே எழுந்து நின்றுவிடும் என்று நம்புகிறவர்கள் மிகவும் கம்மியான நபர்கள்தான்! பரத் பூஷன் கூட அப்படி நம்புகிற ஆள் மாதிரித் தெரியவில்லை, மோடி மீதான வெறுப்பு மட்டுமே பலரை ஒருபக்கச்சார்புடன் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம். 

கொஞ்சம் செய்தி! கொஞ்சம் அரசியல்! இப்போது வாசிப்பில்!

நியூஸ் 7 சேனலில் கடந்த 18 ஆம் தேதி ஒளிபரப்பிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கரூர்  தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை இழிவாகப் பேசியதற்கு அவருக்குப் புரிகிற நாகரிகமான வார்த்தையிலேயே பிஜேபியின் சார்பில் பேசிவந்த கரு.நாகராஜன்  திருப்பிக் கொடுத்தது நான்கு நாட்களாகப் பற்றிக்கொண்டு எரிகிறது. காங்கிரசுக்கு வால் அறுந்தது போதாதென்று, கூட்டணியில் இருக்கிற அத்தனை கட்சிகளும் வாலை அறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் கோபண்ணா ஒரு அறிக்கை விட்டிருப்பது  ஜோதிமணியையும் மிஞ்சுகிற  செம காமெடி! காங்கிரஸ்காரர்கள் என்றாலே கிறுக்கு  மாய்க்கான்கள் தான் என்பது D K  பரூவா காலத்திலிருந்தே தொடரும் விஷயம்தான்!

 
 
ஒருவிதத்தில் ஜோதிமணி பாவம் தான்! ஆனால் அவரை விட நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த கரூர் தொகுதி மக்கள் மிகவும் பாவம் என்று எவருமே சொல்ல மாட்டேன் என்கிறார்களே! இந்திய அரசியலைக் காங்கிரஸ் எந்த அளவுக்குக் கெடுத்துச் சீரழித்திருக்கிறது என்பதற்கு காங்கிரசுக்கு கிடைத்த புது ரத்தம் ஜோதிமணியே ஒரு நல்ல உதாரணம். 


இன்றைக்கு ராஜீவ் காண்டி நினைவு தினமாமே! கருணாநிதி , கொஞ்சம் பொறாமையோடு  ஆனால் 
சரியாகத்தான் அந்த நாட்களிலேயே சொல்லி இருக்கிறார் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது!  


கிழக்கு வெளியீடுகள் எதையும் வாங்குவதில்லைஎன்று முன் ஒருகாலத்தில் உறுதியாக இருந்ததுண்டு. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு போல அபத்தமான புத்தகம் படித்த  பிறகு  அந்த எண்ணம் மேலும் உறுதியானது. ஆனால் என் மகனுக்கு  அப்படி சங்கல்பமெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு இருபது புத்தகங்களுக்கும் மேல் கிழக்கு வெளியீடுகளாக வாங்கிப் படித்துவிட்டு இங்கே தள்ளிவிட்டிருக்கிறான். அதில் வினய் சீதாபதி எழுதியதன் தமிழ்வடிவமும் ஒன்று. நீண்ட நாட்களுக்கு முன்  திருப்பூர் ஜோதிஜி இந்தப்புத்தகம்  பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வரவே நேற்று முன்தினம் வாசிக்க எடுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த நாளைய  அரசியல்  நிகழ்வுகளை நினைவு படுத்திக் கொண்டு வாசிப்பு தொடருகிறது. 

என்னமோ ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை வாசிக்க எடுத்துக் கொண்டதாகப் பீலா விட்டிருந்தது என்ன ஆயிற்று? வெறும் 80 பக்கங்களிலேயே மூடி வைத்தாயிற்று! எங்கள் தொகுதி எம்பி வடித்த காவியங்கள் காவல்கோட்டமும் வேள்பாரியும் எதிரே ஷெல்பில் இருந்தாலும் எடுத்துப்படிக்க இன்னமும் மூடு வரவில்லை! 

மீண்டும் சந்திப்போம்.  
 

ஆர்னாப் கோஸ்வாமி மீது CONகிரஸ் குண்டர்கள் தாக்குதல்!

நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் ஆர்னாப் கோஸ்வாமி சோனியாவுக்கு நேரடியான சில கேள்விகளை எழுப்பியதற்காக CONகிரஸ் குண்டர்களால் தாக்கப் பட்டிருக்கிறார். கட்சி சொல்லித்தான் தாக்கினோம் என்று அந்தகுண்டர்கள் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் சொல்கின்றன.  ஆர்னாப் கோஸ்வாமி அப்படி என்ன கேட்டு விட்டார் என்பதை இங்கே கேட்கலாம். வீடியோ 54 நிமிடம்  

\

அர்னாப் கோஸ்வாமி....தன் மீது.. நேற்று இரவு..தாக்குதல் முயற்சி நடந்ததாக புகார் அளித்திருக்கிறார்.

பிரச்சினையின் மையப்புள்ளி ..மஹாராஷ்டிரா Palghar-ல் காவல்துறையினர் முன்னிலையில் வெறி பிடித்த கும்பலால் அடித்தே கொல்லப்பட்ட இந்து துறவிகள் & அவர்களது கொலைக்கான நியாயம் கேட்டல்.சோனியா...இவர்களின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து.. ஏன் அறிக்கை கொடுக்கவில்லை ? என்று கேட்டார் அர்னாப்.

இதற்கு தான் இத்தனை அடிதடி.

சோனியா நேரடி அரசியலுக்கு வந்த பின்னரும் கூட..இந்திய ஊடகங்கள் எதுவும் அவரை நேரடியாக கேள்விகள் கேட்டதில்லை. சேகர் குப்தா ..சோனியாவை ஒரு பேட்டி எடுத்திருந்தார். அதில் கேட்கப்பட்ட கேள்விகள்...'உங்கள் மாமியார் இந்திரா காந்திக்கு பிடித்த உணவு என்ன ?' 'நீங்கள் அவருக்கு பிடித்த உணவை சமைத்து கொடுத்திருக்கிறார்களா ?' என்பது போன்ற கேள்விகள் மட்டுமே. 130 கோடி பெரும் மக்கள் திரளை கொண்ட இந்திய நாட்டின் அரசியலின் மையத்தில் ..உயர்ந்த அதிகார பீடத்தில் இருக்கும் சோனியாவிடம்.. அரசியல் பேட்டிகள் எடுக்கவோ ...அரசியல் கேள்விகள் கேட்கவோ ...இந்திய ஊடகங்கள், இந்திய பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள் முயலவில்லை. அவ்வாறு முயன்ற வெகு சிலரும் அமைதியாகி விட்டனர்.

இந்த நிலையில்...அர்னாப்.. 'துறவிகள் அடித்துக் கொல்லப்பட்டதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ?' என்று 'நேரடியாக சோனியாவை நோக்கி' .. கேள்வி கேட்டு...இந்திய மக்களுக்கு...கவனப்படுத்துகிறார்.

He is breaking the Ivory Tower. He is breaching the unbreachable.

துறவிகள் அடித்துக் கொல்லப்பட்டதற்கு சோனியா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் கவனிக்க தக்கது.

நேரடியான சண்டை துவங்கி இருக்கிறது.

இதன் போக்கும், முடிவும்...இந்திய பொதுமக்களுக்கு அரசியலின் ஆச்சரியமான பல கோணங்களை வெளிப்படுத்த கூடும் 


இதுவரை பிரதமர் மோடியின் மீது தூக்கி வீசிய விமர்சனங்களுக்கு,பேசிய வசைகளுக்கு சர்வ அதிகாரத்தில் இருக்கும் பாஜகவால் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்களா?

இன்று அர்னாப் கோஸ்வாமி அவருடைய மனைவியுடன் தாக்கப்பட்டிருப்பதை எந்த பத்திரிக்கையாளனும் கண்டித்ததாக தெரியவில்லை.இதுதான் இவர்களின் ஜனநாயகம்.ஆனால் எங்கேயோ காவி கட்டிக்கொண்டு ஒருவன் பொறிக்கித்தனத்தில் ஈடுபட்டால் அவன் நேரடி மோடி கண்காணிப்பில் அதை செய்ததாக பேசுவார்கள்..

நமக்கு காங்கிரஸ்,திமுக கதையாவது தெரிந்தது.ஜனநாயக வகுப்பெடுக்கும் கோமாளிஹாசன் போன்ற காந்தியவாதிகள் ஏன் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள்? இவர்களுக்கு இனி மற்றவற்றை பேச என்ன தகுதி உள்ளது?

கருத்துரிமை,ஜனநாயகம் என்று வாய்கிழிய பேசுபவன் நம்மை சரியான நேரத்தில் அறுத்து கூறு கட்டி விற்க காத்திருக்கும் கசாப்புக் கடைக்காரன் என்பதை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்..நம்மை கொலை செய்ய ஆயுதத்தோடு வருபவனைக் கூட நம்பலாம் ஆனால் ஒரு போதும் இவர்களை நம்பக்கூடாது நண்பர்களே..

இவர்கள் அஹிம்சை,ஜனநாயகம் என்பதையெல்லாம் விரும்பி ஏற்றவர்கள் இல்லை.வேறு வழியில்லாமல் ஏற்று நிற்பவர்கள்..


மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் இரு சாதுக்கள் அடித்துக்கொல்லப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரடியாக குற்றம்சாட்டி பேசி அவதூறு செய்த ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வழக்குப் பதிவு ெசய்யப்பட்டுள்ளது ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளி்ட்ட பல்வேறு  மாநிலங்களிலும் காங்கிரஸார் அர்னாபுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் 

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் கடந்த 16ம்தேதி இரு சாதுக்கள் உள்ளிட்ட 3 பேர் சில்வாசாவுக்கு வந்து கொண்டிருந்த போது கடாக்சின்சாலை கிராமத்தில் ஒரு கும்பலால் திருடர்கள் என நிைனத்து அடித்துக்கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக சாதர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பாக நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அர்னாப் கோஸ்வாமி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு குற்றம்சாட்டிப் பேசினார். இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் போலீஸ் நிலையத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் மோகன் மார்கம், ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் அளித்தார். அந்த புகாரில் இரு சமூகத்தினருக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அர்னாப் பேசியுள்ளார். சமூகத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலும், மதநம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சோனியா காந்தி மீது சுமத்தியுள்ளார்” எனத் தெரவித்துள்ளனர். இதையடுத்து அர்னாப் கோஸ்வாமி மீது ராய்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலும் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அர்னாப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த புகாரையடுத்து, அர்னாப் மீது ஐபிசி 117, 120(பி), 153(ஏ),(பி), 295(ஏ),290(ஏ), 500, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பேசியுள்ளனர். மாநில உள்துறை அமைச்சர் பாலசகேப் தோரட் ட்விட்டரில் கூறுகையில், “ பால்கர் தாக்குதலை வகுப்புவாதத்தோடு தொடர்புபடுத்தும் அர்னாப் கோஸ்வாமியின் செயலைக் கண்டிக்கிறேன். எதிர்பாராமல் நடந்த சம்பவத்தை காங்கிரஸ்தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அவதூறாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. முதல்வரிடம் பேசியுள்ளேன் அர்னாப் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ்திசை செய்தி. 

காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக ஒழிந்தால் மட்டுமே இந்த நாட்டில் அரசியல் நாகரிகம், ஜனநாயகம் பிழைத்திருக்கும் என்பதை  நினைவூட்டுகிற சம்பவம் இது.

மீண்டும் சந்திப்போம்.

இட்லி வடை பொங்கல்! #67 உண்மையைக் கையாளுவது! ஊடகப்பொய்கள்! மீண்டும் பப்பு!

கொரோனா தொற்றைக் கையாளுவதை விட கொரோனா வைரஸ் பற்றி ராகுல் காண்டி மாதிரியான திடீர் மேதாவிகள் வெளியிடும் அறிக்கைகள், அரசுக்கு ஆலோசனைகள் இவற்றைக் கையாளுவது எப்படி என்பதுதான் உண்மையிலேயே இப்போது தலையாய பிரச்சினை என்றால் நம்புவீர்களா?  ஊடக விவாதங்களைக் கொஞ்சநாள் காதில் வாங்கிக் கொள்ளாமல் கழித்துவிட்டு இப்போது மறுபடியும் கேட்க ஆரம்பித்ததில் எனக்கு எழுந்த பிரச்சினை அதுதான்!

 

சேகர் குப்தாவுக்கும் என்னைப்போலவே கொஞ்சம் தடுமாற்றம் இருந்திருக்கும் போல .இந்த 13 நிமிட வீடியோவில் செய்திகளை எப்படிப்புரிந்து கொள்வது என்பதை 
 டாம் க்ரூஸ் படமொன்றில் வருகிற You Can't handle the Truth  வசனத்தை வைத்து விளக்க முயற்சி செய்திருந்தது கொஞ்சம் சுவாரசியம்! யாருமே உண்மையை நம்புவதற்குத் தயாராக இல்லை, ஆனால் மோசமான செய்தியை அப்படியே ஏற்றுக் கொள்கிற மனோநிலையில் தான் இருக்கிறார்கள் என்ற ரீதியில் சேகர் குப்தா கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் பற்றிச் சொல்கிறார் . சின்ன வீடியோதான், கொஞ்சம் பாருங்களேன்! 

Elon Musk [ Tesla ] 1000 வென்டிலேட்டர்கள் வாங்கி இருப்பதாகவும்..அவற்றை ..காலிஃபோர்னியா மருத்துவமனைக்கு கொடுக்க இருப்பதாகவும் அறிவித்து..3 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் வென்டிலேட்டர்கள் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்று மருத்துவமனை சொன்னதாக...CNN செய்தி வெயிட்டிருந்தது .

இதை பார்த்த Elon Musk..உடனடியாக... '' நீங்கள் அனுப்பியிருந்த வென்டிலேட்டர்கள் நன்றாக இயங்குகின்றன. உதவியதற்கு நன்றி'' என்று .மருத்துவமனையிலிருந்து தனக்கு வந்த e mail-ஐ ட்விட்டரில் வெளியிட்டதோடு..இன்னும் CNN எல்லாம் செய்தி ஊடகமாக இயங்குவது ஆச்சரியமளிக்கிறது ! என்றும் கூறி இருக்கிறார். உண்மை தான்.

இதில் ..வேடிக்கை என்னவென்றால்...Twitter-ரே பெரிய பொய் சொல்லி தான். Twitter செய்கிற அரசியலுக்கும், அதன் அப்பட்டமான அரசியல் சார்புகளுக்கும் ...அதனை.. CNN-ன் பெரியண்ணன் என்று கூட சொல்லலாம் 

சீன வைரஸ் பேரிடர் ..பலவற்றையும் / பலரையும் வெளிப்படுத்தி புரியவைத்துக் கொண்டிருக்கிறது.
#ElonMusk #Tesla #CNN #ChineseVirus

CNN கிடக்கட்டும்! சாதாரண செய்திகளைக் கூட இங்கே நம்மூர் சேனல்கள் எப்படித் தலையைப் பிய்த்துக்கொண்டு மோடி எதிர்ப்பு செய்திகளாக மாற்றலாம் என்று 24 மணிநேரமும் பாடுபடுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் பாருங்களேன்! ஊடகங்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்பவை என்பது தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? !!


  

நீலம் பாண்டே இன்றைய The Print தளத்தில் இப்படிப்படம் போட்டுச் சொல்வது ஒன்லைனராகச் சொல்வதானால் பப்பு ரிடர்ன்ஸ் என்பதுதான்! எந்தச் செய்தித்தாளிலும் பார்க்கவில்லையே என்று பிராண்டிக் கொள்ளாதீர்கள்! நேரு மற்றும் வாரிசுகளின் செயல்பாடுகளே கொஞ்சம் விசித்திரமானவை பலநேரங்களில் மிகவும் விபரீதமானவை என்பதை நேரு குடும்ப வரலாறே சொல்லும். அந்தவகையில் சோனியாG இன்றைக்கு டம்மிப்பீஸ் மன்மோகன் சிங் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார். ராகுல் காண்டி இடம்பெற்றிருக்கிறார். வழக்கமாக எல்லா விஷயங்களிலும் இடம் பிடிக்கும் A K அந்தோணி, அஇந்தக்குழுவில் கமது படேல் மற்றும் குலாம் நபி ஆசாத் இவர்களுக்கு இதில் இடமில்லை. பணப்பசி பானாசீனா, ஜெய்ராம் ரமேஷ்  இந்தக்குழுவில் இடம் பெற்றிருப்பது சும்மா லுலுலாயிக்கு! மன்மோகன் சிங் சேர்மனாம்! அடுத்த இடம் ராகுல் காண்டிக்கு!   Though former Prime Minister Manmohan Singh has been appointed chairman of the committee, with Rahul’s name coming after him on the list, Congress leaders didn’t miss the message — that Rahul has virtually taken direct control of the party affairs after sidelining veterans who were close to Sonia Gandhi since her entry in politics in 1998. என்னாது? ராகுல் காண்டி கட்சியை மீண்டும்  கைப்பற்றி விட்டாரா என்றெல்லாம் கற்பனைக்குதிரையைத் தட்டிவிடாதீர்கள்! செய்தியின் முக்கியமான அம்சம் அகமது படேலைக் கழற்றிவிட்டது, ராகுல் காண்டியின் விசுவாசிகளை வைத்து நிரப்பியிருப்பது என்பது மட்டும்தான்!  The Consultative group is full of members from Rahul Gandhi’s team, including Randeep Singh Surjewala, K. C. Venugopal, Jairam Ramesh, Manish Tewari, Praveen Chakravarty, Gaurav Vallabh, Supriya Shrinate and Rohan Gupta.

        

காங்கிரஸ் கட்சி இனிமேலும் உயிர்த்தெழும், பிழைத்துவிடும் என்று இதற்கு மேலும் கூட  நம்புகிற அப்பாவிகள், நம்புவதற்கான காரணம் ஏதாவது இருந்தால் வந்து சொல்லலாம். தடையில்லை!

மீண்டும் சந்திப்போம்.     

இட்லி வடை பொங்கல்! #65 ஒரு கருத்துப் படம்! பொருமல்! தினமணி தலையங்கம்!


இன்று PGurus தளத்தில் பார்த்த இந்த கார்டூன் சிரிக்க வைத்ததோடு நிற்கவில்லை! பின்னூட்டத்தில் ஒருவாசகர் எழுதியிருந்த விமரிசனம்

படத்தைவிட அடிப்பொளி! கார்டூன் கலீதா பேகம் என்கிற இஸ்லாமிய பெண்மணி ஹஜ் யாத்திரைக்காகத் தான் சேமித்து வைத்திருந்த ஐந்து லட்ச  ரூபாயையும் PM Cares என்கிற கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்ததைச் சொல்கிறது. சோனியாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு நடக்கும் ராகுல் காண்டி நாம் இதற்குஎவ்வளவு எவ்வளவு கொடுத்தோம் என்று அன்னையிடம் கேட்பதாக! காங்கிரஸ்கார்கள் நிவாரண நிதி எதையும் கொடுக்கவில்லை என்பது தெரிந்தவிஷயம் தானில்லையா?  இதற்கு சோனியா பதில் சொல்வதாக வந்த கமென்ட் : நாம் எதுவும் கொடுப்பதில்லை! கொள்ளை மட்டும் தான் அடிப்போம்!  

 


ராமச்சந்திர குகா மாதிரி நேரு அபிமானிகளுக்கு கொரோனா நிவாரணத்துக்காக PMCares என்ற புதிய நிதியைத் தொடங்கியது ஏகத்துக்கும் வருத்தம் அளித்திருக்கிறது. ஏற்கெனெவே பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி என்ற ஒன்று இருக்கும்போது இது எதற்காக என்பது அவருடைய கேள்வி. சசிதரூர் அப்புறம் சில காங்கிரஸ் உளறுவாயர்களுக்கும் இதே பொருமல் தான்! எதனால் என்பதை மேலே உள்ள படம் தெளிவாகவே சொல்கிறது.     


மன்னிக்கக் கூடாத குற்றம்!  தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த இன்றைய தினமணி நாளிதழ் தலையங்கம்


உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்தகவலைச் ம் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது,  கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது.  தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும்,  இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.

தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம்,  அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது. இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.  

200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் கூடும் எல்லா விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், மதச் சடங்குகள் ஆகியவற்றையும் தடை செய்து தில்லி அரசு பொதுத்தடை அறிவித்த அன்றுதான் தப்லீக் ஜமாத்தின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. உடனேயே  அந்த மாநாட்டை ரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால்,  எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி இருப்பார்கள்.

மார்ச் 16-ஆம் தேதி, 50 பேருக்கும் அதிகமானோர் கூடும் எல்லாக் கூட்டங்களையும் மார்ச் 31 வரை தடை செய்வதாக தில்லி அரசு அறிவித்தபோதாவது, உடனடியாக அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புவதில் மசூதி  நிர்வாகம் முனைப்புக் காட்டியதா என்றால் அதுவும் இல்லை. இந்த மாநாடு கூடுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தில்லி அரசும், தில்லி காவல்துறையும் உடனடியாக அதைத் தடுக்கவும் முடக்கவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள். அவர்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும்,  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள். ஜனநாயக இந்தியா இதை சகித்துக் கொண்டிருக்கிறது.

9,000-க்கும் அதிகமான தப்லீக் ஜமாத்தின் தொண்டர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளும் தீநுண்மி நோய்த்தொற்றுக்காகத் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 500}க்கும்  அதிகமானவர்கள் தில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பெற்றவர்கள். தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர்களில் 1200 பேர்தான் திரும்பியிருக்கிறார்கள்.  திரும்பியவர்களில் 364 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு  மாநிலங்களுக்குத் தீநுண்மி நோய்த்தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள்.  அது குறித்து அவர்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 188 பேரில் பலர் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறார்கள். மருத்துவர்களையும்  செவிலியர்களையும் சிலர் தாக்கியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் மாநாட்டிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரைக் கல் எறிந்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.  இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன. 

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 960 பேர்  வந்திருக்கிறார்கள். மதப்பிரசாரம் செய்ய வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதற்கான நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி பெற்று  தில்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது நுழைவு அனுமதி இப்போது  ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

ஊரடங்கு  வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும்  தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது. மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார்.

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு, மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல? என்ற கேள்வியோடு தலையங்கம் முடிகிறது. 

மீண்டும் சந்திப்போம் 

இவ்வளவுதான்! #அரசியல் இவ்வளவுதான்!

வரலாற்றில் டில்லியை சமாதிகளுடைய நகரம் என்று சொல்வதுண்டு. முகலாய ஆட்சியின் எச்சமாக எங்கு பார்த்தாலும் சமாதிகள் என்று அதற்கு காரணம் வேறு சொல்வார்கள். CAA எதிர்ப்பாளர்கள் அதை மீண்டும் நிலைநாட்ட விரும்புகிற மாதிரி நேற்றும் இன்றும் டில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெடித்து இதுவரை 7 பேர் பலி என்ற செய்தி வேறு. நாட்டின் தலைநகருக்கு அமெரிக்க அதிபர் வந்திருக்கிற சமயம், இப்படி நடந்திருப்பதில், இதற்கு காரணமானவர்களை நினைத்து நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தியாகவும் இருக்கிறது. இது போதாது என்று  காங்கிரஸ் கட்சியும் மிக அற்பத்தனமாக நடந்துகொண்டிருக்கிற தகவலும் ஹிந்து நாளிதழில் கொஞ்சம் தம்பட்டமடிக்கப்பட்டிருக்கிறது. 


குடியரசுத்தலைவர்  இன்றிரவு அமெரிக்க அதிபர் வருகையை ஒட்டி அளிக்கவிருக்கும் விருந்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு முன்னாள் பிரதமர் என்றவகையில் மன்மோகன் சிங் மக்களவைக்கட்சித்தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மாநிலங்களவகட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத் மூவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்கள். காரணம் சோனியாவுக்கு அழைப்பு இல்லை, டொனால்ட் ட்ரம்ப்புடன் சோனியா சந்திக்க அழைப்பில்லை என்ற மிக அற்பமான காரணம் தான்! அமெரிக்காவில் சென்ற வருடம் HOWDY MODI நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்துகொண்ட மாதிரியே டெமாக்ரட்டுகளும் கலந்து கொண்டமாதிரி, இங்கேயும் அகமதாபாத் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்கும் தங்களை அழைக்கவில்லை என்ற குறையும் இருக்கிறது Mr. Chowdhury said the Government of India should have insisted with the U.S. authorities to follow the ‘time-honoured principle’. He told The Hindu that the decision to skip the banquet was a ‘personal’ one. He objected to Congress leaders being left out of Monday’s ‘Namaste Trump’ event in Ahmedabad.  என்கிறது ஹிந்து. இடதுசாரிக் கோமாளிகளுக்கு வேறுவிதமான வருத்தம்!


இங்கே தான் இப்படிக் கோமாளித்தனங்கள் என்றால் அங்கே அமெரிக்காவிலும் அதே மாதிரித் தானாம்! டெமாக்ரட் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ள பெர்னி சாண்டர்ஸ் செய்திருக்கிற அரசியல் காமெடி இது:

   
இதற்குப் பதில் ட்வீட்டாக ஒருவர் கீழே உள்ள படத்தைப் போட்டு 30 வருடங்களில் பெர்னி சாண்டர்ஸ் என்ன செய்தார் என்று நக்கலாகக் கேட்டிருக்கிறார். 


அமெரிக்காவோ இந்தியாவோ தேர்தல் ஜனநாயகம் என்றால் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது! ஒரே வித்தியாசம் அமெரிக்காவில் இடதுசாரிக் கோமாளித தனங்கள் கொஞ்சமும் எடுபடாது என்பது தான்! 78 வயதான சான்டா்ஸை அவரது சோஷலிஸ கொள்கைகளுக்காக ‘கிரேஸி பொ்னி’ என்று புனைப் பெயரிட்டு, டிரம்ப் விமா்சித்தாா் என்கிறது தினமணி செய்தி.  

  
சேகர் குப்தா அமெரிக்க அதிபர் நேற்று அகமதாபாதில் பேசியத்தைக் கொஞ்சம் அனலைஸ் செய்கிறார். இது முழுக்க முழுக்க அவர்பார்வை  வீடியோ 15 நிமிடம் 

அரசியல் என்றால் இவ்வளவுதானா? நிச்சயமாக இல்லை! அரசியல், தெரியாதவர்கள், தகுதியில்லாதவர்கள் கைகளில் சிக்கிக்கொண்டு குறுகிப் போய்க்கிடக்கிறது! அவ்வளவுதான்!

மீண்டும் சந்திப்போம்.