இவ்வளவுதான்! #அரசியல் இவ்வளவுதான்!

வரலாற்றில் டில்லியை சமாதிகளுடைய நகரம் என்று சொல்வதுண்டு. முகலாய ஆட்சியின் எச்சமாக எங்கு பார்த்தாலும் சமாதிகள் என்று அதற்கு காரணம் வேறு சொல்வார்கள். CAA எதிர்ப்பாளர்கள் அதை மீண்டும் நிலைநாட்ட விரும்புகிற மாதிரி நேற்றும் இன்றும் டில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெடித்து இதுவரை 7 பேர் பலி என்ற செய்தி வேறு. நாட்டின் தலைநகருக்கு அமெரிக்க அதிபர் வந்திருக்கிற சமயம், இப்படி நடந்திருப்பதில், இதற்கு காரணமானவர்களை நினைத்து நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தியாகவும் இருக்கிறது. இது போதாது என்று  காங்கிரஸ் கட்சியும் மிக அற்பத்தனமாக நடந்துகொண்டிருக்கிற தகவலும் ஹிந்து நாளிதழில் கொஞ்சம் தம்பட்டமடிக்கப்பட்டிருக்கிறது. 


குடியரசுத்தலைவர்  இன்றிரவு அமெரிக்க அதிபர் வருகையை ஒட்டி அளிக்கவிருக்கும் விருந்தில் கலந்து கொள்ள எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு முன்னாள் பிரதமர் என்றவகையில் மன்மோகன் சிங் மக்களவைக்கட்சித்தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மாநிலங்களவகட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத் மூவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும், யாரும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்கள். காரணம் சோனியாவுக்கு அழைப்பு இல்லை, டொனால்ட் ட்ரம்ப்புடன் சோனியா சந்திக்க அழைப்பில்லை என்ற மிக அற்பமான காரணம் தான்! அமெரிக்காவில் சென்ற வருடம் HOWDY MODI நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்துகொண்ட மாதிரியே டெமாக்ரட்டுகளும் கலந்து கொண்டமாதிரி, இங்கேயும் அகமதாபாத் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிக்கும் தங்களை அழைக்கவில்லை என்ற குறையும் இருக்கிறது Mr. Chowdhury said the Government of India should have insisted with the U.S. authorities to follow the ‘time-honoured principle’. He told The Hindu that the decision to skip the banquet was a ‘personal’ one. He objected to Congress leaders being left out of Monday’s ‘Namaste Trump’ event in Ahmedabad.  என்கிறது ஹிந்து. இடதுசாரிக் கோமாளிகளுக்கு வேறுவிதமான வருத்தம்!


இங்கே தான் இப்படிக் கோமாளித்தனங்கள் என்றால் அங்கே அமெரிக்காவிலும் அதே மாதிரித் தானாம்! டெமாக்ரட் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ள பெர்னி சாண்டர்ஸ் செய்திருக்கிற அரசியல் காமெடி இது:

   
இதற்குப் பதில் ட்வீட்டாக ஒருவர் கீழே உள்ள படத்தைப் போட்டு 30 வருடங்களில் பெர்னி சாண்டர்ஸ் என்ன செய்தார் என்று நக்கலாகக் கேட்டிருக்கிறார். 


அமெரிக்காவோ இந்தியாவோ தேர்தல் ஜனநாயகம் என்றால் இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது! ஒரே வித்தியாசம் அமெரிக்காவில் இடதுசாரிக் கோமாளித தனங்கள் கொஞ்சமும் எடுபடாது என்பது தான்! 78 வயதான சான்டா்ஸை அவரது சோஷலிஸ கொள்கைகளுக்காக ‘கிரேஸி பொ்னி’ என்று புனைப் பெயரிட்டு, டிரம்ப் விமா்சித்தாா் என்கிறது தினமணி செய்தி.  

  
சேகர் குப்தா அமெரிக்க அதிபர் நேற்று அகமதாபாதில் பேசியத்தைக் கொஞ்சம் அனலைஸ் செய்கிறார். இது முழுக்க முழுக்க அவர்பார்வை  வீடியோ 15 நிமிடம் 

அரசியல் என்றால் இவ்வளவுதானா? நிச்சயமாக இல்லை! அரசியல், தெரியாதவர்கள், தகுதியில்லாதவர்கள் கைகளில் சிக்கிக்கொண்டு குறுகிப் போய்க்கிடக்கிறது! அவ்வளவுதான்!

மீண்டும் சந்திப்போம்.       
  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!