திருப்பூர் ஜோதி ஜி இன்று தன்னுடைய பதிவில் சில அரசியல் #அட்டகத்தி களுக்கு, குறிப்பாக நடிகர் விஜய்க்கு ஒன்றில்லை, சும்மா எட்டு யோசனைகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? 1. நெஞ்சுக்கு நீதி மொத்தப் பாகமும் வாங்கி படிக்க வேண்டும். படித்தவுடன் அப்பாவுக்கு அரசியல் குறித்து விஜய் புரிய வைக்க முயல வேண்டும். வாய்விட்டுச் சிரிக்க வைத்த பதிவு!
ஆம் ஆத்மி கட்சிக்கு அரவிந்த் கேஜ்ரிவால் இருக்கிறார்! எங்களுக்கு அப்படி யார் இருக்கிறார்கள் என்று தேம்புகிறார் காங்கிரசின் P C சாக்கோ! இப்படியும் ஒரு ஞானோதயமா?
நாராயணி பாசு! தன்னுடைய கொள்ளுத்தாத்தா V P மேனனுடைய சரிதையைப் புத்தகமாக எழுதி, அதை நேற்றைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வெளியிட்டுப் பேசியதில் ட்வீட்டரில் வரலாறு என்றால் தான் எழுதுவது மட்டும்தான் என்று சாதிக்கும் ராமசந்திர குகா முதல், திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் முதலானவர்கள் அக்கப்போர் இன்றைக்கு ட்ரெண்டிங் அரசியல் செய்தி.
On a sunny spring day in 1914, a young Malayali walked into the Government of India’s summer offices in Gorton Castle (in the then Simla). Nobody knew who Vappala Pangunni Menon was then. He was all of 19-years-old, and he came with nothing but a letter recommending him for a typist’s job in the home department. Over the course of the next four decades, VP — as he would come to be known — would be at the frontline of India’s progress towards Independence. He was the principal typist of the Montagu-Chelmsford Report. In 1924, he would join the Reforms Office, a branch of the government of India, which would shepherd India along the path to self-governance. He would remain with the Reforms Office until 1947. Today, VP Menon is remembered for being Sardar Vallabhbahi Patel’s right-hand man, for assisting in the integration of the princely states into the Indian Union. But, between 1914-1951, VP’s contributions to modern India were both immense and immensely understated.
In 1951, following the death of the Sardar, Vappala Pangunni Menon slipped into political and professional obscurity, where he remained until the end of his days in 1966. Today, it is only right that we rectify this. தன்னுடைய கொள்ளுத்தாத்தாவின் பங்களிப்பை மறந்துபோன தேசத்துக்கு, நினைவூட்டும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகம் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸில் நாராயணி பாசு எழுதியதில் இருந்து தெரிகிறது. அப்படியானால் சர்ச்சை எப்படி ஆரம்பித்ததாம்?
அதென்னவோ இந்திராவின் வாரிசுகளுக்கு எவர் புத்தகம் எழுதினாலும் செந்தட்டி தடவின மாதிரி அப்படி ஒரு அலர்ஜி வந்துவிடுவதை இந்தப் பக்கங்களில் பலமுறை பார்த்திருக்கிறோம். முதல் முறையாக அப்படி உதறல் ராமசந்திர குகாவுக்கும் வந்திருக்கிறது!
உதறல் ராமசந்திர குகாவுக்கு மட்டும்தான் வருமா? கழகத் தலீவருக்கு வராதா? வேறுவிதமாக என்று துக்ளக் அட்டைப்பட நையாண்டி சொல்கிறது. ஹனுமான் சாலிசா சொல்ல அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உத்தி வகுத்த பிரசாந்த் கிஷோர் எங்கே இசுடாலினை முத்தைத் தருபத்தி என்ற வயலூர் திருப்புகழைப் பாடச் சொல்லி விடுவாரோ என்ற உதறல் எனக்கும் தான்!
மீண்டும் சந்திப்போம்.
மீண்டும் சந்திப்போம்.
ஸ்டாலின் பிழையில்லாமல், தடுமாறாமல் திருப்புகழ் பாடிவிட்டால் என் வோட் அவருக்குதான்!!!
ReplyDeleteஸ்ரீராம்!
Deleteஅப்படியா சொல்றீங்க?! :-))))
ஸ்டாலின் மேல் அவ்வளவு நம்பிக்கை!
Deleteநீண்டகாலமாக அந்தப்பக்கமாகவே நின்று ஆடியவர்கள், இப்போது இந்தப்பக்கமும் வந்தாட வேண்டுமென்றால் இப்படித்தான்! இசுடாலின் நிலைமை ரொம்பவும் பரிதாபம் தான்! ஓட்டுக்காக என்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது!
Deleteதிருப்புகழைப் பிழையில்லாமல் பாடிக் காட்டினாலும் -
ReplyDeleteபால் குடமெடுத்து நடந்தாலும் -
காவடி எடுத்து ஆடினாலும் -
எனது வாக்கு இவருக்கு அல்ல!...
வாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteஎதுவுமே செய்யவில்லை என்றாலுமே கூட எனதுவாக்கும் திமுகவுக்கு இல்லை என்பதுதான் 50 ஆண்டு நிலை!
திருப்புகழைப் பிழையில்லாமல் பாடுவதற்கு -
ReplyDeleteபால் குடமெடுத்து நடப்பதற்கு -
காவடி எடுத்து ஆடுவதற்கு -
இவர் விரும்பினாலும் (சர்வ நிச்சயமாக விரும்பமாட்டார்!..
இவருடன் இருக்கும் மதச் சார்பற்ற மகத்துவங்கள் விரும்ப மாட்டா...
நீங்கள் சொல்கிற படி இரண்டுமே நிஜம் தான்!
Deletesir appadiyae aaditaalum en appanum avan petra suppanum thooki koduthu viduvargala enna ?
ReplyDeleteவாருங்கள் சரவணன்!
Deleteஅப்படித்தூக்கிக் கொடுத்துவிடமாட்டார்கள் என்பதில் அவ்வளவு உறுதி! நம்பிக்கை! :-)))