"அன்னை என்னும் அற்புதப் பேரொளி"


"அன்னை என்னும் அற்புதப் பேரொளி" இந்தத் தலைப்பில் திருமதி விஜயா சங்கர நாராயணன் எழுதிய நூலை, வெகு நாட்களுக்கு முன் வாசித்த நினைவும், பரவசமும் இந்தப் பதிவை எழுதும் போது முன் வந்து நிற்கிறது.

அம்மா, அம்மா என்று அரற்றுவதைத் தவிர ஸ்ரீ அரவிந்த அன்னையே, உன்னைப் பற்றி, என்ன எழுதிப் புரிந்து கொள்ளவோ, புரிய வைக்கவோ முடியும்? அறியாமையின் உச்ச கட்டமாக, ஆசிரம சாதகர் ஒருவரிடம் அவருக்கேற்பட்ட அனுபவங்களைப் பற்றிக் குழந்தைத்தனமாகக் கேட்ட போது, "எவ்வளவோ இருக்கிறது, அதில் எதைச் சொல்வது?" என்ற கேள்வியே பதிலாக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


ஸ்ரீ அரவிந்த அன்னையை ஏற்றுக்கொள்கிறேன் என்று மேலோட்டமாகவே நாம் சொன்னாலும், "ஒரு கணமாவது நான் ஒருவரைப் பார்த்திருந்தாலும் போதும், அவருடைய வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று ஸ்ரீ அன்னை சொல்லும் சத்திய வாக்கு அங்கே செயல் படுவதை, என்னுடைய அனுபவமாகவே இப்போது பார்க்கிறேன்.

"Remember and Offer" இது தன்னுடைய அடியவர்களுக்கு ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் ஒரு எளிய முயற்சி. எதுவானாலும், நினைவிற்கொண்டு வந்து, ஆத்ம சமர்ப்பணமாகச் செய்து வரத் தடைகள் நீங்குவதும், காரிய்ம் கை கூடுவதும் இறையருளால் நடத்தப்படும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


புதுவையிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும், ஆசிரம வாழ்க்கையின் ஒரு அங்கமாக உன்னால் ஏற்றுக் கொள்ளப் பட்ட வெகு சிலருள் ஒருவனாக இல்லாதிருக்கும் போதிலும், ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகத்தை பற்றி முழுமையாக அறிந்தவனாக, அனுஷ்டிப்பவனாக இல்லாத நிலையிலும் கூட, இவனது சில அனுபவங்கள், உன்னை என்னுடைய அன்னையாகவே அறிந்து கொள்ளவும், அம்மா, என்னையும் உனது பிரியத்திற்கு உகந்த குழந்தையாக ஏற்றுக் கொள்வாய் என்று உன்னிடத்தில் உரிமையோடு விண்ணப்பித்துக் கொள்ளவும் தூண்டின. ஏற்றுக்கொள்வாய், ஒருபோதும் கைவிட மாட்டாய் என்கிற நம்பிக்கை உன் வாக்கினாலேயே இவனுள் விதைக்கப் பட்டிருப்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

1965-1966 களில் அறியாச் சிறுவனாக, உன்னுடைய உரையாடல்கள் தொகுப்பு ஒன்றில் உன்னுடைய புகைப்படத்தைப் பார்த்தவுடன், என்னைப் பெற்ற தாயாகவே தோன்ற, 'அட இவள் எங்க அம்மா போலவே இருக்கிறாளே' என்று திரும்பத் திரும்ப அதே அனுபவத்தைப் பல முறை அனுபவித்ததுண்டு. அளியன், அன்னை நீ தான், இவனைப் பெற்ற தாயின் சாயலில் இவனுக்குக் காட்சி கொடுத்திருக்கிறாய் என்பது புரிந்து கொள்ளவே வெகு நாட்களாயிற்று.

இடையில், தொழிற்சங்கம், இடது சாரிச் சிந்தனைகள், நாத்திகனாகத் திரிந்த காலம் ஒன்று இருந்தது. தமிழக வரலாற்றில் களப்பிரர் காலத்தை இருண்ட காலமாகச் சொல்வது போல இவனது வாழ்விலும் அது ஒரு இருண்ட காலம்.

1986- 1987 களில் அமுதசுரபி மாத இதழில் திரு. கர்மயோகி அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள், உலகாயத விளையாட்டில், அன்னையை மறந்து போனவனை மீண்டும் அன்னையிடம் கொண்டு சேர்க்கும் கருவியாக உதவின. Mothers Service Society என்ற அமைப்பின் கீழ் தமிழகமெங்கும் ஸ்ரீ அரவிந்த அன்னை தியான மையங்களை ஏற்படுத்தவும், ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடி தியானம் செய்வதும், மலர் வழிபாடு செய்வதும் 1980 களின் இறுதியில் பரவலாக நடந்து வந்தன.ஆர்ப்பாட்டம், ஊர்வலம், முரண்பாடுகள் என்றே கிடந்த இவன், அதற்கு நேர் எதிர் மாறான அனுபவத்தைப் பெறுவதற்காக, இந்த மாதிரி கூட்டங்களில் பங்கேற்றதும் நடந்தது.

குடும்பம் ஒரு இடத்தில், பணியில் இருந்தது மற்றோரிடத்தில் என்றிருந்த காலம்.

டாக்டர் சுந்தர வடிவேல் இவனது மகனுக்கு வைத்தியர் என்கிற முறையில் அறிமுகமாகி, நண்பரான காலம். ஸ்ரீ அரவிந்தர் அன்னையிடத்தில் ஈடுபாடு கொண்ட இவரால் தான் ஸ்ரீ அன்னையிடம் இவன் மறுபடி தஞ்சம் அடைய வேண்டும் என்கிற வேட்கையும், ஈர்ப்பும் ஏற்பட்டது. விடுமுறையில் ஊருக்கு வருகிற நாட்களில் கணிசமான நேரம் டாக்டருடன் ஆன்மீகத்தைப் பற்றி விவாதிக்கும் பழக்கமும், இதே போல் ஈடுபாடு உடைய வேறு பலருடைய தொடர்பும் உண்டானது. சத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்பதற்கொப்ப, பழைய வரட்டுப் பிடிமானங்களில் இருந்து விடுபட இவை உதவின. அந்த அளவோடு ஒதுங்கியும் போயின.

நம் உடலில் பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் உண்டாகிக் கொண்டே இருப்பது போல, "பழையன கழிதல், அதன் பின் புதியன புகுதல்" என்பதற்கொப்ப ஒவ்வொரு அனுபவமும், அதற்கு முந்தைய அனுபவங்களின் எச்சங்களைத் துடைத்துவிட்டுப் புதிதாய்ப் பிறந்தது.

"வாய்ப்பு என்பது மிகப் பெரிய விஷயங்களைச் சாதிக்கும் தருணம். அதனால் ஒருபோதும் வாய்ப்பைத் தவற விட்டு விடாதே" என்கிறார் ஸ்ரீ அன்னை. எவ்வளவு வாய்ப்புக்களைத் தவற விட்டிருக்கிறேன் என்பது இப்போது தான் கொஞ்ச கொஞ்சமாக உறைக்க ஆரம்பித்திருக்கிறது.

உள்ளது உள்ளபடி சமர்ப்பணத்துடன் சொன்னால், எளிய வார்த்தைகளுக்குள்ளும் பேருபதேசம் கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திரு மாதவ் பண்டிட் அவர்கள் எழுதிய Commentaries in the Mother's Ministry என்ற நூலில் இருந்து இந்தப் பகுதியை பார்ப்போமா?

Incalculable Divine
“There are quite a number of stories about the Divine's help arriving at the very moment man gives up his egoistic struggle. There is, for instance, the case of a man who was falling down from the top of a high tree. He cried out to God to save him and God did respond. The falling man landed on a branch of the tree and he exclaimed to himself: “Ah, now I will take care of myself”. That very moment the branch started cracking and our friend got alarmed and called out, “God, I did not mean it!”

The point in this and similar stories is that as long as man depends upon his own strength—which is in fact so puny—or on that of other human sources, the Divine does not enter into the picture. Man is allowed to struggle and realise the limitations of human effort. The inner soul-strength comes to the fore when the external being, in its moment of truth, realises its utter failure to meet the challenges that face it and appeal to the Divine, whether within or above. In a slightly different context, Sri Aurobindo puts it graphically in SAVITRI how in moments of crisis man is forced to look to the Divine:


An hour comes when fail all Nature's means,

Forced out from the protecting Ignorance

And flung back on his naked primal need,

He at length must cast from his surface soul...


When our strength fails, when our human resources fail, when we sincerely call for the Divine's help, the Divine never fails. Only we must have the eye to perceive the Hand of God which may be cloaked in appearance that may be misleading at first sight. The help may not come in the form in which we expect. It may even come in the form of happenings that go counter to our expectations. The ways of the Divine Saviour are mysterious, as complex as the causes of our difficulties. The most unlikely elements play a helpful role. At times even enemies are moved to fraternise with us. We are baffled. We try to find explanations and at times attribute ulterior motives to the benefactors. But the fact remains that individuals are moved to act helpfully, circumstances are shaped favourably—all because the Divine has willed to save.

We may not always understand the manner in which the Will operates. It is not immediately necessary either, to know it. It is enough if we have the faith that the Divine response is certain and when we are helped out, to own gratitude to the Divine. There is often a tendency to attribute the favourable turn to our strength of intelligence and will or to external human agencies. It is well to remember at such moments that men and events are only instrumentations of the Divine Will to protect and save.”
*

அம்மா! எவ்வளவு தான் தவறுகள் இழைத்திருந்த போதிலும், அகங்காரச் செருக்கோடு நான் நான் என்று இல்லாததை எல்லாம் கற்பிதம் பண்ணிக் கொண்டு திரிந்த போதிலும்,

"நான்" என்பது அகங்காரத்தின் கூப்பாடு அல்ல; உனக்குள்ளே இருக்கிற தெய்வீகமே, உள்ளொளியே உண்மையான நான் என்பதைக் காட்டிக் கொடுத்திருக்கிறாய்.

ஸ்ரீ அரவிந்த அன்னையே! உன்னைச் சரண் அடைகிறேன்.

உனது திருவடிகளையே அடைக்கலமாகப் பற்றிக் கொள்வது முழுமையாகிற வரம் அருள்வாய். கரணங்கள், மனம், ஜீவன் இவை அனைத்தையும் முழுமையாக உன்னிடத்தில் சமர்ப்பிப்பதற்குத் தகுதியும், சக்தியும் அருள்வாய்.

ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்களித்திருக்கிற அருளை மறவாமல், நன்றியோடு ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை அருள்வாய் தாயே!

*quoted text thankfully excerpted from and acknowledged”

“Commentaries on The Mother's Ministry” by Shri M P Pandit, Dipti Publications, Sri Aurobindo Ashram, Pondicherry.


***2009 இல் எழுதியதன் மீள்பதிவு 

1 comment:

  1. அருமையான பதிவு. வாழ்த்துகள்...

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!