யார் வாய்ஸ் கொடுத்து என்ன செய்ய? தீர்வை விரும்புகிறோமா?

ரஜனி வாய்ஸ்! இசுடாலின் வாய்ஸ்! இன்னும் என்ன வேண்டும்? என்று நேற்றிரவு எழுதியபிறகு அங்கேயே இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாமோ என்று தோன்றுகிற அளவுக்குக் காலையில் இதைப் பற்றியே ஏகப்பட்ட குரல்கள்! போதாக்குறைக்கு கமல் காசரும் ரஜனி வாய்சுக்கு ஆதரவு தெரிவித்தது வேறு ஒரு சர்ப்ரைஸ். ஆக ரஜனி வாய்சுக்கு முன்னால் இசுடாலின் வாய்ஸ் எடுபடாமலேயே போய்விட்டதை இங்கே யாராவது கவனித்தீர்களா?  திமுகவினர்  ஏன் தொடர்ந்து ரஜனியின் அரசியல் பிரவேசத்தைக் குறித்து அதிகம் எரிச்சல்படுகிறார்கள் என்பதைத் தெளிவாகவே புலப்படுத்துகிற விஷயம் இது. 

 



கமல் காசருடைய ரெண்டுங்கெட்டான்தனமான பாராட்டைவிட, செலெக்டிவாக கண்டனம் தெரிவித்த பகுதிக்கு மட்டும் நியாயமானது என்று ஹிந்து என்.ராம் சர்டிபிகேட் கொடுத்திருப்பது இடதுசாரிகளின் பித்தமும் வன்மமும் எந்த அளவுக்குத் தலைக்கேறி இருக்கிறது என்பதன் அடையாளம். இரும்புக்கரம் கொண்டு டில்லி போராட்டங்களை ஒடுக்கியிருக்க வேண்டும் என்று ரஜனிகாந்த் சொன்னதை நியாயம் என்று என்.ராம் ஒப்புக்கொள்வதாக எடுத்துக் கொள்ளலாமா? அதென்ன செலெக்டிவாக ஒரு வாக்கியத்தை மட்டும் எடுத்துக் கொள்வது? எதையும் முழுமையாகப் பார்க்கவோ புரிந்து கொள்ளவோ முடியாத இடதுசாரி கோமாளிகளால் என்ன செய்துவிட முடியும்?
                                       
 
ராஜன் ராதாமணாளன்! வால்பையன் பதிவர் அருணுடைய சேக்காளி! கொஞ்சம் குத்தல், நக்கல் தூக்கலாக இருக்கிற எழுத்துக்குச் சொந்தக்காரர். ரஜனி பேச்சு - கமல் பாராட்டுக்குக் கொஞ்சம் விரிவாகவே எள்ளிநகையாடி முகநூலில் பகிர்ந்திருக்கிறார். அதற்கு அப்புறம் வந்த 2வது ரவுண்டு நக்கல் இது!   
                                             
ஆர்னாப் கோஸ்வாமி நேற்று ரிபப்லிக் டிவியில் நேற்று நடத்திய 53 நிமிட விவாதம் கொஞ்சம் உருப்படியான தகவல்களோடு இருந்தது. நிறையாக கேள்விகளும்!

விடையைத் தேடுகிறோமா என்ன? எனக்கு இப்படி ஒரு சந்தேகத்தையும் எழுப்பிய விவாதம்.

மீண்டும் சந்திப்போம்.                           
    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!