பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான BSNL குறித்து சந்தோஷமான செய்தியொன்றை இன்று காலையில் பார்த்தேன். டெலிகாம் நிறுவனங்களுக்குள் விலை குறித்தான போட்டியில் வேகமாக ஜியோ முந்த, இதர நிறுவனங்கள் லாபத்தில் சரிவைச் சந்தித்தன என்றால் பொதுத்துறை நிறுவனமான BSNL, தொழிலின் அஸ்திவாரமாகிய கஸ்டமர்கள் எண்ணிக்கையிலேயே பெரும் சரிவைச் சந்தித்தது. தலைமையிலிருந்து அடிமட்ட ஊழியர் வரை இருந்த lethargic attitude இதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.
Showing posts with label பொதுத்துறை. Show all posts
Showing posts with label பொதுத்துறை. Show all posts
BSNL பொறுப்பில்லாத பொதுத்துறை, இங்கே யாருக்காக?
இன்றைய செய்தியாக BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இன்று வழங்கப்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் அறிவித்தது வந்திருக்கிறது. ஏற்கெனெவே இந்தச் செய்தியை ஓரிரு நாட்களுக்கு முன்னாலேயே எகனாமிக் டைம்சில் MTNL நிறுவனத்துக்கு 171 கோடி செவ்வாய்க்கிழமையே DoT தந்துவிட்டது BSNL ஊழியர்களுக்கு சம்பளம் மார்ச் 21தேதிக்கு முன்னர் வழங்கப்படும் என்தாகப் பார்த்தேன்.
இழவு வீட்டில் அரசியல் செய்யும் திமுக தலைவர்கூட நேற்றைக்கு ட்விட்டரில் தன் கண்டனக்குரலைப் பதிவு செய்திருக்கிறார். ஆமை புகுந்த வீடும் அரசியல்வாதி தலையிடும் பொதுத்துறையும் உருப்பட்டதில்லை என்பதை BSNL ஊழியர்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. நிறுவனத்தை மூடுகிற எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இன்னொருபுறம் பொறுப்பில்லாத பொதுத்துறையை மக்களுடைய வரிப் பணத்தில் எதற்காகக் கட்டி அழவேண்டும் என்ற கண்டனக்குரல்களும் வலுத்து வருகின்றன.
தொடர்புடைய பதிவு1 பதிவு 2
BSNL Salary Issue: Govt. Says Every Employee Will Get Salary Before Holi; Releases Rs 171 Crore. For the first time in 18 years, BSNL employees haven't received their salaries இது இரண்டுநாட்களுக்கு முந்தைய செய்தி
#BSNL தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது.
1.70லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் @narendramodi அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்?

189 replies1,140 retweets2,993 likes
- Thala... Konjam வருஷம் முன்னாடி... ரெண்டு... Thiruttu பசங்க bsnl line திருடி வேல pathirukkanga.... Adhunala loss ahm0 replies0 retweets17 likes
- New conversation
இழவு வீட்டில் அரசியல் செய்யும் திமுக தலைவர்கூட நேற்றைக்கு ட்விட்டரில் தன் கண்டனக்குரலைப் பதிவு செய்திருக்கிறார். ஆமை புகுந்த வீடும் அரசியல்வாதி தலையிடும் பொதுத்துறையும் உருப்பட்டதில்லை என்பதை BSNL ஊழியர்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. நிறுவனத்தை மூடுகிற எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இன்னொருபுறம் பொறுப்பில்லாத பொதுத்துறையை மக்களுடைய வரிப் பணத்தில் எதற்காகக் கட்டி அழவேண்டும் என்ற கண்டனக்குரல்களும் வலுத்து வருகின்றன.
தொடர்புடைய பதிவு1 பதிவு 2
மத்தியில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதும் பிஎஸ்என்எல்-லை விற்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன். நட்டம் ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் பொறுப்பற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தயவு தாட்சண்யமின்றி அரசுப்பாதுகாப்பில் இருந்து வெளிவர வேண்டும்.
நான் அடிக்கடி சொல்லி வருவது போல, அரசுக்கு தொழில் செய்யும் எந்தத் தகுதியும் கிடையாது. தனியார் யாரும் வரும் வரை, தனிக்காட்டு ராஜாவாக இயங்கி வந்த ஏர் இந்தியா, தூர்தர்ஷன், பிஎஸ்என்எல் போன்ற அரசு நிறுவனங்கள் தனியாரின் திறன்மிகு போட்டியால் இப்போது தத்தித் தடுமாறுகின்றன. எந்த சுய முன்னேற்ற முயற்சிகளும் எடுக்காமல் ராஜாங்கம் செய்து வந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் புலம்புகின்றனர்.
இருக்கும் ஒரே வழி இவை யாவும் தனியார் மயமாக்கப்பட வேண்டும். ஓரளவு நட்டமடையாத விலைக்கு இவற்றின் பங்குகளை விற்று விட்டு அரசு தன் தொடர் நட்டத்தை நிறுத்த வேண்டும். இந்த விற்பனையில் வரும் லாபம் வளர்ச்சி, கட்டுமான மற்றும் சமூக நலப்பணிகளில் செலவழிக்கப் பட வேண்டும்.
இப்படிச் சொல்லியிருப்பதைப் பார்த்துக் கொண்டு வந்ததில் ...........
வலது சாரி இயக்கங்கள் உலக அளவில் தற்போது வெற்றி அடைவதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
இது தமிழ் கோரா தளத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு கேள்வி!
காரணம் உலகமயமாக்கல்.உலகமயமாக்கலின் காரணமாக பல்வேறு கலாச்சாரங்கள் பல புதிய சவால்களை எதிர்கொண்டுள்ளன.இதனால் பல சமூகங்கள், தங்கள் தங்கள் அடையாளங்களை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் உள்ளன.இந்த அச்சத்தை வலதுசாரி இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.எனினும் இதன்பின் நியாயமானக் காரணங்கள் ஏதுமில்லை என முழுமையாக புறந்தள்ளிவிட இயலாது.
நம் உலகம் சரிசமமானது அல்ல. ஒரு அமெரிக்க உழவர் சராசரியாக வைத்திருக்கும் நில அளவு, முதலீடு ஒரு இந்திய உழவரின் அளவைவிட மிகப்பெரிது. அவர் கொடுக்கும் விலை இவருக்கு ஒரு போதும் கட்டுப்படியாகாது. எனவே ஒரே சந்தை, ஒரே போட்டி என்பது சாத்தியமே இல்லை.இதிலிருந்துதான் அச்சம் தொடங்குகிறது.
ஐரோப்பிய யூனியனைப் பொறுத்தவரை பொருளாதாரக் காரணங்களுக்காக இடம்பெயர்வது பெரும் சிக்கலை உண்டாக்கியது. உள்ளூர் மக்கள் வேலையிழப்பு, ஊதியக் குறைவு போன்றவை சிக்கலை உண்டாக்கின. ( கலாச்சார சீர்கேடு, அரசியல் வலிவு குறைதல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை என்பதெல்லாம் அடுத்தக் கட்டம்தான் )
அதுபோல கட்டுப்பாடற்ற இடப்பெயர்வும் தவறு தான். அனைவரும் ஓர் இடம் நோக்கி படையெடுத்தால் அந்த இடம் வாழும் தகுதியை இழக்கக் கூடும். தவிர அவர்களின் சொந்தப் பகுதியும் அழிந்து போகும்.இந்தியாவைப் பொருத்தவரை, வலதுசாரி இயக்கங்கள் குழப்பமானவை. அவை மக்களைப் பின்னோக்கி இழுக்கின்றன.
அடுத்தப் பத்தாண்டுகளில் மாநிலங்களுக்கிடையேயான இடப்பெயர்வு மிகப்பெரியச் சிக்கல்களை உருவாக்கப்போகிறது. ஏற்கனவே குசராத், கர்னாடகா மாநிலங்கள் வேலைவாய்ப்புகளில் தத்தமது மக்களுக்கே முன்னுரிமை என்ற சட்டங்களை இயற்றியுள்ளன. இக்கருத்து மற்ற மாநிலங்களுக்கும் விரிவடையும்.வட மற்றும் தென் மாநிலக்கிடையேயான பொருளாதார மற்றும் மக்கட்தொகை இடைவெளி இதைத் தீவிரப்படுத்தும்.
மாநிலங்களுக்கிடையேயான நகர்வு இங்கு கட்டுப்பாடற்றது. சரியான தரவுகள் கூட நம்மிடம் இல்லை. இதுவும் ஒரு சிக்கல்.கட்டுப்பாடற்ற குடியேற்றம் வளர்ந்த மாநிலங்களில் அழுத்தங்களை உருவாக்கும். விட்டுவந்த மாநிலங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ( மூளை ஏற்றுமதி )
நடுவண் அரசு சட்டம் இயற்றி முறைப்படுத்தினால் பல பிரச்சினைகளை முன்கூட்டித் தீர்க்கலாம்.
மொத்தத்தில் இது ஒரு சுழற்சி போல. இரண்டாம் உலகப்போருக்கு முன் வலதுசாரிகள் கை ஓங்கியிருந்தது. எல்லை மீறிய போது போருக்கு இட்டுச்சென்றது. போருக்குப் பின் இடதுசாரிகள். எல்லை மீறிய போது உலகமயமாக்கல் அழுத்தங்களைக் கொடுத்துள்ளது..
இப்பொழுது மீண்டும் வலதுசாரிகள்!.இரண்டுக்கும் நடுவே தீர்வு உள்ளது
என்கிறார் Arivaran Balu கற்பனாவாத சோஷலிசக் கனவுகளில் திளைத்தவரோ? அறியேன்! எதிரும் புதிருமான இரு கண்ணோட்டங்களை உங்கள் பார்வைக்கு வைத்திருப்பது ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்காக!
பொதுத்துறை! இங்கே யாருக்காக?
பொதுத்துறை! இங்கே யாருக்காக? செப்டெம்பர் 2009 இல் எழுதிய இந்தப்பதிவுக்கும் கூட கொஞ்சம் புரிந்து கொண்டு சில பின்னூட்டங்கள் வந்தன:
- சுந்தர்September 14, 2009 at 9:44 AMசங்கர் படம் மூலமாகவோ, சுசீ கணேசன் படம் மூலமாகவோ எல்லா பொது துறையும் திருத்தி சீர் பண்ணி , ஒரு படமாக எடுத்து வேண்டுமென்றால் பார்க்கலாம் . மற்ற படி நடை முறையில் எதுவும் பண்ண இயலாது என்பதே என் கருத்து.ReplyDelete
திரைப்படத்தில் அல்ல, நிஜமாகவே சீரழிந்த நிலையில் இருந்த ஒரு பொதுத்துறை வங்கி, அதனுடைய தலைமை நிர்வாகி எடுத்த அதிரடி நடவடிக்கைகளில், இரண்டே ஆண்டுகளில் குணமாகி வளரவும் தொடங்கிய ஒரு அதிசயத்தை நான் அறிவேன். அவரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், உள்ளிருந்தே குழி பறிக்கும் வேலைகள் என்னென்ன நடந்தன என்பதும் ஒரு 'த்ரில்லர்' படம் மாதிரித்தான்!ReplyDelete
அவர் செய்த ஒரு அடிப்படையான மாற்றத்தைப்பார்க்கலாம். ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறதா என்பதையும் எனக்குச் சொல்லுங்கள்.
இலக்குகளை நிர்ணயிப்பதோடு நின்று விடுகிற தலைமை அலுவலகத்தில் இருந்து ஆரம்பித்தது அதிரடி. பொது மேலாளர்கள், சாவகாசமாகப் பதினோரு மணிக்கு மேல் தங்களுடைய சீட்டுக்கு வருவார்கள், அதிகபட்சம் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணிநேரம் கூட சீட்டில் இருக்க மாட்டார்கள். அப்படியிருக்கிற நேரம் கூடத் தங்களுடைய வசூல், தனக்கு எதிரியாக இருக்கும் இன்னொரு பொது மேலாளருக்கு எதிராக எவரையாவது கொம்புசீவி விடுகிற வேலை, இதற்காகத் தான்!தங்களுடைய நிறுவனத்திற்காக எந்த வேலையும் செய்யாமல், உண்மையைச் சொல்லப்போனால், உள்ளிருந்தே குழி பறித்துக் கொண்டிருந்த பொது மேலாளர்களை அக்கௌண்டபிலிட்டி என்று சொல்வோமில்லையா, அப்படி பொறுப்பாக்கினார். முதல் ஒரு வருஷம் அப்படி த தலைகளைத் தட்டிக் கொண்டிருந்தது வெளியே தெரியவேயில்லை! அதுவரை, எது எப்படிப்போனாலென்ன என்றிருந்தவர்கள், சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தபோது தான் தலையில் குட்டியதன் விளைவு தெரியவே ஆரம்பித்தது.
கீழ்மட்டத்தைத் தொடவே இல்லை, மேலே தட்ட ஆரம்பித்த தட்டு, கச்சிதமாகக் கீழ்வரைக்கும் தானாகவே வந்தது, வேலை நடந்தது.
அடுத்து, வெறும் புள்ளிவிவரங்கள் சேகரிப்பது மட்டுமே வங்கியின் வேலை என்று நினைத்துக் கொண்டிருந்த வங்கியில், புள்ளி விவரம் என்ன சொல்கிறது, என்ன திசையில் போக வேண்டும் என்று காட்டுகிறது என்பதையும் கற்றுக்கொள்ள ஆரம்பமானது.
இங்கே நடப்பதைப் பாருங்கள்! கீழ்மட்டத்தில் அவன் ஆயிரம் ரூபாய் வாங்கும் பொது பிடிபட்டான், இவன் லட்சம் வாங்கும்போது பிடிபட்டான் என்று ஷோ காட்டும் வேலை நடக்கிறதே தவிர, தட்ட வேண்டிய இடம் எது என்பது தெரிந்தும் தட்டாமல் இருக்கும் அவலம்!
மாற்றம் வரும்! ஒரேயடியாக நம்பிக்கை இழந்து விட வேண்டியதுமில்லை!- //பொதுத்துறையைப் பலப்படுத்த, பொறுப்பை உணர்ந்த ஊழியர்கள், திறமைக்கு முதலிடம் கொடுக்கும் நிர்வாக மேலாண்மை, ஊழலற்ற வெளிப்படையான செயல்பாடு மூன்றும் இணைந்தால் தான் முடியும்.ReplyDelete
//
இப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் நிலமைகள் ஒரே நாளில் சீர் அடைவதோ கெடுவதோ கிடையாது. புரட்சி, மாற்றம் எந்த சொல்லைக் கொண்டு பார்த்தாலும் ஒரு 'இசம்' மக்கள் இடையே பரவ அந்த மக்கள் இன்னொரு 'இசத்தால்' பாதிக்கப்பட்டு இருப்பதும் காரணம். காலப் போக்கில் புதிய இசம் முழுமையாக வெற்றி அடையும் முன்னே அதன் தேவைகள் பொய்த்தும், திரிந்தும் போகும். அதன் பிறகு புதிய இசம். அது கம்யூனிசமாக இருந்தாலும் சரி முதலாளித்துவமாக இருந்தாலும் சரி. மக்கள் நெருக்கம், பொருளாதாரத் தேவை இவற்றை சார்ந்தே மக்கள் இடையே சில கொள்கைகள் பிரபலமடைகின்றன, பின்னர் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.
இது தான் சரி என்று சமூக வாழ்வில், உலகவாழ்வில் எதையுமே அறுதி இட்டு வழியுறுத்திவிட முடியாது என்பதையே இசங்களின் தோல்விகள் சொல்லும் பாடம்.
நாம் நினைக்கும் அளவுக்கு ஒரு கையை இழந்தவர்கள் துன்பப்படமாட்டார்கள், நாளடைவில் ஒரு கையை மிகத் திறமையாகப் பயன்படுத்தி தனது குறையை முற்றிலும் நினைக்காவிட்டாலும் ஓரளவுக்கு ஈடு கொடுத்து தான் வாழ்வார்கள். இது கண்களை இழந்தவர்களுக்கும் பொருந்தும். நான் சொல்ல வந்தது மக்கள் எந்த சூழலுக்கும் வாழப் பழகிக் கொள்வார்கள், அவர்கள் வெறுக்கும் ஒன்றை அழிக்க வரும் வேறொரு கொள்கையை ஆதரிப்பார்கள். மன்னர் ஆட்சி முறையை மக்கள் ஆட்சி என்ற பெயரில் ஒழித்தோம், ஆனால் இன்று வாரிசு அரசியல் அறிவிக்கப்படாத மன்னர் ஆட்சியாக பரிணாமம் பெற்று வளர்ந்துவிட்டதே. ஆக ஒன்றை விலக்குதலின் மையம் வேறொரு மையத்தை சார்ந்திருந்தாலும் எதுவுமே பிழைப்பு வாதம் என்னும் மக்களின் வாழ்வியலால் நிலையற்றதாக தொடரும்.
நீளமான பின்னூட்டம் பொருத்தருள்க !
:)
வாருங்கள் கோவி.கண்ணன்!ReplyDelete
நீளமான பின்னூட்டங்கள், பிரச்சினை அல்ல. சொல்ல வந்த கருத்து முழுமையாகச் சொல்லப்பட்டதா என்பதையே முக்கியமாகக் கருதுகிறேன்.
முக்கியமானதும், மையமானதுமான ஒரு விஷயத்தைத் தொட்டுச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த பிரபஞ்சத்தைப்பற்றி சொல்லும்போது, அது விரிவடைந்துகொண்டே, மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுபோலத் தான் சமுதாய விஞ்ஞானமும்! மாறிக்கொண்டே இருப்பது. அப்படி மாற்றிக்கொண்டே இருப்பது தான் சமுதாய வளர்ச்சியின், பரிணாமத்தின் அடிப்படை இயல்பும் கூட!
ஓலைக் குடிசையே போதும் என்று இருந்திருந்தால், அங்கே வளர்ச்சி இல்லை. மாறாக, வளர்ச்சி இல்லாத இடம் அழிந்தும் போகும். அதே மாதிரி, இங்கே நாம் பார்க்கிற ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு முயற்சியும், எல்லையற்ற சாத்தியக் கூறுகளை நமக்கு அளிக்கிறது. எப்படி நமக்கு முன்னாள் இருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதே நமக்கு முன்னால் இருக்கும் கேள்வி.
உள்ளூர் அக்கப்போர்களைப் பார்த்துப் படித்துச் சலித்து விட்ட நிலையில், பொருளாதாரத்தைத் தொட்டுப் பேசலாமே என்று ஒரு சின்ன ஆரம்பம்! அவ்வளவுதான்!
சுந்தர் சொல்றா மாதிரி இந்த விசயத்தை வச்சு ஷங்கரை படம் எடுக்க சொன்னா மக்களுக்கு மூணு மணி நேரம் நல்லா பொழுது போகும்!ReplyDelete
சங்கர் எடுப்பதை விட, தெலுங்கு சினிமா எதை வேண்டுமானாலும் பாருங்கள்! இதை விட அதிகப் பந்தாடல் ரசிக்கிற மாதிரி இருக்கும்! இங்கே போத்திக் கொண்டு நடிக்கிற நடிகைகள் அங்கே கொஞ்சம் காத்தாடவும் இருப்பார்கள்!
நிழலை ரசிப்போம், கைதட்டுவோம், போணியாகாத ஹீரோ அரசியலுக்கு வரும்போது அவனையும் தூக்கிச் சுமப்போம், அதுவரை, நிஜத்தில் என்ன நடந்தால் என்ன என்கிறீர்களா?-
இங்கே நம்முடைய அனுபவம் என்ன?
எதற்கெடுத்தாலும் வழிமறிக்கிற நந்திகளாக அதிகார வர்க்கம், தொழிற்சங்கங்கள், இப்படித் தொட்டால் ஒரு அரசியல், அப்படிச் செய்தால் அதற்கொரு அரசியல் என்றே போய்க்கொண்டிருக்கிற அவலம் புரிகிறதா?
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து BSNL ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்! காலச் சூழலை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்?
கள யதார்த்தத்தை மூன்றுநாட்களுக்குப் பிறகாவது புரிந்து கொள்கிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
BSNL விவகாரம்! தொடரும் விவாதங்கள்!
கவனிப்பதற்கு நிறைய செய்திகள், கேள்விகள் இங்கே இருக்கிற போதிலும், ஏதோ ஒன்றோ இரண்டோ மட்டும் பரபரப்புச் செய்திகளாகி விடுகின்றன.
தேர்தல் நேரம் காமெடி டைம் பதிவுக்கு வந்த மொத்தப் பின்னூட்டங்களும் ஒரே ஒரு நண்பரிடம் இருந்துதான் என்பது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. இவரை விட்டால், வேறெங்கிருந்தோ வெட்டி ஓட்டுகிற இன்னும் ஒரு நபருக்கு மட்டுமே சிறிது ஆர்வத்தைத் தந்திருக்கிறது. இங்கே கடைசியாக இதுபற்றிய தகவல்களுக்கு மேல் வெறெந்தத் தகவலும் இல்லாத நிலையில் என்ன சொல்ல முடியும் என்பது எனக்குப் புரியவில்லை.
நேரு , இந்திரா காலத்தைய வாய்ப்பந்தல் சோஷலிசம் எல்லாம் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்திலேயே, பொருளாதார சீர்திருத்தங்களில் அடிபட்டுப் போய் விட்டது. பொதுத்துறை பற்றிய பழைய காலத்துக் கண்ணோட்டங்கள் இன்னமும் மாறாமலிருந்தால் எப்படி? நிறையக் கேள்விகள், விவாதக்களத்தில் எழுந்து கொண்டே இருக்கின்றன என்ற முகவுரையோடு உங்கள் பார்வைக்கு.
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்: ‘எஸ்மா’ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவு
நேரு , இந்திரா காலத்தைய வாய்ப்பந்தல் சோஷலிசம் எல்லாம் நரசிம்மராவ் பிரதமராக இருந்த காலத்திலேயே, பொருளாதார சீர்திருத்தங்களில் அடிபட்டுப் போய் விட்டது. பொதுத்துறை பற்றிய பழைய காலத்துக் கண்ணோட்டங்கள் இன்னமும் மாறாமலிருந்தால் எப்படி? நிறையக் கேள்விகள், விவாதக்களத்தில் எழுந்து கொண்டே இருக்கின்றன என்ற முகவுரையோடு உங்கள் பார்வைக்கு.
- BSNL yet non-listed company in Stock Market and still it is under the control of Telecom Ministry. In the beginning itself it was in the Posts and Telegraph Department. When bifurcated to BSNL an assurance was given to the existing Telecom Employees that it will not be made into a company status and there is no question listing its shares in the Stock Market. On the basis of assurance given by the then Government only the existing Telcom Department was made to BSNL.ReplyDeleteReplies
perestroika glasnost இந்த இரண்டு வார்த்தைகள் தான் சோவியத் சோஷலிசத்தைக் கலைத்தவை என்பது நினைவிருக்கிறதா ஜீவி சார்? BSNL நிர்வாகத்திடம் அரசு கேட்டிருப்பது restructure, disinvestment, ஓர் closure இப்படி தெளிவானவிவரங்களோடு ஆப்ஷன்களை! 31000 கோடிக்குமேல், acumlated losses உள்ள வெள்ளையானையைக் கட்டித் தீனி போட்டே ஆக வேண்டுமா? ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய எனக்கே கேள்விப்படுகிற விஷயங்கள் தலைசுற்ற வைக்கிறது.Delete
https://swarajyamag.com/insta/bsnls-future-hangs-in-the-balance-government-asks-telecom-psu-to-consider-revival-scheme-disinvestment-or-closure
அரசு, அரசு அதிகாரத்திற்குட்போட்டே இருக்கும் அமைப்பிடம் கேட்கிறதா? ரொம்ப சரி.ReplyDelete
சொந்த மகனுக்கு சோறு போடாமல், இருக்கறதை ஊரார் குழந்தைகளுக்கு ஊட்டி வளர்த்தாளாம், தாய். அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது?
ஓட்டப் போட்டியில் ஒருவனின் காலை மட்டும் கட்டிப் போட்டு ஓட்டப் பந்தயம் போ, என்று சொன்னார்களாம் அந்தக் கதையாக அல்லவோ இருக்கிறது?
இந்த நிலைக்குக் காரணம் ஊழியர்கள் அல்ல. நாள் தோறும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் சார்ந்த இலாகா இது. அந்த தொழில் நுட்ப வளர்ச்சியை சவாலாய் ஏற்றுக் கொண்டு, தனியார்களில் கவர்ச்சிகர திட்ட்டங்களை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இலாகா.ReplyDelete
ஒரு காலத்தில் சாதாரண மக்களின் தேவைகளுக்கான இலாகாவாக இருந்த தபால் துறையின் நஷ்டங்கள் தொலைத்தொடர்புத் துறையின் லாபத்தால் ஈடுகட்டப் பட்டன.
சுருக்கமாகச் சொன்னால் தொலைப்பேசித் துறை என்பது வருமானம் கொழிக்க வைக்கும் கொழுத்த இலாகா. இதன் மேல் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு கண் என்ன இரண்டு கண்ணுமே இருப்பது இயல்பு.
அரசியல்வாதிகளின் நாசப்படுத்தலுக்காகப் போராடி ஊழியர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
செல்லக் குழந்தைகளாய் இருக்கும் தனியார் தொலைத் தொடர்பு
கம்பெனிகளுக்கு தரப்பட்டிருக்கும் 4G அலைக்கற்றை உபயோகத்தைக் கூட இன்னும் அரசு சார்ந்த இலாகாவுக்கு வழங்கப்படவில்லை.
நாட்டின் பிரச்னைக்குரிய இடங்களில் BSNL மற்ற கொழுத்த வருமானம் உள்ள இடங்களில் தனியார்களின் செயல்பாடு என்ற ஏற்பாடு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொலைபேசி இலாகா தேசம் பூராவும் நிறைந்திருக்கும் அதன் சொந்த கட்டிடங்களுக்குப் பெயர் பெற்றது. வானளாவிய டவர்கள், செயற்கோள் விண்ணில் நிலைநிறுத்திய செலவுகள், தேசம் பூராவுக்குமான நெட் ஒர்க் இதெற்கெல்லாம் அரசின் பணம் எவ்வளவு செலவாகியிருக்கும்?.. அரசின் பணம் என்றால் மக்களின் பணம்.ReplyDelete
இதை வெகு சுளுவாக தனியார் வசம் இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கு மாற்றி விடுவது போல ஒப்படைத்து விடுவதற்கான ஏற்பாடு என்றால் நெஞ்சம் பதறுகிறது, சார்!
சரி, தீர்வு தான் என்ன?..
உங்களுக்கு சரித்திரம் தெரியும். இந்தியன் வங்கியை மீட்டெடுத்தது எப்படி என்ற சரித்திரம் உங்களுக்குத் தெரியும். ஆவதும் அரசியலவாதியாலே, அழிவதும் அரசியல்வாதியாலே என்ற விநோதமான சூத்திரம் இது.
குறைந்தபட்சம் அரசியல்வாதிகளினால் நாசமாக்கப்பட்டவை களையாவது அரசு முன்வந்து சீர்படுத்தக் கூடாதா? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற மாதிரி டிஸ் இன்வெஸ்ட்மெண்ட்டா, மூடிவிடுவதா என்றால் என்ன சொலவது, ஐயா?..
டிஸ் இன்வெஸ்ட்மெண்ட் என்பது மெல்ல மெல்ல கொல்லப்போகும் நஞ்சு. மூடிவிடுவது என்பது ஒரேடியாக சாகடிக்கும் நஞ்சு. அவ்வளவு தான் வித்தியாசம்.பொன் முட்டையிடும் வாத்தை கீறிப்பார்க்க யார் தான் ஒப்புக்கொள்வார்கள்?.. ஒப்புக்கொள்ளும் நிகழ்வு கண்முன்னால் நடைபெறும் பொழுது சகித்துக் கொள்ள முடியவில்லை. அவ்வளவு தான்.- தொடர்ந்து விவாதிப்பதற்கு, நிறையக் கேள்விகள் இருக்கின்றன! வாருங்கள், விவாதிக்கலாம்!
- மாற்றுக் கருத்தோடு எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை! அதற்கு கட் அண்ட் பேஸ்ட் செய்வதைத் தவிர, சுயமாகச் சிந்தித்து நாலுவரி எழுதத் தெரியாத நபர்கள், வெட்டி விளம்பரப் போஸ்டர் ஒட்டுகிறவர்கள் இவர்களை இங்கே அனுமதிப்பது என்று அர்த்தமில்லை. கமெண்ட் பெட்டிக்கு மேல் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பதைக் கொஞ்சம் கவனித்துவிட்டு, கமெண்டலாம்!
Subscribe to:
Posts (Atom)















