மீண்டும் BSNL! மீண்டு வருமா?

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான BSNL குறித்து சந்தோஷமான செய்தியொன்றை இன்று காலையில் பார்த்தேன். டெலிகாம் நிறுவனங்களுக்குள் விலை குறித்தான போட்டியில் வேகமாக ஜியோ முந்த, இதர நிறுவனங்கள் லாபத்தில் சரிவைச் சந்தித்தன என்றால் பொதுத்துறை நிறுவனமான BSNL, தொழிலின் அஸ்திவாரமாகிய கஸ்டமர்கள் எண்ணிக்கையிலேயே பெரும் சரிவைச் சந்தித்தது. தலைமையிலிருந்து அடிமட்ட ஊழியர் வரை இருந்த lethargic attitude இதற்கு ஒரு முக்கியமான காரணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.


  

BSNL’s broadband and FTTH plans have been making all the buzz in the market lately thanks to the data, speeds and other benefits which they offer என்று டெலிகாம்டாக் தளத்தில் ஆர்பிட் ஷர்மா சொல்கிறார். பிப்ரவரி மாதத்தில் மட்டும் 9 லட்சம் வாடிக்கையாளர்களை BSNL நிறுவனம் சேர்க்க முடிந்திருக்கிறது. முக்கியமான காரணமாக அதிகரிக்கப்பட்ட இணையவேகம், அதிக dataவோடு கூடுதல் ஆதாயங்களும் இருப்பதுதான் என்று சொல்கிறார்கள். கடந்த நாட்களில் BSNL ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கூடப் பணம் இல்லை, இழுத்து மூடப்போகிறார்கள் என்றசெய்திகள் தான் பூதாகாரமாக ஊதிப் பெரிதாக்கப் பட்டுவந்த நிலையில்,  இந்தச் செய்தி கொஞ்சம் ஆறுதலாகக் கூட இருக்கலாம். ஆனால் பொதுத்துறையில் ஒரு புள்ளிராசா வங்கியின் அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் போது, BSNL ஒரு நிறுவனமாக எப்படித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப்போகிறது, இந்த நல்ல செய்தி one time wonder என்றாகிவிடாமல் எப்படிக்  காப்பாற்றிக் கொள்ளப் போகிறார்கள் என்கிற சந்தேகமும் கேள்வியாக   எழுகிறது. 

புள்ளிராசா வங்கிக்கு சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டராக ஒருவர் வந்தார். அதிக பிசினஸ் வேண்டும் என்பதற்காக வட்டிக்குறைப்பு, சர்வீஸ் கட்டணங்கள் குறைப்பு என்று அறிவித்துப் பார்த்தார். கஸ்டமர் எவரும் அந்த அறிவிப்பை சட்டை செய்யவில்லை. கூடுதல் பிசினெஸ், அதிக வருமானம் என்று அந்த நிர்வாகி கண்ட கனவு வெறும் கனவாக மட்டுமே இருந்ததில் வெறுப்போடு house magazine இல் தன்னுடைய கசப்பை CMD              இடமிருந்து ஒரு கடிதம் பகுதியில் மிகவும் வெளிப்படையாகவே எழுதினார். "நம்முடைய வங்கியில் இண்டஸ்ட்ரியிலேயே வட்டி குறைவு, கட்டணங்கள் குறைவு, ஆனாலும் புதியவாடிக்கையாளர்கள் எண்ணிக்கை  கூடவில்லை, பிஸினஸும் கூடவில்லை, இதற்கு என்ன காரணமென்றும் புரியவில்லை"  

வேறுபெரியவங்கியிலிருந்து இறக்குமதியான அந்த CMD மேதாவிக்கு புள்ளிராசா வங்கியின் work culture எப்படிப் பட்டது, கூட இருந்த ஜெனெரல் மேனேஜர்கள்  உள்ளிட்ட நிர்வாகிகளுடைய நிர்வாக லட்சணம் எப்படிப்பட்டது என்பது கடைசிவரை புரியாமலேயே பதவிக்காலத்தை  ஓட்டினார் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமும் உண்டா?

நல்லதை நினைக்கவேண்டியதுதான்! நல்லதே நினைத்து நரகத்துக்கும் கூடப்போகலாம் என்று தயிர் வடையை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டே சொல்கிற தோழர் வரதராஜன் நினைவுக்கு வந்து எச்சரிக்கைமணி அடிக்கிறாரே! என்ன செய்ய?  

         தொடர்புடைய பதிவு ஒன்று 


6 comments:

  1. ஜீவி சார்! வாசித்ததற்கு நன்றி. ஆனால் நம்மால் சரியான தீர்வு என்னவென்று சொல்ல முடியவில்லை! இல்லையா?

    ReplyDelete
  2. BSNL ஆக மாற்றம் கொள்ளும் பொழுது புதிதாக எந்த வேலைக்கும் ஆள் எடுப்பதில்லை (No New Recruitment) என்று தொழிற் சங்கங்களோடு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கண்ட பலன்கள் தாம் பிரதானமானது. கீழ் மட்டத்தில் பணி புரிந்தவர்கள் பதவி உயர்வு பெறவும், பணிக்காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகள் அவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப மூன்றாம் நிலை ஊழியர்கள் வரை வேலை பெறவும் அது வழி வகுத்தது. இலாகாவில் பெற்ற அனுபவக் கல்வி மூலம் technical துறைகளில் பணியாற்றுவோர் இன்றைய தொழிற் போட்டிக்கு ஈடு கொடுத்து வருகிறார்கள் என்பது முக்கியமாக கணக்கில் கொள்ள வேண்டிய விஷயம்.

    இதை ஒரு தகவலாக மட்டுமே சொல்ல இந்த நேரத்தில் ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜீவி சார்! ஒரு தகவலாக இங்கே நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதற்கு முன்னாலேயே சுவாசிக்கப்போறேங்க தளத்தில் ஒரு விரிவான பதிவை எழுதத் தொடங்கி விட்டேன்!

      Delete
  3. எந்தக்கஷ்டம் வந்தாலும் நான் ஆரம்பம் முதலே BSNL க'ஷ்'டமர்! நான் சொல்வது அஷ்டே!

    ReplyDelete
    Replies
    1. ரீராம்! அப்ப bsnl உடன் கஷ்ட ஜீவனம்னு சொல்லுங்க!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!