வடிவேலு! சுரேந்திரா! அரசியல் பேசினால் தான் இனிக்கிறது!

வடிவேலு மிகச்சிறந்த நகைச்சுவைக் கலைஞன் என்பதில் சந்தேகமே கிடையாது. 2011 தேர்தலில் மனிதர்  திமுகவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தார்  குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமேயான  திமுகவை நம்பினால் என்ன ஆகும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் வடிவேலு என்று கூடச் சொல்ல முடியும்! மனிதர் சினிமாவில் நடிப்பது அநேகமாகக் குறைந்தே போனாலும், தேர்தல் பிரசாரமாக இருக்கட்டும் நையாண்டி மீம்களாக இருக்கட்டும் வடிவேலு படங்களில் முன்பு பேசிய வசனங்களே பரபரப்பாக உலா வந்து கொண்டிருப்பதே மனிதர் எப்படிப் புறக்கணிக்கப்பட முடியாதவராக இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி.


ஹரிஹரன் சொன்னதுபோல எல்லா அணிகளுமே வடிவேலுவை நன்றாகப்  பயன்படுத்திக் கொண்டன என்பது முழுக்க உண்மை


வீடியோ ரெண்டுநாள் பழசுதான்! ஆனால் அறுபது ஆண்டுகால திராவிடப்புரட்டுகள் ஓய்க்கப்படும் வரை இது  மாதிரியான விஷயங்கள் ரிபீட்டாவதும் தவிர்க்க மூடியாது தான்! 


சுரேந்திரா அந்த நாட்களில் கருத்துக்கணிப்புகளைக் கிண்டல் செய்து வரைந்த கேலிச்சித்திரத்தை இன்று முகநூலில் பகிர்ந்திருக்கிறார். தேர்தல் ஆணையத்திடம் பொய்யான வாக்குறுதிகளைத் தந்து அவர்களை முட்டாளாக்கிப் பார்ப்பதற்கு இடைஞ்சலாக இருக்கிறீர்கள் என்று வாக்காளர் அலுத்துக் கொள்கிற மாதிரி! இந்த கார்டூன்   ஊடகங்கள் இன்றைக்கு கிளப்பி விடுகிற கருத்துக் கணிப்புகளின் யோக்கியதை எப்படி என்பதையும் சொல்வதுபோல! படத்தில் தேவே கவுடா குறட்டை வீட்டுக் கொண்டிருப்பது போல! செம குறும்பு! 

மீண்டும் சந்திப்போம்.    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!