கமல் காசர் தன்னை ஒரு காந்தியவாதியாகக் காட்டிக் கொள்ள பிரயத்தனப்படுவதை இந்தப் பேட்டியில் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அதே நேரம் பிஜேபி காங்கிரஸ் இரண்டும் அல்லாத மூன்றாவது அணிக்கு வாய்ப்பிருப்பதாக அவர் நம்புவதையும் கூட!
ஒரிஜினல் காந்தி அப்படி என்ன சொன்னார், கமல் காசர் அதைத் திரும்பிச் சொன்னார் என்பதையும் நினைவு படுத்திக்கொள்ளலாம்.
சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக் கடுமையாக உழைத்தவர் கமல் காசர் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும் ஒரு சீரியசான முழுநேர அரசியல் வாதியாக மெனெக்கெடுவாரா என்பதில் இன்னமும் எனக்கு சந்தேகமே.
இன்றைக்கு முதல் பதிவிலேயே பகிர்ந்திருக்க வேண்டிய வீடியோ இது.அன்புமணி ராமதாஸ் பேட்டி.
கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி இணை ஆசிரியர் சலீம் இன்னமும் விறுவிறுப்புடன் நடத்தக் கற்றுக் கொள்ளவில்லை. 2016 இல் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற பின்னணி வாசகங்களோடு அன்புமணியாகிய நான் என்று பதவிப்பிரமாணம் செய்கிற மாதிரிக்கூட யதார்த்தம் புரிந்தவுடன் ஏழு சீட் கிடைத்தால் போதும் என்று சுருங்கி விட்டதை கேள்விகேட்டவரோ பதில்சொன்னவரோ மேம்போக்காகவே கடந்துபோகிறார்கள். நாமும்தான்! இந்த மாதிரி நிலையில்லாத உதிரிகளை முழுமையாக நிராகரிக்க வேண்டுமென்கிற எண்ணம் வலுக்கிறது.
!
திமுக ஒரு திருந்தாத, நிராகரிக்கப்படவேண்டிய கட்சி தான் என்பதற்கு மேலே ஒரு பெண்மணி பேசுகிறாரே அது ஒன்றே போதும்! கொள்கை விளக்கமெல்லாம் எதற்கு? இப்படி கொஞ்சம் எடுத்துவிட்டால் போதாதா என்பதுதான் திராவிடமாயை!
அப்பனுக்கு கொஞ்சமும் குறையாத வாய்க்கொழுப்பு! இதற்காகவே தோற்கடிக்கப்படவேண்டியவர் சந்தேகமே இல்லாமல் சின்ன ஜாமீன் கார்த்தி தான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை!
ச்சும்மா நச்சுன்னு ஒரு படம்! தந்தி டிவி, கருத்துக் கணிப்பு, திமுக கூட்டணி என்று எல்லாவற்றையும் கலாய்க்கிற மாதிரி!
கள யதார்த்தமும் அதுதானோ!!
//மூன்றாவது அணிக்கு வாய்ப்பிருப்பதாக // - நிச்சயமா மூன்றாவது அணிக்கு வாய்ப்பிருக்கு. மக்களுக்கு அதிமுக திமுக தவிர வேற யாராவது புதுசா நம்பிக்கைக்குரியவர்களா வந்தால் வாய்ப்பு தரலாம்னு நினைப்பாங்க, திடும் என வந்த விஜயகாந்தை ஆதரித்ததுபோல. ஆனா அவங்க நம்பிக்கைக்கு உரியவங்களா இருக்கணும்.
ReplyDeleteநேற்றைக்கு ரஜினியைப் பற்றி விமர்சனம், அவர் துணை தேவையில்லை, அவர் காவி/நான் கருப்பு என்றெல்லாம் பேசிவிட்டு, என்னை வந்து ஆதரிங்க என்று பல்லைக் காட்டினால் யார் நம்புவாங்க? கமலுக்கு அந்த ஆகர்ஷன சக்தி கிடையாது. எனக்கு இப்போ தோணுது 2%க்கும் குறைவாகத்தான் வாக்குகள் வாங்குவாங்கன்னு.
மூன்றாவது அணிக்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ் முட்டுக் கொடுத்தாலும் வாய்ப்பில்லை என்பதுதான் கள யதார்த்தம் மம்தா பானெர்ஜிக்கு உள்ளூர்ப் பிடுங்கல்களே அதிகம். மாயாவதிக்கு ஆசை இருந்தாலும் தூக்கிச் சுமக்க ஆள் கிடைக்குமா என்பதும் சந்தேகம் இவர்கள் இரண்டுபேரை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்!
Delete