இட்லி வடை பொங்கல்! #20 சனிக்கிழமை ஸ்பெஷல்

தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் என்ற பெயரிலான   குழப்பங்களையே கவனித்துவந்ததில் வழக்கமாகப் பதிவிடும் இந்தத்தலைப்பில் எழுதக்  கொஞ்சம் தாமதமாகிவிட்டது.


நாடாளுமன்றத்  தொகுதி வேட்பாளர்கள் இருவர் பேசும் விவாதம் இது. எதைப்  பேசுகிறார்கள்? நாடாளுமன்ற உறுப்பினராக தங்களுடைய கடமை பொறுப்பை உணர்ந்துதான் பேசுகிறார்களா என்பதைக் கவனித்தால், இந்தத் தேர்தல் முறையில் உள்ள கோளாறு என்ன என்பதும் புரியும். உள்ளாட்சி அமைப்புகளில்  பேச வேண்டிய பிரச்சினைகளை பேசுவது நாடாளுமன்ற உறுப்பினருக்கான தகுதியா? சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சபைகளுக்கு இவர்கள் தேவையா? தேர்தல்முறைகளைக் குறித்து எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? கொஞ்சம் மனம் திறந்து என்ன தோன்றுகிறது என்பதை பேசுங்களேன்!  

 

பொறுப்பில்லாதவர்களே தொடர்ந்து அரசியலில் கோலோச்சி வருவதில் இதுமாதிரிக் காமெடிக் கொடுமைகளை அனுபவித்தே ஆகவேண்டுமென்பது நமக்கென்ன தலையெழுத்தா?


தேர்தல்முறைகேடுகளைத் தடுக்க சக்தியில்லாத தேர்தல் ஆணையம் தண்ணிகாட்டும் அரசியல் பெருச்சாளிகள் பற்றி சதீஷ் ஆசார்யா கார்ட்டூன் இது! TN சேஷன் காலத்து மிடுக்கோடு தேர்தல் ஆணையம் துணிந்து நிற்குமானால் தயாநிதி மாறன்கள் இப்படி இளித்துக்கொண்டு பேட்டி கொடுக்க முடியுமா?  

   

வருமான வரித்துறையின் அடுத்த குறி தயாநிதி மாறனாக இருந்தால் தவறென்ன? பாவம், News 18 சேனலுக்கு ஏன் வலிக்கிறதாம்? முகநூலில் இப்படி ஒரு பொருத்தமான மீம் பார்த்தேன்.


படத்தில் 5 மெகா திருடர்கள் இருந்தாலும், தேர்தலில் போட்டியிடுவது நான்கு மெகா திருடர்கள்தான்! மெகா ஊழல்களைத் துணிந்து அரங்கேற்றிய மெகா திருடர்களான இவர்கள் தோற்கடிக்கப்படுவது நடந்தால் ஜனநாயகம் காக்கப்படுவதன் முதல்படி.  




     

இந்தத் தேர்தலில் கமல் காசர் அதிர்வலைகளை எழுப்பி இருப்பதென்னவோ நிஜம்! அதிர்வலைகள் எவ்வளவு வாக்குகளாக மாறும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியாத மர்மம்! 

  
மீண்டும் சந்திப்போம்!

8 comments:

  1. //அதிர்வலைகள் எவ்வளவு வாக்குகளாக மாறும் என்பது // - சார்... அவர், 4% வாங்குவதே ரொம்ப ரொம்ப அதிகம்னு நினைக்கிறேன். கட்சி ஜனநாயகமா நடக்கலைன்னு சொல்றாங்க. பேர் தெரியாதவங்களெல்லாம் வேட்பாளர்... பாவம் கமல்.... மக்கள் அவங்களோட ஒருத்தனா தெரியறவங்க முன்னெடுத்தாத்தான் (விஜயகாந்த், ரஜினி போன்று) நம்புவாங்க.

    ReplyDelete
    Replies
    1. குறுகிய நாட்களில் 4 அல்லது 5% வாக்குகள் வாங்குவது என்பது நிஜமாகவே சாதனை! தக்க வைத்துக் கொள்வாரா கட்சி தொடர்ந்து நடக்குமா என்பது எனக்கிருக்கும் சந்தேகம். உட்கட்சி ஜனநாயகம் என்பது இப்போது எந்தக்கட்சியிலுமே இல்லை என்கிற போது, மய்யத்தை மட்டும் உரை சொல்வானேன்?

      Delete
  2. நாலு மெகா திருடர்கள் - மீம் பொருத்தமா இல்லையே... இன்னும் இரண்டு மூன்று பேர்களாவது சொல்லியிருக்கணுமே

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ சரியாகத்தான் இருக்கிற மாதிரித் தோன்றுகிறது! மெகா சைஸ் சம்பாத்தியத்தில் பானாசீனா, ஆ!ராசா இருவரும் கலீஞர், சோனியா G யை எல்லாம் மிஞ்சிவிட்டதாகத்தான் 2004 to 2014 விவகாரங்கள் இருந்ததாகச் சொல்வார்கள். மீதமுள்ளவர்கள் இவர்கள் சாதனையை எட்டிப் பிடித்தமாதிரியோ நெருங்கி வந்த மாதிரியோ கூட எனக்குத் தெரியவில்லை!

      Delete
  3. இந்த நாலு பேருக்கு மட்டும்தான் recognition-ஆ? இது அநியாயம். இலங்கையில் ஒரு பில்லியன் முதலீடு பண்ணும் துணிச்சல் உள்ள ஜெகத்ரட்சகன்.. கடலில் சொந்த கப்பல் விட்டு பணத்தை அள்ளும் டி ஆர் பாலு , கற்றை கற்றையாக பணத்தை பிடித்தபோதும் அது யாருடைய பணமோ.. எங்களது இல்லை என்று துணிந்து சொல்லும் துரை முருகன், மின்சாரத்தை மறக்கடிக்க புகழ் கொண்ட வீராசாமி, கிட்டதட்ட பெரிய பைனான்சியராக இருக்கும் எ வ வேலு, இவர்களையெல்லாம் புறக்கணிப்பது தவறு. இவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. பந்து! ஜகத் ரட்சகன் குடும்பம் முதலீடு செய்த தொகை 3.85 பில்லியன் டாலர் சுமார் 26000 கோடி முழுக்க இவருடையதுதானா அல்லது அறிவாலயத்தின் பினாமியா என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. இவரை விடாய் பணம் வைத்திருப்பவர்கள் பட்டியலில் TR பாலு முதற்கொண்டு இன்னும் பலருண்டு. ஆனால் மெகா சைஸ் என்றால் இந்த நாலுபேர் தான்!

      Delete
    2. அ . ராஜாவை நானும் மறந்துவிட்டேன்! கோபித்துக்கொள்ளப் போகிறார்! எல்லோருமே மெகா திருடர்கள் எனும்போது இந்த நாலு பேர் மட்டும் ஸ்பெஷலா என்று மற்றவர்கள் கோபித்துக்கொள்வார்களே என்று சொன்னேன்!

      Delete
    3. திமுகவை உலகமகா ஊழல் பட்டியலில் இடம் பெறச் செய்த ஆ!ராசாவை மறக்கலாகுமா? :)))))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!