2019 தேர்தல் களம்! யாருக்கு வாக்களிப்பது?

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் தன்னுடைய சாதனைகளாகச் சொல்லிக்கொள்ள ஜாமீன் வாரிசு பானாசீனாவுக்கு ஒன்றுமே இல்லை என்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறதுபோல!  சின்ன ஜாமீனோ செம்பருத்தி சீரியலைப்பற்றி, தான் தேர்ந்தெடுக்கப் பட்டால் கேபிள் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஐடி ரெய்டு பார்ட்டியை இருகரம் கூப்பி வரவேற்கிறாராம்!   

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தை முடக்கத் தன் வீட்டில்   ஐடி ரெய்டு      நடத்தவிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக பானாசீனா ஒரு வெடிக்காத அதிர்வேட்டை வீசியிருக்கிறார்! இதற்கெல்லாம் கூட அனுதாப ஓட்டுக்கள் விழுமா என்ன?!


FirstPost   நடத்திய The National Trust Survey 2019 தெளிவாக நரேந்திர மோடி மீதே தேசம் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது. நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்திருப்பதாக 63% சொல்லும்போது அதில் நான்கில் ஒருபங்குதான்  ராகுலுக்கு 16% என்றும் சொல்கிறது.

இங்கே தமிழ்நாட்டில் மோடி என்ன செய்தார்? ஒன்றுமே இல்லை, நரேந்திர மோடியை வீழ்த்துவோம் என்று குரல் எழுப்பிக் கொண்டிருக்கிற திராவிட காங்கிரஸ் கூட்டுக்களவாணிகளுக்கு முகநூலில் மாரிதாஸ் சரியான பதில் ஒன்றை எழுதியிருக்கிறார். 
தமிழ் நாட்டிற்கு நரேந்திர மோடி என்ன செய்தார்? மீண்டும் ஏன் ஆட்சியை கைப்பற்றுவது நல்லது? கொஞ்சம் எளிமையாக வலுவான காரணம் சொல்லுங்கள் மாரிதாஸ். {கேள்வி : சதீஸ்}
இதை எப்படி எளிமையாகக் கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை.. இன்று நீங்கள் பயன்படுத்தும் தங்க நாற்கர சாலைகள் அமைக்கும் திட்டத்தை முழுமையாக விரைவு படுத்தி நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தியவர் வாஜ்பாய் அவர்கள். அதனை அன்று எதிர்த்தவர்கள் கம்யூனிஸ்ட் அதன் ஆதரவாளர்கள் , இன்று அது வரவில்லை என்றால் நாட்டின் தரைவழி போக்குவரத்தும் சரக்கைக் கையாள்வதிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும். நேரடியாகப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டது இந்த திட்டம். அதன் பலனை 10 வருடம் மேல் சென்று நிலையில் நாம் இன்று உணர்கிறோம் அதே போல் நரேந்திர மோடி அரசு சப்தம் இல்லாமல் பெரும் சிரமங்களிடையே அசுர வேகத்தில் செய்த வேலை ஒன்று உண்டு அவை பின் வருவன
தமிழகத்தின் துறைமுக கடலோர பகுதிகள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் , திட்ட விவரங்கள் , மதிப்பு , அதன் நிலை பின்வருவன :
A)சென்னை துறைமுகம் :
1.துறைமுகம் வரும் மாலுமிகள் , வியாபாரிகள் , இதர பயணிகள் தங்குவதற்குத் தகுந்த வகையில் மேம்படுத்துதல் - 17.97கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
2.Coastal Cargo Berth சரக்கு கையாளும் திறன் 1 MTPA என்ற அளவிற்கு தளவாடம் மேம்பாடு - மதிப்பு 80கோடி (பணி நடைபெற்று வருகிறது).
3.coastal paved storage yard ஏற்றுமதி செய்யும் பொருட்களைக் கையாள கிடண்டுகள் அமைத்தல் - மதிப்பு 54கோடி (பணி நடைபெற்று வருகிறது).
4.சரக்கைத் துக்கி இறக்கும் Bunker berth அளவை 1 MTPA என்று கூட்டுவதற்குத் தேவையான மேம்படுத்தும் திட்டம் - மதிப்பு 44கோடி (பணி நடைபெற்று வருகிறது).
5.துறைமுக கட்டமைப்பு கடல் நீரால் அரிக்கப்படாமலிருக்கக் கட்டப்படும் தாங்கு சுவர் எழுப்பும் பணிகள் நிறைவு - மதிப்பு 63 கோடி.
இதைத் தவிர Marina Port Modernization 315கோடி , கேஸ் , Single Buoy Mooring கட்டமைப்பு திட்டம் மதிப்பு 600 கோடி, Multi cargo Berth 110 கோடி , Bharti Dock II குளிர் கிடங்குகள் உருவாக்கும் பணிக்கு 100கோடி இந்த பணிக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன.
----------------------------
B)எண்ணூர் துறைமுகம் (KPL)
1.சரக்குகள் என்ன வருகின்றன என்பதை மிக துல்லியமாக்கக் கணக்கிடப் பயன்படுத்த RFID(radio-frequency identification) துறைமுக நவீனப் படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது -மதிப்பு 12 கோடி.
2.அனைத்து வகையான சரக்குகளைக் கையாளா Multi Cargo Terminal துறைமுக மேம்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது - மதிப்பு 151 கோடி.
3.துறைமுகம் நவீனமாக்கும் பணியில் Mobile X-ray Container Scanner உருவாக்கும் பணி - மதிப்பு 34.7கோடி (பணி நடந்துகொண்டிருக்கிறது)
4.துறைமுக ஆழமாக்கும் பணி Capital Dredging Phase 3 முடிக்கப்பட்டுள்ளது - திட்ட மதிப்பு 334கோடி.
5.துறைமுகம் வரும் கண்டெய்னர்கள் வைத்து பின் Cargo Berth கொண்டு செல்வதற்கான தளவாடம் Container Pre -Stacking Yard முடிக்கப்பட்டுள்ளது. -மதிப்பு 24கோடி
6.கூடுதலாக நிலக்கரி மற்றும் தமிழக மின்சார துறைக்குத் தேவையான Coal berth இரண்டு திட்டங்கள் சுமார் 497கோடி மதிப்பில் முடித்துள்ளார்கள்.
7.LNG Liquefied Natural Gas கையாள 5151 கோடி மதிப்பிலான திட்டம் நடைபெறுகிறது.
8.16.8 MTPA அளவில் சரக்கைக் கையாளும் திறனுடன் புதிய Container Terminal அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது - மதிப்பு 1270 கோடி.
9.துறைமுகங்களிலிருந்து ஆயில் எடுத்துச் செல்லும் பைப் லைன் அமைப்பும் பணி IOCL Oil jetty வேலைகள் நடைபெற்று வருகிறது - மதிப்பு 480 கோடி.
10.முன்பு இருந்த Iron Ore Terminal மாற்றி மேம்படுத்தும் திட்டம் மூலம் திறனை 12 MTPA என்று கூட்டுவதற்கான பணி நடைபெறுகிறது. - மதிப்பு 228கோடி.
11.எண்ணூர் துறைமுகத்தை மையமாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் கட்டமைப்பை Power Cluster திட்டப்பணிகள் நடந்துவருகின்றன - இதன் மதிப்பு 21,132கோடி. பணி நிறைவில் இது 2780MW மின் உற்பத்தி செய்யும் அளவிற்குத் திறனுடன் இயங்கும்.
இது தவிர Terminal Phase 2, நிலக்கரி தனி Terminal -2, பல் விதமான சரக்கைக் கையாளும் Cargo Terminal 2 என்று 950 கோடி மதிப்பிலான பணிக்கான ஆய்வு வேலைகள், Petrochemical cluster அமைக்கும் பணிக்கான மதிப்பு 4520கோடி இவற்றிற்கான ஆய்வுப் பணிகள் முடித்துள்ளனர்.
---------------------------------
C)தூத்துக்குடி துறைமுகம் (VoCPT)
1.RFID(radio-frequency identification) துறைமுக நவீனப் படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது -மதிப்பு 4.94 கோடி
2. முழுமையாக இயந்திர மயமாக்கும் வேலை Berth IX முடிக்கப்பட்டுள்ளது - மதிப்பு 92.72 கோடி.
3.NH7A சாலையிலிருந்து தூத்துக்குடி Fisheries college வரை Truck Parking Terminal மேற்கொள்ளத் தேவையான மேம்பாட்டு வசதிகளைச் செய்துள்ளனர்., பணி நிறைவு - மதிப்பு 24.72 கோடி.
4.துறைமுகத்தின் Container Scanner -1 நவீனப்படுத்தும் வேலை நடைபெறுகிறது - மதிப்பு 50கோடி.
5.வடக்கு Cargo berthII சரக்கையை கையாள தேவையான வசதி புதிதாக மேம்படுத்துதல்மூலம் 7 MTPA அளவிற்குச் சரக்கு கையாளும் திறன் மேம்படுத்தல் - பணி நிறைவு - மதிப்பு 335கோடி.
6.நீளம் 150m , 15000 Deadweight tonnage அளவுள்ள பெரும் சரக்கு கப்பல்களைக் கையாள துறைமுக ஆழப்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது - மதிப்பு 36.28 கோடி.
7.முன்பே இருக்கும் நிலக்கரி படகுத்துறை Coal Jetty நவீனமயமாக்கல் மேம்படுத்தல் பணி நடைபெறுகிறது - மதிப்பு 97.76கோடி.
8.கூடுதலாக Harbour Mobile Cranes அமைக்கும் பணிகள் முடிக்க பட்டுவிட்டது, இதன் மூலம் 4.36 MTPA அளவிளான சரக்குகளைக் கையாள்வது எளிது .- மதிப்பு 28.5கோடி.
9.Panamax Ships போன்ற பெரும் சரக்கு கப்பல்கள் கையாளும் Basin Deepening செய்யும் திட்டம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது - பணி தொடங்கும் நிலையில் உள்ளது - மதிப்பு 3090கோடி.
10.தூத்துக்குடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் கட்டமைப்பை Power Cluster திட்டப்பணிகள் நடந்துவருகின்றன - இதன் மதிப்பு 17987கோடி. பணி நிறைவில் இது 2725 MW மின் உற்பத்தி செய்யும் அளவிற்குத் திறனுடன் இயங்கும்.
11.துறைமுகத்தை நவீனமயமாக்கும் பணியில் முக்கியமான Mobile rubber tyred electrically operated hopper திட்டம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது - இதன் மதிப்பு சுமார் 38கோடி.
இதைத் தவிரத் தூத்துக்குடி துறைமுகத்தைப் பொறுத்தவரை முன்பு ஆயில் jetty இருந்த பகுதிகள் சிலவற்றை நிலக்கரி கையாளும் வண்ணம் மாற்று மேம்படுத்தும் பணி , NCB 1, உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் திறனை மேம்படுத்தல், துறைமுகம் சுற்றி கடல் தண்ணீர் ஆளபட்டுத்துதல் , அதற்குத் தக்க கட்டுமான பணிகளை மேம்படுத்தல் , கூடுதலாக நிலக்கரி கையாளும் திறனைக் கூட்டுதல் , பல்வேறு பட்ட பொருட்கள் சரக்குகளைக் கையாளும் திறன் மேம்படுத்தல் 4700கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஆய்வுகள் நடைபெற்று அடுத்த கட்ட வேலைகளை மும்முரபடுத்துயுள்ளார்கள்.
----------------------------
D)கன்னியாகுமரி துறைமுகம் :
1.பயணிகள் கையாளும் திறன் மேம்பாட்டுக்குத் தேவையான ஆய்வுப் பணிகள் நிறைவு - திட்ட மதிப்பு 20கோடி கணக்கிடப்பட்டுள்ளது.
2.சின்னமுட்டம் துறைமுகம் மீன்பிடி துறைமுகம் நவீனப் படுத்தும் வேலைகள் முடித்து கொடுக்கப்பட்டுள்ளன - மதிப்பு 73.52கோடி.
3.ஆழ்கடல் சென்று மீன்பிடித்தல் , பதப்படுத்தல் , அதைச் சந்தை படுத்தல் தேவையான மீன்பிடி துறைமுக கட்டமைப்பை இணையம் அமைக்கத் திட்ட வரைவுகள் தயார் செய்யும் பணி முடிந்துள்ளது. இதன் மதிப்பு 80கோடி.
4.சென்னை துறைமுகத்தில் உள்ள 1969களில் அமைக்கப்பட்ட சுமார் 47 வருடங்கள் மேல் இருந்த Chennai Petroleum Corporation Ltd சொந்தமான pipeline முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு 30Inch அளவு pipelinie மாற்றப் பட்டு 42inch அத்துடன் நவீனமாக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. இதன் நீளம் 17கிமீ - திட்ட மதிப்பு 257.87கோடி. பணி முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.
5.fisherman infrastructure development fund எடப்பாடு கிராமத்தில் மீன்பிடி பாதுகாப்பு மற்றும் மின்பிடி கட்டமைப்பு மேம்படுத்தலுக்கு பணிகள் செய்யபட்டுள்ளன மதிப்பு 30கோடி , காருண்யா புரம் பகுதிக்கு 19கோடி , தாதெயபுரம் 24 கோடி , மிடலம் 68கோடி மதிப்பிலான பணிகள், கெலன் நகர் 40 கோடி மதிப்பிலான பணிகள் செய்ய ஆவன செய்யபட்டுள்ளது.
---------------------------
இதைத் தாண்டி
1.சீர்காழியில் 25 MTPA அலாவிலான சரக்கைக் கையாளும் திறனுடன் புதிய துறைமுகம் அமைக்கும் திட்டம் முழுமையாகத் தயார் நிலையை எட்டியுள்ளது இது திருச்சி , நாமக்கல் , கும்பகோணம் போன்ற பகுதி உற்பத்தியாளர்களுக்கு நல்ல செய்தி. இந்த திட்டத்தின் மதிப்பு 3000 கோடி.
2.transshipment வகை துறைமுகத்தினை இணையம் என்ற இடத்தில் அமைப்பதற்கான திட்ட வடிவம் தயார் - ஆனால் உள்ளூர் போராளிகள் என்ற பெயரில் போராட்டம் தூண்டப் படுகிறது இது கேரளா கோவளம் செல்ல வாய்ப்பு உருவாக்கியுள்ளார்கள் போராளிகள். இந்த திட்டத்தின் மதிப்பு 6575கோடி.
3.கடலூர் வடக்கு தெற்கு துளைவு சரக்கை எளிதில் கையாளும் விதமாக ஆழபடுத்தும் பணிக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது - இதன் மதிப்பு 135 கோடி.
4.ஆறு வழிப்பாதை மூலம் எண்ணூர் துறைமுகத்தை - கட்டுபல்லி - தச்சூர் இணைப்பு கூடுதலாக தாமரை பக்கம் - திருவாள்ளுர் - ஸ்ரீ பெரம்பூர் - சிங்கபெருமாள் கோவில் வழி பொன்னேரி வரையிலான இணைப்பு மூலம் துறைமுகத்தை நோக்கி சரக்கைக் கையாளும் திறன் மேம்படுத்தலுக்கான திட்டம் மதிப்பு 2,470 கோடி தொடக்க பணிகள் ஆரம்பம்.
5.பெங்களூர் Whitefield industrial முதல் சென்னை வரை மொத்தமாக இடைப்பட்ட நகரங்களை இணைக்கும் பணி மூலம் சென்னை துறைமுகங்கள் நோக்கி உற்பத்தி பொருட்கள் தடை இன்றி நகர்வதற்குத் துறைமுகத்தை இணைக்கும் சாலை திட்டம் மதிப்பு சுமார் 10,000கோடி , தூரம் 243கிமீ. இதன் மூலம் ஓசூர் முதல் சென்னை இடையேயான இரண்டாம் மூன்றாம் தர நகரங்கள் அனைத்தும் பயனடையும். இது போல் துறைமுகங்களை மற்ற நகரங்களுடன் இணைப்பதற்கான பல்வேறு பட்ட திட்டங்கள் மதிப்பு 30,000கோடிக்கும் மேல் ஆய்வுப் பணிகள் நிறைவு செய்துள்ளனர்.
6.மத்திய அரசு தமிழ் நாட்டின் TIDCO உடன் இணைந்து பெரம்பலூர் அருகே ஏற்றுமதி தரத்துடன் கூடிய தோல் பொருட்கள் , காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் 1880கோடி ; electronic தொழிற்சாலைகள் தொடங்க தேவையான 3542கோடி ; சென்னையில் Steel cluster 7000கோடி மதிப்பீட்டிலும் மற்றும் Tamil Nadu Maritime cluster சுமார் 500 மதிப்பில் உருவாக்கத் தேவையான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
7.Coastal Economic Zone (CEZ) கடலோர பொருளாதார மண்டலம் சுமார் 2500கோடி மதிப்பீட்டில் அமைக்கத் தேவையான ஆய்வுகளை நடத்தியுள்ளார்கள்.
8.பூம்புகாரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கத் தேவையான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்க பட்டுவிட்டன இதன் மதிப்பு 148கோடி. இந்த துறைமுகம் 2000MMTPA அளவிற்குக் கையாளும் திறனுடன் அமைக்கப்படுகிறது.
9.Coastal Community Development சென்னை மாமல்லபுரம் ராமேஸ்வரம் கன்யாகுமரி கடலோர மாவட்ட மக்கள் வாழ்வு மேம்படத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளுக்குத் தேவையான திட்டங்களைத் தமிழக TNTDC உடன் இணைந்து மத்திய அரசு சுமார் 99கோடி செலவில் வேலைகளைச் செய்துவருகிறது.
10.கன்னியாகுமரி முதல் விவேகானந்தர் பாறை வரை Ropeway அமைக்கும் திட்டத்திற்கான விரிவான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது இதன் மதிப்பு 100கோடி.
{மிக முக்கியம் நான் தமிழகத்தில் செய்துள்ள திட்டங்கள் , செய்ய உள்ள திட்ட விவரங்களை தன இங்கே பட்டியலிட்டுள்ளேன் தவிர இதே போல் மற்ற கடலோர மாநிலங்கள் அனைத்திலும் இந்தே அளவிற்கு வேலைகளைப் பலவற்றிலும் முடித்து வருகின்றனர் ஒவ்வொன்றாக. எனவே இதன் பிரமாண்டத்தைக் கொஞ்சம் நீங்கள் சிந்தித்துக் கொள்ளுங்கள்.}
நான் மேலை பட்டியளிட்டவைகளில் சில பல குறிப்பிடாமல் விட்டுவிட வாய்ப்பும் உண்டு. என் மட்டத்தில் நான் இதைப் பட்டியலிட்டுள்ளேன். விவரங்களை அந்த அந்த துறைமுகங்களில் கேட்டுச் சரிபார்த்துக் கொள்ளவும். ஏன் என்றால் இங்கே மோடி என்ற மனிதர் எது செய்தாலும் அது பொய் தவறு சூழ்ச்சி என்று ஆரம்பிப்பார்கள். எனவே தேடிப் படித்துக் கொள்ளவும்.
----------------------------------------------------------------------
இதனால் தமிழகத்திற்கு அப்படி என்ன பலன்?
தமிழகத்தின் மாநிலம் முழுவதும் இருக்கும் விவசாயம் மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் , திருப்பூர் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் ; ஆம்பூர் வேலூர் போன்ற பகுதிகளின் இருக்கும் தோல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் , மாநிலம் முழுவதும் நடைபெறும் நகை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், சென்னை சுற்றி இருக்கும் வாகன உதிரிப் பாக உற்பத்தியாளர்கள் , பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் குடிசை தொழிலாக நடைபெறும் பரிசுப் பொருட்கள் உற்பத்தி சிறு சிறு கைவண்ண பொருட்கள் உற்பத்தியாளர்கள் , அழகு சாதன பொருட்கள் உற்பத்தியாளர்கள் , கட்டுமான பொருட்கள் உற்பத்தியாளர்கள் , கோவை அதனைச் சுற்றியுள்ள இயந்திரம் , மோட்டார் மற்றும் Machinery, Industrial Parts & Tools உற்பத்தியாளர்கள் , ரப்பர் - கெமிக்கல் உற்பத்திசெய்வோர் என்று அனைத்து விதமான வகையிலும் மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உலக அளவில் தேவை உருவாக்கவும் பொருட்கள் வெளி நாடுகளின் சந்தைக்கு விரைவாகச் சென்று சேரவும் , சரக்கைக் கையாள்வதில் செலவினத்தைக் குறைக்கவும் இந்த துறைமுக கட்டமைப்பு நேரடியாக உதவுகிறது.
இதனால் 24% அளவிற்கு உற்பத்தியாளர்கள் அனைவருக்கும் ஆர்டர் கூடுதலாகக் கிடைக்கும் வாய்ப்பும் அத்துடன் சரக்கு சென்று சேர்வதில் கூடுதலாக ஆகும் செலவினம் குறையவும் செய்யும். இது 100% உற்பத்தியாளர்கள் அனைவரின் எதிர்காலத்தை மேம்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை.
இதை அனைத்தையும் விட இந்த திட்டம் நேரடியாகப் பயன் கொடுக்கப்போவது கடலோர மக்கள் வாழ்வில் தான். மீனவ சமூகத்தினர் & அவர்களின் வாழ்வு முன்னேற்றம் காண வேண்டும் என்று நினைக்கும் அமைப்புகள், ஆய்வாளர்கள் அனைவரிடமும் கிடைக்கும் தகவல்கள் என்னவென்றால்
1)மீன் உற்பத்தி மற்ற நாடுகளில் உள்ளது போல் ஒரு பண்ணை தொழில் போல் முன்னேற்றம் காணவில்லை அதற்கான வசதி ஏற்படுத்த அரசுகள் முயற்சி மேற்கொள்ளவில்லை.
2)இடைத்தரகர்கள் தலைப்பாட்டால் மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. சில நேரம் அடிமாட்டு விலைக்குச் செல்கிறது.
3)90 நாட்கள் கடலில் மீன்பிடி தடை காலத்தில் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பழுதுபார்க்கத் தேவையான உதவிகள் அரசு செய்ய வேண்டும்.
4)மீன் பிடி தடைகாலங்களில் அரசு வழங்கும் உதவித் தொகை கூடுதலாகக் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்
5)மானிய விலையிலான டீசல் அதிகம் கொடுக்க வேண்டும்.
உலக அளவில் நாம் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடாக மீன்வளத்துறையிலிருந்தாலும் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை விட ஏறக்குறைய 10 மடங்கு குறைவாக பின் தங்கியுள்ளோம். இதை மறுப்பதற்கில்லை. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் எளிமையாகக் கூறலாம் நம் மீனவர்களிடம் நவீன கருவிகளுடன் கூடிய மேம்பட்ட சாதனங்கள் இல்லை , உயர் ரக ஆழ்கடல் சென்று மீன்பிடிக்கும் வசதிகள் இல்லை. இந்த விதமான காரணங்கள் தான் பின்தங்கியுள்ளதற்குக் காரணம் ஆகும். அந்த குறைகளை இந்த துறைமுக மேம்படுத்தும் வேலை முடித்து வைக்கும்.
இந்த 5 வகை தேவையும் மாறும் இந்த துறைமுக கட்டமைப்பில் முழுமையாகத் தமிழகம் தன்னிறைவு பெரும் போது. இடைத்தரகர்கள் , முதலாளிகள் தொல்லை இல்லாமல் உலக அளவில் கொள்முதல் செய்யும் Buyers நேரடியாக மீனவ மக்களை அணுகும் சூழல் இதன் மூலம் உருவாகும். அது இடைத்தரகர்களை ஒழிக்கும். அதன் தொடக்கம் அனைத்து இடங்களிலும் மெல்லத் தெரியத் தொடங்கும் காலம் இது. ராமேஸ்வரம் , கன்னியாகுமரி , நாகபட்டினம் என்று பல இடங்களில் ஆழ்கடல் சென்று மீன்பிடிக்கும் கப்பல்கள் (மதிப்பு 1கோடி) வரவு தொடங்கியுள்ளது. இந்த வகை கப்பல்கள் கையாள சரியான துறைமுக வசதி தேவை என்பதால் முதலில் துறைமுக வேலைகளை விரைவு படுத்திவிட்டு பின் அதி தீவிரமாக ஆழ்கடல் சென்று மீன்பிடிக்கும் கப்பல்களை மீனவர்களுக்கு வழங்கும் வேலையைப் படிப் படியாகக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அந்த வகையில் பார்த்தாலும் நாடு முழுவதும் இந்த ஆழ்கடல் மீன் பிடிக்கும் கப்பல்கள் ஓட தொடங்கி இருக்கின்றன என்பது உண்மை. திருச்சியில் 4 படகுகள் கட்டுமான வேலையை முடித்துள்ளார்கள் , கொச்சி துறைமுகத்தில் 5 கப்பல்கள் வரை ஓட தொடங்கியுள்ளன , குஜராத் , கல்கத்தா என்று அனைத்து கடலோர மாநில மீனவர்கள் சமூகம் மெல்ல இதன் பயனை இனி பெறத் தொடங்கும்.
{ஒரு திட்டம் அதனைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வெற்றி பெறுவதும் என்பது அதற்கென்று ஒரு கால அளவை எடுக்கும். எனவே குறை கூறுவதை விட்டுவிட்டு சற்று உண்மையை உணர வேண்டும்.}
----------------------------------------------------------------
இறுதியாக :
வெறுப்பை விதைப்பது எளிது : இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது - அப்போ இந்திய மீனவர்கள் இல்லையா? என்று எதையாது பேசி வெறுப்பை விதைக்கலாம் ஆனால் 2014ல் மொத்தம் கைதான 787 மீனவர்கள் , 2015ல் கைதான மொத்தம் 454 மீனவர்கள் , 2016ல் கைதான 290 மீனவர்கள் , 2017 , 2018 என்று எந்த ஆண்டிலும் முழுமையாக மீனவர்களை மீட்டு கொண்டு வந்ததும் இதே நரேந்திர மோடி அரசு தான் என்பதை வசதியாக மறக்கவைக்கவும் முடியும்.
வெவ்வேறு நாடுகளில் சிக்கிய கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மட்டும் சுமார் 393 நபர்கள் உடனடியாக மீட்டு கொண்டுவந்த அரசும் இவருடையதே. ஆனால் கஜாபுயல் வரவில்லை என்று வெறுப்பு பரப்புவது எளிதாகிறது. பதிலுக்கு ஒகி புயலுக்கு வந்தார் என்றா பேசுவது டீகடை பேச்சாக மாறிவிடுகிறதே தவிர அறிவாந்த விவாதமாக இல்லை.
நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பதிவி ஏற்று சுமார் 1800 நாட்கள் கடந்துள்ளார். இந்த 1800 நாட்களில் அவர் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு மேலே நான் ஒரே ஒரு மாநிலத்தில் நடந்துள்ள மாற்றத்தைக் கொடுத்துள்ளேன். ஒரு வீடு கட்டுவதற்கு நிலம் வாங்கி அதற்கென்று வேலைகள் ஆரம்பிக்கும் போது இருக்கும் சிக்கல்கள் அதை முடிக்க ஆகும் கால அளவுகள் கொண்டு ஒரு எதார்த்தம் சிந்தியுங்கள் - தன் மட்டத்தில் நரேந்திர மோடி என்ற மனிதர் எந்த அளவிற்கு வேலை செய்துள்ளார் என்பது புரியும்.வெறும் வெறுப்பு பிரச்சாரங்களினால் என்ன நடந்துள்ளது என்றால் மக்கள் மனதில் அனைத்துமே வெறுப்பாகப் பார்க்கும் சூழல் உருவாக்கியுள்ளனர் இந்த பழ கருப்பையா முதல் திமுக அடிமைகள் வரை. இது ஆரோக்கியமான விசயம் அல்ல. அரசியலுக்காக இவர்கள் இந்த வெறுப்பு பிரச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் - மக்கள் நாமும் இதன் வழியே தான் சென்று உண்மையை உணராது போகிறோம்.
ஒரு உண்மை அதைத் தேடிப் படித்து அறிவதில் தான் உணர முடியும். அந்த உண்மையை விரிவாக எடுத்து முன்வைக்கும் போது அதனை ஏற்கும் மனம் தெளிவு நமக்கு வேண்டும் என்பது தான் என் வேண்டுகோள்.
உங்கள் குழந்தையின் எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தியுங்கள் அந்த வகையில் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி என்ற இந்த மனிதர் ஆக வேண்டும் என்பது புரியும் - அது தான் தமிழகத்திற்கு நல்லது. {மீண்டும் ஒரு முறை மேலை கூறிய விவரங்களைத் தேடிச் சரிபார்த்துக் கொள்ளவும்}.
ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன் உழைக்கும் உழைப்பை அங்கிகாரம் செய்யாத , கொடுக்காத எந்த சமூகமும் உருபடாது. தன் குடும்பத்திற்கு தனிபட்ட விததில் தன் பதவி அதிகாரத்தை பயன்படுத்தாத மனிதர் நரேந்திர மோடி அவரின் உழைப்பின் எடுத்துக்காட்டு மேலே இருக்கும் ஒரு சிறு துளி. அதை பகுத்தாய்வு செய்து சிந்திக்க வேண்டியது ஒரு படித்த அறிவார்ந்த சமூகத்தின் கடமை.

-மாரிதாஸ் 
நன்றியுடன் மாரிதாஸ் முகநூல் பக்கத்தில் இருந்து 

வெறுப்பரசியலில் மயங்கிவிடாமல் தெளிவாகச் சிந்தித்து வாக்களிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை! சரியான தலைமைக்கு, அதற்கு உறுதுணையாக இருக்கும் வேட்பாளருக்கு வாக்களிப்பது முக்கியம்.

மீண்டும் சந்திப்போம்.       

2 comments:

 1. //சிந்தித்து வாக்களிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை! //

  சார்... தமிழகத்தில் அந்த மாதிரி சிந்தித்து வாக்களிப்பதற்கு தொகுதிக்கு 2000 பேர்கள் இருந்தாலே அதிகம். மாரிதாஸின் உதாரணங்கல் உண்மையே என்றாலும் சாதாரணர்களை அடைய முடியாது. அவங்களுக்குத் தேவை அடிப்படை வசதிகள், பணம். அவ்வளவுதான்.

  தமிழகத்தில் மத ரீதியான வாக்குகளும், சாதிரீதியான வாக்குகளும், இலவசத்துக்காக கை ஏந்துபவர்களின் வாக்குகளும் இந்த முறை திமுக+காங்கிரஸுக்கு விழுவதால், 33+ இடங்களை திமுக+காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என்றே நான் நம்புகிறேன். இது 36க்கு மேலும் போகலாம்.

  ReplyDelete
  Replies
  1. பதிவுகளில் எழுதுவது ஒரு குறைந்தபட்ச விழிப்புணர்வுக்காக. இது என்னுடைய கடமையாக நினைத்து மட்டுமே எழுதுகிறேன்! திமுக கூட்டணிக்கு மவுசு நாளுக்குநாள் தேய்ந்து வருவதாகத்தான் கேள்விப்படுகிற செய்திகள் சொல்கின்றன. ஜனங்களுடைய மனதை முழுதாக அறிய ரிசல்ட் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!