இட்லி பொங்கல் வடை! #23 பேசாப்பொருள் பேசுவோம்!

பிஜேபியின் தேசிய செயலாளர் H ராஜா சற்றுக்கூடத் தயங்காமல் தன்னுடைய கருத்துக்களைப் பூசி மெழுகாமல் சொல்லக் கூடியவர் என்பதே இங்குள்ள அரசியல்வாதிகள் பலருக்கும் அலெர்ஜியாக இருக்கும் விஷயம். அவர் சொல்கிற விஷயத்தில் தவறு கண்டு பிடிக்க முடியாதவர்கள், அவரை வசைச்சொற்களால் எதிர் கொள்கிறார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான்!


இலங்கைத்தமிழருக்கு ஆதரவு என்பதையே ஒரு பெரிய வியாபாரமாகச் செய்து கொண்டிருக்கிற கட்சிகளோ  மதசார்பற்ற மு,போக்கு கூட்டணியில் இருக்கிற கட்சிகளோ இதுவரை வாயைத் திறந்து கண்டனக் குரலை எழுப்பவில்லை.அவர்களுடைய கள்ள மௌனத்துக்குப் பின்னாலிருக்கிற அரசியல், உள்நோக்கம் என்னவென்று புரிந்தவர்களுக்கு ஆச்சரியமான செய்தியொன்றும்  இல்லை. புரியாதவர்கள் எஸ்ரா சற்குணம் மாதிரி அரசியல் செய்யும் பாதிரிகள் பேச்சைக்கேட்டு திருப்தி அடையுங்கள்! எஸ்ரா சாபம் கொடுக்கிறார்! திருமாவுக்கு சர்டிபிகேட்டும் கொடுக்கிறார்.  


சீமாறு பேசுகிற தமிழ்த் தேசியம் கொஞ்சம் விசித்திரமான விஷயம்! குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்கிற கதை என்று ஏதோ சொல்வார்கள், அதுமாதிரித் தானா?

  
ஆளுக்கொருதிசையில் செய்வதற்குப் பெயர் அரசியலா? இதைத் தான் எதிர்க்கட்சிகள் செய்கின்றன என்றால், பிஜேபியைக் குறைசொல்லிப் பயன் என்ன?
    

சதீஷ் ஆசார்யா என்ன நினைத்து இதை வரைந்தாரோ தெரியாது! ஆனால் இந்தத் தேர்தலில் காங்கிரசும் கூட்டாளிகளும் ரொம்பவுமே தப்புக்கணக்குப் போட  ஆரம்பித்திருக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  

  
வயநாடு ராகுல் காண்டியால் அகில இந்திய கவனம் பெற்றிருக்கிறது என்றா நினைக்கிறீர்கள்? செய்தியை இங்கே முழுதாகப் படித்துவிட்டு அப்புறம் முடிவு செய்து கொள்ளுங்கள்!     

4 comments:

  1. இலங்கையில் தவ்ஹீத் ஜமாஅத் (அதாவது வஹாபிசம்) செய்த குற்றத்தை இங்குள்ளவர்கள் மூடி மறைத்து ஐஎஸ்ஐஎஸ் என்று குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பதை அனுபவித்துத்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வஹாபியிசம் எப்படித் தங்களைக் குறுகிய கண்ணோட்டத்துடன் வன்முறையாளர்களாக மாற்றிவருகிறது என்பதை பாதிக்கப்படும் இஸ்லாமியர்களே இன்னமும் முழுமையாகத் தெரிந்துகொள்ளவில்லையே! மாற்றத்துக்காக, தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள உள்ளிருந்தே குரல்கள் வலுவுடன் எழுந்தாலொழிய இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லையே சார்!

      என்னுடைய இஸ்லாமியநண்பர்கள் இதைப்பற்றி பேசுவதையே தவிர்க்கிறார்கள்.

      Delete
    2. இதைப்பற்றி எனக்கு ஓரளவு நன்றாகத் தெரியும். பிராமணர்களுக்கு குல ரீதியாகவும் அவங்க ஸ்க்ரிப்ட் பிரகாரமும் ஒரு 'நடத்தைக்கான விதிகள்' உண்டு. அதை முற்று முழுக்க தொடர்ந்தால், அது எப்படி அவர்களை மற்றவர்களிடமிருந்து அந்நியப்படுத்துமோ (அந்த ஸ்கிரிப்டுகளின் சரி/தவறு/ஏற்றுக்கொள்ளத்தக்கது/அப்படி இல்லாதது என்ற வாதத்துக்குள் செல்லவேண்டாம்) அதுபோல வஹாபிசம் அதனைப் பின்பற்றுபவர்களை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்படுத்துகிறது. இதனைப்போலத்தான் கிறிஸ்துவர்களிலும் பெந்தகொஸ்தே போன்ற கான்சப்ட்.

      Delete
    3. எவராயிருந்தாலும் தங்களுடைய நம்பிக்கை, சடங்குகளைத் தங்கள் வரை வைத்துக்கொள்ளும்போது அதை விமரிசிக்க வேண்டியதில்லை. அதே நேரம் தங்களுடைய மார்க்கம் மட்டுமே தூய்மையானது என்று நம்புவது கூடத் தவறென்று சொல்ல முடியாது. ஆனால் இதர நம்பிக்கைகளை வழிபாட்டுத்தலங்களைத் தகர்ப்பதே தங்களுடைய மார்க்கம் போதிப்பதாகக் கிளம்புவது தான் இங்கே விமரிசனத்துக்குள்ளாகிறது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!