கருத்துக் கணிப்பும் கருத்துத் திணிப்பும்! #அரசியல்

இது கருத்துக்கணிப்புகளின் நேரம். தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9 ஆம் தேதிக்குப் பிறகு எந்தக் கருத்துக் கணிப்பும் வெளியிடக்  கூடாதென்று தடை விதித்திருப்பதில் இந்த நான்கு   நாட்களுக்குள் கருத்து கணிப்பென்ற பெயரில் ஒவ்வொரு ஊடகமும் வாந்தி எடுப்பதைப் பார்க்கவிருக்கிறோம். ரங்கராஜ் பாண்டே கூட தனது சாணக்யா தளத்தின் கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன் முதல் பகுதி இங்கே


Psephology என்கிற வாக்காளர் மனநிலையைக் கணிப்பதில் சரியான முறையைக் கடைப்பிடித்தால் துல்லியமான ரிசல்ட் இருக்கும் விஞ்ஞானபூர்வமான துரி இது. பிரணாய் ராய் India Today வார இதழுக்காக தொடக்கநாட்களில் நடத்திய கருத்துக்கணிப்புக்களின் துல்லியமே இன்றைய NDTV உருவானதற்கு மூலகாரணம் என்றால் நம்புவதற்கு கடினமாக இருக்கும்.

துல்லியமான ரிசல்ட்டுக்கு சாம்பிள் சைசும் அடிப்படைக் கேள்விகளும் மிக முக்கியம். பதில்சொல்பவர் உண்மையைத்தான் சொல்கிறாரா என்பதை verify/crosscheck செய்துகொள்ள துணைக்கேள்விகளும் அவசியம். எதெல்லாம் கழிக்கப்பட /கணக்கில் கொள்ளவேண்டியவை என்பது சேகரிக்கப்பட்ட தகவல்களை collate செய்யும்போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள். புள்ளிவிவரங்கள் தன்னளவில் பொய்யெதுவும் சொல்வதில்லை. அதை பயன்படுத்துகிற வித்தைக்காரன் நாணயமானவனா அல்லது விலைபோனவனா என்பது ஒரே புள்ளிவிவரத்தை இரண்டுவிதமாகவும் பயன்படுத்துகிறபோது எழுகிற இயல்பான சந்தேகம் இப்படி கருத்துக்கணிப்புகளைக் குறித்த சந்தேகத்துக்கு பதிலாக இங்கே சொன்னது  

ரங்கராஜ் பாண்டே இந்த வீடியோவின் தொடக்கத்தில் சாம்பிள் சைஸ் பற்றியும் கருத்துக் கணிப்பு எப்படி நடத்தப்பட்டது என்பது பற்றியும் சொல்கிற அடிப்படை விஷயத்துக்காக மட்டுமே இந்தக் கருத்துக் கணிப்பை இங்கே பகிர்கிறேன். முக்கியமான ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்! இந்த கணிப்பு பிப்ரவரி கடைசி வாரத்துக்கும் மார்ச் முதல்வாரத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்! அங்கேதான் இந்தக்  கணிப்பு எந்த அளவுக்கு மாறக்கூடியது, தவறாகப் போவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதுமே இருக்கிறது. 

மாறாததென்று எதுவுமில்லையா?  

ஏனில்லை? காங்கிரசின் பரம்பரை அரசியல் மாறாமல் இருக்கிறதே என்கிறார் அடடே! மதி

அதற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்கிற சக்தி வாக்காளர்களுடைய கைகளில் இருக்கிறது என்று காட்டவேண்டிய நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது.

The Hindu நாளிதழ்  லோக்நீதி, CSDS என்கிற அனுபவம் வாய்ந்த அமைப்புக்களோடு சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பின் மீதான விவாதம் இது. இதில் சாம்பிள் சைஸ் தேசம் முழுக்க வெறும் 10010 மட்டும் தான் என்பதை மனதில் வைத்துக் கொண்டு விவாதத்தைப் பாருங்கள்!


இந்த விவாதத்தில் பானு கோம்ஸ் சொல்கிற ஒரு கருத்து மிக முக்கியமானது. GSTயால் தொழில்கள் நலிந்து போயின மூடப்பட்டன என்று சொல்லப் படுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? வரி ஏய்ப்பு செய்தே நடத்தப்பட்ட தொழில்கள் அல்லது வரி ஏய்ப்பு செய்வதற்காகவே நடத்தப்படும் தொழில்கள் பாதிக்கப் பட்டன என்று ஒப்புக்கொள்ள எது தடுக்கிறது? 


இந்த வீடியோவில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளு மன்றத்துக்குப் போனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முடியும் என்று பேசியது துவக்கத்திலேயே வருகிறது.

திருமாவளவன் போய்க் காப்பாற்றவேண்டிய நிலையில் தானா அரசியல் சட்டமும் அம்பேதரும்?
யார் கேட்கப்போகிறார்கள்? 

நீ அடிச்சு வுடு ராசா!
  

6 comments:

 1. திருமாவளவனைக் காப்பாற்றவே, திமுக, காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகள் வேண்டியிருக்கு. இதுல இவர் போய் எதையோ காப்பாற்றப்போறாராமா?

  ReplyDelete
  Replies
  1. அம்பேத்கரைக் காப்பாற்றப் போகிறவரை அப்படியெல்லாம் சொல்லாதீர்கள்! :)))

   Delete
 2. ஜி எஸ் டியால தொழில்கள் நசிந்துபோகலை. வரியை ஒழுங்கா கட்டணும், அதுவும் கேஷ் டிரான்சாக்‌ஷன் கிடையாது என்று இருந்ததால், வரி ஏய்ப்பு செய்தவர்களும், பிளாக் மணிக்காரர்களும்தான் ஓரளவு நசிந்துபோனார்கள். அதுக்கும் ஒழுங்கா தொழில் செய்பவர்களுக்கும் சம்பந்தமில்லை.

  ReplyDelete
  Replies
  1. கள்ளக்கணக்கு, வரி ஏய்ப்பு இவைகளுக்காகவே ரொக்கவரவுசெலவு செய்தவர்கள் தான் பாதிக்கப்பட்டது என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொள்ள முடியுமா? ஆனால் குட்டு வெளிப்படும் கூட பீட்டர் அல்போன்ஸ் தந்திடிவியில் இன்று மதியம் மக்கள்மன்றம் நிகழ்ச்சியில் இதையே திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

   Delete
  2. பீட்டர் அல்போன்ஸ் காலேஜில், வரவு வைக்கமுடியாததால வந்த ஆத்திரம். விகடன் குழுமத்துக்கும் (அதாவது மாறன் பிரதர்ஸுக்கு) அதே பிரச்சனை போலிருக்கு. ஐந்து வருடங்கள் நாசமாகிட்டதா விளம்பரம் பண்ணறாங்க.

   Delete
  3. நெல்லைத்தமிழன்! நிறையத் தகவல்களோடு ரெடியாக இருக்கிறீர்கள் நன்றாகக் கதைகளும் சமையல் குறிப்புக்களும் எழுதுகிறீர்கள்! ஏன் பதிவுகள் எழுதுவதில்லை என்ற கேள்வி இயல்பாகவே கேட்கத் தோன்றுகிறது!

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!