சண்டேன்னா மூணு! மதுரை! வெட்டி அலப்பறை! குற்றம் சொல்வதா அரசியல்?

மருதேய்ய்ய்! மதுரை பெயரைக் கெடுப்பதற்கென்றே உண்டான வெட்டி அலப்பறைகள் நேற்றிரவு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளால் அரங்கேற்றப்பட்டன. நக்கீரன் வீடியோ தெளிவாகவே திமுக கரைவேட்டிகளுடைய கட்டுப்பாடற்ற அராஜகமான வாக்குவாதங்களைக் காட்டுகிறது. இன்று காலையில் இப்படி ஒரு விவாதம்.

  
திமுக சார்பில் பேசுகிற கான்ஸ்டன்டைன் மறக்காமல் கிறித்தவர்களுக்கு ஈஸ்டர் ஞாயிறு வாழ்த்துக்களைக் கழகத்தலீவர் சார்பில் தெரிவிப்பதில் ஆரம்பித்துச் சொல்கிற வாதங்கள் இங்கே திமுக தலைமையிலான கூட்டணியின் ஒற்றை அஜெண்டாவை, அதாவது நிரூபிக்க முடிகிறதோ இல்லையோ, உண்மையோ இல்லையோ, பழிகளை மேன்மேலும் சுமத்திக் கொண்டே இருப்பது மட்டும்தான் என்பது நன்றாகத் தெரிகிறது. சந்தேகம் இருந்தால் நக்கீரன் வீடியோவை மறுபடி பாருங்கள்! மோதி ஒழிக என்று ஒற்றைக்குரலும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு வெங்கடேசன் தெளிவாக ஈவிஎம்கள் வைக்கப் பட்டிருக்கிற  ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது அருகில் இருந்த ஸ்டோர் ரூம் ஒன்றில் இருந்த ஆவணங்களை ஒரு பெண் தாசில்தார் வேறு மூன்று அலுவலர்களுடன் பார்த்ததை, அங்கிருந்த காவலர்கள் திரும்ப வாங்கிவைத்ததை சிசிடிவியில் பதிவாகியிருப்பதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார். ஆனால் அதைத்தொட்டு விவாதத்தை ஆரம்பிக்கும் கான்ஸ்டன்டைன் வேறுவேறு விஷயங்களுக்குத் தாவி திமுகவின் அஜெண்டா என்ன என்பதை பிரசாரம் செய்து முடித்தும் விட்டார்! 

அ.தி.மு.க அரசுக்கு துணைபோகும் விதத்தில் மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அரசு அதிகாரிகளை அனுப்பியது யார்? வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒருமாத காலம் இருக்கின்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்ற கேள்வியே எழுகிறது!
 
12:51 PM - 21 Apr 2019           

கேள்வி எழுப்பியதோடு இசுடாலின் நிறுத்திக் கொள்ளவில்லை. திமுகவினர் விழிப்போடிருந்து பாதுகாக்கவேண்டும் என்று நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருப்பதாக தினமணிதளத்தில் செய்தி ஒன்றைப் பார்த்தேன்! இங்கே படமுமாக! 

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப்போரடித்த அழகான தென்மதுரை என்று பழைய இலக்கியங்களில் மட்டும் தான் பார்க்கமுடியும் போல! அந்த அளவுக்கு மதுரையின் பெருமையை அரசியல்வாதிகள் சீரழித்துவருவதைப் பார்க்கும்போது ஒரு மதுரைக்காரனாக இருந்துகொண்டு வருந்தாமல் இருக்கமுடியுமா? சொல்லுங்கள்!?
      

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!