காங்கிரஸ் கலாசாரமும் ஒட்டுண்ணி ஊடகங்களும்!

அமீத் ஷாவைக் குறி வைத்து.. ஜஸ்டிஸ் லோயாவின் கொலை தியரி அவிழ்த்து விடப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் இது அரசியலுக்காக உருவாக்கப்பட்ட பொய் பிரசாரம் என்று அதன் கதையை முடித்தது. இதனை சாதிக்க முயற்சித்தது “தி காரவன்”..! 

“தி ஒயர்” அடுத்த கதையை ஆரம்பித்தது சிபிஐ தலைவர் அலோக் வர்மாவைக் கொண்டு. இதிலும் சுப்ரீம் கோர்ட் இவர்களின் பொய் பித்தலாட்டங்களை குறிப்பிட்டு அந்த கதை வசனத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது..! 

“தி க்விண்ட்”, “தி ஒயர்” இரண்டும் சேர்ந்து கொண்டு... அடுத்த புளுகு மூட்டையான ஜே ஷா கம்பெனியில் 16,000 மடங்கு லாப கணக்கு என்ற பொய் பிரசாரத்தை ஆரம்பித்தனர். அதிலும் குஜராத் ஷை கோர்ட் தலையில் அடித்து விரட்டிவிட்டது. அந்தக் குமிழும் உடைந்தது. 

அடுத்ததாக N.ராமின் தி இந்துவும், வரதராஜனின் தி ஒயரும் கூடி ரஃபேல் பற்றிய பொய் பிரசாரத்தை ஆரம்பித்தனர். தி இந்துவிலும், தி ஒயரிலும் பல ரிபோர்ட்களை வெட்டி ஒட்டி.. கேவலமாக தனக்குத் தேவையானவைகளை வெளியிட்டு அசிங்க நாடகத்தை அரங்கேற்ற முயன்றனர். இதிலும் இவர்கள் சந்தித்தது தோல்வியே. உச்ச நீதிமன்றத்தால் கேவலப்பட்டது மட்டுமே கண்டபலன். 

இப்போது.. சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் அவர்களின் பெயரைத் தவறாகப் பயன் படுத்தியதற்காக ராகுல் காந்திக்கு ஒரு சம்மன் அனுப்பியுள்ளது. 




இதனை கணக்கில் கொண்டு.. “தி ஸ்க்ரோல்” தற்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அவர்களின் மேல் பாலியல் தொடர்பான பழி ஒன்றை சுமத்தியுள்ளது. இதன் மூலம் அவரை பயமுறுத்தி ராகுல் காந்தி மேலான இந்த வழக்கை திசை திருப்ப நாடக அரங்கேற்றம் செய்ய முயற்சிக்கிறது. 

மேலே கூறிய 4 கதைகளிலும் இவர்கள் எண்ணப் படி நடக்காமல் உச்ச நீதிமன்றம் துரத்தியதால் இந்த கேடுகெட்ட எகோ சிஸ்டம் அதன் நம்பகத் தன்மையையே குலைக்க அடுத்த முயற்சியை மேற் கொண்டுள்ளது. 

இதில் “The Hindu”, “The Wire”, “The Scroll”, “The Quint” and “The Caravan” இவைகளால் உருவாக்கப்பட்ட இந்த 5 பொய் வழக்குகளிலும் பொதுவாக உள்ள கதை என்ன என்று நாம் கவனித்தோமானால் ஒன்று விளங்கும். 

தி இந்துவைத் தவிர மீதமுள்ள 4 இணையதளங்களும் கடந்த 4 வருடங்களாக மட்டுமே முக்கியத்துவம் அடைந்திருப்பதைக் காணலாம். இத்தனை நாட்களும் இதைத்தான் தொடர்ந்து இவர்கள் செய்து வந்தார்கள். இப்போதுதான் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து இவர்கள் தலையில் குட்டு வைக்கவே அதன் தலைமையையும் மற்றவர்கள் பயமுறுத்துவது போல்.. ப்ளாக் மெயில் செய்வது போல் செய்து பார்க்கிறார்கள்..! 



இப்போது புரிகிறதா.. இவையெல்லாம் எப்படி யாருக்காக யாரால் உருவாக்கப்படுகிறது என்று..? 

பாரதத்தையே நாசம் செய்ய வந்த சூத்ரதாரி யாரைன்று தெரிகிறதா..? 

All the roads lead to ROME.....oops 10 Janpath.  என்று முகநூலில் நேற்று உத்தமராசா ராமலிங்கம் எழுதியநேரமோ என்னவோ........


ராகுல் காண்டி உச்சநீதிமன்றத்தில் மன்னாப்பும் வருத்தமும் தெரிவித்து தான் பேசியது பொய் தான் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இதெல்லாம் லுலுலாயிக்குத்தான்! அவரோ காங்கிரசோ ஒட்டுண்ணி ஊடகங்களோ திருந்திவிடுவார்கள், உண்மையை இனி வரும்காலத்திலாவது பேசுவார்கள் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு அப்பாவியா நீங்கள்?  இல்லைதானே!?

காசுக்கு கூவுகிறவைகளாக ஊடகங்களை வளர்த்து விட்டது சோனியா காங்கிரஸ் தான் என்பதை இங்கே நாலாவது தூண் விமரிசனமாக  இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்! பர்கா தத்துகளும் இந்து என் ராம் மாதிரி  pseudo left ஆசாமிகளும் என்னதான் பொய்மூட்டைகளைத் தொடர்ந்து வீசிப் பரப்பிக் கொண்டிருந்தாலும் சரிந்துவிழுகிற காங்கிரஸ் கட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியாது.

ஆனால் இதுமாதிரி ஊடகப்பொய்களின் உண்மையான நோக்கம் காங்கிரஸைத் தூக்கி நிறுத்துவது அல்ல! இங்கே ஒரு கலவரமான, குழப்பமான, நிலையற்ற அரசியலைக் குறிவைத்தே பொய்களைத் தொடர்ந்து கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்பது புரிகிறதா?  


      

2 comments:

  1. Pathetic that Rahul should stoop to this level, as N.Ram. எதையாவது செய்து ஹிந்து விளம்பரங்கள், தன் வருவாயைப் பெருக்கணும் என்பது ராமின் குறிக்கோள். எதையாவது சொல்லி ஆட்சிக் கட்டிலில் ஏறணும் (200 சீட்டுகள் கூட போட்டியிடாதபோதும்) என்பது ராகுலின் கனவு...

    தான் விரும்பிய ஜால்ராவை தேர்தலுக்காக அடித்தாகிவிட்டது. இனி ரஃபேல் விஷயத்தை ராம் கிடப்பில் போட்டு, வேறு என்ன வேலை செய்யலாம் என்று காத்துக்கொண்டிருப்பார், அல்லது தன் எஜமானர்கள் சொல்லும் உத்தரவுக்குக் காத்துக்கொண்டிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. இந்து என் ராம் மட்டுமே இல்லை The Print சேகர் குப்தாவிலிருந்து நிறைய பத்திரிகையாளர்கள் இணையதள இதழ்களிலேயே நிறையாக காசு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது ஒருபுறம்! The Wire எம்கே வேணு மாதிரி pseudo left ஆசாமிகள் அஜெண்டா காசையும் தாண்டியது. இங்கே வினவுதளமும் அதன் வெகுஜன அமைப்புகளும் திமுகவின் அஜெண்டாவுக்கு ஒத்துழைத்தது மாதிரி! ஊடகவெளிச்சம் காசு கிடைப்பதோடு அவர்களுடைய சொந்த அஜெண்டாவையும் சேர்த்துப் பார்த்துக் கொள்கிற மாதிரி!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!