ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசன நாள்! செய்தி!

ஸ்ரீ அரவிந்த அன்னை என்று கொண்டாடப்படும் Mirra Alfassa பாரிஸ் நகரில் 21 பிப்ரவரி 1878 இல் அவதரித்தார். 1914 இல் முதல்முறையாக புதுச்சேரிக்கு ஸ்ரீ அரவிந்தரை தரிசிப்பதற்காக வந்தார். 11 மாதங்கள் புதுச்சேரியில் இருந்து விட்டு, முதல் உலகப்போர் மூண்ட தருணம், பிரான்சுக்கே திரும்பினார். அங்கிருந்து ஜப்பானுக்குச் சென்று 4 வருடங்கள் இருந்தார். 1920 ஏப்ரல் 24 அன்று புதுச்சேரிக்குத் திரும்பிய அன்னை, இங்கேயே நிலையாகத் தங்கினார். அப்படி ஸ்ரீ அரவிந்த அன்னை புதுச்சேரிக்குத் திரும்பிய நாளான ஏப்ரல் 24, அரவிந்தாசிரமத்தில் தரிசன நாளாக அன்பர்களால் கொண்டாடப்படுகிறது.
     

தரிசன நாள் என்பதென்ன? அன்னை புதுச்சேரிக்கு வந்தபிறகு எல்லாப்பொறுப்புக்களையும் அவரிடம் கொடுத்து விட்டு ஸ்ரீ அரவிந்தர் தனியாக மோனத்தவம் இருக்க ஆரம்பித்தார். ஆசிரமத்துக்குள்ளேயே தங்கி இருந்த சாதகர்கள் கூட அவரைச் சந்திக்க முடியாது.தங்களுக்கெழும் சந்தேகங்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி அன்னையிடம் கொடுக்க, அவரும் ஸ்ரீ அரவிந்தரிடம் காட்டி, பதில்களை வாங்கித் தருவார். வருடத்தின் சிலநாட்களில் மட்டும் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் சாதகர்களுக்கு மட்டுமன்றி, வெளியூரில் இருந்து வரும் அன்பர்களை சந்திக்கிற வாய்ப்பாக உருவானதே தரிசன நாட்கள் என்றழைக்கப்படுகிறது. இன்றைய தரிசன நாள் செய்தியாக


ஆரம்ப காலங்களில், தரிசன நாள் செய்தியாக இதுமாதிரி கார்டும், மலர்ப்பிரசாதங்களும் வழங்கப் பட்டதில் அன்னையே அந்தந்த தருணத்துக்கேற்ற மாதிரி செய்தியை தன் கைப்படவே எழுதி அளித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீ அரவிந்த அன்னை 1973 இல் மகாசமாதி ஆன பிறகு இப்போதுள்ள வடிவத்தில் அச்சிடப்பட்ட கார்டுடன், சமாதிமீது வைக்கப்பட்ட மலர் இதழ்களை உலரவைத்து ஒரு சிறு பாக்கெட்டாக வழங்குகிறார்கள். தரிசனநாள் செய்தி ஆங்கிலத்திலும் 
பிரெஞ்சிலும் இருக்கும். இங்கே ஆங்கிலச் செய்தி மட்டும். 

அன்னை என்னும் அற்புதப் பேரொளி இன்றும் தம்முடன் இருப்பதை உணர முடிகிற அன்பர்கள் கூடி வழிபடுகிற சிறப்பான நாள் இன்று ஏப்ரல் 24  

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே                   

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!