நரேந்திரமோடியுடன் அக்ஷய் குமார் நேர்காணல்! பல அதிர்வுகள்!

பிரதமர் நரேந்திரமோடியுடன்நடிகர் அக்ஷய் குமார் நடத்திய நேர்காணல் நிறைய அதிர்வலைகளை கிளப்பி விட்டிருக்கிறது. நேர்காணலின் வீடியோ இங்கே     இங்கே உள்ளூரில் தீக்கதிர் குமரேசன் முதல் மம்தா பானெர்ஜி, காங்கிரசின் பிரியங்கா வாத்ரா வரை வயிற்றுக் கடுப்பைக் கிளப்பி விட்டிருக்கிறது. ஒருவகையில் இவர்கள் இதைப் பொருட்படுத்தாமல் போயிருந்தால், இந்த நேர்காணலும் சட்டைசெய்யப்படாமலே போய் இருந்திருக்கலாம் என்று தான்  எனக்குத் தோன்றுகிறது.


ராகுல் சிவசங்கர் பிரியங்காவின் பொருமல் எத்தனை அர்த்தமற்றது என்பதை அமேதி, ரே பரேலி தொகுதிகளில் காங்கிரஸ் இதுவரை கிழித்ததென்ன என்பதையும் சொல்லி விளக்குகிறார்.  


மாற்றத்தை நோக்கி என்று தலைப்பு வைத்தால் போதுமா என்ன? தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் விட்டு விடுவார்களா என்ன? விசிகவின் வன்னி அரசு, பாமகவுடனான அரசியல் வன்மத்தில், இந்து முன்னணி, RSS, பிஜேபி எல்லோரையும் கோர்த்து விடுவானேன்? 


தங்கள் முதுகைப் பார்த்துக் கொள்ளவோ திருத்திக் கொள்ளவோ நம்மூர் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டு கட்சி எதற்கும் தோன்றுவதே இல்லை என்பது ஜனங்கள் பார்த்து நிராகரித்து ஒதுக்க வேண்டிய அவலம். எனில் பாமக சுத்தமான கட்சி என்று சொல்வதாக அர்த்தம் இல்லை. 1965 கல்கி ராணுவ மலரில் தி.சா. ராஜு எழுதிய சிறுகதை ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.

எண்ணெய் மட்டும் தண்ணீரை ஒதுக்குவதில்லை. தண்ணீரும் எண்ணெயை ஒதுக்குகிறது என்று நிற வேற்றுமையை அடிப்படையாக வைத்து எழுதிய கதை அது. 

மீண்டும் சந்திப்போம்.
                

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!