கதம்பமாக அரசியல்! காதுல பூ!

ஒருவழியாக ராகுல் காண்டி கேரளாவின் வயநாட்டிலும் போட்டியிடுவதாக இன்றைக்கு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். காங்கிரஸ் அபிமானிகள் இப்போதே தென்மாநிலங்கள் அத்தனையும் காங்கிரசின் ஆளுமைக்குள் வந்துவிட்டதாகப் பூரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ராகுல் மார்க்சிஸ்டுகளை எதிர்த்து எதுவும் பேசமாட்டேன் என்று சொன்னபிறகும் கூட சலசலப்பு அடங்கவில்லை. ராகுலை எதிர்த்து சரிதா நாயர் என்கிற பெண்மணி (சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் கேரள காங்கிரஸ் மந்திரிமாருக்கும் சால்வை அழகருக்கும் பெண்களை ஏற்பாடு செய்து கொடுத்த விவகாரத்தில் சிக்கியவர்) எதிர்த்துப் போட்டியிடுகிறாராம்! ஆக இடதுசாரிகளுடைய அமோகமான ஆதரவு அம்மணிக்கு இருக்கலாம்!  நம்மூர்     கமல் காசர் கூட ராகுல் காண்டி  இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதைக் கண்டித்து கருத்தும் சொல்லிவிட்டார்.
    

கள்ள ஓட்டுக்காகவா?! கட்டுக்கட்டாக வாக்காளர் அட்டை பறிமுதல்! கட்டம் கட்டப்படும் தமிழச்சி தங்கபாண்டியன்!

சென்னை மேடவாக்கம் – ஆதம்பாக்கம் பகுதியில் வழக்கம் போல் தேர்தல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அதிகாரிகள். அப்போது அவழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது, காரில் கட்டுக்கட்டாக தென் சென்னை பகுதியின் புத்தம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 220 வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவற்றை எடுத்து வந்தவர்கள் திமுக.,வைச் சேர்ந்தவர்கள் என்றும், திமுக வட்டச் செயலாளர் திவாகரன் அவர்களில் ஒருவர் என்றும் அதிகாரிகளால் உறுதி செய்யப் பட்டது.இதை அடுத்து, அவர்களைக் கைது செய்த அதிகாரிகள், இந்த அடையாள அட்டைகள் எவ்வாறு கிடைத்தன என்றும், கள்ள ஓட்டு போட இதனை அவர்கள் பயன்படுத்த இருந்தார்களா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது முழுச்செய்தியும் இங்கே 
நான் சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ? ஆனால் தமிழ் தேசியம் பேசும் கார்டூனிஸ்ட்  G பாலாவும் சொல்கிறாரே! 

விசிக மட்டுமல்ல பாமக, இடதுசாரிகள் என்று இங்கே சில சீட்டுகளுக்காக அங்குமிங்கும் அல்லாடிக் கொண்டிருக்கிற உதிரிகள் அனைத்துமே நிராகரிக்கப்பட வேண்டியவைதான்! இம்மியளவும் இந்தக்கருத்தில் மாற்றமில்லை.
அடடே!மதி கார்டூனில் சுளுவாகச் சொல்லிவிட்டுப்போய் விட்டார்! ஒரு மனிதரை இத்தனைபேர்களும் சேர்ந்து தாக்கு தாக்கென்று தாக்கிக் கொண்டிருக்கிறார்களே! என்ன விஷயம் என்று கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? நரேந்திர மோடி அப்படி என்ன செய்து விட்டார்? இந்த மாதிரிக் கொள்ளைக் கும்பல் மொத்தத்தையும் ஒரே ஒருவர் அலற விடுகிறார் என்றால்? !!  
முன்பு நெல்லை ஜெபமணி என்றொரு தியாகி இருந்தார், காமராஜர் போன்ற அபூர்வ அரசியல்வாதி.திமுக ஒருவரை எதிர்த்தால் அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி என்பது தமிழக அரசியல் தத்துவம், அப்படி அந்த ஜெபமணியும் திமுகவால் விரடபட்டார் காங்கிரசும் அந்த காரியத்தை ஆத்ம சுத்தியுடன் ரசித்தது
அந்த ஜெபமணிக்கு ஒரு மகன் உண்டு அவர் Jebamani Mohanraj என்பவர், தமிழக போலிசில் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.மனிதர் 1991ல் ராஜிவ் கொலை குற்றவாளிகள் பலரை குறிவைத்து பிடித்தவர், பெரிய சாந்தன் எனும் புலியினை திருச்சியில் சுட்டும் கொன்றவர்.முருகன் நளினியை  பிடித்தது, சிவராசனை தேடியது என அக்கொலையின் ஆரம்ப விசாரணை இவராலே நடந்தது

பின் ராஜிவ் கொலைவிசாரணை சரியான பாதையில் செல்லவில்லை என பதவி விலகியவர், காரணம் மிக பெரும் குற்றவாளி என அவரால் கைகாட்டபட்ட ஏன் கைது செய்யபட்ட கொளத்தூர் மணி சர்வ சாதரணமாக விடுவிக்கபட்டார்.வைகோ வெளியில் விடபட்டது போன்ற பல காரணங்களால் காவல்துறையினை விட்டு விலகினார், அதிலிருந்து பொதுபணி.ராஜிவ் கொலையின் மிகபெரும் வரலாறு அவர், 1991ல் இருந்து 2006 வரை புலிகளின் மிரட்டல் இன்னும் பல அவருக்கு உண்டு

இப்பொழுதும் நாம் தமிழருடன் மல்லு கட்டி கொண்டிருகின்றார்.இது போக கோவில் குளம் மீட்பு கோவில்நிலம் மீட்பு என பல காரியங்களை செய்து கொண்டிருகின்றார்
சுருக்கமாக சொன்னால் விளம்பரமில்லா டிராபிக் ராமசாமி
அவர் இன்று தேர்தல் கமிஷனின் முகமூடியினை கிழித்திருக்கின்றார்அதாவது உலக வங்கியில் 4 லட்சம் கோடி கடன் இன்னும் தன்னிடம் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி பணமும் இருக்கின்றது என‌ ஏராளமான தகவலுடன் அதாவது தள்ளுபடி செய்யவேண்டிய வேட்புமனுவினை தயார் செய்திருக்கின்றார்.அதாவது மிக குறும்பாக தமிழக அரசின் கடன் மற்றும் ஸ்பெக்ட்ரம் தொகையினையும் குறிப்பிட்டிருக்கின்றார்

அதை பெரம்பூர் தொகுதியில் தாக்குதல் செய்து அது ஏற்கபட்டு பச்சை மிளகாய் சின்னமும் கிடைத்தது  இப்பொழுது அவரே வெளிவந்து பரபரப்பினை ஏற்படுத்துகின்றார். இதோ தேர்தல் கமிஷனின் யோக்கியதையினை பாரீர், முழு பொய்யான தவறான தகவலை கொடுத்தும் கொஞ்சமும் பாராமல் அதை அங்கீகரித்துவிட்டார்கள் என உண்மையினை சொல்கின்றார்
\
அரசியல்வாதி என்றால் ஆயிரம் காரணம் சொல்லி மனுவினை தள்ளும் தேர்தல் கமிஷன் இவர் மனுவினை எப்படி ஏற்றது? ஆக அரசியல்வாதிக்கு ஒரு நியாயம் மற்றவருக்கு ஒரு நியாயம் என்பது தேர்தல் அலுவலரின் நியாயம் போல‌
லட்சத்து 75 ஆயிரம் கோடி பணமும் 4 லட்சம் கோடி கடனும் உள்ள ஒருவரின் வேட்புமனு இங்கே ஏற்கபட்டிருக்கின்றது
எப்படியோ கொஞ்சமும் பொறுப்பற்ற அலுவலரின் செயலால் மிக பெரும் தலைகுனிவினை பெற்றிருக்கின்றது தேர்தல் கமிஷன்.
தமிழக போலிஸ் ஸ்கார்ட்லாந்து யார்டுக்கு இணையானது என்றால், போலிஸ்காரன் எப்படி இருப்பான்?
இப்படித்தான் இருப்பார், சல்யூட் Jebamani Mohanraj என்று ஆச்சரியப்பட்டு முகநூலில் எழுதியிருக்கிறார் ஸ்டேன்லி ராஜன்.  

ஏழை சோனியா G, பரம ஏழை தயாநிதி மாறன்! உதவ ஒரு நல்லுள்ளம்! வாசித்தீர்களோ? 

            

6 comments:

  1. என்ன, சுவாசிக்கப் போறேங்கப்பதிவையும் இங்கே இணைத்து விட்டீர்கள்? ஆனாலும் ஃபாண்ட்ஸ் அநியாயத்துக்கு சிறிசு.. படிக்கச் சிரமமாய்... கண்ட்ரோல் ப்ளஸ் எல்லாம் போட்டுப் படிக்கலாம்தான்... ஆனாலும் பதிவிடுபவரே சரியாய்ப் விடலாமே!

    ReplyDelete
    Replies
    1. எழுத்துரு, இன்றைக்குச் சரி பார்த்துவிடுகிறன் ஸ்ரீராம்!

      Delete
  2. எழுத்துரு யூனிஃபார்மா இல்லை. அதைச் சரிப்படுத்திக்கோங்க.

    நெல்லை ஜெபமணிக்குப் பெருமை சேர்த்துவிட்டார் அவர் மகன். அவர் ராஜீவ் கொலைவழக்கைப் பற்றிச் சொன்னது சரியானதுதான். கொலையாளிகளைத் தப்பிக்கவிட்டவர், தேசத்துரோக வழக்கைச் சந்திக்கவில்லை என்பது ஆச்சர்யம்தான்.

    ReplyDelete
    Replies
    1. எப்படி சரி செய்வது? DDக்கு ஒரு ஒரு அபயக்குரல் கொடுத்து விடலாமா?

      ராஜீவ் கொலை வழக்கில் அங்கே இங்கே சுற்றி சந்திராசுவாமியைத் தொட்டு சோனியாவிடம் முடிகிறமாதிரி சந்தேகங்கள் கிளப்பிவிடப்பட்டபின், வழக்கு விசாரணை கிணற்றில் போட்ட கல் மாதிரி ஆகிவிட்டது. தேசத்துரோகக் குற்றத்தை யார் மீது சுமத்துவது?

      Delete
  3. எதுனால பெரிய அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சொந்தமாக வாகனமே இல்லை என்று யோசித்திருக்கிறீர்களா? உள்ளுக்குள்ளேயே கடன் வாங்கியதுபோலும் அவர்கள் எழுதுவார்கள். நல்ல ஜனநாயகம்.

    ReplyDelete
    Replies
    1. இங்கே அரசியல் கார்ப்பரேட்மயமாகி விட்டதன் வெளிப்பாடே இப்படி கேலிக்குரிய சொத்து விவரங்களில் தெரிகிறதோ?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!