மீனாட்சி தேரோட்டம்! கள்ளழகர் எதிர்சேவை!

மதுரை சித்திரைத் திருவிழாவில் நேற்று மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தேறி இன்று தேரோட்டம்! வைகை ஆற்றுக்குத் தெற்கே பத்துநாட்களாக நடந்து வரும் சித்திரைத் திருவிழா இன்று மாலை அப்படியே வைகை ஆற்றின் வடகரையில் கள்ளழகர் உத்சவமாக மாறிவிடும்! இன்று இரவு தல்லாகுளத்தில் எதிர்சேவை.
முதலில் மீனாட்சி தேரோட்டத்தை தரிசனம் செய்து கொள்ளலாம். மதுரைக்கு அரசி மீனாட்சி அல்லவோ!

 
   
மதுரை மீனாட்சி  திருக்கல்யாண வைபவமும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிப்பதும் சித்திரைத்திருவிழாவின் விசேஷம். மீனாட்சி திருக்கல்யாணம்   தை மாதத்திலும், அழகர் ஆற்றில் இறங்குவது  சித்திரை பௌர்ணமியிலும்  என்றிருந்ததை நாயக்கமன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஒன்றாக்கி நடத்த ஆரம்பித்தது இன்று வரை தொடர்கிறது.  


அழகன் பக்தனுக்கு அருள்செய்ய வருகிறான் என்றால் அவனை பக்தர்கள் எதிர்கொண்டழைக்கிற எதிர்சேவை இன்றிரவு! அழகர் மலையிலிருந்து அழகன் நேற்று மதுரைக்குப் புறப்பட்டதை இங்கே காணொளியாக
தல்லாகுளத்தில்  நாளை அதிகாலை ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிற வைபவம்.


திருமாலிரும் சோலை அழகன் சுந்தரராஜனை சிரம் தாழ்த்தி வணங்கி, நல்லதே நடக்க அவனருளை வேண்டுவோம்!    

4 comments:

 1. எங்கே.... தளம் மாறி வந்துவிட்டேனா?

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாம்ல்ல! ஒங்க பின்னூட்டத்தைப் பாத்ததும் எனக்கும் அதே சந்தேகம் தான்! :)))

   Delete
  2. சும்மா இருங்க நெல்லை....

   Delete
 2. வைகையில் கரைதொட்டு நீரோடி வருடங்கள் பலவாச்சு. எப்போதோ நான் மதுரையில் இருந்த காலத்தில் ஓடியதுதான் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!