கமல் காசர்! திமுக! ஓவர் அலட்டல் தேர்தலுக்காகாது!

ஊடக வெளிச்சம் கிடைக்கிறது அல்லது விலைக்கு வாங்க முடிகிறது என்ற தெனாவட்டில் திமுகவும், கமல் காசரும் ஒரே புள்ளியில் பயணிக்கிற மாதிரித் தெரிகிறதோ?


நேற்றைக்கு H ராஜா பேசும்போது கோபம் தலைக்கேற ரிமோட்டை வீசி டிவியை நொறுக்குகிற மாதிரி! இன்று தெர்மோகோல் விவகாரத்தைத் தொட்டு சின்னதாக ஒரு சுயதம்பட்டம்!சரியான திசையில் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கக் கொஞ்சமும் தகுதியில்லாத நபர் என்பதை கமல் காசர் மெய்ப்பித்துக் கொண்டு வரும் தருணம் இது. 


தி மு கழகத்தின் யோக்கியதை என்னவென்று தெரிந்தது தான்! எப்படியென்று  நினைவில் வைத்துக் கொள்ளவும் முற்றொட்டாக நிராகரிக்கவும் இந்த மாதிரி அபத்தமான பேச்சுக்கள்  உதவும் என்பதனால் மட்டும் இங்கே பகிர்கிறேன். ஆபாசப் பேச்சிலே, பிறரை வசை பாடியே, பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மத விரோதியாகவே இருக்கிற கட்சி திமுக! என்னமோ ஒரு ராதா ரவியை நீக்கிவிட்டதனாலேயே தூய்மையாகிவிட்டதாக நாடகம் ஆடினால் நம்பிவிடுவோமா? பட்டை பட்டையாக திருநீறு பூசி பழனிக்கே காவடி எடுத்தாலும் மறந்துவிடுவோமா?


திராவிட மாயை கலைந்துவிட்டது கூடத்  தெரியாமல்  இன்னமும் ஆடிக்  கொண்டிருக்கிறார்களே, எதனால்? எதிர்க் கேள்வியோ எதிர்ப்புக் குரலோ எழவில்லை என்ற ஒரே காரணத்தால் ஒரு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இங்கே ஒரு கும்பல் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருப்பதை, இனிமேலும் விட்டு வைக்கலாமா?

            
நேற்றைய நாட்கள் இல்லை இது. திராவிட மாயை இனிமேலும் எடுபடாது என்பதற்கு ஒருசோறு பதமாக 

     
மீண்டும் சந்திப்போம்.
   

2 comments:

  1. கனிமொழிக்கு ஏன் இத்தனை கோவம் வருது?...

    ReplyDelete
    Replies
    1. பதில் சொல்லி சமாளிக்க முடியாத தருணங்களில் முதலில் கோபம்தான் வரும்! (தனியே அழுகையும் வந்திருக்கும்) துரை செல்வராஜூ சார்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!