இன்றைய நாளிதழ்களில் திமுகவின் சாதனைகளாக ஒரு நாலைந்து பக்க விளம்பரமாக அதிமுக கொடுத்ததில், திமுக தரப்பு உறைந்து போய்விட்ட மாதிரியே தெரிகிறது இத்தனை நாள் ஊடகங்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு திமுகவினர் அடுத்துவந்த தம்பட்டம் எல்லாம் கிழிந்து தொங்குகிறதாம்! போதாக்குறைக்கு ஒரு மாஜி திமுக பெண் அமைச்சருடைய தாயாரே நில அபகரிப்பு சர்டிபிகேட்டும் கொடுத்திருக்கிறார். என்னவென்று?
பெற்ற தாயுடைய சொத்துக்களையே மோசடியாகத் தனது புருஷன் பெயருக்கு மாற்றிக்கொண்ட அந்த திமுக பெண் பிரமுகர் பூங்கோதை ஆலடி அருணா தான்! இந்த ஒரு சோற்றுப் பதம் போதாதென்றால் உங்கள் ஊரில் உள்ள திமுக பெரும்புள்ளிகளுடைய முன்கதை & பின்கதை சுருக்கத்தைத் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்!
திமுக ஊதி ஊதிப் பெரிதாக்கி வந்த நாங்க தான் ஆச்சியப் புடிக்கப்போறோம் பலூனை இப்படி ஒரே நாளில் உடைத்துவிட்டார்களே! திமுக சொம்புகளுக்கு துக்கம் நெஞ்சை அடைக்காதா? நெஞ்சே வெடிக்கும்படி ஒருத்தர் பொதுவெளியில் வாந்தி எடுத்திருக்கிறார்.
யாரிந்த விவேக் என்று விசாரித்தால், மின்னம்பலம் இணைய இதழில் இருப்பவர் என்று சொல்கிறார்கள். கடைசி மூன்று வரிகளில் சொல்லியிருப்பதைத்தானே இவர்களும் திமுகவுக்கு ஆதரவாக இத்தனைநாள் செய்து வந்தார்கள் என்று நான் கேட்கப்போவதில்லை!
,
தட்டிக்கேட்க ஆளில்லாமலிருந்ததால் இத்தனை நாள் திராவிட கழகம், தி மு கழகம் , சுபவீ செட்டியார், திருமா உள்ளிட்டபலரும் இது பெரியார் மண் அது இதென்று முண்டா தட்டிக் கொண்டிருந்தார்கள் யாராவது சிறிது சந்தேகத்தோடு கேள்வி கேட்டால் அவரை சங்கி என்று பழித்தார்கள்! ஆகாதவர்கள் எவரைப்பார்த்தாலும் பிஜேபியின் B டீம் என்றார்கள் அதையும் மீறிக் கேள்வி கேட்டால், கேட்காதே! பிஜேபி உள்ளே வந்துவிடும் என்றார்கள்! கடைசிவரை தாங்கள் யார், தங்களுடைய கொள்கை என்ன, சாதித்ததென்ன இவை எதையும் சொல்லாமலேயே அடுத்தவர்களை அவதூறாகப் பேசுவதொன்றையே! முழுநேரத் தொழிலாக வைத்து இருந்தார்கள் கடைசியில் என்ன ஆனது? சோணமுத்தா எல்லாம் போச்சா?.
பெங்களூரு பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தேஜஸ்வி சூர்யா கூட, இந்த 10 நிமிட வீடியோ நேர்காணலில் ஊழலில் காங்கிரசும் திமு கழகமும் ஊறித்திளைப்பவை என்பதனால் நேச்சுரல் கூட்டாளிகள் என்று சொல்கிறார். அண்ணாமலை IPS ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவருவார் என்பதையும் மிகுந்த நம்பிக்கையோடு சொல்கிறார் இதையும் திமுகவினர் செய்து வரும் வெறுப்பு அரசியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! ஒப்பிட்டுப்பார்க்க இன்னொரு 7 நிமிட வீடியோ
வெறும் 20 சீட்டுகளில் மட்டுமே போட்டியிடும் பிஜேபி மாற்று அரசியல் சக்தியா? மாற்றத்துக்கான சக்தியாக மிகுந்த வீரியத்துடன் பிஜேபி தமிழகத்தில் காலூன்றி விட்டது என்பது சத்தியம்!
தேசிய நீரோட்டத்திலிருந்து தமிழகத்தை இதுநாள் வரை ஒட்டவிடாமல் வைத்திருந்த திமுகவை நிராகரிப்போம்! திமுகவுடன் சேர்ந்து கொட்டம் அடிக்கும் உதிரிகளான விசிக, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் சில்லறைகளையும் முற்றிலும் நிராகரிப்போம்! தமிழகம் தனித்தீவல்ல! பாரதத்தின் ஒரு அங்கமே எனத் தலைநிமிர்ந்து சொல்லுவோம்!
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போலவே திமுகவுக்குச் செல்லுமிடமெல்லாம் எதிர்ப்பு என்பதும் இந்தத் தேர்தல் களத்தில் நிரூபணமாகி வருகிறது ஆபாசராசா, கெக்கேபிக்குணி தயாநிதி மாறன், லியோனி மாதிரிப் பொறுப்பற்ற பேச்சாளர்கள் ஒருபுறம் என்றால், திமுகவின் கடந்தகால சாதனைகள் இப்போது அவர்களுக்கே சோதனையாகத் திரும்புகிறது என்றால் நம்புவீர்களா?
இசுடாலின் மகள் செந்தாமரை வீடு, மற்றும் மாப்பிள்ளை சபரீசனுடைய நண்பர்கள் /கூட்டாளிகள் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதில், அதிர்ந்து போயிருந்தாலும் திமுகவினரின் வாய்ச்சவடால் கொஞ்சமும் குறையவில்லை. நான் கலைஞரின் மகன்?, மிசாவையே பார்த்தவன், பனங்காட்டுநரி, சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் என்று இசுடாலின் வீரவசனம் பேசி மனதைத்தேற்றிக் கொண்டிருக்கிறார் ராகுல் காண்டி ஓடோடி வந்து கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்கிறபோது திமுகவிடமிருந்து வாங்கித்தின்று வயிறு வளர்க்கும் விசிக, கம்யூனிஸ்டுகளும் கோரஸ் பாடாமல் இருப்பார்களா?
திமுகவின் ஆஸ்தான காமெடியன் துரை முருகன் இந்த விவகாரத்தைக் குறித்து நிருபர்களுக்குப் பேட்டி கொடுப்பதன் 9 நிமிட வீடியோவைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள்! துரை முருகன் சீரியசாகப் பேசுவது போலவே காமெடி செய்கிறவர். இந்த ரெயிடுக்காகக் கண்டனம் தெரிவிக்கிறாரா அல்லது உள்ளூர சந்தோஷமும் உதட்டில் ஆதரவு வார்த்தைகளுமாகப் பேசுகிறாரா என்பதைக் கண்டுகொள்ள முடிந்தால் நீங்களும் தலை சிறந்த அரசியல் விஞ்ஞானியே! உதயநிதி வழக்கம் போல இந்தா பிடி என்னோட அட்ரசு முடிஞ்சா வந்து ரெயிடு நடத்து என்று சவால் விட்டிருக்கிறார்.
“பாஜக தோல்வி பயத்தில் வருமான வரி ரெய்டுகளை ஏவி விடுகிறது”! - திமுக தலைமை அறிவிப்பு. சரி ஐயா பாஜக தோல்வி பயத்தில் வருமான வரிச் சோதனையை ஏவி விடுகிறது என்றே ஒரு கணம் வைத்துக் கொள்வோம்!
நீங்கள்தான் ‘தோல்வி பயம்’ சற்றும் இல்லாத ‘வெற்றி வீரர்கள்’ ஆயிற்றே? தைரியமாக எதிர் கொள்ள வேண்டியதுதானே வருமான வரி சோதனையை?
“வந்து பார்த்துங்கடா - வீட்டை மூலை முடுக்கெல்லாம் சோதனை நடத்துங்கடா - வேண்டுமானால் வீட்டு வாசல் கேட்டையே பூட்ட வேண்டாம் - வெளியில் ‘ஜெயன்ட் சைஸ்’ பெரிய ஸ்க்ரீன் வைங்க - உள்ளே என்ன சோதனை நடக்கிறது என்று ‘லைவ்’வா போட்டுக் காட்டுங்க - பொது மக்கள் பார்க்கட்டும்- எங்களுக்கு மடியில் கனமில்லை!”- என்று தைரியமாக அறிக்கை விட்டால் நீங்கள் அசல் நேர்மையாளர்கள்! அதை விட்டு விட்டு - “தேர்தலுக்கு நான்கு நாள் இருக்கும் போது ரெய்டு ஏன் நடத்துகிறார்கள்?”- என்ன ஐயா கேள்வி இது?
தேர்தல் நெருங்கி வரும் நாள் என்றால் எந்த ஒரு சட்ட பூர்வமான நடவடிக்கையும் நிறுத்தி வைக்கப் பட வேண்டும் - இத்தனை நாளுக்கு முன்பாக நடத்தக் கூடாது என்று ஏதாவது சட்டம் உள்ளதா என்ன? சில மாதங்கள் முன்பு உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனே பேசினாரே:
“தேர்தல் முடியும் வரை கழக உடன் பிறப்புகள் ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்... வருமான வரித் துறைக்குப் புகார் அளித்து ஒருவர் மற்றவரைப் போட்டுக் கொடுக்க கூடாது!” - நா தழுதழுக்க வேண்டிக் கொண்டாரே துரைமுருகன்!
அவர் என்ன பாஜக ஆட்களுக்கா அந்த வேண்டு கோளை வைத்தார்? அல்லது அதிமுகவுக்கு வைத்தாரா? உங்கள் கட்சி ஆட்களுக்குத்தானே அந்த வேண்டுகோளை வைத்தார்?
“யார் யார் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட விரும்புகிறீர்களோ - விருப்ப மனு கொடுங்கள் - கட்டணம் செலுத்துங்கள் -நேர்காணலுக்கு வாருங்கள்”- என்று கூப்பிட வேண்டியது! கண்துடைப்புக்கு ஓரு “நேர்காணல்”!
ஸ்டாலின் தொகுதி - கொளத்தூர் - வரும் போது அவர் ஒருவர் மட்டுமே மனு கொடுத்திருந்தாலும் அவர் எதிரே வந்து மனுதாரர் நாற்காலியில் உட்கார்ந்து கொள்வாராம்!
அவரை எதிரில் உட்கார வைத்து துரைமுருகன் ‘நேர்காணல்’ நடத்துவாராம்! சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பெயர் வரும்போது உதயநிதி மட்டும் - அல்லது அவர் சார்பில் பலர் - அந்தத் தொகுதிக்கு ஒரே பெயரில் மனு கொடுப்பாங்களாம்!
அவரும் வந்து பவ்யமாக நின்றபடியே ‘நேர்காணலில்’ பங்கேற்பாராம்! பெற்ற தகப்பனே மகனுக்கு அவர் கட்சியில் சேர்ந்த விவரங்கள், கலந்து கொண்ட கூட்டங்கள், கட்சியில் ஆற்றிய பணிகள் இவை பற்றி எல்லாம் மகனிடமே தகப்பன் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வாராம்! அப்படி ஒரு ஜனநாயகமாம் கட்சியில்! என்னமா சீன் காட்டினீர்கள்!!
கடைசியில் வேட்பாளர்கள் பலர் யார்?
காட்பாடி என்றால் 80 வயதுக்கு மேலானாலும் துரை முருகன்தான்! ஆத்தூரில் (திண்டுக்கல் மாவட்டம்) ஐ.பெரியசாமி -பழனியில் அவர் மகன் பெ.செந்தில் குமார்! ஒட்டன் சத்திரத்தில் 6 ஆவது முறையாக (1996 -2001 - 2006- 2011- 2016- 2021) சக்ர பாணிதான்!
தூத்துக்குடி என்றால் கீதா ஜீவன்தான் (தூத்துக்குடி பெரியசாமி மகள்) ஆலங்குளம் என்றால் ஆலடி அருணா மகள் டாக்டர் பூங்கோதைதான்! மதுரை மத்திய தொகுதி என்றால் PT பழனிவேல் ராஜன் மகன் பழனிவேல் தியாகராஜன்தான்!
திருவெறும்பூர் என்றால் அன்பில் பொய்யாமொழி மகன் மகேஷ் பொய்யாமொழிதான் வேட்பாளர். திருச்சி மேற்கு என்றால் நேருதான்!
வீரபாண்டி என்றால் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் உறவினர் தருண்தான்! திருச்சுழி என்றால் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசுதான்!
திருநெல்வேலி என்றால் முன்னாள் MLA A.L. சுப்ரமணியம் மகன் ALS லட்சுமணன்தான்! வில்லிவாக்கம் என்றால் க. அன்பழகன் பேரன் வெற்றி அழகன் என்கிறார்கள்!
தி. நகரில் ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதி.
இப்படிப் பல தொகுதிகளை வாரிசுகளுக்கும், மேலும் பல தொகுதிகளை அந்தந்த மாவட்டக் ‘குறுநில மன்னர்களுக்கும்’ - ‘முரட்டு பக்தர்களுக்கும்’- வேண்டப் பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்துவிட்டு அப்புறம் கண்துடைப்புக்கு ஒரு பிரமாதமான “நேர்காணல்”
பணம் கட்டிவிட்டு சீ்ட்டு கிடைக்காமல் ஏமாந்து போனவன் எத்தனை பேர்? அவன் என்ன கொள்கைக் கோமானா? அறவழியில் நின்று பொதுச்சேவை செய்யத் துடிப்பவனா? எனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் கட்சி நிறுத்திய வேட்பாளருக்குப் பாடுபடுவேன் - கட்சி கட்டளையிடும் பணியைச் செய்வேன் - என்று லட்சிய பூர்வமாக சித்தாந்தத்தால் பிணைக்கப் பட்டவனா?
அரசியல் சீட்டுக்கட்டு சூதாட்டத்தில் மேஜையை விட்டு வெளியேறியவன் - அவ்வளவுதானே?!! பிரியாணிப் போட்டியில் "தொடை எலும்பு" சுவைக்கக் கிடைக்காமல், குஸ்காவை சுவைக்கும் நிலைக்கு ஆளான "கொள்கைத் திருமகன்" தானே அந்த உடன்பிறப்பு?!!
ஸ்டாலின் மகள் வீட்டிலும், மருமகனிடமுமே வருமான வரித் துறை ரெய்டு வருகிறது என்றால் - துரை முருகன் சொன்னது போல - எவனோ உங்களில் ஒருவன் ஸ்ட்ராங்காகப் போட்டுக் கொடுத்து உள்ளான் என்று பொருள்!
எனவே பாஜகவை நோவதை விட, அந்தக் “கறுப்பு ஆடு” எது?- என்று உங்களிடையே தேடுங்கள்! கடைசியாக ஒன்று! நினைவிருக்கிறதா 1971 தேர்தல்?
பெருந்தலைவர் காமராஜர் - “ஆந்திரா பேங்கில் ஒரு கோடி ரூபாய் வைத்து இருக்கிறார்!”- என்று பிரசாரம் செய்தீர்கள்! அவர் உங்களைப் போலப் பதறவில்லை!
“செக் தருகிறேன் - இருந்தால் போய் எடுத்துக் கொள்!”- என்றார்! இறக்கும் போது நாலே நாலு வேட்டி சட்டையும், பையில் 130 ரூபாய் பணமும் வைத்திருந்த அந்தத் தலைவனை அப்படிப் பேசினீர்கள்!
சரித்திரம் திரும்புகிறது உடன் பிறப்பே! செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா! காமராஜ் உங்களைப் பார்த்துச் சொன்னது போல், வருமான வரி அதிகாரிகளைப் பார்த்து தைரியமாகச் சொல்ல வேண்டியதுதானே? “இருந்தால் எடுத்துகிட்டுப் போடா!”
அதை விட்டுவிட்டு ஏன் பாஜக தோல்வி பயத்தில் மிரட்டுகிறது என்ற அலறல்??
சாதாரண ஜனங்களும் மிடில் கிளாஸ் மாதவன்களும் தப்பிப் பிழைத்திருக்க வேண்டுமானால் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளை முற்றிலும் நிராகரிப்பது ஒன்றே வழி! புரிகிறதா?
நம்மூர்ச் சூழலுக்கு தலைமைப்பண்பு, மேலாண்மை என்பதெல்லாம் முந்தையபதிவில் சொன்ன மாதிரி செந்தில் பாலாஜிகள் க்ளாஸ் எடுப்பது மாதிரி இருந்தால் தான் ஒத்து வருமோ? BSNL மாதிரி ஒரு பொதுத்துறை நிறுவனம் மீண்டுவருமா என்பதை ஒரு விவாதப் பொருளாகவே எடுத்துக்கொள்ள இங்கே வருகிற எவருமே தயாராக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு அர்த்தமுள்ள உரையாடல்கள் நிகழ்வதென்பது குதிரைக் கொம்புதான் என்பதை தமிழில் எழுத வந்த இந்தப் பத்தாண்டுகளில் நான் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம். வலைப்பதிவுகளில் எதற்கும் உதவாத வெட்டி அக்கப்போர்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து, நாம் பார்க்கும், படிக்கும் விஷயங்களில் கொஞ்சம் யோசித்து ஒரு கருத்தை முன்வைக்கவோ, முன்வைக்கப்படும் கருத்துகள் மீது கருத்துகள் சொல்லவோ முனைகிற நல்லதொரு மாற்றமும் நிகழும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இங்கே எழுதுவதில் மாற்றுக்கருத்து இருந்தால் அதையும் guest post ஆக வெளியிடத்தயார் என்று ஒரு தனிப்பதிவாகவே சொல்லியிருந்ததை நண்பர்களுக்கு நினைவூட்டி #பதிவர்வட்டம் இதையும் கவனிக்கும் என்றும் கூட நம்புகிறேன்.
எதில்தான் அரசியல் செய்வது என்ற விவஸ்தை இல்லையா என்று பதிவு எழுதியபோதே, ஒரு இளம் பெண்ணின் தடகளப்போட்டியில் தங்கம் வென்ற சாதனை இங்குள்ள சில அரசியல்கட்சிகளால் குறுகிய ஆதாயத்துக்காக அரசியல் பிரச்சினை ஆக்கப்பட்டதையும் இங்கே எழுதியதை நினைவு படுத்திக் கொள்கிற மாதிரி ஒரு தொலைகாட்சி விவாதம். கண்டுகொள்வோம் கழகங்களை என்று நெல்லை ஜெபமணி அந்த நாட்களில் எழுதிய ஒரு தொடரும் சேர்ந்தே நினைவுக்கு வருகிறது. கழகங்களோடு கூட்டாளிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பது காலம் செய்திருக்கிற மாற்றம்! இன்று மாறியிருக்கிற காட்சிகளைக் கண்டித்து எழுத நெல்லை ஜெபமணி இல்லையே என்ற குறை தெரியாமல் முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில் நிறையப்பேர் எழுதுகிறார்கள். சாம்பிளுக்கு ஒன்று
அம்மண ....... ஐயாகண்ணுவை தில்லிக்கு அனுப்பி பைத்தியமா மாத்தி புலம்ப விட்டாச்சு....
சிக்னல் டவர்ல ஏற்றி விட்டு தற்கொலை செய்ய தூண்டி விட்டாச்சு....
நீட் தேர்வு அனிதாவை வைத்து தற்கொலைக்கு தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடியாச்சு....
ஜல்லிக்கட்டு மெரினா கடற்கரையில் அமைதியை கெடுத்து, நக்சல்களை நுழைத்து விட்டு பிணம் கிடைக்குமான்னு முயற்சி செய்து பார்த்தாச்சு.....
தூத்துக்குடில கலவரத்தை தூண்டி விட்டு, பதிமூன்று உயிர் பறித்து அரசியல் செய்தாச்சு....
பொள்ளாச்சி சம்பவத்தை முன்னிருத்தி போராட்டம் என்று ஆரம்பித்து, அது தனது மற்றும் தனது கூட்டணி கட்சிகளின் கைவரிசை என்று தெரிந்தவுடன் எதுவுமே நடக்காத மாதிரி ஒதுங்கியாச்சு....
பஜ்ஜி கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர், டீக்கடை,...... என்று கடை கடையாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்டாச்சு.....
இப்போது என்ன பண்ணுறது....
வரும் 2 வருடத்தில் இன்னும் இரண்டு மூன்று பிணம் கிடைத்தால்தான் 2021 தேர்தல் வரை பிண அரசியல் செய்து காலத்தை ஓட்டலாம்.....
யாராவது சாதனை செய்தது பற்றி பேசினால் உடனே போய் ஒரு போட்டோ எடுத்துட்டு, பெரியார் சிலையை கையில் கொடுத்துட்டு, மத்திய அரசு தமிழினத்தை வஞ்சிக்கிறது என்று புலம்பிட்டு, மாநில அரசு தேவையான ஆதரவு தரவில்லை என்று புரளியை கிளப்பி விட்டுட்டு,
ஐயன் வள்ளுவ பெருந்தகை சொல்லி இருக்கிறார்... முயற்சி திருவினையாக்கும்-னு....
துண்டு சீட்டு எழுதி தர ஆள் இருக்கு...
முயற்சி பண்ணி பார்த்துட வேண்டியதுதான் இன்னும் இரண்டு மூன்று பிணம் கிடைக்காமலா போய் விடும். இது ஒருவிதம்! மாரிதாஸ் மாதிரி தரவுகளோடு முக்கியமான விஷயங்களை விவாதிப்பது இன்னொருவிதம்!
வெனிசுலா நாட்டின் வீழ்ச்சி வறுமைக்குக் காரணம் விவசாயம் கைவிட்டது தான் என்று நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்கிறார்கள் மீம்ஸ் எல்லாம் பரப்புகிறார்கள், அத்துடன் நம்ம இணைய விவசாயப் போராளிகள் பிரச்சாரம் வேறு..
எதையும் முழுமையாகத் தேடிப் படிக்க வக்கு இல்லாத இந்த நாம் தமிழர் என்ற முட்டாள்களின் கூடாரம் மேற்கொள்வது முழுக்க முழுக்க Populism. வெகு ஜன மக்களைச் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டுப் பேசும் பேச்சு மட்டுமே இவர்களுடையதாக உள்ளது, அதே தான் எந்த விசயம் என்றாலும் செய்கிறார்கள். அனைத்து விசயத்தையும் விவசாயத்தை ஒப்பிட்டுப் பேசி தூண்டிவிட்டது போதாது என்று இப்போது இன்னொரு நாட்டின் நடக்கும் வறுமைக்கு நேரடியாக விவசாயத்தைக் கைவிட்டது தான் காரணம் என்று பரப்புகிறார்கள்.
வெனிசுலா இந்த நிலைக்குக் காரணம்
1.சுமார் 15வருடம் மேலாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்த அரசு முன் வைத்த தவறான பொருளாதார திட்டங்கள்.
2.அடுத்து இன்று இருக்கும் ஆட்சியர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை.
இந்த இரண்டு காரணமாக உருவாகியுள்ள வறட்சி, வறுமை , வேலையில்லா திண்டாட்டம் , விலைவாசி உயர்வு மற்றும் இதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் உருவாகியுள்ளன. இதை முழுமையாக விளக்கி ஒரு ஆய்வுக் கட்டுரை மற்றும் ஒரு வீடியோ பதிவினை மாணவர்கள் கேட்டுக் கொண்டதால் அடுத்த வாரங்களில் வெளியிடுகிறேன்.
அதுவரை கண்ட மீம்ஸ் எதையாவது பரப்பாதீர்.
நான் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுகிறேன் உலகத்திலேயே ஒரு வடிகட்டின முட்டாள் அரசியல்வாதி ஒருவன் இருக்கிறான் என்றால் அது சீமான் என்ற செபாஸ்டீன் தான். இவன் வாயில் வந்தது எல்லாம் வசனம் அது தான் நிர்வாகம் பொருளாதாரம் என்றும் அவன் இஷ்டத்திற்குக் கதையை அடித்துவிடுகிறான் வசனமாக, கொஞ்சம் தேடிப் படிக்கும் குணம் இல்லாத இளையவர்கள் கொஞ்சம் பேர் இவன் பேச்சை ரசிக்கிறார்கள். அது ஒரு வியாதி என்று அவர்கள் புரியவேண்டும்.. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் பரப்பும் மீம்ஸ் அது இன்னொரு வியாதி...
இவன் போன்ற மேடைப் பேச்சாளர்கள் பேச்சைக் கேட்டு சமூகம் அது தான் கருத்தியல் என்று நினைத்தால் அதை விடத் தவறு வேறு எதுவும் இல்லை. எனவே கொஞ்சம் தேடிப் படிக்கப் பழகுங்கள் என்கிறார் மாரிதாஸ்.
பல முகநூல் பக்கங்களில் நேற்றைக்கு கடவுள் இருக்காண்டா கொமாரு என்று சசிதரூர் துலாபாரம் காணிக்கை செலுத்தச் சென்ற இடத்தில் தராசு தலையில் விழுந்து அடிபட்டு மருத்துவ மனையில் ஆறு தையல்கள் போடுகிற அளவுக்குப் போனதைக் கிண்டல் செய்த பதிவுகளாகப் பார்த்து முகம் சுளிக்கிற மாதிரி ஆனது. கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மருத்துவ மனைக்கு நேரில் வந்து சசிதரூரை நலம் விசாரித்திருக்கிறார் என்ற செய்தி ஆறுதலாக மட்டுமல்ல, பிஜேபி உண்மையிலேயே ஒரு வித்தியாசமான கட்சிதான் என்பதையும் சேர்த்தே சொல்லியிருக்கிறது.
Touched by the gesture of @nsitharaman, who dropped by today morning to visit me in the hospital, amid her hectic electioneering in Kerala. Civility is a rare virtue in Indian politics - great to see her practice it by example!
இதற்கெல்லாம் பதில் இருக்கா...?தமிழகம் கேட்கிறது ஸ்டாலின்! இங்கே பல முக்கியமான கேள்விகளை திமுக தலீவர் இசுடாலின் முன் வைக்கிறார்கள். சாம்பிளுக்கு ஒரு பகுதி:
உங்கள் நிலைப்பாடு என்ன?
'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருக்கும் தமிழக முதல்வர், மேகதாது அணை கட்டுவதை கைவிடும் நிபந்தனையை, பா.ஜ.விடம் வைத்திருக்கிறாரா' என கேட்கிறீர்களே... உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்., தயவில் தானே, கர்நாடகாவில் ஆட்சி நடக்கிறது. இப்படி ஒரு நிபந்தனையை, காங்.,கிடம் நீங்கள் வைத்திருக்கிறீர்களா? 'கடந்த, 2014ல், பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, 18 ஆயிரம் கிராமங்கள் இருளில் தான் இருந்தன. நாங்கள் தான் ஆட்சிக்கு வந்த, 1,000 நாட்களில் இருளுக்கு வெளிச்சம் பாய்ச்சினோம்' என்கிறார் மோடி.இதற்கு, நீங்கள் ஆதாரத்துடன் மறுப்பு தெரிவிப்பீர்களா?
நாகர்கோவில் பிரசார பொதுக்கூட்டத்தில், 'சில வாரங்களில், நாட்டின் பிரதமராக ராகுல் பதவி ஏற்பார். அதன்பின், அவரது கரங்களில் இந்தியா பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, மதசார்பற்றதாக இருக்கும்' என்றீர்களே; அப்படி ஓர் ஆட்சியை ராகுல் தருவார் என்பதை, அவரது எந்த செயல்பாட்டின் அடிப்படையில் சொன்னீர்கள்; ஒருவேளை, அப்படி ஓர் ஆட்சியை அவர் தரவில்லை எனில், உங்கள் நிலைப்பாடு என்ன?
தொகுதி பங்கீடு பேச்சு நேரத்தில், காங்., தயவில் கர்நாடகத்தில் முதல்வராக இருக்கும் குமாரசாமி, பிரதமர் மோடியை சந்திக்கிறார். 'என்ன இந்த நேரத்தில்...' எனக் கேட்டதற்கு, 'கர்நாடக வறட்சிக்கு நிவாரணமாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் கேட்க வந்தேன்' என்றார். ஆனால், அவர் கேட்டது, கிடைத்ததாக செய்தியில்லை; அப்படியென்றால், அவர் கேட்கப் போனது அதுவல்ல; சரிதானே; சரி... நீங்கள் சொல்லுங்கள், தேர்தலுக்குப் பின், பா.ஜ., பக்கம் சாய்வீர்களா; மாட்டீர்களா?
'ஆமாமா, இல்லையா?
'எதிர்க்கட்சி துணை தலைவர், கட்சி பொருளாளர், 40 ஆண்டுகளாக சட்டசபையில் இருப்பவர், 80 வயதை கடந்தவர் என்றும் பாராமல், வருமான வரித் துறையினர் வந்தனர்' என, உங்கள் துரைமுருகன் வருந்தினார். அப்போது, 'இந்த அனுபவத்திற்கும், வருமான வரித் துறையின் நடவடிக்கை கூடாது என்பதற்கும் என்ன தொடர்பு' என, நீங்கள் சிந்தித்தீர்களா?
இணைப்பில் முழுச்செய்தியைப் பாருங்கள்! கேள்விகளில் நியாயம் இருக்கிறதா இல்லையா? திமுகவின் இரட்டைநிலைபாடு, காங்கிரஸ் பக்கம் சாய்ந்தது, எல்லாவற்றையும் விட தேர்தலுக்குப்பின் காங்கிரசைக் கைகழுவி விட்டு பிஜேபி பக்கம் சாயமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் தருவாரா? பதில் வராது என்றால் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
அவருக்கு நமது கேள்வி..தமிழ் மண்ணிலே தமிழர்களால் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டாரே ..அப்படி என்றால் தமிழ் மக்கள் எல்லாம் ராஜிவ் காந்தி மீது கொலை வெறியில் இருந்தார்கள் என்று சொல்லலாமா?
இந்திரா காந்தி சீக்கிய ராணுவ வீரனால் கொல்லப்பட்டாரே ..அப்படி என்றால் சீக்கியர்கள் எல்லாம் இந்திராகாந்தி மீது கொலை வெறியில் இருந்தார்கள் என்று சொல்லலாமா?
கேவலமான அரசியல் ஒரு மனிதனை எவ்வளவு மி ருக குணம் உடையவனாக மாற்றுகிறது.ஒரு முதியவரின் கொலையில் கூட அரசியல் சந்தோசம் கொள்ள செய்கிறது..வேதனை..
திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதே தேசம் காக்கும் ஒரே வழி!
தேதிமுக தலைவர் தேர்தல் பிரசாரத்துக்கு நிச்சயம் வருவாரென்று பிரேமலதா சொல்லிவருகிற நிலையில் விஜய் காந்த் வாக்கு கேட்கிற ஒரு வீடியோ நேற்றைக்கு வெளியாகி இருக்கிறது.
அனேகமாக இந்தத் தேர்தலுடன் தேதிமுகவுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடும் என்பது போலத்தான் தெரிகிறது. வெள்ளந்தியான இந்த மனிதர் நல்ல உடல் நலத்தோடு நீண்டநாள் வாழவேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மனைவி மச்சான் சுயநலத்துக்காக சரியாகப் பேச்சுவராத நிலையிலும் தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்துவருவது என்னமாதிரி அரசியல்? ஒற்றை மனிதர், குடும்பத்தை மட்டுமே நம்பி இனிவரும் காலத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியுமே பிழைத்திருக்க முடியாதென்ற காலம் விரைந்து நெருங்கி கொண்டிருக்கிறதோ?
நேரு பாரம்பரியம் என்பது தங்களை டில்லி பாதுஷா என்றே நினைத்துக் கொண்டிருப்பது என்பதை இந்தப் பக்கங்களில் பலமுறை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன்! பாதுஷா என்பதால் மட்டுமே எதிர்க்கவில்லை.
வாரிசுகளுடைய யோக்கியதை இந்த லட்சணத்தில் இருந்தால் எப்படி ஆதரிப்பது? எதை நம்பி சோனியாG காங்கிரசுக்கு வாக்களிப்பது? கொஞ்சம் சொல்லுங்களேன்!
யாருக்கு வாக்களிப்பது? - ஹரன் பிரசன்னா சொல்வது
* சந்தேகமே இன்றி பாஜக கூட்டணிக்கே. இதில் எந்த மாற்றமும் தயக்கமும் தேவையில்லை. ஹிந்து ஆதரவாளர்களுக்கு, பாஜக ஆதரவாளர்களுக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு இது. இதில் மோடி மீது விமர்சனம், பாஜக மீது அதிருப்தி என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நிச்சயம் பாஜக கூட்டணிக்கே வாக்களியுங்கள். அதிமுக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என்று யார் நின்றாலும் அவர்களுக்கே வாக்களிக்கவேண்டியது ஹிந்துக்களின் கடமை.
* ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதா என்று பேசுபவர்கள் போலிகள். இதே போலிகள், இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் மத ரீதியாகப் பேசும்போது, வாக்களிக்கும்போது, அதை நடுநிலை என்று சொன்னவர்கள் என்பதை மறக்காதீர்கள். தங்கள் வேட்பாளரையே ஜாதி, மதம் பார்த்து நிற்க வைப்பவர்கள், ஹிந்து மத ரீதியாக வாக்களிப்பதைப் பற்றிப் பேசத் தகுதியற்றவர்கள்.
* ஜாதிக் கட்சி இருக்கிறது, ஊழல் கட்சி இருக்கிறது என்றெல்லாம் யோசிக்காதீர்கள். இது கூட்டணிதான். சமரசம்தான். ஒரு சமரசத்தின் வழியாகவே இலக்கை அடைய முடியும் என்பதே அரசியல். சமரசம் என்பதும் ஊழலுக்கு உடந்தையாக இருப்பதும் வேறு வேறு. இப்போதைக்கு சமரசம். அதேசமயம் ஊழலுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கை. இதைச் சாத்தியப்படுத்தினால் போதும்.
* எந்த முறையும் இல்லாதவாறு இந்தத் தேர்ந்தலில் ஹிந்துக்களிடம் ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஏன் ஹிந்துக்களை மட்டும் மட்டம்தட்டிக் கேவலப்படுத்தும் ஒரு கட்சிக்கு ஹிந்துக்கள் வாக்களிக்கவேண்டும் என்பதே அது. ஹிந்து வாக்கு வங்கியாக ஒருமுகப்பட இன்னும் அதிக காலம் தேவைப்படும். அதன் முதல் படி இது. ஹிந்து வெறுப்பாளர்கள் இதை உணர்ந்துகொண்டுவிட்டார்கள். எனவேதான் ஹிந்துக்களின் மீது என்றுமில்லாத கரிசனத்தைக் காட்டுகிறார்கள். ஒரே ஒரு தடவை அவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களித்து ஹிந்து ஒற்றுமையைக் காண்பித்தால் போதும். எப்படி மற்ற மதங்களுக்கு தாஜா அரசியல் செய்கிறார்களோ அதை ஹிந்துக்களுக்கும் செய்வார்கள். தவற விடாதீர்கள் இந்த வாய்ப்பை.
* நம் எதிர்ப்பு இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் மீதல்ல. அவர்களை மட்டும் தாஜா செய்யும் போலி மதச்சார்பின்மையின் மீதுதான். மூன்று மதங்களையும் ஒரே போல் ஆதரிக்கும், எதிர்க்கும் அரசியல் கட்சிகளிடம் நமக்குப் பிரச்சினையில்லை.
* சில ஹிந்துத்துவ ஆதரவாளர்கள், கொள்கை என்ற ஒன்றை மட்டுமே கணக்கில் கொண்டு, யதார்த்தத்தைக் கைவிட்டு, பாஜகவுக்கு வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களிக்கச் சொல்கிறார்கள். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதற்கு வெட்கப்படவேண்டும். மோடியையும் பாஜகவையும் ஆட்சியில் அமர்த்துவதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது. அதேசமயம் ஆட்சியில் பாஜக இருக்கும்போது ஹிந்துத்துவர்கள் விமர்சனங்களைச் செய்யலாம். செய்யவேண்டும். பாஜக மீதான ஹிந்துத்துவர்களின் விமர்சனம் என்பது, மோடிக்கோ பாஜகவுக்கோ வாக்களிக்கக்கூடாது என்ற வகையில் இருக்கவே கூடாது. இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை ஒரே நொடியில் அர்த்தமற்றதாக்குவது இச்செயல்.
* ஒருவேளை நீங்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காவிட்டாலும் கூட, எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள். திமுகவை தமிழக அரசியலில் அசைத்துப் பார்க்க கிடைத்திருக்கும் அரிய சந்தர்ப்பம் இது. கருணாநிதி இல்லாத நிலையில், ஸ்டாலின் மீது நடுநிலைப் பொதுமக்கள் எதிர்ப்புணர்வு கொண்டிருக்கும் நிலையில், திமுகவை ஆட்டம் காண வைப்பது எளிது. எனவே எக்காரணம் கொண்டும் திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள்.
* அதிமுகவும் திமுகவும் வேறுபடும் முக்கியமான புள்ளி, திமுக என்பது கொள்கை ரீதியாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி. அக்கட்சியின் கூட்டணி (பாஜகவுடன் கூட்டணி வைத்த காலம் தவிர) எப்போதுமே ஹிந்துக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது. ஸ்டாலின் தனக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பைப் புரிந்துகொள்ளாமல், கருணாநிதியைவிடக் கூடுதலாக ஹிந்துக்களை எதிர்க்கிறார். ஹிந்துக்கள் மீதான கொள்கை ரீதியான வெறுப்பைக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக்குப் பாடம் புகட்ட நல்ல தருணம் இது.
* சுருக்கமாக, நிச்சயம் பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் அல்லது எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணிக்குக் வாக்களிக்காதீர்கள். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வெல்ல வைத்தால் தமிழகத்தைப் பீடித்திருக்கும் பல முன்முடிவுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கலாம்.
மாரிதாசும் அதைத்தான் சொல்கிறார்! கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!
கமல் காசர் ஒன்று டிவியை உடைப்பது இரண்டு தெர்மோகோல் சீண்டல் என இப்படி பிக் பாஸ் ப்ரொமோ மாதிரி விளம்பரங்களை இரண்டோடு நிறுத்திக் கொண்டு விட்டாரா? மூன்றாவதாக இன்று எதையும் காணோம்! இந்த விளம்பர ஸ்டன்ட் எந்த அளவுக்கு ஜனங்களிடம் எடுபட்டிருக்கிறது?
முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மத்தியில் கமல் காசருக்கு ஆதரவு இருப்பதாக இந்த வீடியோ சொல்வதில் ஒருபகுதி உண்மை என வைத்துக் கொண்டாலும் எந்த அளவுக்கு வாக்குகளாய் விழும், என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னமும் ஊகங்களாய் மட்டுமே இருக்கின்றன.
ரங்கராஜ் பாண்டே இந்தப் பேட்டியில் டிடிவி தினகரன். கமல் காசர், சீமான் இந்த மூவரில் எவரும் ஒரு இடம் கூட வெல்லப்போவதில்லை என்றாலும், வாக்குகள் பெறும் அடிப்படையில் மூவரையும் வரிசைப்படுத்திச் சொல்வதும் கூட ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது.
தமிழ் புத்தாண்டைக் கூட அரசியல் கட்சியும், அரசியல் வாதியும் தீர்மானிக்கும் அவல நிலை உள்ள தமிழகத்தில்..தமிழகத்தின் 'மதசார்பற்ற' என்னும் அரசியல் குறித்து இன்று பேசுவதே சரியாக இருக்கும்.
இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது, இந்து கடவுள்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவது, கடவுள் படங்களை செருப்பால் அடிப்பது, கடவுள் சிலைகள் மீது சிறுநீர் கழிப்பது, பகுத்தறிவு என்கிற பெயரில்..எந்தக் கல்லூரியில் படித்தான் ராமன் ? என்று கேட்பது, இந்து என்றால் திருடன் என்று சொல்வது, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களை விபசார நூல் என்று கேலி செய்வது, உலகத்திற்கே படியளக்கிற திருப்பதி வெங்கடாசலபதி.. தன்னுடைய உண்டியலுக்கு காவல் போட்டிருப்பது ஏன்? என்று கிண்டலடிப்பது..என்று எந்த வித கட்டுப்பாடும் இன்றி 50களில் இருந்து பரவலாக தொடர்ந்து கொண்டிருக்கும் ''அரசியல் ரீதியாக திட்டமிட்ட இழிவுகளை '' உலகளவு பொறுமையுடன் சகித்துக் கொண்ட இந்துக்கள்...பகவான் கிருஷ்ணனை ..பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளைப் போன்ற ரேப்பிஸ்ட் என்று ஒப்பிட்டு பேசிய போது..
அது..இந்துக்களின் நீண்ட பொறுமையை தகர்க்கும் trigger point -ஆக ஆகிவிட்டிருக்கிறது!
இந்து மக்கள் பெரும் மன வேதனைக்கும், பெரும் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள் ! அதை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏனெனில்..இங்கு ..பகுத்தறிவு என்கிற பெயரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதன் பின்னணியில் இருப்பது பகுத்தறிவு அல்ல.. மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களை..மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்கு சேகரிக்கும் சுய நல அரசியல் என்பதை மக்களும் உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.
கிருஷ்ணனை அவதூறாக பேசிய விவகாரத்தில் வீரமணியை மட்டும் குற்றவாளியாக்குவது..இன்னொரு அரசியல் தந்திரம்! வீரமணி தேர்தல் அரசியலில் இருப்பவர் அல்ல. அவர் பேச்சு சமூக அளவில் கண்டிக்கத்தக்கது. அவ்வளவு தான்!
ஆனால்...தேர்தல் அரசியலில் இருக்கும் அரசியல் கட்சிகள் இந்து மதத்தை மேற்கூறிய பல வகைகளில் எள்ளி நகையாடுவதும், இழிவுபடுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
'அரசியல் இந்து'வாக மாறவேண்டியதில்லை. அதே நேரம்..இழிவுகளை / அவதூறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இல்லை. அதற்கு ஒரே வழி..வாக்கு என்னும் ஆயுதம்.
மக்களை பெரும் மன வேதனைக்கு உள்ளாக்கும் இக் கட்சிகளை..தேர்தலில் தோற்கடித்தால் மட்டுமே, இழிவுபடுத்துவதை & மக்களை பிளவுபடுத்துவதை நிறுத்துவார்கள்.
''மதசார்பற்ற'' என்னும் வார்த்தையின் உண்மையான பொருளையும் அப்போது தான் அரசியல் களத்தில் காண முடியும்!என்று முகநூலில் சொல்லியிருப்பதைக் கூட அப்படியே ஏற்றுக்கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது!
இந்த புரட்சி புண்ணாக்கையெல்லாம் செயற்கையாக உண்டாக்க முடியாதென்பது திமுக மேதாவிகளுக்குத் தெரியாததில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை! சன் டிவி கூட மகஇக கோவனின் பாடல்களை இன்னமும் ஒளி பரப்புவதன் பின்னணி தான் மெரினா புரட்சிக்கு பின்னாலும் இருந்தது என்று The Hindu செய்தி எக்ஸ்போஸ் செய்திருக்கிறது. தூத்துக்குடியை கலவர பூமியாக ஆக்கியதன் முன்னணியாக மகஇக இருந்தாலும், பின்னணியில் இருந்து இயக்கியது திமுக தான் என்பதும் தெரிந்த விஷயம்தான், இல்லையா?
இப்போதைய கேள்வி இன்னும் எத்தனை நாளைக்கு இதுமாதிரி நெகடிவ் அரசியல் செய்கிறவர்களை, திமுகவை சகித்துக் கொள்ளப்போகிறோம்?
திமுகவும் கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைக் காட்டவேண்டியதினம் ஏப்ரல் 18! இதுவே தமிழ்ப்புத்தாண்டில் நாம் ஏற்கிற உறுதியும் கடமையும்!
ஊடக வெளிச்சம் கிடைக்கிறது அல்லது விலைக்கு வாங்க முடிகிறது என்ற தெனாவட்டில் திமுகவும், கமல் காசரும் ஒரே புள்ளியில் பயணிக்கிற மாதிரித் தெரிகிறதோ?
நேற்றைக்கு H ராஜா பேசும்போது கோபம் தலைக்கேற ரிமோட்டை வீசி டிவியை நொறுக்குகிற மாதிரி! இன்று தெர்மோகோல் விவகாரத்தைத் தொட்டு சின்னதாக ஒரு சுயதம்பட்டம்!சரியான திசையில் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கக் கொஞ்சமும் தகுதியில்லாத நபர் என்பதை கமல் காசர் மெய்ப்பித்துக் கொண்டு வரும் தருணம் இது.
தி மு கழகத்தின் யோக்கியதை என்னவென்று தெரிந்தது தான்! எப்படியென்று நினைவில் வைத்துக் கொள்ளவும் முற்றொட்டாக நிராகரிக்கவும் இந்த மாதிரி அபத்தமான பேச்சுக்கள் உதவும் என்பதனால் மட்டும் இங்கே பகிர்கிறேன். ஆபாசப் பேச்சிலே, பிறரை வசை பாடியே, பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மத விரோதியாகவே இருக்கிற கட்சி திமுக! என்னமோ ஒரு ராதா ரவியை நீக்கிவிட்டதனாலேயே தூய்மையாகிவிட்டதாக நாடகம் ஆடினால் நம்பிவிடுவோமா? பட்டை பட்டையாக திருநீறு பூசி பழனிக்கே காவடி எடுத்தாலும் மறந்துவிடுவோமா?
திராவிட மாயை கலைந்துவிட்டது கூடத் தெரியாமல் இன்னமும் ஆடிக் கொண்டிருக்கிறார்களே, எதனால்? எதிர்க் கேள்வியோ எதிர்ப்புக் குரலோ எழவில்லை என்ற ஒரே காரணத்தால் ஒரு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இங்கே ஒரு கும்பல் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருப்பதை, இனிமேலும் விட்டு வைக்கலாமா?
நேற்றைய நாட்கள் இல்லை இது. திராவிட மாயை இனிமேலும் எடுபடாது என்பதற்கு ஒருசோறு பதமாக
இந்தத் தேர்தலின் அதிசயமாக, மூன்று தனிநபர்களை மையம் கொண்டு தமிழக அரசியல் களம் இயங்குவது தெளிவாகத் தெரிகிறது. பழந்தின்று கொட்டைபோட்ட அரசியல்வாதிகளே, இந்த மூவர் என்ன மாதிரி எந்த அளவு சேதாரத்தை அவர்களுடைய ஓட்டு வங்கியில் ஏற்படுத்தப்போகிறார்கள் என்பது புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்!
அமமுகவின் டிடிவி தினகரன், நாம்தமிழர் கட்சி சீமான். மக்கள்நீதி மய்யம் கமல் காசர் இந்த மூவர்தான் அவர்கள் என்பதை முந்தைய பதிவுகளிலேயே கொஞ்சம் சொல்லியிருக்கிறேன். அப்படியானால் ஒரு மாற்று உருவாகிவிட்டதா என்றால் இல்லை! இவர்கள் அரசியல் இந்தத் தேர்தலைத் தாண்டி, அடுத்து வருகிற சட்டசபைத் தேர்தல்வரையிலாவது தாக்குப்பிடிக்குமா என்பது பெருத்த சந்தேகமே! ஒரு மாற்று அரசியலுக்கான வெற்றிடம் தொடர்கிறது என்பதுதான் வேதனை.
சுப்பு அவர்கள் எழுதிய திராவிடமாயை புத்தகத்தைப் பற்றிய சிறு விமரிசனம் மேலே காணொளியில்.
வெறுப்பு அரசியல் மட்டுமே செய்து கொண்டு தங்கள் கல்லாவை நிரப்புவதிலேயே கவனம் செலுத்திவந்த திராவிடங்கள், தங்கள் சாயம் வெளுத்துப் போய்ப் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன. திராவிடம் வெறும் மாயை மட்டுமே என்றாகிப்போனதில் இளைஞர்களை ஈர்க்க முடியாமல் கிழட்டுத் தலைமையின் கீழ் உளுத்துப் போன ஸ்தாபனக் கட்டுமானங்களோடு, எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழுகிற நிலையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.
உலகத்தையே புரட்டிப் போட்டுவிடக் கூடிய வல்லமை உள்ள தத்துவம் கம்யூனிசம் அதன் செயல்வடிவமே கம்யூனிஸ்ட் கட்சி என்றெல்லாம் ஒரு மாற்று அரசியலைப் பேசிவந்த இந்தியக் கம்யூனிஸ்டுகள் என்ன ஆனார்கள்? இந்தப்புத்தகத்தை வாங்கிவிட்டு அமேசான் தளத்தில் நிதின் என்பவர் விமரிசனம் இப்படி!
Communist master in nothing knowledge is imperialism so hate knowledge love fraud n propaganda its classic communism book
என்ன செய்வது? சர்வதேசியம் பேசிய காலம் போய் இப்போது இசுடாலின் வைகோ திருமாவளவன் பேசுகிற பகூத்அறிவு வாந்தியை அல்லவா சேர்ந்து எடுக்க வேண்டியிருக்கிறது! இடதுசாரிகள் பீனிக்ஸ் பறவை மாதிரி மீண்டெழ முடியாத அளவுக்கு அழுகிப்போய் விட்டார்கள்.
முன்பு அலட்சியமாகப் பேசிய வார்த்தைகளை மறைக்க முடியாமல் பனைமரங்கள் படம் போட்டுப் பதுங்கிக் கொண்டாலும், ஓட்டுக்கள் விழுமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள் இங்கே
ஆனால் இவர்கள் மட்டும் இந்துமத நம்பிக்கைகளில் மூக்கை நுழைத்துக் கொண்டே இருப்பார்களாம்! நாமும் எத்தனைநாள் சகித்துக் கொண்டிருப்போமாம்?
பாடம் புகட்ட வேண்டிய நேரமும் நெருங்குகிறது.
ஏப்ரல் 18 இந்துமத விரோதிகளை, அவர்களை ஆதரிப்பவர்களையும் சேர்த்து நிராகரிக்க வேண்டிய நாள்! போலிமதச்சார்பின்மைக்கு முடிவு கட்டுவோம்! திமுக காங்கிரஸ் விசிக மதிமுக இடதுசாரிகள் எவருக்கும் எங்கள் வாக்குகள் இல்லையென்ற முடிவு எடுப்போம்!