கமல் காசர் ஒன்று டிவியை உடைப்பது இரண்டு தெர்மோகோல் சீண்டல் என இப்படி பிக் பாஸ் ப்ரொமோ மாதிரி விளம்பரங்களை இரண்டோடு நிறுத்திக் கொண்டு விட்டாரா? மூன்றாவதாக இன்று எதையும் காணோம்! இந்த விளம்பர ஸ்டன்ட் எந்த அளவுக்கு ஜனங்களிடம் எடுபட்டிருக்கிறது?
முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் மத்தியில் கமல் காசருக்கு ஆதரவு இருப்பதாக இந்த வீடியோ சொல்வதில் ஒருபகுதி உண்மை என வைத்துக் கொண்டாலும் எந்த அளவுக்கு வாக்குகளாய் விழும், என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னமும் ஊகங்களாய் மட்டுமே இருக்கின்றன.
ரங்கராஜ் பாண்டே இந்தப் பேட்டியில் டிடிவி தினகரன். கமல் காசர், சீமான் இந்த மூவரில் எவரும் ஒரு இடம் கூட வெல்லப்போவதில்லை என்றாலும், வாக்குகள் பெறும் அடிப்படையில் மூவரையும் வரிசைப்படுத்திச் சொல்வதும் கூட ஏற்றுக் கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது.
தமிழ் புத்தாண்டைக் கூட அரசியல் கட்சியும், அரசியல் வாதியும் தீர்மானிக்கும் அவல நிலை உள்ள தமிழகத்தில்..தமிழகத்தின் 'மதசார்பற்ற' என்னும் அரசியல் குறித்து இன்று பேசுவதே சரியாக இருக்கும்.
இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்துவது, இந்து கடவுள்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவது, கடவுள் படங்களை செருப்பால் அடிப்பது, கடவுள் சிலைகள் மீது சிறுநீர் கழிப்பது, பகுத்தறிவு என்கிற பெயரில்..எந்தக் கல்லூரியில் படித்தான் ராமன் ? என்று கேட்பது, இந்து என்றால் திருடன் என்று சொல்வது, சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களை விபசார நூல் என்று கேலி செய்வது, உலகத்திற்கே படியளக்கிற திருப்பதி வெங்கடாசலபதி.. தன்னுடைய உண்டியலுக்கு காவல் போட்டிருப்பது ஏன்? என்று கிண்டலடிப்பது..என்று எந்த வித கட்டுப்பாடும் இன்றி 50களில் இருந்து பரவலாக தொடர்ந்து கொண்டிருக்கும் ''அரசியல் ரீதியாக திட்டமிட்ட இழிவுகளை '' உலகளவு பொறுமையுடன் சகித்துக் கொண்ட இந்துக்கள்...பகவான் கிருஷ்ணனை ..பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளைப் போன்ற ரேப்பிஸ்ட் என்று ஒப்பிட்டு பேசிய போது..
அது..இந்துக்களின் நீண்ட பொறுமையை தகர்க்கும் trigger point -ஆக ஆகிவிட்டிருக்கிறது!
இந்து மக்கள் பெரும் மன வேதனைக்கும், பெரும் கோபத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள் ! அதை அரசியல் ரீதியாக வெளிப்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏனெனில்..இங்கு ..பகுத்தறிவு என்கிற பெயரில் இந்து மதத்தை இழிவுபடுத்துவதன் பின்னணியில் இருப்பது பகுத்தறிவு அல்ல.. மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களை..மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்கு சேகரிக்கும் சுய நல அரசியல் என்பதை மக்களும் உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.
கிருஷ்ணனை அவதூறாக பேசிய விவகாரத்தில் வீரமணியை மட்டும் குற்றவாளியாக்குவது..இன்னொரு அரசியல் தந்திரம்! வீரமணி தேர்தல் அரசியலில் இருப்பவர் அல்ல. அவர் பேச்சு சமூக அளவில் கண்டிக்கத்தக்கது. அவ்வளவு தான்!
ஆனால்...தேர்தல் அரசியலில் இருக்கும் அரசியல் கட்சிகள் இந்து மதத்தை மேற்கூறிய பல வகைகளில் எள்ளி நகையாடுவதும், இழிவுபடுத்துவதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
'அரசியல் இந்து'வாக மாறவேண்டியதில்லை. அதே நேரம்..இழிவுகளை / அவதூறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இல்லை. அதற்கு ஒரே வழி..வாக்கு என்னும் ஆயுதம்.
மக்களை பெரும் மன வேதனைக்கு உள்ளாக்கும் இக் கட்சிகளை..தேர்தலில் தோற்கடித்தால் மட்டுமே, இழிவுபடுத்துவதை & மக்களை பிளவுபடுத்துவதை நிறுத்துவார்கள்.
''மதசார்பற்ற'' என்னும் வார்த்தையின் உண்மையான பொருளையும் அப்போது தான் அரசியல் களத்தில் காண முடியும்! என்று முகநூலில் சொல்லியிருப்பதைக் கூட அப்படியே ஏற்றுக்கொள்கிற மாதிரித்தான் இருக்கிறது!
இந்த புரட்சி புண்ணாக்கையெல்லாம் செயற்கையாக உண்டாக்க முடியாதென்பது திமுக மேதாவிகளுக்குத் தெரியாததில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை! சன் டிவி கூட மகஇக கோவனின் பாடல்களை இன்னமும் ஒளி பரப்புவதன் பின்னணி தான் மெரினா புரட்சிக்கு பின்னாலும் இருந்தது என்று The Hindu செய்தி எக்ஸ்போஸ் செய்திருக்கிறது. தூத்துக்குடியை கலவர பூமியாக ஆக்கியதன் முன்னணியாக மகஇக இருந்தாலும், பின்னணியில் இருந்து இயக்கியது திமுக தான் என்பதும் தெரிந்த விஷயம்தான், இல்லையா?
இப்போதைய கேள்வி இன்னும் எத்தனை நாளைக்கு இதுமாதிரி நெகடிவ் அரசியல் செய்கிறவர்களை, திமுகவை சகித்துக் கொள்ளப்போகிறோம்?
திமுகவும் கூட்டாளிகளும் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதைக் காட்டவேண்டியதினம் ஏப்ரல் 18! இதுவே தமிழ்ப்புத்தாண்டில் நாம் ஏற்கிற உறுதியும் கடமையும்!
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!